வன்னியில் இருந்து ஒரு மடல் என்ற கட்டுரை உண்மைக்குப் புறம்பானது.



செ.கஜேந்திரன்
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும்
தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணியின் வேட்பாளரும்
15.03.2010


கடந்த 14.03.2010 அன்று சில தமிழ் இணையத்தளத்தில் கஜேந்திரன் குழுவினருக்கு வன்னியில் இருந்து ஒரு மடல் என்ற தலைப்பில் வெளியான செய்தி உண்மைக்குப் புறம்பானது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது கிளிநொச்சி மகாவித்தியாலய அதிபராக சிறீதரன் அவர்கள் கடமையாற்றிய காலத்தில் கிளிநொச்சிப் பாடசாலைக்கு விளையாட்டு மைதானம் பெறுவது தொடர்பாக அதிபர் சிறீதரன் அவர்கள் விடுதலைப் புலிகளது அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் அவர்களை அணுகியதாகவும் அதன்போது தமிழ்ச்செல்வன் குழுவில் இருந்த சிலருடன் இணைந்து அந்த முயற்சியை நானும் எதிர்த்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இக் குற்றச்சாட்டை நான் முழுமையாக நிராகரிக்கின்றேன். அத்துடன் கிளிநொச்சி மகாவித்தியாலயத்திற்கு மைதானம் பெறுவது தொடர்பான எந்தவொரு கலந்துரையாடலிலும் எந்தவொரு சந்தற்பத்திலும் நான் கலந்து கொண்டிருக்கவில்லை அப்படியிருக்க தமிழ்ச்சசெல்வன் குழுவில் இருந்து நானும் எதிர்த்ததாக கூறப்படுவது முற்றிலும் பொய்யான விடயமாகும். மைதான விடயத்தில் தமிழ்ச்செல்வன் குழு, நடேசன் குழு என்ற இரண்டு குழுக்கள் உருவாக நான் காரணம் என்ற பொய்க் குற்றச்சாட்டை சுமத்துவதன் மூலம் என் மீது சேறு பூசுவதன் மூலம் கொள்கையில் இருந்து விலகிச் செல்வும் தமிழ் தேசியக் கூட்டமைப்பை வெல்ல வைப்பதற்கான அரசியல் வங்குரோத்துத்தனமான பிரசார உத்தியை கூட்டமைப்பு கையாள்கின்றது. அத்துடன் தலைவர் பிரபாகரனின் ஆழுமையை கேவலப்படுத்தும் மறைமுக நிகழ்ச்சி நிரலும் அரங்கேறுகின்றது.

மைதானம் வழங்க தமிழ்ச்செல்வன் முட்டுக்கட்டாயக இருந்தார் என்றும், தமிழ்ச்செல்வன் குழு என்ற ஒன்று இருந்தது போன்றதொரு பொய்ப்பரப்புரையை இச் சந்தற்பத்தில் என்னோடு தொடர்பு படுத்தி கூற முற்படுவதன் மூலம் உலகத் தமிழ் மக்களால் ஆழமாக நேசிக்கப்பட்ட தமிழீழ அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் அவர்கள் பற்றி தமிழ் மக்கள் மத்தியில் வெறுப்புணர்வை ஏற்படுத்தும் சதித்திட்டம் ஒன்றை நாசூக்காக அரங்கேற்றுகின்றனர்.

திரு.சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களுக்குப் பின்னர் நடேசன் அண்ணா அவர்கள் அரசியல் துறைப் பொறுப்பாளராக பதவியேற்ற காலத்திற்கு முன்னரும் பின்னரும் அவருக்கும் எனக்கும் மிகவும் நெருக்கமான நட்புறவு இருந்தது. இது உண்மையில் வன்னியில் வசித்த மக்களுக்கு தெரியும். பிளவுகளை ஏற்படுத்த நான் முயல்வதாக வதந்திகள் பரப்பப்படுகின்றது. ஆனால் பிளவுபட்டு சோர்வடைந்து, மரணபயத்தில் உறைந்து போயிருந்த யாழ் மக்களையும் ஏனைய தாயக மக்களையும் பொங்கு தமிழ் என்ற நிகழ்வினூடாக சாதி, சமய, பிரதேச, வர்க்க வேறுபாடுகளை தாண்டி தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களது தலைமையினால புனிதப் போராட்டத்தின் பின்னால் அணிதிரட்டும் பணியை செய்திருந்தேன். வேற்றுமைகளை களைந்து கொள்கை அடிப்படையில் ஒற்றுமையை ஏற்படுத்த உழைத்தமையே என்னுடய வாழ்நாளில் நான் அதிகம் செய்த பணியாகும்.

புலம் பெயர் மக்கள் வாழும் தேசங்களிலும் கூட பல்லாயிரம் மக்களை தேசிய விடுதலைப் போராட்த்தின் பின்னல் அரவணைத்து ஒன்று திரட்டும் பணியை நான் மேற்கொண்டிருந்தேன். ஒற்றுமை என்பது ஒரு சமூகத்தினது உரிமைகளை பெறுவதனூடாக கௌரவமானதும் பாதுகாப்பானதுமான, நீதியுடன் வாழக் கூடிய எதிர்காலத்தை பெற்றுக் கொடுப்பதற்கானதாக இருக்க வேண்டும்.

