அரசாங்கம் மீண்டும் பாதுகாப்பு வலயம் மீது இரசாயன ஆயுதங்களை பிரயோகிக்க ஆரம்பித்துள்ளது: தமிழீழ விடுதலைப் புலிகள்

மோதல் தவிர்ப்பு பிரதேசமாக அரசாங்கம் கூறிவரும் பகுதிகளில் உள்ள பொதுமக்களின் மீது, அரசாங்கம் மீண்டும் இராசாயன ஆயுதங்களை கொண்டு தாக்குதலை நடத்த ஆரம்பித்துள்ளதாக வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய தேர்தல்கள் நிறைவடைய இன்னும் 10 தினங்களே இருக்கும் நிலையில், தேர்தலுக்கு பின்னர் இந்தியாவின் அழுத்தம் ஆரம்பிக்கலாம் என்பதால், அதற்கு முன்னர் யுத்தத்தை நிறைவுக்கு கொண்டு வர சிறிலங்கா தீவிரமான முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது.

இதற்கு முன்னேற்பாடாக சிறிலங்கா அரசு இராணுவ பாதுகாப்பு முன்னரண் பகுதிக்கு இரசாயன ஆயுத பாதுகாப்பு முகக் கவசங்களை அனுப்பி வைத்துள்ளது.

இராணுவத்தினர், எறிகணைகள் மூலம் இராசாயன ஆயுதங்களை வீசி வருவதாக தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.

அனுராதபுரத்தில் கடந்த ஏப்ரல் முதலாம் திகதியளவில் இந்த இரசாயன ஆயுதங்களை அரசாங்கம் முதல்முதலாக பயன்படுத்த ஆரம்பித்தது. இதன் பின்னர் அரசாங்கம் பாரிய யுத்த ஆயுதங்களை பயன்படுத்த ஆரம்பித்துள்ளது.

கடற்படையினரின் தாக்குதல் முன்னெடுப்பு தோல்வியையடுத்தும் துருப்பினர் பாதுகாப்பு வலயத்தினுள் தமது வாகனங்களை உட்செலுத்த முயன்றமையும் தோற்கடிக்கப்கப்பட்டதன் பின்னரும் அரசாங்கம் மீண்டும் இரசாயன ஆயுதங்களை பாவிக்க ஆரம்பித்துள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.

Comments