சிறீலங்காவின் வெளிவிவகார அமைச்சராக லக்ஸ்மன் கதிர்காமர் என்ற தமிழரை நியமித்து உலகெங்கும் தமிழர்களுக்கு எதிரான பிரச்சாரங்களையும், விடுதலைப் புலிகள் மீது பயங்கரவாத முத்திரையையும் குத்தவைக்க சிறீலங்கா மேற்கொண்ட கடந்த கால இராஜதந்திர வரலாறுகள் பலருக்கும் தெரியும்.
இப்போது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் சிறீலங்காவிற்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு வரும் நிலையில், அதனை முறியடிக்க தமிழர் ஒருவரை நியமிக்க மகிந்த அரசு முடிவு செய்துள்ளதாக அறியவருகின்றது. ஐ.நா வட்டாரங்களின் பிரகாரம் கூடிய விரைவில் சிறீலங்காவின் புதிய ஐக்கிய நாடுகள் சபையின் ஜெனீவா தூதுவராக செல்வி தாமரா குணநாயகம் எனும் தமிழ்ப்பெண்மணி பதவி ஏற்கவுள்ளதாக அறியப்படுகிறது.
ஜெனீவா இராஜதந்திர வட்டாரங்களிலிருந்து ஈழமுரசுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் செல்வி தாமரா குணநாயகம், முன்பு ஜெனீவாவில் உள்ள ஐ.நா மனித உரிமை காரியாலயத்தில் மனித உரிமை உத்தியோகத்தராக கடமையாற்றியவர். தற்போது, கியூபாவில் சிறீலங்காவின் து£துவராக கடந்த மூன்று வருடங்களாக கடமையாற்றி வருகின்றார். ஐ.நாவின் மனித உரிமைகள் சபையில் கடமையாற்றிவரும் திருமதி கெனிஸ்கா செனிவரத்தின கடந்த ஒரு வருடமாக கடமையில் ஈடுபட்டிருக்கும் வேளையில், ஏன் இந்த திடீர் து£துவர் மாற்றம் என எமது தொடர்பாளர் அறிய முயன்றபோது, சர்வதேச மட்டத்தில் மனித உரிமை விடயங்களில் சிறீலங்காவின் செல்வாக்கு சரிந்து கொண்டிருக்கின்றது.
அத்துடன், ஐ.நா மனித உரிமை சபையில் அங்கம்வகிக்கும் பெரும்பாலான நாடுகள், சிறீலங்கா மீது ஒரு கண்டனப் பிரேரணையை கொண்டுவர முனைகின்றது. இவ்வேளையில் விசேடமாக ஒரு தமிழர், அதுவும் ஏற்கனவே ஐ.நா மனித உரிமை ஆணையாளர் காரியாலயத்தில் கடமையாற்றியவரை நியமிப்பதன் மூலம், ஐ.நாவில் சிறீலங்கா மீதான கடும்போக்கைத் தணிக்க முடியுமென சிறீலங்கா அரச தரப்பு நம்புகின்றது. எனவேதான் அவசர அவசரமாக அவரை நியமிக்க முயல்வதாக அறியமுடிகிறது.
அத்துடன், இத் திடீர் மாற்றத்திற்கு கூறப்படும் இன்னொரு காரணம், தற்போதைய ஜெனீவாத் து£துவர் திருமதி கெனிஸ்கா செனிவரத்தினாவுக்கும், முன்னைய ஜெனீவா து£துவரும் தற்போதைய பிரான்சின் சிறீலங்கா து£துவரான கலாநிதி டயான் ஜெயதிலகாவுக்கும் இடையே முரண்பாடுகளும், சர்ச்சைகளும் இடம்பெற்றுவருகின்றன. இதன் காரணத்தால் இருவரும் ஒன்றிணைந்து ஐ.நா. வில்
காத்திரமான பணிகளைச் செய்ய முடியவில்லை என்றும் கூறப்படுகின்றது. இதன் காரணத்தினால், செல்வி தாமரா குணநாயகமும், கலாநிதி டயான் ஜெயதிலகாவும் இணைந்து ஐ.நா மனித உரிமைச் சபையில் கொண்டுவரப்படவுள்ள கண்டனப் பிரேரணையை முறியடிக்க முடியுமென சிறீலங்கா அரசு நம்புவதாகவும் கூறப்படுகிறது.