கொள்கைக்காக 150000 மக்களும் 40000 இளைஞர்களும் உயிர்த்தியாகம் செய்துள்ள நிலையில் அந்த தியாகங்களை கொச்சைப்படுத்தும் வகையில் அடிப்படை கொள்கைகளை கைவிட்ட அடிப்படையிலான தீர்வுத்திட்டம் ஒன்றை மக்களுக்கு தெரியாமலே ஒற்றுமை என்னும் பெயரால் ஏமாற்றி பிறசக்திகளின் தேவைக்காக திணிக்க மேற்கொள்ளப்படும் முயற்சிக்கு ஒத்துழைப்பது ஒன்றுமை அல்ல.
இராஐதந்திரம் என்பது வல்லமை மிக்க சக்திகளின் அழுத்தங்களுக்கு அடிபணிந்து அவர்கள் வழங்குவதை பெற்றுக் கொள்ள முயற்சிப்பது அல்ல.

கடந்த 12.03.2010 அன்ற தினம் இரவு கல்வியங்காட்டுப்பகுதிக்கு வாகனத்தில் சென்ற எனது ஆதரவாளர்கள் அப்பகுதியில் ஒட்டப்பட்டிருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் சுவரொட்டிகள் மீது எனது தேர்தல் பிரசார சுவரொட்டிகளை ஒட்டியதாகவும் அவ்விடத்தில் இருந்த பொது மக்கள் அதற்கு ஆட்சேபனை தெரிவித்த பொழுது எனது ஆதரவாளர்கள் டக்களஸ் வென்றாலும் பரவாயில்லை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெல்லக் கூடாதுதென எனது ஆதரவாளர்கள் கூறியதாகவும் 13.03.2010 அன்று தமிழ்வின் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

ஆனால் இன்று வரை எனக்குரிய சுவரொட்டிகள் எதனையும் அச்சிடுப் பெற்றுக் கொள்ளவில்லை. சுவரொட்டிகளே அச்சிடப்பட்டிருக்காத நிலையில் மேற்படி சம்பவம் எப்படி நடந்திருக்க முடியும். அது மட்டுமன்றி கடந்த நான்கு நாட்களாக எனது தேர்தல் பிரசாரம் என்பது வடமராட்சிப் பிரதேசத்தில் மட்டுமே இடம் பெற்று வருகின்றது. இவர்கள் குறிப்பிடுவது போன்று கல்வியங்காட்டுப் பகுதியில் எனது ஆதரவாளர்கள் யாரையும் தேர்தல் பிரசார நடவடிக்கையில் நான் ஈடுபடுத்தியிருக்கவில்லை.

எனக்கும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கொள்கைகளுக்கும் தாயகத்திலும், புலத்திலும் தமிழ் மக்கள் மத்தியில் அதிகரித்துவரும் ஆதரவை கண்டு சகித்துக் கொள்ள முடியாத நிலையில் எமது நற்பெயருக்கு கழங்கம் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இவ்வாறான பொய்ப்பிரசாரங்களை செய்து வருகின்றனர். கூட்டமைப்பு கொள்கையை கைவிட்டிருந்தாலும் கூட கூட்டமைப்பில் போட்டியிடும் தனது சகோதரரை வெல்ல வைக்க வேண்டும் என்ற சுயநல நோக்கின் அடிப்படையில் கூட்டமைப்பை வெல்ல வைக்க வேண்டும் என்பதற்காக கூட்டமைப்பில் போட்டியிடும் சிலருடன் இணைந்து கஜேந்திரன் குழுவினருக்கு ஒருமடல் என்ற தலைப்பிலும், வன்னியில் இருந்து ஒரு மடல் என்ற பெயரிலும் தமிழ்வின் இணையத்தள உரிமையாளரே மேற்படி பொய்யான செய்திகளை வெளியிட்டுள்ளதாக நான் கருதுகின்றேன். இதற்கு முன்னரும் இவ்வாறான பொய்யான ஆதராம் அற்ற செய்திகளை சொந்த சுயநலனுக்கான தமிழ்வின் இணையத்தளம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செ.கஜேந்திரன்
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும்
தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணியின் வேட்பாளரும்


அதிர்வின் குறிப்பு:

