அதிகார வெறிபிடித்த அமைச்சர் விமல் வீரவன்சவிற்கு அனைத்துத் தமிழினத்தின் சார்பில் ஓர் அஞ்சல்!

உண்ணா நோன்பு என்னும் புனிதமான அந்த சத்திய விரதத்தினை கொச்சைப்படுத்தும் வகையில் நீங்கள் அதைக் கையில் எடுப்பது சர்வதேசத்திடம் உங்களை நீங்களே அசிங்கப்படுத்துவதற்குச் சமமாகியுள்ளது. வேண்டாம் இந்த அசிங்கமான நாடகம்.

1958ம் ஆண்டு அன்ற தந்தை செல்வநாயகம் முதல் இன்று தியாகி தீலீபன், அன்னை ப+பதி வரை உண்ணா நோன்பு என்னும் சத்திய விரதத்தினை மேற்கொண்ட போது அதன் அர்த்தம் என்னவென்றே தெரியாது, அதனைக் கொச்சைப் படுத்திய வரலாறு அழிந்துவிடவில்லை. இன்னமும் சர்வதேசத்தின் கண்களில் அப்படியே பார்வைக்கு இருப்பதை இனியும் பகிரங்கப்படுத்த வேண்டிய அவசியமில்லை.

தந்தை செல்வாவின் தலைமையில் நடந்த உண்ணாநோன்பும், அதற்கு உங்கள் இனிவெறிபிடித்த ஆட்சியாளர்கள் அசிங்க்கப்படுத்தில் அடக்கி ஒடுக்கி சிறையில் அடைத்தார்கள். அதற்க உரிய கௌரவமளித்திருந்தால் அன்று முதல் இன்று வரை ஈழத் தமிழினத்தின் இலட்சக்கணக்கான உறவுகள் இரத்தவெள்ளத்தில் உங்கள் இனவெறிக் கோரப்பசிக்குத் தம் இன்னுயிரை இழந்திருக்க மாட்டார்கள்.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj3BXy1UuOQ49aTzigQvuICrvtrhsnmjfAt1VX2nJwN7q2XnpHtYds2oN2Bhb86PprSYnUf4xSalTZVIuEC23MXBjnbZUT0YRMBjmUpFlhVYuX9y_NlcJehk866O8BiJQ_5wDtL3yyS7jZG/s1600/wimal.jpg
பல போடி மில்லியன் ரூபா பெறுமதியான ஈழத்தமிழர்களின் சொத்துக்கள் தீக்கிரையாக்கப்பட்டிருக்காது. உருகிய தார் எடுத்து உண்ணாவிரதம் இருந்த தமிழர்களின் முதுகில் நீங்கள் சிங்கள எழுத்துக்கள் இன்னமும் வரலாறு அப்படியே எழுதி வைத்திருக்கியது. அது அழிந்துவிடவில்லை.

அன்று அகிம்சைப் போராட்டத்திற்கு அதிகாரவெறிபிடித்த நீங்கள் உரிய மதிப்பளித்திருந்தால், ஈழத்தழினத்தின் அப்பாவி இளைஞர்களும் பெண்களும் ஆயுதமெடுத்து உங்கள் அநீதிக்கு எதிராகப் போர் தொடுத்து அழிந்திருக்க மாட்டார்கள். பத்து லட்சத்திற்கு மேலான ஈழத்தமிழ் மக்கள் இழந்துவிட்ட இழந்துவிட்ட இனிய வாழ்வினைக் காணவென்று அகிலமெங்கும் அகதிகளாக அலைந்துகொண்டு திரியும் அல்லல் நிலை ஏற்பட்டிருக்காது.

இவை எல்லாம் ஏற்பட்டு இன்னல் நிலையின் இறுதிக்காலத்தில் இப்படி ஒரு நாடகமா? உண்iயை மறைக்கவும், தர்மத்தைக் குழிதோண்டிப் புதைக்கவும், நீதிக்கப் பயந்து, நியாயத்தை எதிர்க்கவும் உங்களைப் போன்றவர்கள் நடத்தும் நாடகத்திற்குப் பெயர் உண்ணநோன்பு அல்ல.

ஈழத்தமிழர்களின் இறையாண்மையைக் குழிதோண்டிப் புதைத்துவிட்டு இலங்கையின் இறையாண்மையைப் பாதுகாப்பதாகப் பிதற்றிக்கொண்டிருக்கும் ஸ்ரீலங்கா அரசிடம் நீதியும் நேர்மையும் இறையாண்மையும் இருப்பது உண்மையானால் ஐ.நா. சபையின் விசாரணைக் குழுவிற்கு முகங்கொடுக்க ஏன் அச்சப்பட வேண்டும்? அந்த விநாரணைக் குழுவிற்கு எதிரான அடாவடித்தனமான நடவடிக்கைகளை ஏன் மேற்கொள்ள வேண்டும்?

