கருணாநிதி, சிவ்சங்கர் மேனன், நாராயணன், நிருபமா ராவ் ஆகியோரையும் இனப்படுகொலைக் குற்றவாளிகளாக அறிவிக்க வேண்டி புதுச்சேரியில் தமிழர் களம் ஆர்ப்பாட்டம்

கருணாநிதி, சிவ்சங்கர் மேனன், கே. ஆர். நாராயணன், நிரூபமா ராவ் ஆகியோரின் கூட்டுச் சதியாலும், ஒத்துழைப்பாலும்தான் இந்தத் தமிழின அழிப்புப் போர் நடந்திருக்கிறது. இவர்களையும் குற்றவாளிக் கூண்டில் ஏற்றி அப்பாவித் தமிழர்களைக் கொன்ற அரக்கர்களாக இவர்களை அறிவித்து உரிய தண்டனையை வழங்கிட வேண்டுமென்று தமிழர்களம் வற்புறுத்துகிறது.

நூற்றுக்கணக்கான தமிழர்களத் தொண்டர்கள், மற்றும் பல தமிழர்தேசிய அமைப்பினைச் சேர்ந்தவர்கள் புதுச்சேரி மறைமலை அடிகள் சாலையில் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழர்களப் பொதுச்செயலாளர் திரு. அரிமாவளவன் உரையாற்றினைார்,

பல்லாயிரக் கணக்கான ஈழத் தமிழர்களை கொத்துக் கொத்தாகக் கொன்றொழித்தது இலங்கை இனவெறி அரசு மட்டுமல்ல! இந்தியாதான் அதற்கு முற்றாக முழுதாகத் துணை போனது என்று உலகுக்கே வெட்ட வெளிச்சமாகச் தெரிகிற உண்மை. இதை அண்மையில் கொடுங்கோலன் ராசபக்சேவே உறுதிபடக் கூறியிருக்கிறான்,

இந்தியாவின் வழிகாட்டுதலிலேயே நான் தவறிப்போனேன்” என்று! ஆனால், இன்றைக்கு எய்தவன் இருக்க அம்பை மட்டும் குற்றம் சாட்டுகிறோம். இராசபக்சே என்ற கொலையாளியை, குற்றவாளியைக் கழுவிலேற்ற வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

ஆனால், ஈழ மண்ணில் நடந்த மாந்தப் படுகொலைகளுக்கும் ஆறாய் ஓடியக் குருதி வெள்ளத்திற்கும் இந்தியாவும் இந்திய அதிகாரிகளும் பொறுப்பில்லையா?

கருணாநிதி, சிவ்சங்கர் மேனன், கே. ஆர். நாராயணன், நிரூபமா ராவ் ஆகியோரின் கூட்டுச் சதியாலும், ஒப்புதலாலும், ஒத்துழைப்பாலும்தான் இந்தத் தமிழ் இன அழிப்புப் போர் நடந்திருக்கிறது என்பதை மறுப்பாருண்டோ? இவர்கள் ஏதுமறியா இழித்தவாயர்கள்போல சுற்றிச் சுழன்று வருகிறார்கள்.

ஆனால் அப்பாவித் தமிழர்களின் குருதி தோய்ந்த கரங்களோடு இவர்கள் சுதந்திரமாகத் திரிகறார்கள் என்பதுவே உண்மை. இவர்களையும் குற்றவாளிக் கூண்டில் ஏற்றி அப்பாவித் தமிழர்களைக் கொன்ற அரக்க மாந்தராக இவர்களை அறிவித்து உரிய தண்டனையைத் தாமதமின்றி இவர்களுக்கு வழங்கிட வேண்டுமென்று தமிழர்களம் வற்புறுத்துகிறது.

உண்மையை உணர்ந்திருக்கிற தமிழக மற்றும் புதுச்சேரி அரசுகளும் பல்வேறு அரசியல் கட்சிகளும் இதை நோக்கி அழுத்தம் கொடுக்கும் வண்ணம் செயல்பட வேண்டும் என்று அழைக்கிறது!
தமிழகச் சட்டமன்றத்தில் இலங்கை இனவெறி அரசுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றியது போல புதுச்சேரி அரசும் தீர்மானம் இயற்ற தமிழர்களம் வற்புறுத்துகிறது.

ஆர்ப்பாட்டத்திற்கு தமிழர்களத்தின் புதுச்சேரி மாநிலத் தலைவர் திரு பிரகாசு அழகர் தலைமை வகித்தார். செந்தமிழர் இயக்கத்தின் திரு. ந.மு. தமிழ்மணி, தமிழ் இளைஞர் பேரவையின் திருமாறன், தமிழர் தேசம் ஒருங்கிணைப்பாளர் திரு. நா. குருமூர்த்தி ஆகியோர் கண்டன உரைகள் ஆற்றினார்.

Comments