போராடிப்பெற்ற புதியதேசம் இதோ 'தென் சூடான்' : வாழ்த்தி வரவேற்போம்

உலகின் 193வது தேசமாக பிறப்பெடுக்கின்றது தெற்கு சூடான்.

ஆபிரிக்க கண்டத்தில் அளவில் பெரியதும் - கனிம வளம் கொண்டதுமான நாடு சூடான்.

பல்லாண்டுகளாக வடக்கு - தெற்காக பிளவுண்டு உள்நாட்டு போராக வெடித்து, விடுதலைப் போராக முடிவுக்கு வந்தபோது 1.5 மில்லியன் மக்கள் தம் உயிர்களை இழந்திருந்தனர்.

2005ம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட அமைதி உடன்பாடு குருதி தோய்ந்த இந்த உள்நாட்டுபோரை முடிவுக்கு கொணர்ந்தது. அத்துடன் சூடானை இரண்டாக பிரிக்க மக்கள் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் எனவும் முடிவு செய்யப்பட்டது.

பல்வேறு நெருக்கடிகள் தோன்றியபோதும் அமைதி உடன்பாடு முறிபடாமல் பேணபட்டதால் 2011-ம் ஆண்டு ஜனவரி மாதம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு அதில் மக்கள் ஆணையும் பெறப்பட்டது.

அதன்படி யூலை 9ம் நாள் 'தென் சூடான்' என்னும் புதிய தேசம் பிறப்பெடுக்கின்றது.













அதனை வட சூடானும் ஏற்று ஒப்புதல் வழங்குகின்றது.

அதன் தலைநகரம் Juba.

அதன் நாட்டுபண்: http://www.youtube.com/watch?v=z1Kwcl0zkMs&feature=related

புதியதேசம் பிறப்பெடுக்கும் கோலாகல கொண்டாட்டத்தில் வட சூடான் அதிபரும், ஐ.நா பொதுச்செயலரும், கலந்து சிறப்பிக்கின்றனர்.

புதினப்பலகை குழுமத்தினரும் அதன் பங்காளர்களும், புதியதேசமான தென் சூடானை வாழ்த்தி 'ஒளிபடைத்த கண்ணினாய் வா வா.. உறுதி கொண்ட நெஞ்சினாய் வா வா..
எம் அரசியல் ஞானகுருவே வா வா .. என இசைக்கின்றோம். வாழ்த்துகின்றோம்.

Comments