சிறிலங்காவின் கொலைக்களங்கள் - ஆவணப்படம் ஐ.நா. மனித உரிமைக் கமிஷனில்!

ஐ.நா.வில் வரும் ஜூன் 3-ம் தேதியன்று இலங்கையின் இனப்படுகொலை பற்றிய ஒரு மணி நீளமான திraiப்படத்தை வெளியிடப்போவதாக சனல் – 4 அறிவித்திருப்பதும், ஐ.நா.வின் சிறப்பு புலனாய்வாளர் இவ்வாதாரங்களை ஐ.நா. மனித உரிமைக் கமிஷனிடம் அளித்திருப்பதும் இலங்கையில் நடைபெறும் பயங்கரவாத மாநாட்டினை வலுமிக்க நாடுகள் கலந்து கொள்ளும் விடுமுறை கொண்டாட்டமாக மாற்றியுள்ளது.

வழக்குரைஞரான க்ரிஸ்டோபர் ஹேன்ஸ் அசோசியேட்டட் ப்ரெஸ்ஸிடம் செவ்வியளிக்கையில் மக்கள் கொல்லப்படுவது பற்றிய இத்தகைய ஆதாரங்கள் கிடைத்திருப்பது மிகவும் அரிதான ஒன்று என்று கூறியுள்ளார்.


Special Investigator on Extrajudicial, Summary or Arbitrary Executions Christof Heyns

காணொளியில் காண்பதெல்லாம் கொலைக்கான உறுதியான ஆதாரங்களாக உள்ளன. மே 2009 -ல் நடந்தவற்றைப் பற்றி உள்நாட்டிலும், உலக அளவிலும் விசாரணை தேவை என்றார் தமது செவ்வியில். இந்த வழக்கு இப்போது அடுத்த கட்டத்தை நோக்கி நகர வேண்டும் என்றும் கூறினார்.

இனப்படுகொலைக்கெதிரான தமிழர்கள் அமைப்பின் அமெரிக்காவை தளமாகக் கொண்ட பேச்சாளர் கூறுகையில் மூன்று தென் ஆப்ரிக்கர்கள் ஒரே நேரத்தில் ஐ.நா. பதவியிலிருந்தபடி இலங்கையின் போர்க்குற்றங்களை உலகத்தின் மையப்பகுதிக்கு இழுப்பது வியக்க வைக்கிறது என்றார். தமது சொந்த நாட்டில் இனப்பாரபட்சத்திற்கு ஆளானதும், அங்கு ஓரினம் மற்றோரினத்திற்கு இழைத்த கொடுமைகளைக் கண்டு மனதில் எழுந்த உண்மை வேட்கையும் அவர்களை இந்த போராட்டத்திற்கு ஊக்குவித்துள்ளது. தமிழர்கள் இவர்களுக்கு என்றென்றும் கடமைப்பட்டவர்கள்.
 Navi Pillay
United Nations High Commissioner for Human Rights, Navi Pillay
Ms. Yasmin Sooka
Ms. Yasmin Sooka

ஜெனீவாவில் ஐ.நா. அமர்வுகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது, இந்தியா, பாக்கிஸ்தான், சீனா, ரஷியா போன்ற ஆதிக்க சக்திகள் இலங்கையில் பயங்கரவாதத்துக்கெதிரான மாநாடு நடத்திக் கொண்டிருக்கின்றனர். அமெரிக்கா, பிரித்தாணியா, ஜப்பான், அவுஸ்திரேலியா, பிரான்ஸ் போன்றவை இம்மாநாட்டில் கலந்து கொள்ள விடுக்கப்பட்ட அழைப்பை நிராகரித்து விட்டனர்.

ஜோன் ஸ்னோவால் எடுக்கப்பட்ட ஒரு மணி நீளத் திரைப்படமானது ஜெனீவாவில் திரையிடப்பட்டபின் சனல் - 4 –ல் ஜூன் 14-ம் தேதியன்று ஒளிபரப்பாகும். இத்திரைப்படம் போர்க்களத்தில் இருந்த தமிழர்களாலும், அரசப்படையின் சிப்பாய்களாலும் எடுக்கப்பட்ட துண்டுப்படங்களை கொண்டு உருவாக்கப்பட்டதாகும். சிறையாளர்களை படுகொலைப்புரிதல், சிவிலியன்கள் முகாம் மீது குண்டு வீசுதல், பெண்போராளிகளை பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கி கொலைபுரிதல் ஆகியவை இப்படத்தில் காட்டப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி விடுதலைப்புலிகளால் நடத்தப்பட்ட போரின்போதான மனித குண்டுத் தாக்குதலும் இப்படத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.

கல்லம் மாக்ரே என்பவரால் இயக்கப்பட்ட இப்படம் அசையாப் படங்கள், ராணுவத்தினரின் புகைப்படங்கள், செய்மதிப் படங்கள் முதலியவை ஒன்றாக்கப்பட்டு, சிறீலங்கா அரசு முன்வைக்கும் இனப்படுகொலை நடக்க வில்லை என்ற வாதத்தை தவிடுபொடியாக்குகிறது. இந்தப்படமானது ஏறத்தாழ நாற்பதாயிரம் பேர் கொல்லப்பட்டதை தடுக்காமல் சர்வதேசம் வாளவிருந்ததையும், ஐ.நா. நிபுணர் குழுவின் பரிந்துரை அடிப்படையில் ஒரு விசாரணையின் தேவையையும் இப்படம் வலியுறுத்துவதாக சானல்- 4 செய்தி கூறுகிறது.

“சிறிலங்கா அரசானது சாட்சிகளற்ற ஒரு போரினை விரும்பியது. எனவே செய்தியாளர்களையும் ஐ.நா. பிரதிநிதிகளையும் களத்திலிருந்து வெளியேற்றியது. ஆனால் கைபேசிகள் மற்றும் செய்மதிகளை அரசால் ஒன்றும் செய்ய முடியவில்லை. எனது போர்க்கள செய்தி பங்களிப்பு அனுபவத்தில் நான் இது வரை காணாத பல மயிர்கூச்செறியும் காட்சிகளை இப்படங்களில் காண்கிறேன். இந்தப் போர்க்களமானது சிறிலங்காவில் மட்டுமல்ல, வேறெங்கும் எதிர்காலத்தில் ஐ.நா. தலையிடமுடியாமல் தோல்வியைச் சந்திக்குமானால் ஏற்படும் மோசமான விளைவுகளை காட்டுகிறது” என்று ஒரு மணி நீளப் படத்தின் இயக்குனர் கல்லம் மக்ரே கூறினார். இப்படத்திற்கு ‘சிறீலங்காவின் கொலைக் களங்கள்’ எனப்பெயரிடப்பட்டுள்ளது.

மொழிபெயர்ப்பு: நிலவரசு கண்ணன்
மூலச் செய்தி: http://www.tamilnet.com/art.html?catid=13&artid=34016

Comments