குறித்த பெண்ணின் மரணம் தொடர்பாக அவரது உறவினர்களால் தற்போது சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
கதிர்காமத்திற்கு பாத யாத்திரை சென்ற பெண் ஒருவரை யால காட்டுப் பகுதியில் சிறுத்தைப் புலி கடித்துக்குதறியதில் அப்பெண் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதாக முன்னர் செய்தி வெளியாகியிருந்தது.
ஆயினும் இவரது உடலில் ஏற்பட்ட காயங்கள் சிறுத்தையோ அல்லது ஏதாவது மிருகமோ தாக்கியதால் ஏற்பட்டதாகத் தெரியவில்லை என உறவினர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
குறித்தபெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலைசெய்யப்பட்டுள்ளதாக சந்தேகிக்கும்உறவினர்கள் இது தொடர்பில் உரிய நடவடிக்கையெடுக்குமாறு கோரிக்கைவிடுத்துள்ளனர்.
இதேவேளை உயிரிழந்த பகுதியில் பெண்ணி மரண ஓலம் கேட்டபோது அப்பகுதிக்கு பொதுமக்கள் சிலர்சென்றவேளையில் சீருடையில் இருந்த மூவர் அப்பகுதியில் இருந்து ஓடியதை அவதானத்துள்ளதாகவும்தெரிவிக்கின்றனர்.
இதேநேரம்உயிரிழந்த பெண்ணின் சடலத்தை சம்பவ இடத்துக்கு வந்த படையினரும் வன இலகா அதிகாரிகளும்எரிக்க முனைந்தபோதும் குறித்த பெண்ணின் உறவினர்களின் எதிர்ப்பினால் அதுகைவிடப்பட்டதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர்.
நேற்று அதிகாலை ஐந்து மணியளவில் யால வள்ளியம்மன் ஆற்றுப் பகுதியில் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படும் இச்சம்பவத்தின் போது மட்டக்களப்பு தம்பிலுவில் பகுதியைச் சேர்ந்த கிருஸ்ணபிள்ளை சாந்தகுமாரி (வயது 33) என்ற இரண்டு பிள்ளைகளின் தாயே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்திருந்தார்.
இவர் திருக்கோவில் கல்விவலயத்தில் இலிகிதராக கடமையாற்றுகின்றார் எனவும் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
தற்போதுகதிர்காமம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள குறித்த பெண்ணின் மரணம்தொடர்பில் பிரேத பரிசோதனைக்கு உறவினர்களினால் கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.
Comments