இந்தியாவை அம்பலப்படுத்திய வான்புலிகளின் தாக்குதல்!சபேசன் கட்டுரைக்கு பின்னூட்டல்

இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் போது ‘இந்தி’ய படைகளை இறக்கி தமிழர்களை சுட்டு கொன்ற இந்தியா அதே போல் காவிரி பிரச்சனையின் போது(1991) களத்தில் இறங்கி தமிழர்களை காத்ததா?எமது பக்கத்து மாநிலமான கருநா(க)டகா காரன் பிழைக்க போன ஒடுக்க பட்ட சிறுபான்மை தமிழ் மக்களை தமிழில் பேசுகிறான்..

தாய்மொழி தமிழ் என்பதற்க்காக வெட்டி காவிரி கரையில் ரத்தமாக விட்டான் தடுப்பதற்கோர் இந்திய தேசம் முன்வரவில்லை மயிரை புடுங்கி கொண்டிருந்தது! அதற்கு காரணமான மான வாட்டாள் நாகராசு இன்னும் அரசியல் வாதியாக மிகபெரிய அவதாரம் எடுத்து சுற்றி கொண்டுதான் உள்ளான்..ஏன் கன்னடக்காரனுக்கு-மராத்திகாரனுக்கும் இன்னும் எல்லை தகாராறு உள்ளது..எங்கே பெங்களூரில் உள்ள அவர்கள் மேல் கைவைக்க சொல்லுங்கள் பார்போம் வாலை ஒட்ட நறுக்குவார்கள்..

இந்த பால்தக்கரேவும் தான் மும்பையில் தமிழரை தாக்கினான் அப்போது என்ன செய்து கொண்டு இருந்தது ‘இந்தி’ய அரசு? இன்றும் பத்திரமாகத்தான் உள்ளான் இவ்வாறானவர்களை சிறையில் தள்ளி முட்டிக்கு முட்டி தட்டி இருந்தால் இந்த இந்திய தேசத்தை பாராட்டலாம்.. இதுவரை தமிழன் எத்தனை மாநிலங்களில் கலவரத்தை தூண்டினான்? காரணமின்றி யாரையாவது அடித்திருக்கிறானா?மலையாளி கண்ணகி கோட்டம் என்னுடையது என்கிறான்.. கொல்டி பாலாற்றின் குறுக்கே அணைகட்டிகிறான்.. என்ன செய்ய முடிகிறது நம்மால்?

இந்த மீனவர்களை எடுத்து கொள்ளுங்கள்..இதுவரை சற்றொப்ப 350 தமிழக மீனவர்களைச் சிங்களக் கடற்படையினர் இந்தியப் பெருங்கடலில் சுட்டுக் கொன்று விட்டனர். இந்தத் தமிழ் இனப்படுகொலை தொடர்கிறது. இந்தியக் கப்பற்படையோ இந்திய அரசோ சிங்களக் கப்பற்படைக்கு எதிராக மறுநடவடிக்கை எதுவும் எடுக்கவில்லையே ஏன்?

பாகிஸ்தானுக்கு எதிராக சீறும் ‘இந்தி’யத் தோட்டாக்கள், தமிழகத் தமிழனை சுட்டுக் கொல்லும் சிங்களவனை நோக்கி ஒரு முறையாவது பாய்ந்திருக்கிறதா?

ஏன் தமிழாகளிடம் இந்த பாகுபாடு?

சாகடிப்போர் இந்திய அரசுக்கு நண்பர்கள்.

சிங்களர்கள் நண்பர்கள் என்று சொல்வது கூட தவறு.

இந்திய ஆளும் வர்க்கத்திற்கு அவர்கள் பங்காளிகள்.

சிங்களரும் இந்திய ஆளும் வர்க்கத்தினரும் ஆரியர்கள்.

வரலாற்றுக் காலந்தொட்டு அடுத்தடுத்த தலைமுறைக்குத் தமிழர்க்கெதிரான பகைநஞ்சை ஆரியம் கைமாற்றித் தந்துவருகிறது.

ஈழத் தமிழர்கள்பால் இந்திய ஆளும் வர்க்கம் கடைபிடிக்கும் அணுகுமுறையும் பகைமை நஞ்சு சார்ந்ததுதான். சில மாதங்களுக்கு முன்பு லெபனானில் அவதிப்பட்ட இலங்கைச் சிங்களவர்களுக்கு இலவச விமானம் அனுப்பி ஏற்றி இறக்கிய இந்தியா குவைத்தில் அவதிப்படும் தமிழர்களை மட்டும் உணவுக்குக் கூடப் பிச்சை எடுக்க விட்டிருப்பதன் காரணமென்ன, அவர்கள் தமிழர்கள் என்பதாலா?

