தமிழினத்தை அழித்தவர்களை தோற்கடித்து தலைநிமிர்ந்து நிற்கும் தமிழினம்

கொலைவெறியன் மகிந்த ராசபக்சே உள்ளுராட்சி சபைத் தேர்தல்களை நடாத்தி அதில் தமது ஆட்சி அதிகார பண அடியாள் பலத்தினை கொண்டு வெற்றி பெற்று உலகத்தினை ஏமாற்றலாம் என தப்புக்கணக்குப் போட்டு நடத்திய தேர்தல் நாடகத்தில் ஆப்பிழுத்த குரங்காக மாட்டிக்கொண்டுள்ளார்.

தமிழகத்தின் அரசியல் வாதிகளின் தேர்தல்கால சித்துவிளையாட்டுக்களை அப்படியே தமிழர் தாயகப்பகுதியில் அரங்கேற்றி எப்படியும் வென்றுவிடலாம் என்று செய்த அனைத்தும் விழலுக்கு இறைத்த நீராக மாறியதை கண்டு சிங்களம் ஏமாற்றம் அடைந்துள்ளநிலையில் தமிழர் தரப்பு பெருமகிழ்ச்சி கொண்டு நிற்கின்றது.

வன்னிப்பகுதியில் இராணுவத்தை ஏவிவிட்டு காட்டுமிராண்டித்தனமாக தேர்தல் வன்முறைகளை கட்டவிழ்த்து வாக்குச்சீட்டுகளை பலவந்தமாக பறித்தும் ஆயுதமுணையில் தமிழர்களை வாக்களிக்க செல்லவிடாது தடுத்தும் தமிழர்கள் தன்மானத் தமிழர்கள் நாம் என்பதனை தேர்தல் முடிவின் மூலம் நிரூபித்துள்ளனர்.

சிங்களத்தின் சனாதிபதி உள்ளிட்ட அமைச்சர் பட்டாளங்கள் தமிழர் தயாகத்தில் முகாமிட்டு அரங்கேற்றிய பசப்பு நாடகங்களை எல்லாம் புறக்கணித்து ஓட ஓட விரட்டியடித்து தமிழர்கள் தலைநிமிர்ந்து நிற்கின்றனர்.

உலகத்தமிழர்கள் எல்லோரும் ஒன்றுபட்டு ஆதரவுகுரல் கொடுத்து நின்றநிலையில் அதனை ஏற்று நாமும் விடுதலைத் தாகம் கொண்டு உறுதியோடுநிற்கின்றோம் என்பதனை ஆணித்தரமாக இந்த தேர்தல் முடிவின் மூலமாக தாயகத் தமிழர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.

Comments