நடப்பது நெறிமுறை தவறிய மகாபாரதப் போரேயன்றி, வேறெதுவுமில்லை

பிரபாகரன் மாமா பற்றி யார் என்ன சொன்னாலும் அவர் எடுக்கும் எல்லா முடிவுக்கும் மக்கள் இதுவரையும், செவி சாய்த்தவர்கள், எந்தவித வதந்திகளையும் நம்பமாட்டார்கள். அவருக்கு இன்னும் தைரியம் கொடுக்கும் விதத்தில் எமது போராட்டத்தைத் தொடர்ந்து இன்னும் தீவிரமாக தொடர்வோம் எனமுனைப்புடன் தொடர்வோம் என்பது மாமாவிற்குத் தெரியும், மக்களுக்கும் தெரியும்.

பிரபாகரன் மாமா பற்றி யார் என்ன சொன்னாலும் அவர் எடுக்கும் எல்லா முடிவுக்கும் மக்கள் இதுவரையும், செவி சாய்த்தவர்கள், எந்தவித வதந்திகளையும் நம்பமாட்டார்கள். அவருக்கு இன்னும் தைரியம் கொடுக்கும் விதத்தில் எமது போராட்டத்தைத் தொடர்ந்து இன்னும் தீவிரமாக தொடர்வோம் எனமுனைப்புடன் தொடர்வோம் என்பது மாமாவிற்குத் தெரியும், மக்களுக்கும் தெரியும்.

தர்மம் தோற்பதுபோல் தோன்றும் ஆனால், கடைசியில் தர்மமே வெல்லும். ஈழத்தில் நடப்பது மகாபாரதப் போரேயன்றி, வேறெதுவுமில்லை. நாம் நமக்குரிய நிலத்தைதானே கேட்டோம். ஆனால் சிங்கள இனவாத அரசு ஒரு இம்மியளவும் தரமுடியாது என நம்மைக் கொடுமைப் படுத்தி, இனவொழிப்புச் செய்யத் துடிப்பதின் விளைவுதான் இது.

பொய்மை வெல்வதுபோல் தோன்றும் ஆனால் வெல்லாது. நம்புங்கள். (மஹிந்த) துரியோத்னனுடன் மாபெரும் வீரர்களான கர்ணன், பீஷ்மர் என இருந்தும் தோற்றான். ஏன்? அவன் தர்மம் பிறழ்ந்தான். அதனால் தோற்றான். ஆனால் அருச்சுனரான பிரபாகரன் மாமாவிற்கு, புலம்பெயர் உறவுகள் கிருஷ்ண பரமாத்மாவாக இருந்து எமது போராட்டத்தால் பலம் கொடுத்து தர்மத்தை வெல்ல வைப்போம் இதை உறுதியாக எடுப்போம்.

மகாபாரதப் போரில் ஒரு நெறி, முறை இருந்தது. ஆனால், சிங்கள இனவாத அரசின் நெறிமுறை தவறிய சண்டையால் மாபெரும் அழிவு அவர்களுக்குத்தான்.கல் மனது படைத்த உலக நாடுகளைக் கரைக்க எமது போராட்டம் இன்னும் போதாது போலும். புலம் பெயர் நாடுகளில் உள்ள மாமாக்கள் தயவு செய்து இன்னும் தாமதம் வேண்டாம் புலம் பெயர் நாடுகளின் சட்டத்திற்கு உட்பட்டு, அச்சட்டத்தை மதித்து இன்னும் என்ன செய்யலாம் என யோசித்து போராட்டத்தை விரைவாக்குங்கள்.

தாமதம் வேண்டாம் நம்புங்கள் ஏழு முறை படையெடுத்த "கஜினி முஹம்மது"வை நினையுங்கள், வந்தாரை வாழவைத்த தமிழனுக்கு வந்த கதியைப் பார்த்தீர்களா? இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் "நாடு கடத்தப்பட்ட விஜயனை வாழ வைத்ததிற்கு", நம் தமிழனுக்கு இன்று நேர்ந்த கதி? அவன் பெரும்பாலான நம்மை நாடு கடத்திவிட்டு,("ஏதிலிகள் ","புலம்பெயர் என்ற பெயரில்") அங்கிருக்கும் மீதமான நம் உறவுகளை படுத்தும்பாடு சொல்லொணா என்பது யாவருக்கும் தெரியும்.

பட்டவர்த்தனமாக எல்லோருக்கும் தெரியும் இச் சண்டையின் சூத்திரதாரி திருமதி சோனியா காந்தி என்பது. ஆகவே, இச் சிறுவனின் ஓர் தாழ்மையான எண்ணம்- "சாட்சிக் காரனின் காலில் விழுவதைவிட்டு, சண்டைக்காரனின் காலில் விழலாம்" என்பதுபோல், ஏன் நமது புலம்பெயர் இளையோர் அமைப்பு, இந்தியாவிலுள்ள இளையோர் அமைப்புடன் தொடர்பு கொண்டு அவர்களை திருமதி சோனியா காந்தி அவர்களை சந்திக்கவோ அல்லது அவர் முன் அகிம்சைப் போராட்டமோ நடத்தக் கேட்கக்கூடாது? இன்னும் ஒரு மாதத்தில் மஹிந்தாவின் அரசு காணாமல் போகும், இன்னும் ஒரு மாதத்தில் தமிழீழம் கிடைக்கும் நம்புங்கள்.

மனதில் உறுதி வேண்டும்

வாக்கினிலே யினிமை வேண்டும்

நினைவு நல்லது வேண்டும்

நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்

கனவு மெய்ப்பட வேண்டும்

இது எவ்வளவு பொருத்தம் நமக்கு. தாயகத்திலும், புலம் பெயர் நாடுகளிலும், தமிழகத்திலும் உள்ள நாம், நம்மை சர்வதேசமே கண்திறந்து பாராமுகமாகவே இருந்தாலும் மனதில் உறுதியுடன் நமது தமிழீழம் என்ற கனவை மெய்ப்படுத்த தீவிரமாக சோர்வின்றி உழைப்போம்

தர்மம் வெல்லும், நமது பக்கம் நியாயம் உள்ளது என்பதை யாரும் மறக்கவோ, மறுக்கவோ முடியாது.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்

இப்படிக்கு

மீண்டும் இந்தியச் சிறுவன்

மு. சு. சர்மா

Comments