நீதிமன்றக் கடிதங்களை வாங்க மறுத்து பயத்தில் திருப்பி அனுப்பும் மகிந்தர் !

அமெரிக்காவில் உள்ள நீதிமன்றம் ஒன்றில் 3 தமிழர்கள் மகிந்தவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் ஒன்றை செய்துள்ளனர். சித்திரவதைகளுக்கு எதிரான அமெரிக்க சட்டத்தை பயன்படுத்தி இவ்வழக்கு மகிந்தருக்கு எதிராகப் போடப்பட்டுள்ளது. விசாரணைகள் தற்போது ஆரம்பமாகியுள்ள நிலையில், மகிந்தவுக்கு கொலம்பிய நீதிமன்றம் கடிதத்தை அனுப்பிவைத்துள்ளது. குறித்த கடிதமானது குற்றஞ்சாட்டப்பட்டவர் தனது தரப்பில் ஆஜராக வக்கீலை வைக்கலாம் என்றும், மற்றும் ஏனைய அறிவுறுத்தல்களையும் விளக்கும் வண்ணம் அமைந்துள்ளது. ஆனால் அது பிடியாணைக்குரிய கடிதமாக இருக்கலாம் என அஞ்சுகின்ற மகிந்தர் அக்கடிதங்களைப் பெற்றுக்கொள்ள மறுக்கிறாராம்.

இக் கடிதங்களை ரெஜிஸ்டர் போஸ் மூலம் அவரது இருப்பிடமான அலரி மாளிகைக்கு கொலம்பிய நீதி மன்றம் அனுப்பியுள்ளது. ஆனால் அதனை கையெழுத்து வைத்துப் பெற்றுகொள்ள வேண்டாம் என மகிந்தர் காவலாளிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இதனால் இக் கடிதங்கள் அனுப்பட்டவருக்கு திரும்பிச் சென்றுள்ளது. இக் கடிதங்கள் திரும்பியதால், அமெரிக்காவில் உள்ள இலங்கைத் தூதரகத்துக்கு இக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் அங்கு உள்ள அதிகாரிகளும் இதனைப் பெற்றுக்கொள்ள மறுப்புத் தெரிவித்துள்ளனர். அதாவது நீதிமன்றால் அனுப்பப்பட்ட கடிதத்தை ஏற்றுகொண்டால், நீதிமன்ற விசாரணைக்கு செல்ல நேரிடவேண்டிய கட்டாயம் வந்துவிடும் என மகிந்தர் பயந்துபோய் உள்ளார் என்பது இந் நடவடிக்கை மூலம் நன்கு உணரப்படுகிறது.

அமெரிக்க நீதிமன்றினால் அனுப்பப்படும் இக் கடிதத்தை அவர் பெற்றுக்கொள்ளவே இவ்வளவு அஞ்சுகிறார், அங்கே நடைபெறவுள்ள விசாரணை ஆரம்பமாகும் போது என்ன செய்யவாரோ தெரியவில்லை ! இது ஒரு புறம் இருக்க அனுப்பப்பட்ட கடிதங்களை மகிந்தர் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், அவருக்கு அனுப்பப்படவிருக்கும் கடிதத்தின் பிரதியை, அவர் மொழியான சிங்களத்தில் எழுதி அதனை இலங்கையில் இருந்து வெளிவரும் நாள் இதழ் ஒன்றில் பிரசுரிக்க நீதிமன்றம் உத்தரவு கொடுக்கலாம் எனவும் எதிர்பார்க்கபடுகிறது. இவ்வாறானதொரு நிலையில், இதற்கு நீதிமன்றம் உத்தரவு கொடுத்தால், இக் கடிதம் விரைவில் இலங்கைப் பத்திரிகை ஒன்றில் வெளியாகலாம் என அதிர்வு இணையம் அறிகிறது.

ஆனால் அவ்வாறு அது வெளியானால் அப்பத்திரிகையை மகிந்தர் & கோ விட்டுவைக்குமா அது அடுத்த கேள்வியாகவுள்ளது...

Comments