அரசினைத்துறந்து காவியுடை தரித்து ஆன்மீகத் தைத் தழுவிய புத்தனின் பெயரைச்சொல்லிக்கொண்டு காவியுடைக்குள் நுழைந்துகொண்டு அரசாட்சியைக் கைப்பற்றும் கபட நாடகங்களை நடத்திக்கொண்டு அரசியல் நடத்தும் உங்கள் ஆட்சியில், இலங்கையில் மட்டும்தான் மதத்தின் பெயரால் அரசாட்சி நடந்து கொண்டிருக்கும் அவல நிலையும், அநீதிகளும், அவற்றினை மறைப்பதற்கு எத்தனை அடாவடித் தனமான நடவடிக்கைகள்.

விடுதலைக்காகப் போராடிய தமிழ் இளைஞர்கள், யுவதிகள், அப்பாவித் தமிழ் மக்கள் அழிந்தவை போக இன்னமும் அந்த அவலங்களை அனுபவித்துக் கொண்டிருக்கும் அப்பாவிகள் எத்தனைபேர்.

• ஸ்ரீலங்காவின் இராணவத்தினரின் பாலியல் துன்புறுத்தலுக்கு நாளாந்தம் பலியாகும் பட்டியல் தொடர்கிறது.

• துப்பாக்கிக்குண்டீற்கும், துர்நடத்தையின் விளையாலும், போதிய மருத்து வசதிகள் கிடைக்காமலும், உரிய காலத்தில் உணவ கிடைக்காமலும், உங்கள் இராணுவத்தினரின் வேலைகளுக்குச் சம்பளமில்லா கூலியாட்களாகி நாளாந்தம் நடைப்பிணமாக வதை முகாம்களில் அடைபட்டுக்கிடக்கும் நிலையிலும் இறந்து போகும் அப்பாவி மக்களின் அன்றாட சம்பவங்கள் இன்னமும் சபைக்கு வந்து சாட்சி சொல்லவில்லை.

• பாபத்திற்குத் துணை நின்ற கூலியின் பயனை இன்னமும் அனுபவித்துக் கொண்டிருக்கும் பட்டாளத்துக்காரர் சரத் பொன்சேகா. எதிர்க் கட்சித் தலைவரின் தலைவராகியும், விலைபேசப்படுகிறது. அவரது மனைவியுடனும் பேச முடியவில்லை என்ற மாரடைப்பு நோயும். வெளிநாட்டில் நடக்கும் எதிர்கட்சித் தலைவர்களின் மாநாட்டில் கலந்துகொள்ள முடியாதபடி சிறை வாழ்க்கை.

• அப்பாவித் தமிழினத்தைக் கொல்லவும் கூண்டோடு அழிக்கவும், நீதிக்காகப் போராடும் மக்களை கேள்வி நியாயம் இன்றிச் சிறையிலடைக்கவும் உங்களுக்கு யார் உரிமை தந்தது? ஏனைய நாடுகளில் நடந்தவற்றை சாட்சியம் கூறச் சந்திக்கு இழுக்கின்றீர்கள். அந்த நாடுகளில் அந்த நாட்டு ஆதிக்குடிகள் தங்களைக் காப்பாற்றும்படி ஆட்சிக்கட்டிலில் இருக்கும் வந்தேறு குடிகளிடம் கெஞ்சிக் கேட்கவுமில்லை, தமக்கு நீதிவழங்கும்படி சர்வதேசங்களை வேண்டி நிற்கவுமில்லை. அதுமட்டுமல்லாது ஸ்ரீலங்பாவின் பாசிச அரசின் கொலைக் கரங்களின் நடவடிக்கைகள் கண்டம் தான்டியும் கரம் நீளுகின்றது என்பதை அண்மைக்கால நடவடிக்கைகள் எமக்கு அச்சத்தை ஊட்டி நிற்கின்றது.

• தாயகத்திற்கு வெளியிலும் திடீர்கைதுகளும், அவர்களை இலங்கைக்குக் கடத்திச் சென்று பொம்மலாட்டம் நடத்துவதும். அதை வைத்து வெளி உலகை ஏமாற்றுவதும் தொடர்கிறது.

• புலம்பெயர் நாடுகளில் ஒட்டுக்குழுக்களின் உதவியுடன் கோடிப் பகைகளை உருவாக்கி அந்த நாடுகளில் ஈழத்தமிழ் மக்கள் மீது அபாண்டமான பழிகளையும், அசிங்கமான எண்ணங்களையும் அந்த நாட்டு மக்கள் மனதில் ஏற்படுத்தி, அமைதிவாழ்வியலைக் கெடுக்கும் நடிவடிக்கைகள் தொடர்கின்றன.

