உலக தமிழ் இனமே உஷார்.....துளிர்விடத்துடிக்கும் தி.மு.க.வும் துளிர்க்க நினைக்கும் காங்கிரசும்

உலக தமிழ் இனத்தின் புவிசார் நலன்களும்,ராஜ தந்திர பலமும் தாயக தமிழகத்தோடு தொடர்புடையதாகத்தான் இருக்கிறது, இப்போது தமிழ்நாட்டு அரசியலில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றம்,ஈழத்து தமிழ் இனத்தை காட்டிக்கொடுத்த காங்கிரசுக்கும்,கூட்டிக்கொடுத்த கருணாநிதிக்கும் மரண அடி கொடுத்திருப்பதாக நினைக்கும் தமிழர்களே...உண்மையில் காங்கிரசும்,கருணாநிதியும் காயப்பட்டிருக்கிறார்கள்,மீண்டு எழுவதற்கு அவர்கள் சந்தர்ப்பத்தை எதிர்நோக்கி இருக்கிறார்கள்,அந்த ஓநாய்கள் எழுந்துவிட்டால்,முத்துக்குமார் தொடங்கிய தியாக மறவர்களின் போராட்டம் வீணாகிவிடும் ஆபத்து,அண்மிக்கிறது.

சீமான்,மற்றும் தமிழ் இயக்கவாதிகளின் அளப்பரிய பிரச்சாரத்தாலும் ,தன்னை அடையாளப்படுத்திய தமிழ்நாட்டு தமிழன் காங்கிரசுக்கு சாவுமணி அடித்தான்,ஒரு மாத காலம் வாய் மூடி இருந்த காங்கிரசு கயவன்,மெல்ல வாயை திறந்தான்,தமிழ்நாட்டில் காங்கிரசின் தோல்விக்கு தமிழீழ பிரச்சனை ஒரு காரணம் அல்ல என்றான்,இதோ இப்போது சீமான் காங்கிரசையும் அதன் தலைவி சோனியாகாந்தியையும் அவதூறாக பேசுகிறார்,தடை செய்யப்பட இயக்கமான விடுதலை புலிகளை ஆதரித்து பேசுகிறார் எனவே சீமானை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று தமிழ்நாட்டு காவல் துறை டி.ஜி.பி.இடம் புகார் மனு அளித்திருக்கிறான்,இந்திய உச்ச நீதிமன்றமே தடை செய்யப்பட இயக்கத்திற்கு ஆதரவாக பேசுவது குற்றம் ஆகாது என்று தீர்ப்பு வழங்கிய நிலையில் காங்கிரசுக்காரன் இந்த புகார்மனு
கொடுக்கிறான் என்றால்,தமிழ்நாட்டு தமிழர்களை எல்லாம் இளிச்சவாயன் என்று கங்கணம் கட்டிக்கொண்டு இருக்கிறான்,இலங்கை தமிழர்களுக்கு 200 கோடி ரூபாய் நிதி உதவி அளித்திருக்கிரானாம் காங்கிரசுக்காரன்,உயிர்போகும்
வேளையில் காப்பாற்ற திராணி இல்லை... அமைதியாக இருந்திருந்தாலும் பரவாஇல்லை...ஆயுத உதவிகள் வேறு...ஆயுதம் கொண்டுவந்த கப்பல்களை காட்டிக்கொடுத்திட்ட துரோகங்கள் வேறு...200 கோடி ரூபாய்
நிதி உதவியாம் ... சரி எழவு வீட்டில் மொய் எழுதும் பழக்கம் தமிழ்நாட்டில் இன்றும் இருக்கிறது... சரி.... மொய் யாரிடம் எழுதினான்.... கொலை காரனிடம் எழுதினான்... அதையும் பெருமையாக சொல்கிறான் என்றால்
இதையும் இன்றைய தொலைகாட்சி பேட்டியில் சொல்லி இருக்கிறான்.

உலகத்தில் முற்றிலும் பத்தினிகள் உள்ள இனமும் சாதியும் எதுவும் இல்லை இது உண்மை.அதே போல இந்த தமிழ்நாட்டில் இருக்கும் இழிமகன் இளைஞர் காங்கிரசு தலைவன்,வன்முறைக்கான வார்த்தையை வடிகட்டி பேசி இருக்கிறான்,தமிழீழத்து தமிழன் யாராவது இந்த டில்லி ஓநாய்களிடம் நிதி உதவி கேட்டார்களா எங்கே இருந்து வந்தது அவனுக்கு இந்த துணிச்சல்,தேர்தலோடு காங்கிரசு எதிர்ப்பு பிரசாரம்,அடங்கி இருப்பதுதான் காரணம்.

