தமிழீழ இலச்சினைகளைச் சுமந்து லண்டனில் வலம் வரும் பேருந்து!

இளைஞர் ஒருவரின் சிந்தனையில் தமிழீழ இலச்சினைகளைச் சுமந்து லண்டனில் வலம் வரும் பேருந்து!

தமிழீழத் தேசியக் கொடி, தமிழீழத் தேசிய மலர், மற்றும் தமிழீழ தேசம் என்பன பொறிக்கப்பட்ட பேரூந்து ஒன்று லண்டன் நகர வீதிகளில் தற்போது உலா வருகிறது. ஒரு தனிமனித முயற்சியும், தேடலுமே இந்த உருவாக்கம் என்பது ஆச்சரியத் தக்கவிடயம்.

ஒரு இளைஞனுள் உறைந்து கிடந்த உணர்வுகளின் வெளிப்பாடே இந்த பேருந்தும், அதனூடான தமிழீழ அடையாளங்களை வேற்றினத்தவர் மத்தியில் வெளிக்கொணரும் முயற்சியும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

அந்த பேருந்தின் நாற்புறமும் பிரித்தானியக் கொடியும், அதனோடு பிரித்தானியப் போர்வீரர்களை நினைவுகூரும் நாளில் அணியும் "பொப்பி" மலரும் பொறிக்கப்பட்டிருந்தது.

அதே போல் அதற்கு அருகில் தமிழீழமும் அடுத்து தமிழீழத் தேசியக் கொடியும், தமிழீழ மாவீரர்களை நினைவுகூரும் நாளில் அணியும் கார்த்திகை மலரும் பொறிக்கப்பட்டிருந்தது.

பேருந்தின் கீழ்ப் புறத்தில் 'நான் பெரிது நீ பெரிதென்று வாழாமல் நாடு பெரிது, தமிழ் பெரிது, தமிழ் மானம் பெரிதென்று வாழ்" எனும் வாசகமும் பொறிக்கப்பட்டுள்ளது.

இவற்றிற்கும் மேலாக 'சிறீலங்காவின் கொலைக்களம்" எனும் ஆவணத்திரைப்படத்தை வெளியிட்டு சர்வதேசங்களின் கவனத்தை ஈர்த்து சிறீலங்காவில் இடம்பெறும் தமிழினப் படுகொலையை வெளிக்கொணர்ந்த "சனல் 4" ஊடகத்திற்கு நன்றி தெரிவித்தும் ஆங்கிலத்தில் வாசகம் பொறிக்கப்பட்டிருந்தது.

Comments