தமிழினம் விரட்டி விரட்டி மரணத்தின் பிடிக்குள் ஒட்டுமொத்தமாக சிக்கவைக்கப்பட்ட போது தமிழினத்துரோகி கருணாநிதிக்கு பக்கபலமாக இருந்து தமிழுணர்வாளர்களது இந்த கூற்றை மறுதலித்து அறிக்கைகள் விட்டும் கூட்டங்களில் பேசியும் வந்த கருணாநிதியின் துரோக வாரிசாக வர்ணிக்கப்பட்ட திருமாவளவன் அண்மையில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது இதனை கூறியுள்ளார்.
தமிழகத்தை மையமாக வைத்து செயற்பட்டுவரும் பொலிமர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் பங்குபற்றிய திருமாவளவனிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலையே இதனைத் தெரிவித்துள்ளார்.
தமிழினம் அழியும் போது தடுத்து நிறுத்தாது வேடிக்கை பார்த்ததாக தமிழினத் தலைவர் என்று சொல்லிக்கொள்ளும் கருணாநிதி மீது பரவலான குற்றச்சாட்டு உள்ளது அது தொடர்பாக உங்களது கருத்து என்ன என கேட்டதற்கு பதிலளிக்கையிலேயே இந்த காலம் கடந்த விடையத்தை பதிலாக கூறியுள்ளார்.
இந்த கேள்வியை நிகழ்ச்சி தொகுப்பாளர் எழுப்பியவுடன் எவ்வித தாமதமும் இன்றி ஆம் கலைஞர் அய்யா தனது குடும்ப நலனிற்காகவே இனம் அழியும் போது வேடிக்கை பார்த்தார். இதனை ஏற்றுக் கொண்டுதான் ஆகவேண்டும் என பதிலளித்தார்.
தொடர்ந்து அவர் கூறுகையில்... தற்போது கலைஞர் அய்யாவின் குடும்பத்தில் நடைபெறும் அடுத்தடுத்த கைது நடவடிக்கைகள் அதனை உறுதிப்படுத்துகின்றன. இந்த இக்கட்டான நிலை ஏற்படக்கூடாது என்பதற்காகத்தான் அப்போது(தமிழினம் அழியும் போது) மௌனமாக இருந்தார்.
அய்யா திருமாவே நீங்கள் இனி மேல் எதனை சொன்னாலும் உங்களை ஒரு உண்மையான தமிழனும் சீண்டமாட்டான். தமிழினம் அழியும் போது தனது குடும்பம் அடித்த கொள்ளையில் இருந்து தம்மை பாதுகாக்க அவர் வேடிக்கை பார்த்தார் சரி... இருந்துவிட்டு போகட்டும். நீர் எதுக்கய்யா அந்தாள் கூட இருந்து கொண்டு தமிழுணர்வாளர்களாலும் உலகத் தமிழர்களாலும் அப்போது கருணாநிதி மீது இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தபோது தடுத்தும் எதிர்த்தும் அறிக்கைகள் விடுத்து வக்காளத்து வேண்டிநீர்கள்....?
இந்த இனத்துரோகத்தை நீர் இப்ப சொல்லித்தான் தெரிய வேண்டும் என்றில்லை. உலகத் தமிழினம் தற்போது முழுமையான விழிப்பு நிலையில் உள்ளது. யாரை ஏற்று அரவணைப்பது யாரை துரத்தியடிப்பது என நன்கு உணர்ந்துள்ளார்கள். அதனால்தான் தாய்த் தமிழக மக்கள் தம்பங்கிற்கு நிரந்தர ஓய்வினை அழித்து தமிழினத் துரோகி கருணாநிதிக்கு தக்கதண்டனையினை வழங்கியிருக்கின்றனர்.
அத்தோடு உம்மையும் விட்டா வைத்தர்கள்...? போதும் போதும் என்று கதறியழவைத்தல்லவா விரட்டி விரட்டி அடித்து துரத்தியுள்ளார்கள். முள்வேலி முகாமில் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை தாங்கிச் சுமந்து நின்ற ஒரே குற்றத்திற்காக இன்றைய மனிதஉரிமை பற்றி வாய்கிழியப் பேசும் உலகின் கண்முன்னே சித்திரவதைக்கும் பெரும் இனச்சுத்திகரிப்பிற்கும் உள்ளாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் எமது மக்களை பார்வையிட்டு திரும்பி என்னத்தை கிழித்தீர் நீர்?
முள்வேலி என்று யாவரும் அறிந்த விடையங்களை சும்மா புலுடாவிட்டு எழுதுவதுதான் இனமானக் கடமை என்று செய்து ஓய்ந்து போனவர்தானே நீங்கள். அதுவும் புத்தகமாக்கி நாலு காசு பார்க்கத்தானே செய்தீர்கள்.
கருணாநிதியை முன்னரே தமிழினம் கண்டுகொண்டு விட்டது. உம்மைப்போன்ற நாகரீகத் திருடர்களை இனம்காணுவதற்குத்தான் தமிழினம் கொஞ்சம் தாமதித்து விட்டது. இனியும் தமிழினம் ஏமாறத் தயாராக இல்லை. அதனால் மீண்டும் இப்படி ஏதாவது நகைச்சுவை கருத்துக்களை கூறிக் கூறிக்கொண்டு எம்முன் வந்துவிடாதீர்கள்.
உங்களிற்கு நடிப்பு ஒத்துவராது. பேசாமல் கருணாநிதி குடும்பத்து பஸ்ஸில் ஏறி அவர்கள் போகும் இடத்திற்கு போனால் துன்பத்தில் அவர்களை கிசுக்கிச்சு மூட்டலாம். தமிழினம் இப்ப ரொம் சீரியசான கட்டத்திலை பயணப்பட்டுக் கொண்டு இருக்குது. உங்கட காமெடியை ரசிக்கிறதற்கு நேரமில்லை.... முடிந்தால் உங்கள் ஆருயிர் தோழிக்கு ஆறுதல் சொல்ல தீகார் சிறைக்கு போங்கள்.
தமிழகத்திலிருந்து தமிழ் உணர்வாளர் காசிப்பிள்ளை
முள்ளிவாய்க்காலில் தமிழினம் அழிந்து கொண்டிருந்த போது தமிழகத்தை ஆண்டு கொண்டிருந்த கருணாநிதி அவர்கள் தனது குடும்பத்தின் நலனை முன்நிறுத்தி கள்ளமௌனம் காத்து நின்றதாக திருமாவளவன் கூறி சிரிப்பை உண்டுபண்ணியுள்ளார்.
Comments