பல்டி அடிக்கும் லத்திகா சரன்

02.02.2010 அன்று தமிழகத்தில் தஞ்சம் கோரி நிற்கும் ஈழ ஏதிலிகள் மீது தமிழக காவற்துறை காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல் நடத்தியது யாவரும் அறிந்ததே. இந்த தாக்குதலை நடத்தியது தமிழக காவற்துறை. ஆனால், இந்த தாக்குதலை தாம் நடத்தவில்லை என்று தமிழக காவற்துறையின் தலைமை இயக்குனரான முதல் பெண் அதிகாரி லத்திகா சரன் கூறியிருக்கிறார்.

ஏதிலிகள் உண்ணாநிலை போராட்டம் இருக்கும்போது இரவு நேரத்தில் வந்த காட்டுமிராண்டிகளான தமிழக காவற்துறை எமது மக்களை தாக்கியது. இதில் அமலன் என்பவரின் இடது கை முறிந்துள்ளது. மூன்று பேர் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கின்றனர். அந்த நிலையில் அவர்களிற்குரிய மருத்துவ உதவி கூட செய்யாத காட்டுமிராண்டிகள் வேலூர் சிறைக்கு அவர்களை மாற்றி பல வழக்குகளை அவர்கள் மீது பதிவு செய்துள்ளது.

அந்த வழக்குகளை ஏற்கனவே மீனகம் இணையம் சுட்டிக்காட்டியுள்ளது. அதனைவிட நேரடியாகவே தொடர்பு கொண்டு ஒலிநாடாவையும் இணைத்துள்ளது. அத்துடன் தமிழீழ ஆதரவாளர்கள் அனைவரும் கண்டனம் தெரிவித்தனர். அந்த வகையில் காட்டு மிராண்டிகளின் தலைமை ஒரு அறிக்கை விட்டிருக்கிறது.

“காவல் துறையினர் இலங்கைத் தமிழர்கள் மீது தாக்குதல் எதுவும் நடத்தவில்லை. இச்சம்பவத்தில் இலங்கைத் தமிழர்கள் எவரும் கடுமையான காயம் அடைவில்லை” என்பதே அது.

காவற்துறையினர் ஏதிலிகளை தாக்கவில்லையாம். ஆனால், அந்த சந்தர்ப்பத்தில் ஏதிலிகளிற்கு கடுமையான காயம் ஏற்படவில்லையாம். தாக்காமல் எப்படி?..இதை யாருக்கு சொல்லுவது?..ஐந்தறிவுள்ளவைகளே இந்த அறிக்கையைக் கேட்டால் ஒரு கணம் நகைக்கும். தாக்குதல் நடத்தாமலா அமலன் என்பவது கை முறிவுற்றது. மூன்று பேர் உயிருக்கு போராடுகிறார்கள். இந்த அறிக்கையைக் கேட்டவுடன் எனக்கு பழையது நினைவுக்கு வருகிறது. அதாவது ” மழை பெய்தால் தூவாணம் அடிக்கத்தான் செய்யும்” என்ற கொலைஞரின் அறிக்கை தான் அது.

தூவாணத்திற்கே தினமும் 200க்கு மேற்பட்ட மக்கள் விதைக்கப்பட்டனர் என்றால் மழைக்கு எத்தனை எனது உறவுகளை சிங்களவன் கொல்ல இந்த கொலைஞர் ஆதரவு கொடுத்தார்?… தன்மானம் உள்ள தமிழினம் கொலைஞரின் இந்தக் கூற்றை எப்போதும் மறக்காது. மறந்திருந்தால் மறக்க கூடாது என்பதற்காக நினைவு படுத்துகிறேன்.

கடந்த வைகாசி மாதம் முள்ளிவாய்க்காலில் எமது உறவுகள் கொடுங்கோலன் மகிந்தவால் அழிக்கப்பட்டுகொண்டிருந்த சமயம் கொலைஞர் ஒரு நாடகம் அரங்கேற்றினார். உண்ணாவிரதம் என்ற நாடகத்தில் ஊடகவியலாளர் கேட்டார் “போர் முடிவடைந்து விட்டது என்று உண்ணாவிரதத்தை முடித்துவிட்டீர்கள். அங்கு மக்கள் இன்னும் இறந்து கொண்டிருக்கிறார்களே” என்று. அதற்கு கொலைஞன் அளித்த பதில் தான் இந்த மழையும் தூவாணமும். அதேமாதிரியான ஒரு கருத்தை இன்று ஒரு மக்களைக்காக்கும் காவற்துறையின் தலைமை அதுவும் பெண் தலைமை விடுத்திருக்கிறது.

தலைமைக்கே தெரியாமலா காவற்துறை செங்கல் பட்டு சுவரேறி இரவில் மக்களை தாக்கினர்! அப்படி நடந்திருக்குமானால், அந்த தலைமை எதற்காக நியமிக்கப்பட்டிருக்கிறது?.. அல்லது 150 காவற்துறையினர் கட்டுக்கடங்காமல் செயற்பட்டனரா? இப்படியான கேள்விக்கெல்லாம் பதிலளிக்க வேண்டிய கட்டாயத்தில் தமிழக காவற்துறை தலைமை தற்போது இருக்கின்றது. பதில் அழிக்குமா!….

மீனகம் ஏற்கனவே சுட்டிக்காட்டியவாறு செம்மொழி மாநாடு என்று உயிரில்லா உடல் போன்று மொழி இருக்கு ஆனால் இல்லை என்ற போர்வையில் ஒரு மாநாட்டை கொலைஞர் நடத்த இருக்கின்ற இந்த நிலையில் இந்த உண்ணாவிரதம் இடையூறாக இருக்கும் என்று கருதி ஏதிலிகளை அடக்க முற்பட்டனர். அடங்கி போக நாம் என்ன பதவிக்கு இனத்தை விற்கும் பரம்பரையில் வந்தவர்களா?..மண்ணுக்காக உயிரை விதைக்கும் பரம்பரையில் வந்தவர்கள் அல்லவா!

Comments