இந்திராகாந்தி ஆட்சிக் காலமானாலும், அவர் தந்தையார் நேருவின் ஆட்சிக் காலமானாலும், இந்திராவின் மகன், மருமகள், பேரன் ஆட்சிக் காலமானாலும், வாஜ்பாயி ஆட்சிக் காலமானாலும் இந்திய ஆளும் வர்க்கத்தினர் தமிழகத் தமிழர்களை சந்தேகப் பட்டியலில் வைத்துக் கண்காணிப்பதிலும், தமிழர்களைப் பகைவர்களாகக் கருதுவதிலும் மாற்றமில்லை. ஈழத் தமிழர்களையும் அதே அளவுகோல் கொண்டுதான் பார்க்கிறார்கள்

இந்த பாகுபாட்டைத் தான் ‘இந்தி’ய தேசியம் என்கிறோம். தமிழகத் தமிழர்பால் பகைமை அணுகுமுறையையே இந்திய அரசு கொண்டிருக்கிறது. காவிரி நீர்ச் சிக்கலில், கன்னடர் பக்கமும், முல்லைப் பெரியாறு அணைச்சிக்கலில் மலையாளிகள் பக்கமும் இந்திய அரசு இருக்கிறது. சுருக்கமாகச் சொன்னால் தமிழர்களுக்குப் பகைவர்களாக யார் யார் மாறுகிறார்களோ அவர்கள் எல்லாம் இந்திய அரசுக்கு நண்பர்களாகவும் வேண்டியவர்களாகவும் மாறிவிடுகிறார்கள். நடுவண் அரசாங்கத்தில் எக்கட்சி அல்லது எக்கூட்டணி ஆட்சி நடத்தினாலும் சாரத்தில் இக்கொள்கையே கடைபிடிக்கப்படுகிறது.

அதாவது ஏனைய பொருளாதார வளங்களுக்கே தமிழரும் தமிழ்நாடும் தேவை படுகிறாரகள்.. அசாமில் பெட்ரோல் எடுக்க அந்த அரசிற்கு உரிமைத் தொகை கொடுத்து வரும் “இந்தி”ய அரசு, தமிழகத்தின் காவிரிப்படுகையிலிருந்தும், நரிமணித்திலிருந்தும் திருடிச் செல்லும் பெட்ரோலுக்கு நம்மிடையே “இறக்குமதி” வரியை விதித்துக் கொள்ளையடிப்பதை என்னசொல்ல?

மார்வாடி, குசராத்தி சேட்டுகள் தமிழகத்தின் பெரு வணிகங்களை கைப்பற்றத் தொடங்கியுள்ளனர். பீகாரிகள் ரயில்வே வேலை, ரோடு வேலை என தமிழகத்திற்குள் நுழைந்து விட்டனர்.

தமிழத்திலேயே தமிழன் அகதியாக தெருத்தெருவாய் அலையும் நாள் வெகு தொலைவில் இல்லை எனத் தெரிகிறது.

அயலவன் வந்து சுரண்ட நமது தமிழ் மண் வேட்டைக்காடு அல்ல. நமது எதிரி உலகமய முதலாளிகள் மட்டுமல்ல தில்லி ஏகாதிபத்தியத்தின் கைக்கூலிகளாக இங்கு செயல்படும் “இந்தி”யத் தேசியத்தை ஆதரிக்கும் அனைவரும்தான் என உணர வேண்டும்

இதுவரை எனைய தமிழர் நலம் சார்ந்த வெளிவிஷயங்களில் இதுவரை இந்தியா தலையிட்டதிலை அது மலேசிய பிரச்சனையாக இருந்தாலும் சரி ..குவைத் தமிழர்கள் பிரச்சனையாக இருந்தாலும் சரி!

எங்கோ சரந்தீபு சிங்கு தூக்குதண்டனைக்கு தாம் தூம் என்று குதிக்கும் இந்திய அர்சு இதுவரை தமிழக தமிழர்களுக்காக குதிதது உண்டா?

சிந்தித்து பாருங்கள்..மராட்டியர்களின் இன உணர்வில் கால் பங்கு கூட இல்லையா தமிழனுக்கு?

கொஞ்சம் வராலாற்றை எடுத்து புரட்டி பாருங்கள் அடக்குமுறைக்கு எதிராக போராடிய இனங்களே வாழ்திருக்கின்றன..

ஈழதமிழர்கள் செய்வது ஒன்றும் தவறான விஷயம் அல்ல.. தமிழர்கள் இந்தியாவில் இருந்தாலும் ஈழத்தில் இருந்தாலும் இந்திய ஆளும் வர்க்கம் அவர்களைப் பகைவர்களாகவே கருதுகிறது.

விடுதலைப் புலிகள் இந்திய அரசுக்குத் திரும்பத் திரும்ப நேசக்கரம் நீட்டுகிறார்கள். இந்திய அரசு ஒரு பிராந்திய வல்லரசாகச் செயல்படத் துணைபுரிவோம், இந்திய தேசிய இறையாண்மைக்குப் பாதுகாப்பாக இருப்போம் என்று கூட உறுதி தருகிறார்ச்கள். ஆனால் இந்திய ஆட்சியாளர்கள் விடுதலைப் புலிகளை வீழ்த்தவே முனைகிறார்கள். இது தீராத ஆரிய-தமிழ் இனப்பகையின் வெளிப்பாடு.

நமக்காக குரல் கொடுக்க ஒரு நாடு கட்டாயம் வேண்டும்.. நம் குரல் ஐ.நா. சபையில் எழுப்ப படும்.. அப்போதுதான் தமிழர்களுக்கு கொடுமை செய்யும் எனைய நாடுகள் இந்தியா உட்பட தனது கொட்டத்தை அடக்கும்..

புரட்சியை வெளியில் தேடாதே!! அது உன் உள்ளத்திலேயே உள்ளது!–லெனின்


Comments