தமிழ்த்தேசியவாதி ,உணர்வாளர் சீமானின் வாழ்த்துக்கள் திரைப்படம்

வணக்கம்

தமிழ்த்தேசியவாதி ,உணர்வாளர் சீமானின் வாழ்த்துக்கள் திரைப்படம்


தமிழ்த்தேசியவாதி சீமானின் படத்திற்கு உங்கள் ஆதரவை அளிப்பதன் மூலம் அவர்களை உற்சாகப் படுத்தலாம் அல்லவா?

இப்படத்தில் தாயகத்தைப் பற்றிய சில வசனங்கள் இடம் பெற்றிருக்கிறது



டி. சிவாவின் அம்மா கிரியேசன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள படம் `வாழ்த்துகள்'. தயாரிப்பில் அம்மா கிரியேஷன்ஸ் உடன் பிரமிட் சாய்மீராவும் கை கோர்த்துள்ளது.
`தம்பி' வெற்றிக்குப் பின் சீமான் இயக்கும் படம் இது.

மாதவன், பாவனா பிரதான பாத்திரங்களை ஏற்க, கதையோ அன்பையும் பாசத்தையும் பிரமாதப்படுத்தி வலியுறுத்துகிறது.

படத்தைப் பற்றி இயக்குநர் சீமான் கூறுகையில், பெற்றோர்களைக் காப்பாற்றும் பொறுப்பு பிள்ளைகளுக்கு உண்டு என்று சட்டம் போடும் அளவுக்கு நம்நாடு இருக்கிறது. யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று உலகத்தையே தன் குடும்பமாக நினைத்தவன் தமிழன். ஆனால் இன்று தனித்தனி தீவாகிக் கிடக்கிறான். வியாபார - எந்திரமயமாகிப் போன வாழ்க்கையில் அன்புக்கும், பாசத்திற்கும் இடமில்லாமல் போய்விட்டது. இப்படியே போனால் நாடு தாங்காது என்பதை எச்சரிக்கை மணியாக சொல்லும் படம்தான் `வாழ்த்துகள்' என்றார்.பாவனா கோவை வேளாண்மைக் கல்லூரியில் படிக்கும் மாணவி. விவசாயம் என்பதையே கேவலமாகப் பார்க்கும் இக்காலத்தில் வேளாண்மைப் படிப்பை விரும்பிப் படிப்பவர். காரணம் அவரது அப்பா விவசாயி.கணினி துறையிலுள்ள மாதவனுக்கும் பாவனாவுக்கும் இடையே காதல் பூக்கிறது.

அவர்களிடையே உள்ள அனைத்து இடைவெளியையும் புரிதல ஒன்றே இட்டு நிரப்புகிறது. பிணைக்கிறது. இணைக்கிறது.காதலில் புரிந்து கொள்ளும் வாயப்பு அதிகம் உள்ளதால காதலைத் தேர்தெடுத்ததாகக் கூறும் இயக்குநர், காதல் என்னும் சாதனத்தை வாகனமாக்கி அன்பு, குடும்பம், உறவுகள், நேசம், மனிதாபிமானம் போன்றவற்றை அழகாகக் காட்டியுள்ளதாக பெருமைப்படுகிறார்.நாயகன், நாயகியா மாதவன் பாவனா நடிக்க, வெங்கட்பிரபு, இளவரசு, கிருஷ்யமூர்த்தி, வீ. கேன், ஆர்.கேத. தேவா, பிரண்ட்ஸ் விஜயலட்சுமி போன்றோருடன் கூத்துப்பட்டறை நிறுவனர் முத்துசாமி, ஓவியர் ட்ராட்ஸ்கி மருது, பண்ருட்டி எம்.எல்.ஏ. வேல்முருகன், நடிகர் பிரிதிவிராஜன் அம்மா மல்லிகா சுகுமாரன் என திரைக்கு புதியதாக அறிமுகமாவோரும் உண்டு என்கிறார் இயக்குனர்.

தொழில்நுட்பக் கலைஞர்கள்:

இசை - யுவன் சங்கர் ராஜா
ஒளிப்பதிவு - பி.எல். சஞ்சய்
படத் தொகுப்பு - பழனிவேல்
கலை - வீரசமர்
சண்டைப்பயிற்சி - இந்தியன் பாஸ்கர்
நடனம் - கல்யாண் - தினேஷ்
தயாரிப்பு மேற்பார்வை - என் மகேந்திரன்
நிர்வாகத் தயாரிப்பு - நா. நாகேந்திரன் கிருஷ்ணமூர்த்தி
தயாரிப்பு - சி. அருணா மகேஸ்வரி.

Comments