இலங்கையில் நடந்தது இனப்படுகொலையா அல்லது பயங்கரவாதத்திற்கு எதிரான போரா? யேர்மனி Bonn நகரத்தில் கருத்தரங்கம்

யேர்மனியில் 15 .07 .2011 அன்று Bonn நகரத்தில் இலங்கையில் நடந்தது இனப்படுகொலையா அல்லது பயங்கரவாதத்திற்கு எதிரான போரா? எனும் கருத்தரங்கம் குறிப்பிட்ட நகரத்தின் இடதுசாரி கட்சி மற்றும் Bonn நகரத்தின் தமிழர் கலாச்சார அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்றது .

இவ் நிகழ்வில் பேச்சாளர்களாக இடது சாரி கட்சியின் NRW மாகாணசபையின் உறுப்பினரும் , சமாதான விவகாரத்திற்கான பேச்சாளரும் Ali Atalan , சர்வதேச மனித உரிமை அமைப்பு Bremen தலைமைப் பிரதிநிதி Viraj Mendis , சர்வதேச மனித உரிமை அமைப்பின் அங்கத்தவரும் ஊடகவியாளருமாகிய Nikolaus Jung, மற்றும் இலங்கையில் ஜனநாயகத்திற்கான ஊடகவியாளர் அமைப்பின் அங்கத்தவர் ஒருவரும் அத்தோடு சிங்கள அரசின் இனப்படுகொலைக்கு சாட்சியாக இறுதி நாட்களில் முள்ளிவாய்க்கால் பகுதியில் அகப்பட்டு தற்சமயம் ஐரோப்பாவில் வாழும் ஒரு நபரும் கலந்துகொண்டார்கள் . இவ் கருத்தரங்கத்தின் முன்னறிவித்தலை Rhein -Sieg தொகுதியின் பேச்சாளர் Eveliene Beinersdorf, மற்றும்,Sankt Augustin தொகுதியின் இடதுசாரி கட்சியின் பேச்சாளர் Michael Schaale அவர்களும் ஆரம்பித்து வைத்தனர். அதை தொடர்ந்து அங்கு வருகை தந்திருந்த யேர்மன் மக்களுக்கு தமிழ் மக்கள் மீது சிங்கள அரசு மேற்கொண்ட படுகொலைகள் சார்ந்ததும் மற்றும் இலங்கையின் வரலாறு சார்ந்த சில தகவல்களும் காணொளி ஊடாக காண்பிக்கப்பட்டது .

பின்னர் இவ் நிகழ்வில் சிறப்பு பேச்சாளராக வருகை தந்திருந்த Ali Atalan அவர்கள் தமிழ் மக்கள் எவ்வளோவோ துன்பங்களை கடந்தும் சிங்கள இனவெறி அரசால் எவ்வித அரசில் தீர்வும் கிடையாது இருப்பது ஒரு போதும் ஏற்க முடியாது என்றும் அத்தோடு தமிழ் மக்கள் ஒரு தனித்துவமான இனம் என்ற அடிப்படையில் அவர்கள் முழு சுயநிர்ணய உரிமையோடு வாழ்வதற்கு சர்வதேச நாடுகள் சிங்கள அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் எடுத்துக் கூறினார் .

ஒடுக்கப்பட்ட இனத்தில் இருந்து தானும் வருவதாகவும் தனக்கு இரு இனத்தின் விடுதலைப்போராட்டத்தை விளங்கி கொள்ள முடியும் என்பதையும் அத்தோடு வல்லரசு நாடுகள் தங்கள் சுலலாபம் கருதி தங்களுக்கு ஏற்றவாறு ஒரு விடுதலைப் போராட்டத்தை வர்ணிப்பதாகவும் எடுத்து விளக்கினார்.லிபியாவில் அரசின் அடுக்குமுறைக்கு எதிராக போராடும் மக்களுக்கு நீதி வழங்க வேண்டும் என்று கூறும் இந்த உலகம் ஏன் 60 வருடங்களாக இலங்கையின் அரசின் கீழ் அடிமைப்படுத்தப்படும் தமிழ் மக்களை காப்பாற்ற முன்வரவில்லை என்று கூறினார் . இறுதியாக யேர்மனியில் கைது செய்யப்பட்டு வழக்கு தொடுக்கப்பட்டிருக்கும் 4 தமிழ் செயல்ப்பாட்டாளர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்றும் தான் தமிழ் மக்களுக்கு ஆதரவு வழங்குவதால் தனக்கு பல பக்கத்தால் அழுத்தங்கள் வருவதாகவும் எனினும் தான் தமிழ் மக்களுக்கு தொடர்ந்தும் குரல் கொடுக்க காத்திருப்பதாகவும் என்று கூறினார்.

Ali Atalan அவர்களின் பேச்சை தொடர்ந்து மற்றும் இலங்கையில் ஜனநாயகத்திற்கான ஊடகவியாளர் அமைப்பின் அங்கத்தவர் ஒருவர் இனப்படுகொலை அல்லது இனவழிப்பு எப்படி சர்வதேச நாடுகளால் எப்படி சட்ட ரீதியாக வரையறுக்கப்பட்டுள்ளது என்பதையும் அத்தோடு இலங்கை மீது வல்லரசு நாடுகள் கொண்டிருக்கும் பிராந்திய நலன் கொண்ட ஆசைகளை பற்றியும், இறுதியாக எப்படி ஒரு அரசு பயங்கரவாதத்திற்கு எதிரான போர் எனும் போர்வையை வரையறுக்கிறார்கள் என்பதையும் விளக்கமாக அனைத்து ஆதாரங்களுடன் மக்களுக்கு விளக்கினார் .

