13 வயது ஈழத் தமிழ்ச் சிறுமியைப் பற்றிய திரைப்படம் "உச்சிதனை முகர்ந்தால்"
13 வயது ஈழத் தமிழ்ச் சிறுமியைப் பற்றி எடுக்கப்பட்ட படத்தில் சத்தியராஜ், சீமான் , நாசர், மணிவண்ணன் உட்பட பலர் நடித்துள்ளார்கள்.
இத்திரைப்படம் ஆகஸ்ட் மாதம் வெளிவர உள்ள நிலையில், இப் பட இசைவெளியீட்டு விழா லண்டனிலும், நோர்வேயிலும் நடைபெற உள்ளது.
இப் படத்தில் நடித்த பல நடிகர்கள் நடிகைகள், மற்றும் பாடகர்கள் ஆகியோரும் இதில் பங்கேற்கின்றனர். உச்சிதனை முகர்ந்தால் படத்தை ஈழத் தமிழர்கள் தயாரித்துள்ளமை குறிப்பிடத்தக்க விடையமாகும் !
இன்ஸ்பெக்டராக வரும் சீமான் அவர்களின் வசனங்கள் அணல் பறப்பவையாக அமைந்துள்ளதோடு, ஹாலிவுட் திரைப்படங்களுக்கு நிகராக இத் திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.
இத் திரைப்படமானது உலகளாவியரீதியிலும், மற்றும் இந்தியாவிலும் பல விருதுகளை தட்டிச் செல்லும் அளவுக்கு நேர்த்தியாகத் தயாரிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும்..
Comments