நியூசிலாந்து நாட்டுக்குள் தமிழ் அகதிகளை அனுமதிப்பதா? இல்லையா?உங்கள் வாக்கை உடனடியாக அளியுங்கள்!

இந்தோனேசிய கடற்படையால் தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழ் அகதிகளை நியூசிலாந்து நாட்டுக்குள் அனுமதிப்பதா? இல்லையா? என்ற மக்கள் கருத்தைப்பெறும் நோக்கோடு நியூசிலாந்து அரசால் யாகூ இணையத்தில் ( Yahoo ) கருத்துக்கணிப்பு நடாத்தப்பட்டு வருகிறது.

எனவே இத்துடன் இணைக்கப்பட்டுள்ள http://nz.news.yahoo.com/polls/popup/-/poll_id/62206/ எனும் பகுதியை அழுத்தி அதனூடாக அக்கருத்துக்கணிப்பில் இலக்கம் ஒன்றில் உள்ள Let them into the country என்பதற்கு உங்கள் வாக்குகளை அளித்து நடுக்கடலில் தத்தளிக்கும் எமது அன்பு உறவுகளை விரைந்து காப்பாற்றுங்கள்.

தனி நபர்களாகவும், நீங்கள் சார்ந்த அமைப்புக்கள் சார்ந்தும் உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கும், தமிழர்களின் விடுதலையை நேசிக்கும் வேற்றினத்தவர்களுக்கும் தெரியப்படுத்தி இக்கருத்துக்கணிப்பில் Let them into the country எனும் பகுதிக்கு வாக்குகளை அதிகரிக்க செய்து உயிர்த் தஞ்சம் கோரி நிற்கும் எம் தாயக உறவுகளுக்கு ஒரு நல்ல வாழ்வை அளியுங்கள்.

Comments