சர்வதேச மனித உரிமை அமைப்பு Bremen தலைமைப் பிரதிநிதி Viraj Mendis அவர்கள் உரையாற்றுகையில் தமிழ் மக்கள் சிங்கள இனவெறி அரசை எதிர்த்து தமது உரிமைகளை கோரி தொடுத்த போராட்டம் ஒரு விடுதலைப் போராட்டமே என்று எடுத்துக்கூறினார்.

எந்த ஒரு சர்வதேச நாடுகளும் தமிழ் மக்கள் மீது ஒரு குற்றங்களையும் முன்வைக்க ஏலாது. தமிழ் மக்கள் தமது ஆயுதப் போராட்டத்தை 30 வருட அகிம்சை வழிப் போராட்டத்தின் பின் தான் எப்பொழுதும் தம் மீது வன்முறையை தொடுக்கும் சிங்கள அரசை வேறு வழி இல்லாமல் ஆயுத முனையில் எதிர்கொண்டார்கள் .

அத்தோடு சமாதான காலத்திலும் பேச்சுவார்த்தைகள் நடாத்த பெர்லினுக்கு வருகை தந்த தமிழ் ஈழ விடுதலைப்புலிகளின் அரசில் பிரிவு யேர்மன் அரசுடன் நல்லுறவை பேணி வந்தததாகவும் அதோடு சுனாமி அனர்த்த காலத்திலும் யேர்மன் அரசுடன் அபிவிருத்தி விடையமாக ஒருங்கிணைந்த வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வந்தனர் என்றும் குறிப்பிட்டார் .

ஆனால் போர் முடிந்தது என்று சிங்கள அரசு அறிவித்த பின்னர் யேர்மனுக்கு போர்குற்றவாளி மேஜர் ஜெகத் டியாஸ் வந்த பின்னர் தமிழ் மக்கள் மீதான சிங்கள அரசின் அடுக்குமுறை இங்கும் தொடர்கின்றது என்பதையும் அதற்கு யேர்மன் அரசு துணை போவது நீதி அற்றது என்பதையும் சுட்டிக்காட்டினார் .

சுனாமி காலத்தில் தமிழீழத்தில் மக்களுக்கு உதவி செய்யும் பொருட்டு யேர்மன் முன்னால் அபிவிருத்தி அமைச்சருடன் கூட இறுக்கமான உறவை பேணி வந்த தமிழ் தேசிய செயல்ப்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டு இருப்பது நீதிக்கு முரணானது என்பதையும் விளக்கினார் .யேர்மன் அரசின் இப்படியான செயலுக்கு பின்னர் சில வல்லரசின் நிகழ்ச்சி நிரல் இருப்பது நிச்சயம் என்பதையும் சுட்டிக்காட்டினார் .

இறுதியாக சிங்கள அரசின் இனவழிப்பு சாட்சியாக கலந்து கொண்ட நபர், தான் இறுதிக் கட்ட யுத்தத்தின் பொருட்டு அனுபவித்ததை யேர்மன் மக்களுக்கு எடுத்துக் கூறினார் .அவர் கூறுகையில் தான் இறுதி நாட்களில் ஆயிரக்கணக்கில் சிங்கள அரசால் கொல்லப்பட்ட மக்களை கடந்து சென்ற சம்பவங்களையும் அத்தோடு அதை விட படுகாயப்பட்டு எவ்வித உதவியும் இல்லாமல் உயிர்போய் கொண்டிருக்கும் வேலையில் தங்களை காப்பாற்றுங்கள் என அலறி துடித்த குரல்கள் தனக்கு இப்பொழுதும் தனது காதுகளில் ஒலிப்பதாகவும் என மிக வேதனையோடு கூறினார் . அவர் தனது அனுபவங்களை மக்களுக்கு கூறும் போது யேர்மன் மக்கள் மிக ஆழ்ந்த கவலையோடு இருத்ததை அவதானிக்க கூடியதாக இருந்தது . கருத்தரங்கில் பேச்சாளர்கள் அனைவரும் தமிழ் மக்களுக்கு நடந்தது இனப்படுகொலையே என்று தமது கருத்தில் வெளியிட்டனர் . அத்தோடு வருகை தந்திருந்த மக்களும் அதே கருத்தை வெளியிட்டனர் .

இவ் அரசியல் நிகழ்வை ஜேர்மன் இடதுசாரி கட்சியின் அங்கத்துவரும் யேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவையின் கட்சி சார்ந்த தொடர்பாளரும் ஆகிய திரு கோகுலன் அவர்கள் ஒழுங்கு செய்ய அதற்கு Bonn நகரத்தின் தமிழர் காலாச்சார அமைப்பு முழு ஆதரவு வளங்கினார்கள் .

Bonn தமிழர் காலச்சார அமைப்பு செய்யும் பணியை போல அனைத்து யேர்மன் உல்லூர் அமைப்புகளும் தமது நகரங்களில் இதேபோல அரசியல் நிகழ்வுகளை எம் இனத்தின் நீதியின் தேவை கருதி செய்ய முன்வரவேண்டும் என்பதை தயவுடன் கேட்டுக்கொள்கிறோம் .


நன்றி

யேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவை

Comments