செல்வி தாமரா குணநாயகம் அவர்கள் கியூபாவின் சிறீலங்கா து£துவராக கடமையாற்றியபோது தென் அமெரிக்க நாடான வெனிசுலாவிற்கு, கடந்த ஆண்டு யூன் மாதம் பயணம் செய்த வேளையில், அங்கு ஸ்பானிய மொழியில் வெளியாகும் `கோரேனா டெல் ஒரின்கோ’ என்ற பத்திரிகைக்கு தமிழ் மக்களின் சுயநிர்ணயப் போராட்டம், புலம்பெயர் வாழ் மக்கள் மற்றும் அவர்களது அமைப்புக்கள், சங்கங்கள் யாவற்றையும் கொச்சைப்படுத்தி நேர்காணல் ஒன்றை வழங்கியிருந்தார். அவரது செவ்வி அண்மையில் ஆங்கில மொழிபெயர்ப்புடன் சில ஆங்கில இணையத்தளங்களிலும் வெளியாகி இருந்தது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
இப்படியான நிலைப்பாட்டினைக்கொண்டுள்ள செல்வி தாமரா குணநாயகம் ஐ.நா மனித உரிமைகள் சபையில் எவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்வார் என்பது இங்கு சொல்லித்தான் தெரியவேண்டும் என்பதல்ல. லக்ஷ்மன் கதிர்காமரின் பாணியில் தானும் ஒரு தமிழர் என்று கூறியபடியே, சிறீலங்காவின் இனப்படுகொலைகளை இவர் நியாயப்படுத்த முயல்வார் என்றே நம்பப்படுகின்றது.
செல்வி தாமரா குணநாயகம் ஒரு தமிழராக கூறப்படுகின்றபோதும், இவரது தாயார் சிங்களப் பெண்மணி என்றே நம்பப்படுகிறது. மன்னாரைச் சேர்ந்த இவர், தன்னை ஒரு யாழ்ப்பாண வாசியாகக் கூறிக்கொள்வதாகவும் அறியவந்துள்ளது. இதேவேளை, கடந்த ஏப்ரல் மாத இறுதியில் பிரான்சின் ஆர்ஜெந்தன் (மாநிலம் 61) நகரில் நடைபெற்ற நகரசபையின் நிகழ்வில் பிரான்சிற்கான சிறீலங்கா தூதுவர் கலாநிதி டயான் ஜெயதிலக கலந்துகொள்வதற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அந்த நகர மக்களோடு நட்புறவை ஏற்படுத்தி அதனால் பெரும் அரசியல் பொருளாதார பலனடையும் நோக்கத்துடன் ஒரு வார காலம் களியாட்ட நிகழ்வை நடாத்துவதற்கான ஏற்பாட்டினை பிராஞ்சிலுள்ள சிறீலங்கா தூதரகம் மேற்கொண்டிருந்தது.
அந்நிகழ்வில் டயான் ஜெயதிலக கலந்துகொள்வதை, தங்களின் கடுமையான போராட்டத்தின் மூலம் தடுத்து நிறுத்தியிருந்ததுடன், சிறீலங்காவின் உண்மையான கோர இனப்படுகொலை முகத்தினையும் அந்நகர மக்களுக்கு தமிழர் பேரவையினர் மேற்கொண்ட தொடர்ச்சியான போராட்டங்கள் மூலம் அம்பலப்படுத்தியும் இருந்தனர்.
இந்நிலையில், தமிழர்கள் அதிகம் வாழும் பொண்டி பகுதியில் தமிழர் நிகழ்வொன்றில் டயான் ஜெயதிலக கலந்துகொள்வதற்கு, அப்பகுதியில் இயங்கும் பொண்டி பாபு என்பவரின் தமிழர் அமைப்பான கலாச்சார தொடர்பு மையம் ஏற்பாடு செய்திருந்தது தற்போது தெரியவந்துள்ளது.
மிகவும் இரகசியமாக ஏற்பாடு செய்யப்பட்டு கடந்த மாத இறுதியில் நடைபெற்ற இந்நிகழ்வில் டயான் ஜெயதிலக தனது பாரியாருடன் கலந்துகொண்டிருந்தார். பிரான்சின் புறநகர் பகுதியில் நடைபெறும் நிகழ்வில் சிறீலங்காவின் தூதர் கலந்துகொள்வதைத் தடுத்து நிறுத்தப்போராடிய தமிழர்களுக்கு, தமிழர் ஒருவரே விழாவை ஏற்பாடு செய்து அவரைச் சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தது பேரதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

Comments