போர்க்குற்ற காணொளி பொய் எனில் இலங்கை அரசு நிரூபித்துக் காட்ட வேண்டும்-கேணல் ஆர்.ஹரிகரன்

இலங்கையின் படையினர் மேற்கொண்ட போர்க்குற்றங்கள் அடங்கிய 'இலங்கையின் கொலைக்களம்' என்ற ஆவணப்படத்தை சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டதன் பின்னர் சர்வதேச ரீதியாக இலங்கை தொடர்பில் பெரும் அதிர்வலைகள் ஏற்பட்டுள்ளமை கண்கூடு. இருந்தும் இக் காட்சிகள் யாவும் பொய்யானவை. திட்டமிட்டு உருவாக்கப்பட்டவை என இலங்கை அரசு மறுத்தும் வருகின்றது.


இன் நிலையில் குறிந்த காணொளி உண்மையானவை என சர்வதேச நிபுணர்களால் நிரூபிக்கப்பட்ட போதும் அது போலியான என தெரிவிக்கும் இலங்கை அரசு அதனை நிரூபித்துக் காட்டும் பொறுப்பும் அதுக்கு உள்ளதாக இந்திய அமைதிப்படையின் முன்னாள் புலனாய்வுத்துறைத் தலைவர் கேணல் ஆர்.ஹரிகரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

சனல் 4 காணொளியினை சர்வதேச நிபுணர்கள் உண்மையென நிரூபித்துள்ளனர். எனினும் இலங்கை அரசு அதனை மறுத்து வருகிறது. அப்படி மறுப்பதானால் தன்னை ஒரு நியாயவாதியென நிரூபிக்க அனைத்துலக விசாரணையை, இலங்கை அரசு ஏன் மறுக்க வேண்டும்? இலங்கை அரசின் மீதான போர்க் குற்றச்சாட்டுக்களை புறம் தள்ளிவிட்டு அங்கு நல்லிணக்கத்தினை ஏற்படுத்திவிட முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசு போர்க்குற்றச்சாட்டுக்களை மறுத்துக் கொண்டும், நியாயப்பாடுகளை புறந்தள்ளிக் கொண்டிருப்பது நிச்சயமாக இலங்கையில் நல்லிணக்க முயற்சிகளைப் பாதிக்கும்.

இலங்கைக்கு சர்வதேசத்தின் அழுத்தங்கள் அதிகரித்துள்ளது.

சனல் 4 காணொளி பாரதூரமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இலங்கை அரசு எல்லா குற்றச்சாட்டுக்களையும் அனைத்துலக கரிசனைகளையும், புறந்தள்ளிவிட் டு நல்லிணக்கம் பற்றிப் பேசமுடியாது.

போர்க் குற்றச்சாட்டுக்கள் பொய்யானதெனில் சர்வதேச விசாரணைகளை அனுமதிப்பதன் ஊடாக அதனை நிரூபிக்க முடியுமல்லவா?

அதேநேரம் இலங்கையின் அபிவிருத்தி முயற்சிகளை விரும்பாமலே சர்வதேச நாடுகள் தம்மீது போர்க்குற்றச்சாட்டை முன்வைப்பதாக இலங்கை அரசு கூறுகின்றது.

ஆனால் இலங்கையில் அமைதியை ஏற்படுத்த சர்வதேச நாடுகள் பெருமளவான நிதியைச் செலவிட்டன என்பதை மறந்துவிடமுடியாது எனவும் கேணல் ஹரிகரன் தனது கருத்தில் தெரிவித்துள்ளார்.

குற்றச்சாட்டுக்களை புறந்தள்ளிவிட்டு நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது – ஹரிகரன்

போர்க்குற்றச் சாட்டுக்களை புறம் தள்ளிவிட்டு இலங்கையில் நல்லிணக்கத்தினை ஏற்படுத்திவிட முடியாது, இலங்கை அரசாங்கம் போர்க்குற்றச் சாட்டுக்களுக்கான நியாயப் பாடுகளை புறந்தள்ளிக் கொண்டிருப்பது நிச்சயமாக இலங்கையில் நல்லிணக்க முயற்சிகளைப் பாதிக்கும் என கேனல் ஹரிகரன் கூறியுள்ளார்.


இலங்கைக்கு சர்வதேசத்தின் அழுத்தங்கள் அதிகரித்துள்ளது. சனல்4 காணொளி பாரதூரமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழலில் இலங்கை அரசாங்கம் எல்லா குற்றச் சாட்டுக்களைளையும் அனைத்துலக கரிசனைகளையும் புறம் தள்ளிவிட்டு தாம் நல்லிணக்கம் பற்றி பேசமுடியாது. என கூறியுள்ளார் ஹரிகரன். சணல்4 காணொளி தொடர்பிலான கேல்விகளுக்கு பதில் கூறுகையிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார். . சணல்4காணொளியினை சர்வதேச நிபுனர்கள் உண்மையென ஆதாரப் படுத்தியுள்ளனர். ஆனால் சிறிலங்கா அரசு அதனை மறுத்து வருகின்றது. சரி அப்படி மறுப்பதானால் தன்னை ஒரு நியாயவாதி என நிரூபிக்க அனைத்துலக விசாரணையினை ஏன் மறுக்க வேண்டும் என கேள்வி எழுப்பியுள்ளார் ஹரிகரன்.

Comments