கல்யாண வீட்டில் மாப்பிள்ளையாகவும்,எழவு வீட்டில் பிணமாகவும் எப்போதும் மாலை மரியாதைகளுடன் வாழ்ந்து பழக்கப்பட்ட கருணாநிதி,இன்றைக்கும் தமிழ்நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய கட்சியாகத்தான் இருக்கிறார்,அ.தி.மு.க பெற்ற ஓட்டுக்கள் 39 சதவீதம்,தி.மு.க.பெற்ற சதவீதம் 22 .இடைப்பட்ட வித்தியாசம் வெறும் 17 சதவீதம்,வெறும் 9 சதவீத மாற்றம் போதும்,மீண்டும் இந்த ஓநாய்களின் ஆட்டம் தொடங்கலாம் என்று மீண்டும் கனவுகான தொடங்கி இருக்கிறார்கள்,இவர்கள் காயப்பட்டு தான் இருக்கிறார்கள்,கொஞ்சம் அசந்தாலும் போதும் டில்லி ஓநாய் மீண்டும் தன் சுயரூபத்தை காட்ட தொடங்கிவிடும் தமிழ்நாட்டு அரசியல் மாற்றம் டில்லிக்காரனின் செயல் பாடுகளின் தீவீரத்தை தனித்துள்ளது.தமிழ் நாட்டு சட்டப்பேரவையின் தீர்மானம்,நடந்து முடிந்த சர்வதேச மனித உரிமை ஆணையத்தில் இந்தியா ஊமையாக நின்றது,டில்லிக்காரன் தமிழனுக்கு மரியாதை கொடுப்பது போல நடிக்கிறான் உண்மையில் தமிழ்நாட்டு சட்டப்பேரவையின் தீர்மானத்திற்கு டில்லி மதிப்பளித்திருந்தால்,சட்டப்பேரவை தீர்மானம் நிறைவேற்றியபின்னர் தூத்துக்குடியில் இருந்து கொழும்புவுக்கு கப்பல் போக்குவரத்து தொடங்குகிறான்,பொருளாதாரத்தடை கோருகிற தீர்மானத்திற்க்கு காங்கிரசு கயவன் கொடுத்த மரியாதை என்ன தெரியுமா,சிங்களத்துடன் 300 கோடி ரூபாயில் அதி விரைவு படகுகளுக்கான வர்த்தக ஒப்பந்தம்.

இப்போது தமிழ்நாட்டு தமிழனுக்கு ஞாபக மறதி நோய் உண்டு என்பதை தெளிவாக தெரிந்து கொண்டு சிங்கள ராணுவ அதிகாரிகளுக்கு தமிழ்நாட்டு மண்ணிலேயே பயிற்சி அளித்து நம்மை நாடி பிடித்து பார்க்கிறான்.இப்போது சீமானை வம்புக்கு இழுத்து பார்க்கிறான் காலம் காட்டுகிற உண்மை என்னவென்றால் காங்கிரசுகட்சியும் தி.மு.கவும் புதை குழியில் அமுக்கி அழித்து ஒழித்து சமாதி கட்டப்படவேண்டும்.ஓய்வு ஒழிச்சல்,இருக்கக்கூடாது என்பதை தமிழ் இனத்தை கூட்டி கொடுத்தவனும் காட்டி கொடுத்தவனும் கோடிட்டு காட்டி இருக்கிறார்கள்.

பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் அடித்தால் பாகிஸ்த்தான் வரைக்கும் வலிக்கறது.லண்டனில் சுரங்க ரயில் பாதையில் குண்டு
வெடித்தால் ஆஸ்திரேலியா நியுசிலாந்து வரைக்கும் வலிக்கறது.ஆனால் தமிழா நமக்கு மட்டும் எப்படி வந்தது இந்த இழிவான மனநிலை?நமது தலைமை பீடத்தில் மானம் இழந்தவர்களும் தன்மானம் சுயமரியாதை எல்லாவற்றையும் இழந்த இழி பிறவிகளும் சுயநல பேய்களும் ஆண்ட காரணத்தால் இப்போதுவரையிலும் துடித்து கொண்டு இருக்கிறோம் போதும் காங்கிரசு தி.மு.க. அழிவே தமிழ் இனத்தின் எழுச்சிக்கும் வாழ்வுக்கும் அவசியம் என்பதை உணர்ந்து தமிழ் இன விரோத சக்திகளை அரசியல் களத்தில் இருந்து அப்புறப்படுத்திட தாயக தமிழ் இனமே ஓய்வு ஒழிச்சல் இன்றி ஒற்றுமையாய் செயல்படவேண்டும் என்பதை நம் உலக தமிழ் இன துரோகியும் எதிரியும் உணர்த்தி இருக்கிறார்கள் ஒன்றுபடுவோம் வெற்றி பெறுவோம்.


ஈழதேசம் இணையத்தளத்திற்காக மூர்த்தி

Comments