சுப்ரமணியசாமி மீது முட்டை வீசியதன் எதிரொலி: வரலாறு காணாத கலவரம்: போர்க்களமான ஐகோர்ட் வளாகம்

சுப்ரமணியசாமி மீது முட்டை வீசியதன் எதிரொலி: வரலாறு காணாத கலவரம்: போர்க்களமான ஐகோர்ட் வளாகம்

சுப்பிரமணிய சாமி முட்டை வீச்சு சம்பவத்தால் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் புகுந்து வழக்கறிஞர்களை கைது செய்ய முற்பட்டனர் காவல்துறையினர்.

அப்போது காவல்துறையினருக்கும் வழக்கறிஞர்களுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் மோதலில் முடிந்தது.

நேருக்குநேர் மோதலில் வழக்கறிஞர்கள் கற்கள்,செருப்புகளை வீசினர். காவல்துறையினர் தடியடி நடத்தினர்.

இச்சம்பவத்தால் ஒட்டுமொத்த காவல்துறையினரும் தடியடி கவனத்தில் இருந்ததால் உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் இருந்த காவல்நிலையத்தில் எந்த காவலரும் இல்லை.

இதை புரிந்து கொண்ட வழக்கறிஞர்கள் சிலர் அந்த காவல்நிலையத்திற்குள் நுழைந்து அடித்து நொருக்கினர். அங்கிருந்த முக்கிய ஆவனங்களை கிழித்து எரிந்தனர்.

அப்படியும் ஆத்திரம் தாங்காமல் முக்கிய ஆவணங்களை தீயிட்டு கொளுத்தினர். பின்னர் ஓடிவந்த காவல்துறையினர் தீயணைப்பு துறையினருடன் வெகு நேரமாய் தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர்.

ஐகோர்ட் கலவர எதிரொலி:தமிழகம் முழுவதும் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்

சுப்பிரமணிய சாமி முட்டை வீச்சு சம்பவத்தால் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் புகுந்து வழக்கறிஞர்களை கைது செய்ய முற்பட்டனர் காவல்துறையினர்.

அப்போது காவல்துறையினருக்கும் வழக்கறிஞர்களுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் மோதலில் முடிந்தது.

போலீசாரும்,அதிரடிப்படையினரும் தடியடி நடத்தி விரட்டியடித்தனர்.

வழக்கறிஞர்கள் மீது போலீசார் தடியடி நடத்திய சம்பவத்திற்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நெல்லை, கோவை, மதுரை பகுதிகளில் வழக்கறிஞர்கள் பெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

போலீசார் திட்டமிட்டு நடத்திய வன்முறை நாடகம்:மூத்த வழக்கறிஞர் பிரபாகரன்

சுப்பிரமணிய சாமி முட்டை வீச்சு சம்பவத்தால் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் புகுந்து வழக்கறிஞர்களை கைது செய்ய முற்பட்டனர் காவல்துறையினர்.

அப்போது காவல்துறையினருக்கும் வழக்கறிஞர்களுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் மோதலில் முடிந்தது.

வரலாறு காணாத இந்த மோதல் சம்பவத்தால் போர்க்களமானது உயர்நீதிமன்ற வளாகம்.

இச்சம்பவம் குறித்து மூத்த வழக்கறிஞர் பிரபாகரன்,

‘’சுப்பிரமணிய சாமி மீது முட்டை வீசி தாக்கப்பட்ட வழக்கில் பல்வேறு வழக்கறிஞர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதில் ஒரு வழக்கறிஞர் நேற்று கைது செய்யப்பட்டார்.

குற்றம் சுமத்தப்பட்ட மற்ற வழக்கறிஞர்கள் தாங்களாகவே சரண் அடைவதாக அறிவித்தனர்.

அவர்களை கைது செய்ய போலீசார் உயர்நீதிமன்றத்திற்குள் வந்தனர். அப்போது வழக்கறிஞர் ரஜினிகாந்த், தான் சுப்பிரமணிய சாமி மீது சுமத்தப்பட்ட வழக்கில் முதலில் அவரை கைது செய்யுங்கள். அப்புறம் எங்களை கைது செய்யுங்கள் என்று வாக்குவாதம் செய்தார்.

போலீசார் அதை காதில் வாங்காமல் வழக்கறிஞர்களை கைது செய்வதில் மும்முரமாக இருந்தனர். மேலும் ஐந்து பெண் வழக்கறிஞர்களையும் கைது செய்யப்போவதாக முற்பட்டனர்.

இதனால் போலீசாருடன் தீவிர வாக்குவாதத்தில் ஈடுபட்டோம்.

அந்த நேரத்தில் தூரத்தில் கலர் சட்டை போட்ட ஒருவர் அருகில் இருந்து கல்லை எடுத்து போலீசார் மீது வீசினார். உடனே தயாராகவே இருந்த போலீசார் கண்மூடித்தனமாக வழக்கறிஞர்களை தாக்கினர்.

வழக்கறிஞர்களின் வாகனங்களை எல்லாம் தேடித்தேடி காவல்துறையினர் அடித்து நொருக்கினர்.

உயர்நீதிமன்றத்திற்குள் காவல்துறை திட்டமிட்டே ஒருவரை நிற்கச்சொல்லி, கற்களை தயாராக வைத்திருக்கச்சொல்லியிருக்கிறது.

இது காவல்துறை முன்கூட்டியே திட்டமிட்டு அரங்கேற்றிய வன்முறை நாடகம். இந்த நாடகத்தால் வழக்கறிஞர்கள் சமுதாயம் திட்டமிட்டு தாக்கப்பட்டது.

100க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்’’ என்று தெரிவித்தார்.

Comments