இந்தக் கட்டுரை அதிர்வு இணையத்திற்கும் அனுப்பப்பட்டது. இருப்பினும் இதில் தமிழீழ விடுதலைப் புலிகளை கொச்சைப்படுத்தியும், அரசியல் ஆளுமையும் வல்லமையும் மிக்க தமிழ்ச்செல்வன் அண்ணாவை குற்றவாளியாக்கியும் இக் கட்டுரை எழுதப்பட்டதால் நான் அதனை பிரசுரிக்கவில்லை. மாறாக மின்னஞ்சல் முகவரியைக் கொண்டு இது உண்மையிலேயே வன்னியில் இருந்து தான் அனுப்பப்பட்டதா என தொழில்நுட்ப ரீதியாக ஆராய்ந்தபோது, அது சுவிசில் இருந்து அனுப்பப்பட்டதை நாம் ஆதாரபூர்வமாக அறிந்தோம். அதனால் அது வன்னியில் இருந்து அனுப்பப்படவில்லை, மற்றும் போலியானது என அறிந்துகொண்டோம். தமிழ் வின் இணையம் தமிழீழ விரோதப் போக்கை கடைப்பிடிக்கிறது. புலிகள் மீது இறந்த மாவீரர்கள் மீதும் சேறு பூசும் நடவடிக்கையில் தற்போது இறங்கியுள்ளது என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. தமிழ் மக்களின் மனதில் விசத்தைக் கலக்கிறது. இப்படியான ஈனத்தனமான செயலில் புதினம் இணையத்தளம் ஈடுபட்டு பின்னர் செயல்படாமல் போனது மக்களுக்கு நன்கு தெரியும். முடங்கிப் போயிருக்கும் போராட்டத்தினைப் பற்றி பேசுவதற்கோ அல்லது அதை கொச்சைப்படுத்தவோ யாருக்கும் உரிமை இல்லை. அதனைப் பயன்படுத்தி கேவலமான அரசியலை நடத்தவேண்டாம். இறந்த மாவீரர்களைப் போற்றவேண்டும், தயவுசெய்து தூற்றாமல் இருங்கள்!. அவர்களை கொச்சைப்படுத்த வேண்டாம்.

பின்னூட்டல்கள்

comments by: Theepika

தற்போது தமிழ் வின் இணையத்தளம் புலம் பெயர் மக்களையும் நாட்டிலுள்ள எமது மக்களையும் பிரிக்கும் நடவடிக்கையிலும் இறங்கியுள்ளது .. . பல்வேறு பொய்யான பெயர்களில் பல கட்டுரைகளை ஒவ்வொரு தமிழ் தேசியவாதிகளுக்கும் எதிராக எழுதி வருகின்றது . அண்மையில் பாரிஸ் ஈழநாடு பத்திரிகையின் ஆசிரியர் தலையங்களுக்கு எதிராக பல அநாவசியமான , சிறுபிள்ளைத்தனமான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றது. தமிழ் தேசிய கூட்டமைப்பில் அவர்களது உறவினர் போட்டியிட தொடங்கியதும்
தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு ஆதரவாக பல கட்டுரைகளையும் தொடர்ந்து எழுதி வருகின்றது. அதுமட்டுமல்லாது தமிழ் தேசிய கூட்டமைப்பை விமர்சிப்பவர்களையும் மிகவும் கீழ்த்தரமான முறையில் பல பொய்யான கட்டுரைகள் மூலம் தாக்கியும் வருகின்றது.

எமது வடக்கு கிழக்கு மக்கள் வெளிநாட்டில் உள்ள இது போன்ற இணையதளங்களில் வரும் செய்திகளையே உண்மையென நம்புகின்றனர். அந்த மக்களை இந்த தமிழ் வின் இணையத்தளம் நிச்சயம் தவறாக வழிநடாத்துகின்றது.


comments by: Ganeshamoorthy
Its correct, Tamil win, misled people


comments by: Rohan
அண்மைக்காலமாக தொடர்ந்து தமிழ் வின் இணையத்தளத்தில் " இந்தியாவே எமது ஒரே நம்பிக்கை " என்ற ரீதியில் பல செய்திகளையும் கட்டுரைகளையும் வெளியிட்டு வருகின்றது. அதாவது புலம்பெயர் தமிழர்கள் எவ்வளவுதான் போராடினாலும் இந்தியாவின் கருணை இருந்தால் மட்டுமே வெற்றி கொள்ள முடியும் என்றே தொடர்ந்து எழுதி வருகின்றது. இது மிகவும் கண்டிக்கத்தக்கதும் புலம்பெயர் தமிழ் சமூகத்தினை அவமதிக்கும் செயலாகும்.

பாரிஸ் ஈழநாடு என்ற பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கத்தை கொச்சைப்படுத்தி எழுதிய ப. ரங்கநாதன் என்பவரின் மின்னஞ்சல் முகவரி சில நாட்களுக்கு முன்னரே புதிதாக தொடங்கப்பட்டு உள்ளது. அதேபோல் அந்த நபரின் பாசெபூக் பக்கமும் சில நாட்களுக்கு முன்னமே தொடங்கப்பட்டு உள்ளது. அதுவும் போலியானது.

அதேபோல் காந்தன், ஜோய் தனபாலன் போன்ற பெயர்களுக்கும் அதே நிலைமையே. இவர்களின் பெயர்களில் உள்ள மின்னஞ்சல் , பாசெபூக் முகவரிகளும் தற்போது புதிதாக திறக்கப்பட்டவையே... தமிழ் வின் நிர்வாக குழுவினரே !! தொழிநுட்பம் எவ்வளவோ முன்னேறி விட்டது... . இனியும் பொய்யான பெயர்களில் தங்களின் பொய்யான பரப்புரைகளை மேற்கொள்ள வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன்.

Comments