இந்தியா ஒப்புதல் வாக்குமூலம் புலிகளை பூண்டோடு அழித்தோம்

சரணடைந்த புலி உறுப்பினர்களும் குடும்பத்தினரும் கொலை செய்யப்பட்டது உண்மையே வெளிநாட்டு ஆதிக்கத்தைக் குறைக்க இலங்கைக்கு இந்திய ஆயுதங்கள்!

சீனா, பாகிஸ்தான் போன்ற வெளிநாடுகளின் இலங்கை மீதான ஆதிக்கத்தைக் குறைக்கும் பொருட்டுப் போர்க்காலத்தில் இலங்கைக்கு இந்தியா ஆயுதங்களை வழங்கியது உண்மையே. அதில் எவ்வித சந்தேகமும் இல்லை. அதுமட்டுமன்றி யுத்த காலத்தில் இந்தியா கப்பல்களையும் மற்றும் புலனாய்வு வசதிகளையும் இலங்கைக்கு வழங்கியதும் உண்மையே.

இவ்வாறு தெரிவித்திருக்கிறார் இந்திய கொள்கை ஆய்வு மத்திய நிலையத்தின் அங்கத்தவர்களில் ஒருவரான பேராசிரியர் பிரம்மா செல்லச்சாமி.

விடுதலைப்புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன், சமாதானச் செயலகத் தலைவர் புலித்தேவன் மற்றும் மூத்த உறுப்பினர்களும் குடும்பத்தினரும் சரணடைந்தவேளை கொலை செய்யப்பட்டதும் உண்மையே என்றும் பேராசிரியர் பிரம்மா ஊர்ஜிதம் செய்துள்ளார். புதுடில்லியில் உள்ள இந்திய கொள்கை ஆய்வு மத்திய நிலையத்தின் அங்கத்தவர்களில் ஒருவரான பேராசிரியர் பிரம்மா செல்லச்சாமி இணையத்தளம் ஒன்றுக்கு இலங்கையில் நடந்த போர், அதில் இந்தியாவின் பங்கு, இப்போதைய உறவு மற்றும் இலங்கையின் எதிர்கால அரசியல் உத்திகள் குறித்து நீண்ட பேட்டி ஒன்றை வழங்கியுள்ளார்.

அந்தப் பேட்டியின் முக்கிய பகுதிகள் சில வருமாறு:

- இன்போதமிழ் -

யுத்தகாலத்தில் சரணடைந்த விடுதலைப் புலிகளின் சிரேஸ்ட உறுப்பினர்கள் கொடுமையாக கொல்லப்பட்டமை உண்மையே.

  • அரசியல் துறை பொறுப்பாளர் நடேசன் மற்றும் சமாதான செயலக தலைவர் புலித்தேவன் உள்ளிட்ட சிரேஷ்ட உறுப்பினர்கள் வெள்ளை கொடிகளுடன் மே மாதம் 17ம் திகதி காலப்பகுதியில் சரணடைந்தனர்.

    இது தொடர்பில் சரணடைவதற்கு முன்னர், ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளர் பான் கீ மூன், ஐக்கிய நாடுகளின் தலைமை அதிகாரி விஜய் நம்பியார் மற்றும் ஐக்கிய நாடுகளின் பல சிரேஷ்ட உறுப்பினர்களுடனும் அவர்கள் செய்மதி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். இதில் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பாலித்தகோகொன்னவும் இணைந்திருந்தார்.

