தமிழர்கள் சுயஉரிமையுடன் வாழ வேண்டி கனடாவில் மாநாடு இன்று!! குழப்புவதற்கு சிறீலங்கா முயற்சி

சிறீலங்காவின் அப்பட்டமான மனித உரிமை மீறல்களை வெளிக்கொணருமுகமாகவும் கனடிய அரசாங்கத்தின் பங்களிப்பை தமிழர்கள் விவகாரத்தில் தீவிரப்படுத்துவதற்காகவும் கனடிய மனித உரிமை மையத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மனித உரிமை ஆய்வரங்கு இன்று மாலை 6 மணிக்கு ஸ்காபரோ சிவிக் சென்ரர் என அழைக்கப்படும் நகரசபை மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

கனடாவின் ஆளுங்கட்சியான கன்சவேட்டிவ் கட்சியின் ஆதரவுப் புலத்தைக் கொண்டுள்ள இந் மாநட்டைக் குழப்புமுகமாக சிறீலங்காவின் அடிவருடிகள் மேற்கொண்ட போலியான மின்னஞ்சல் தகவல்களையும் மீறி இம் மாநாடு அரசியற் சக்திகளின் ஆதரவைப் பெற்றுள்ளது. பொதுமக்களே பார்வையாளர்களாகக் கலந்து கொள்ளும் இந் மாநாட்டில் தமிழ்த் தேசியத்திற்கான ஆதரவை மக்கள் திரண்டு வெளிப்படுத்த வேண்டுமெனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழர்களின் நலன்களில் அக்கறை கொண்டவர்கள் போன்ற போலி முகத்திரையுடன் மேற்கொள்ளப்பட்ட இம் மின்னஞ்சல் பரிமாற்றங்களில் இந்த கனடிய மனித உரிமை அமைப்பு கனடியத் தமிழர்களிடையே ஒரு பெரிய அமைப்பா? என்ற தொக்கு விணாவுடன் ஏனைய தமிழ் அமைப்புக்களுடன் இந்த அமைப்பிற்கு உள்ள உறவை முறியடித்து பிளைவை ஏற்படுத்தும் வகையில் அவற்றிடையே போட்டி மனப்பாண்மையை ஏற்படுத்தும் வகையில் இந்தப் போலி மின்னஞ்சல் அனுப்பப்பட்டிருந்தது.

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் உண்மைகளை உலகிற்கு கொண்டுவர எடுக்கப்படும் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த முற்படும் சக்திகள் தங்களை தமிழர்களாக அடையாளப்படுத்தத் தகுதியவற்றையெனவும் இவை சிறீலங்காவின் ஏவற் செயற்பாட்டாளர்கள் என்பதையும் தெளிவாக இனங்கண்டு கொண்ட மக்கள் தமது ஆதரவை இந் நிகழ்விற்கு வழங்கியுள்ளனர்.

அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு என்ற முதுமொழிக்கு இசைவாக பிரிந்துபட்டிருக்கும் தமிழர்களை ஒரே குடையின் கொண்டு வந்து ஈழத்தமிழினத்தின் மேல் திணிக்கப்பட்ட இனவழிப்புப் போர் தொடர்பான உண்மைகளை உரைத்து உரைக்க கனடாவை தூண்டும் இந் நிகழ்வில் பங்குபற்றுமாறு அனைத்துத் தமிழ் அமைப்புக்களையும் கனடிய மனித உரிமை மையம் உரிமையோடு கோருகிறது.

கனடாவின் பல்லினத்தவரையும் தனது இயக்குனர் சபையில் பிரதிநிதித்துவப்படும் இந்த அமைப்பின் முயற்சிகள் கனடியத் தேசிய நீரோட்டத்தில் பாரிய மாறுதல்களை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக கனடாவின் குடிவரவு அமைச்சரே பாராட்டுமளவிற்கு மேற்படி அமைப்பு ஈழத் தமிழர்கள் தொடர்பான தாக்கநிலையொன்றை மத்திய அரசில் ஏற்படுத்தியுள்ளது.

கனடாவின் குடிவரவு அமைச்சர் ஜேசன் கென்னி இந்த அமைப்பிற்கு அனுப்பியுள்ள செய்தியில் இலங்கையில் வாழும் தமிழர்கள் தொடர்பான நடத்தப்படும் மனித உரிமை மாநாடு வெற்றி பெற வாழ்த்தி அதேவேளை இந்த அமைப்பின் செயற்பாடுகள் திறம்பட வெற்றியைத் தழுவ தனது ஆதரவை நல்குவதாகும் தெரிவித்துள்ளார்.

ரொறன்ரோ ஸ்காபரோ வாழ் தமிழர்கள் இன்று மாலை 6 மணியில் இருந்து 9 மணி வரையான நேரத்தில் ஸ்காபரோ நகரசபை மண்டபத்தில் இடம்பெறும்.

Comments