போர்க்குற்றங்கள் புரிந்த ருவாண்டா இராணுவ மதகுருவுக்கு 25 ஆண்டு சிறை – சிறிலங்கா நீதிபதியின் தீர்ப்பு

ருவான்டாவில் போர்க்குற்றங்கள் புரிந்த இராணுவ மதகுருவுக்கு சிறிலங்காவின் முன்னாள் தலைமை நீதியரசர் அசோக டி சில்வா 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கியுள்ளார்.

அப்படியானல் ராஜபக்சே குடும்பத்திற்கும் இதே தீர்ப்பு வழங்குவாரா ?

ருவாண்டா ஆயுதப்படைகளின் மதகுருவாகப் பணியாற்றிய இம்மானுவல் ருகுண்டோ மீது அனைத்துலக குற்றவியல் நீதிமன்றில் இனப்படுகொலைகளைச் செய்தது, கொலைகளை, இனச்சுத்திகரிப்பு செய்தது உள்ளிட்ட மூன்று குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன.

சிறிலங்காவின் முன்னாள் தலைமை நீதியரசர் அசோக டி சில்வா தலைமையிலான மூன்று பேர் கொண்ட நீதிபதிகள் குழு இந்த வழக்கை விசாரணை செய்தது.

1993ல் ருவாண்டா ஆயுதப்படைகளின் மதகுருவாக நியமிக்கப்பட்ட இம்மானுவெல் ருகுண்டோ 1994 மே மாதம் கிகாலியில் பணியாற்றிய போதே மனிதகுலத்துக்கு எதிரான போர்க்குற்றங்களைச் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

அங்கு இலட்சக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து, ருவாண்டா ஆயுதப்படைகள் தோற்கடிக்கப்பட 1994 செப்ரெம்பரில் அங்கிருந்து வெளியேறிய ருகுண்டோ, புருண்டியிலும் பின்னர் சுவிற்சர்லாந்திலும் தங்கியிருந்தார்.

அப்போது ஜெனிவாவில் வைத்து கைது செய்யப்பட்ட இவர் அனைத்துலக தடுப்பு நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

அசோக டி சில்வா தலைமையிலான மூன்று பேர் கொண்ட நீதிபதிகள் குழு இவர் மீதான போர்க்குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை செய்தபோது, அவருக்கு எதிராக 18 பேர் சாட்சியம் அளித்தனர்.

இந்த விசாரணைகளில் இனப்படுகொலைகளைச் செய்தது, படுகொலைகள் செய்தது, இனச்சுத்திகரிப்பில் ஈடுபட்டது போன்ற மனித குலத்துக்கு எதிரான குற்றங்களைச் செய்தது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து அவருக்கு 25 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து நீதிபதிகள் குழு தீர்ப்பளித்தது.

இதையடுத்து நீதிபதிகளிடம் மதகுரு ருகுண்டோ மேல்முறையீடு செய்ததை அடுத்து அவரது சிறைத்தண்டனை 23 ஆண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளது.

Comments