உலகத் தமிழரிடமிருந்து தமிழக வாக்காளர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

பேரன்புடையீர்

அமைதியாகவும் சுதந்திரமாகவும் வாழ்ந்த ஈழத்தின் வன்னித்தமிழ் மக்களின் வாழ்வியலை முழுமையாகச் சிதைத்து சின்னாபின்னப்படுத்திமிகப்பெரிய மனித அவலத்தில் அவர்களை பலவந்தமாகத்தள்ளியதில் திருமதி சோனியாகாந்தி அம்மையாரின் தலைமையிலான காங்கிரசுக் கட்சிக்கு பெரும் பங்குண்டு.

பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற வாசகத்ததைப் பயன் படுத்தி முழுத்தமிழினத்தையே அழிக்க திருமதி சோனியாகாந்தி அம்மையார் எடுத்த முடிவு சர்வதேசச் சட்டங்களுக்கு முரணான ஓர் இனப்படுகொலையென்பதை

சர்வதேச நீதிமன்றத்தில் நிரூபிக்கவும் போதிய சந்தர்ப்பம் உண்டு.

உலகிலுள்ள 9 கோடித் தமிழ்மக்களும் விடுத்த அனைத்து வேண்டுகோள்களையும்நிராகரித்த காங்கிரசுக் கட்சி தொடச்சியாக ஈழத்தமிழினத்தை கொலைசெய்யும் சிறிலங்கா அரசுக்கு பக்கபலமாக நிற்பது தவறு என்பதைச் சுட்டிக்காட்ட தமிழக வாக்காளர்களுக்கு அரியசந்தர்ப்பமாக மே 13ம்திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத்தேர்தல் வாய்த்துள்ளது.

தமிழின உணர்வாளர்களே காங்கிரசுக்கட்சிக்கு நீங்கள் வாக்களிக்காமல் விடுவதன்மூலம் திருமதி சோனியாகாந்தி அம்மையாரின் முடிவு தவறானது என்பதைப் புரியவைக்க முடியும்.

தமிழ் நாட்டிலிருந்து இந்திய நாடாளுமன்றத்திற்கு காங்கிரசுக் கட்சி உறுப்பினர் ஒருவர்கூட இம்முறைதேர்ந்தெடுக்கப்படக்கூடாதென்பதே உலகத்தமிழனித்தின்

வேண்டுகோளாகும்.

தமிழ்நாட்டுமக்களின் தீர்ப்பையறிய பல நாடுகள் மாத்திரமல்ல ஐக்கியநாடுகள்சபையும் ஆவலாக இருக்கிறதென்பதை கவனத்தில் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

வேண்டுகோளைவிடுக்கும் பதிவு செய்யப்பட்ட அமைப்புக்கள் வருமாறு:-

1.உலகத்தமிழ்ப் பண்பாட்டியக்கம் ஐரோப்பிய ஒன்றியம் ( பதிவு இல:VR.1116)

2.புங்குடுதீவு மறுமலர்ச்சி ஒன்றியம் யேர்மனி (பதிவு இல:- (VR.757)

3.தமிழர் கலாச்சார நற்பணி மன்றம் யேர்மனி (பதிவு: VR.296)

4.சர்வதேசப் புலம்பெயர் தமிழ்எழுத்தாளர் ஒன்றியம் (பதிவு:-VR.5895)

5.தமிழ்மன்றம் யேர்மனி (பதிவு VR-9746)

6..ஈழத்தமிழர் நலன்புரிக்கழகம் யேர்மனி (பதிவு-VR 10369)

7.பாரதிகலைக்கூடம் யேர்மனி (பதிவு-VR-4862)

8.தமிழர் ஒன்றியம் யேர்மனி (VR-10012)

Comments

Tamilppannai said…
வெல்க தமிழினம்! வாழ்க தமிழரும் அவர்தம் உயர்தனிச்செம்மொழியாம் தமிழ்மொழி!!

அன்புடையீர் உமது வேண்டுகோள் ஏற்க்கப்படுகிறது.
இது நாள் வரை திமுக ஆதரவாளனாக இருந்த யாம் இம்முரை முதன்முதலாக திமுக புறந்தள்ளி காங்கிரசு கூட்டணியை எதிர்த்து வாக்களிக்க ஊள்ளோம் என்பதனை அறிவிக்கின்றோம்.

இருப்பினும் தமிழ்த்துரோகி செல்வி செயலலிதா தான் உறுதியளித்தபடி நடந்துகொள்வாரா என்பதுதான் எனது சந்தேகம். ஆயினும் உலகத்தமிழர்களுக்கிணங்கவே யாம் இந்த முடிவை எடுத்துள்ளோம்.

செல்வி செயலலிதா தமது தனித்தமிழீழம் வாக்குறுதியையும் அதற்க்காக அரும்பாடுபட்டு வரும் தமிழீழ விடுதலை புலிகளை அங்கீகரித்து நிறைவேற்றும் நிலையிலேயே அவர் முன்னம் செய்த தமிழ்த்துரோகம் ஈடுசெய்யப்பட்டு வீரத்தமிழ்ழ்ச்சி என்பது ஏற்க்கப்படும்.
இந்த அறிய வாய்ப்பை நல்லமுறையில் பயன்படுத்தட்டும்.
வெல்க தமிழினம்! வாழ்க தமிழரும் அவர்தம் உயர்தனிச்செம்மொழியாம் தமிழ்மொழி!!

என்றும் பேரன்புடனும் ஆதரவுடனும்
கே.முருகேசன்.