    எனினும் சரணடைந்த புலி உறுப்பினர்களும், அவர்களின் குடும்பத்தினரும் கொலை செய்யப்பட்டனர். இதற்கு இந்திய தேசிய புலனாய்வு துறையினர் பெரும் ஒத்துழைப்பு வழங்கினர்.மனித உரிமை மீறல்களும், யுத்த குற்றங்களும் யுத்த காலங்களில் செய்யப்பட்டமை தொடர்பில் இரண்டு தரப்பினர் மீது பொதுவான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

    அரசாங்கம் தமது பாரிய எறிகனை வீச்சுக்களை நடத்தில் ஆயிரக்கணக்கான பொது மக்களை கொன்று குவித்தது, விடுதலைப் புலிகள் பொது மக்களை தடுத்து வைத்துகேடயங்களாக பயன்படுத்தியமையும் அது போன்றதுதான். ஆனால் அவை அனைத்தும் சாட்சியமற்று மறைந்து போயின. அரசாங்கம் யுத்த பிரதேசங்களுக்கு சுயாதீன செய்தியாளர்களை அனுப்பாததன் மூலம் அவை அனைத்தையும் மறைத்து விட்டது என்பதே உண்மை.

இந்தியா கண்காணிக்கிறது.

  • வெளிநாட்டு ஆதிக்கம் அற்ற, சமாதானமான இலங்கையையே இந்தியா விரும்புவதாக தெரிவித்த அவர், அதன் காரணமாக பாகிஸ்தான் மற்றும் சீனா போன்ற நாடுகளின் இலங்கை மீதான ஆதிக்கத்தை இந்தியா கண்காணித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். பிராந்திய வல்லரசுக்கான போட்டியின் மத்தியில் இலங்கை மக்கள் உட்படுத்தப்படுவது, இலங்கை மற்றம் ஆசிய மக்களுக்கு உகந்தது இல்லை. இந்த நிலையிலேயே இலங்கையின் மீள் கட்டுமானம் மற்றும் சீர்படுத்தலுக்கான முனைப்புகளை இந்தியா மேற்கொள்ள வேண்டிய நிலை உருவாகியுள்ளது. இந்த ஒரு நடவடிக்கை மாத்திரமே, தமிழர்களின் நீண்டநாள் கலாசார மற்றும் அரசியல் அபிலாசைகள் மீதான சந்தேகங்களுக்கு விடையாக அமையும்.

இந்தியா மட்டும் செய்யக்கூடியதல்ல. இதற்கிடையில் இலங்கையின் நீண்டநாள் பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் இந்தியாவில் மாத்திரம் செய்யக்கூடிய விடயம் என்ற ஒன்றை தனியாக அடையாளப்படுத்த முடியாது உள்ளது. இந்த விடயம் தொடர்பில் இலங்கை அரசாங்கமே அக்கறை செலுத்தி தமது முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், அது,தமிழ் மற்றும் முஸ்லிம் சிறுபான்மையினரிடையே நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும் எனவும். இதற்கு முன்னர், இலங்கையின் முப்படையிலும், இனரீதியாவும், சமய ரீதியாகாவும் ஒதுக்கப்படாமல், சமூகத்தின் அனைத்து அங்கங்களும் இணைத்துக் கொள்ளப்பட வேண்டும். அத்துடன் இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு அக்கறை செலுத்த வேண்டியதும், விரும்ப வேண்டியதும் அனைவரினதும் பொறுப்பாகவே நான் கருதுகிறேன்.

  • தமிழக அரசியல்வாதிகளின் அரசியல் நடவடிக்கைகள் முத்துவேல் கருனாநிதி போன்ற தமிழக அரசியல் வாதிகள், இலங்கை தமிழர்களை வைத்து, அரசியல் நாடகங்களை அரங்கேற்றி வருகின்றனர். அவர்கள் முகாம்களில் சிக்கயிருக்கின்ற மக்கள் தொடர்பில் உண்மையான அக்கறை கொண்டவர்கள் அல்லர் தமிழக மக்களின் மத்தியில் ஓர் மாயையை ஏற்படுத்தும் வகையிலேயே, தமிழக நாடாளுமன்ற குழுவை இலங்கைக்கு அனுப்பிவைத்தனர்.

இதன் அடிப்படையிலேயே இலங்கையின் முகாம்களுக்குள் இந்திய நாடாளுமன்ற குழு அனுமதிக்கப்பட்டனர் என்றார்.

Comments