சனல் 4 புகைப்படத்திலிருந்து தனது மகனை தந்தை அடையாளம் கண்டுள்ளார்

வன்னிச் சமரில் கைது செய்யப்பட்டு, நிர்வாணமாக்கப்பட்டும், பதுங்குகுழிக்குள் தடுத்து வைக்கப்பட்டும் இருந்த இளைஞர்களின் புகைப்படங்களை சனல் 4 தொலைக்காட்சியானது அண்மையில் வெளியிட்டிருந்தது.

இவர்களில் பலர் விடுதலைப் புலி உறுப்பினர்கள் எனக் கூறப்படுகிறது. இந்தப் புகைப்படங்களில் இருந்து தனது மகனை தந்தையொருவர் அடையாளம் கண்டுள்ளார். அவர் தமிழ்நெட் இணையத்துக்கு வழங்கிய பேட்டியில், விடுதலைப் புலி உறுப்பினரான தனது மகனைத் தாம் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 11 ஆம் திகதி சந்தித்ததாகவும், அப்போது தங்கள் எல்லோரையும் போர் நடக்கும் இடத்திலிருந்து வெளியேறிப் போகுமாறும் அவர் கெஞ்சிக் கேட்டிருந்தார் எனவும் கூறியுள்ளார்.

புகைப்படத்திலுள்ள இளைஞர்கள் ஏப்ரல் மாதத்தில் கைது செய்யப்பட்டவர்கள் என ஊடக அறிக்கைகள் கூறுவது குறித்து அவரிடம் கேட்டபோது, அந்த அறிக்கைகள் உண்மை எனக் கூற முடியாது என்றார். ஏனெனில் தாம் தமது மகனை மே மாதம் 11 ஆம் திகதி சந்தித்ததாக அவர் வலியுறுத்துகிறார். தனது மகனை ராணுவம் மே மாதம் 18 அல்லது 19 ஆம் திகதி கைது செய்திருக்கலாமென அவர் சந்தேகிக்கிறார்.

ஆனால் தனதும், தனது மகனதும் பாதுகாப்புக் கருதி அவர் இவற்றை ஊடகங்களுக்கு தெரிவிக்க விரும்பவில்லை. வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து மனிக் பார்ம் முகாமில் இருந்த அவர், தற்போது யாழ்ப்பாணத்திலுள்ள ஒரு உறவினருடன் தங்கியுள்ளார்.

மேற்படி புகைப்படங்களில் இருந்து தனது தந்தையாரை 7 வயதுச் சிறுமி ஒருவர் அடையாளம் கண்டுள்ளமை தெரிந்ததே. அடையாளம் காணப்பட்ட அந்த நபர் 40 வயதான துரைச்சாமி ஹரிகிருஷ்ணன் ஆவார். இவரின் மனைவி, மகள் ஆகியோர் யாழ்ப்பாணத்திலுள்ள அனாதை இல்லத்தில் உள்ளனர்.






















Father of victim in Channel 4 photo identifies son as LTTE member [TamilNet, Thursday, 03 June 2010, 16:15 GMT]

The father of a victim in the photos released by Channel- 4 in mid May identified one of them as his son as a member of Liberation Tigers of Tamil Eelam (LTTE), arrested by Sri Lanka Army (SLA) in Mu'l'livaaykkaal between 18 and 19 May 2009. The father told TamilNet that the LTTE combatants could not have been arrested in April 2009 as it was reported earlier as he had met his son on 11 May in 2009. A mother and her daughter have earlier identified another victim in the photo as 40-year-old Thuraichamy Harikrishanan, a native of Vavuniyaa, an ex-member of LTTE. Meanwhile, close relatives living in the diaspora of another LTTE member also claimed the same person as their relative. Efforts are under way to clarify the identity of the victim, a Tamil group working on genocide documentation told TamilNet Friday.



The photo shows Sri Lanka Army soldiers keeping a group of unarmed people, LTTE members and possibly also civilians, inside a bunker. Unless the Sri Lankan state is able to confirm that those shown in the photo are alive, the photo will be a crucial evidence of proof documenting war crimes and Tamil genocide, the group working on documentation told TamilNet.

Channel-4 had released photos of persons who had been denuded after arrest and held in a bunker by SLA in Vanni. Many of the persons are said to be LTTE members.

The father told TamilNet that his son met him on 11 May 2009 and entreated him to get out of the war-zone.

Commenting on the media report that the victims in the photos had been arrested in April 2009 he said that it was improbable as he had met his son on 11 May 2009. He suspects that SLA must have arrested his son on 18 or 19 May 2009.

He did not wish to inform the media about this because he was concerned about his and his son’s safety, the father said.

After moving out of Vanni he had been held in one of the SLA detention camps in Vavuniyaa and later allowed to join his family in Jaffna where he lives now.

Chronology:

Comments