• அல்லற்பட்டு அல்லும் பகலுமாய் வேலைக்குச் சென்று அயாராத உழைப்பும் சலியாத வாழ்வுமாய் வாழும் புலம்பெயர் தமிழ் மக்களின் வீடுகளில் இங்குள்ள ஒட்டுக்குழுக்களின் துணையுடன் அவர்களின வழிகாட்டலில் வேற்று இன துர்நடத்தைக் கூட்டத்தினையும் துணையாகக் கொண்டு கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபடுவதுடன், அது தொடர்கதையாக நடக்கின்றது. உங்களின் இத்தகைய நடவடிக்கைகளைப் பட்டியலிட்டால் நீண்டுகொண்டே போகும். நாங்கள் தொடரத் தேவையில்லை. அவற்றை விசாரிக்கவென்றே ஐ.நா.சபை ஓர் அமைப்பையே உருவாக்கியிருக்கின்றது. நீங்கள் அமைதியாகப் பதில் சொன்னால் போதும். இலங்கையில் நீதி கிடைக்கும். புத்தனும் சித்தம் குளிர்வான்.

'தர்மத்தின் வாழ்வு தனை சூது கவ்வம்
தர்மம் மறுபடியும் வெல்லும்"

-சங்கிலியன்.

-------------
உண்ணாவிரதம் என்றால் என்ன என்பதை தியாகி திலீபனிடம் கற்றுக் கொள்ளுங்கள்: சிறிதுங்க
திகதி: 13.07.2010 // தமிழீழம்
உண்ணாவிரதம் என்றால் என்ன? என்ப தைத் தியாகி திலீபனிடம் ஜனாதிபதியின் இயக்கத்தில் நடித்த விமல் வீரவன்ச கற்றுக் கொள்ள வேண்டும் என்று ஐக்கிய சோசலிச கட்சியின் தலைவர் சிறிதுங்க ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.

ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனு க்கு எதிரான விமல் வீரவன்சவின் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் தொடர்பாகக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு,

அரசு தவறு செய்யவில்லை என்றால் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தினால் அமைக் கப்பட்டுள்ள நிபுணர் குழுவுக்கு முகம் கொடுக்க ஏன் தயங்குகின்றது?

நிபுணர் குழுவைக் கலைக்கும் வரை சாகும் வரையிலான உண்ணாவிரதத் தைத் தொடர்வார் என்றும் அதன் போது அவரது உயிர் பிரிந்தால் ஆதரவாளர்கள் போராட்டத் தைத் தொடர வேண்டும் என்றும் விமல் கூறியிருந்தார்.

ஆனால் ஐ.நாவின் நிபுணர் குழு கலைக்கப்படாதபோதும் அவர் உண்ணாவிரதத்தை கைவிட்டுள்ளார். எமது நாட்டில் இரண்டு மூன்று தினங்கள் உண்ணாமல் இருப்பவர்கள் ஏராளம் உள்ளனர்.

இப்படியிருக்க விமல் வீரவன்ச வின் போராட்டத்தை எப்படி உண்ணாவிரதம் என்று கூறலாம்? விமல் சாகும் வரையில் ஒரு போதும் உண்ணாவிரதம் இருக்கப் போகின்றமையும் இல்லை. ஐ.நா. செயலாளர் நாயகத்தின் நிபுணர் குழுவைக் கலைக்கப் போகின்றமையும் இல்லை. சாகும் வரையிலான உண்ணாவிரதம் என்றால் என்னவென்பதை தியாகி திலீபனிடம் இவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும்.

மாறாகப் பொதுமக்களை ஏமாற்றி இப்படி யான கோமாளி நாடகங்களை அரங்கேற்றி எமது நாட்டுக்குத் தலைக்குனிவை ஏற்படுத்தி விடக் கூடாது என அவர் கூறினார்.
--------------

உண்ணாநிலை போராட்டத்தின் போது விமல் உணவை உட்கொண்டுள்ளார்.


ஐக்கிய நாடுகள் சபைக்கு எதிராக கடந்த வாரம் உண்ணாநிலை போராட்டத்தை மேற்கொண்ட சிறீலங்கா அரச அமைச்சர் விமல் வீரவன்சா போராட்டத்தின் போது மென்மையான மற்றும் சத்துள்ள உணவுகளை உள்ளெடுத்திருந்ததாக இராணுவ வைத்தியசாலை வட்டாரங்கள் கொழும்பு ஊடகம் ஒன்றிற்கு தெரிவித்துள்ளன.

விமலின் உண்ணாவிரத மேடையில் எடுக்கப்பட்ட படம். உண்ணாவிரத மேடையில் இதன் அவசியம் என்ன?

பிஸ்கட், விற்றமின் உட்பட சிறிதளவு நீரையும் அவர் அருந்தியுள்ளது மருத்துவ சோதனைகளில் தெரியவந்துள்ளதாக இராணுவ வைத்தியசாலையில் பணியாற்றும் வைத்தியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

விமலின் சிறுநீரகம் ஏற்கனவே பாதிப்படைந்துள்ளதனால் அவர் ஒரு லீற்றர் நீரையாவது அருந்தாது விட்டிருந்தால் பாரிய பாதிப்புக்கள் ஏற்பட்டிருக்கும், ஆனால் விமல் திருட்டுத்தனமாக நீரை அருந்தியதால் தப்பிக் கொண்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-----------

Comments