கொன்சவேட்டிக்கட்சி காப்பரின் தமிழின விரோத தேர்தல் விளம்பரம்


கனடா தேர்தலும் தமிழின விரோதமும்
Political Cartoon

கடந்த வெள்ளியன்று கலைக்கப்பட்ட கனடாவின் எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த கார்பர் அரசின் மீதான நம்பிக்கை இல்லாதீர்மானம் 156 க்கு 145 என்ற ரீதியில் தோற்க்கடிக்கப்பட்டதைத் தொடர்ந்து பாராளுமன்றத் தேர்தல் மே மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Suddenly Ignatieff Does Not Want an Election

கனடாவில் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்ததைத் தொடர்ந்து கார்பர் அரசின் மீதான நம்பிக்கையை தாம் இழந்து விட்டதாக எதிர்க்கட்சிகள் தெரிவித்தன. கொன்சவேட்டிக் கட்சி -லிபரல்க் கட்சி இடையேயான போட்டி கடுமையாக இருக்கும் என ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

Political Cartoon

பல்லின மக்களைக் கொண்ட கனடாவில் இருகட்சிகளும் தமது பிரசார நடவடிக்கையை முடுக்கிவிட்டுள்ளன, பிரதமர் கார்பரின் கொன்சவேட்டிக்கட்சி வெளியிட்டு இருக்கும் ஒளி வடிவிலான விளம்பரம் ஒன்று தமிழர்களை இழிவுபடுத்தும் விதமாகவும்,ஈழத்தில் தமிழர்களின் நிலையை விளங்கிக்கொள்ளாது செய்யப்பட்டதாகவே தமிழர்களால் பார்க்கப்படுகின்றது,
The Conservative Government's Economic Report - Anyone Listening?

கொன்சவேட்டிக்கட்சி தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாடொன்றை ஏற்க்கனவே செய்திருந்தது தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை கனடாவில் மேற்கொண்டிருந்தது இதனால் தமிழர்களின் வெறுப்பை அக்கட்சி ஏற்க்கனவே சம்பாதித்திருந்தது,

இந்நிலையில் மீண்டும் விளம்பரம் ஒன்றின் மூலம் கனடாவிலுள்ள நிறவெறியர்களை கவரும் நோக்கில் விளம்பரம் ஒன்றை கார்பரின் கட்சியின் ஒளிபரப்புகின்றது. இவ்விளம்பரத்தின் மூலம் தமிழ் வாக்குகளை கார்பரின் கட்சி எதிர்பார்க்கவில்லை என்பது தெளிவாகிறது, என்னெனில் தமிழர்கள் புலிகளைத் தடைசெய்த காரணத்துக்காய் கொன்சவேட்டிக்கட்சிமீது அதிருப்பதி கொண்டுள்ளனர் எனத் தெரிந்துகொண்டு தமிழர்கள் தவிர்ந்த ஏனைய இனத்தவர்களை குறிவைத்து இந்த தேர்தலில் குதித்துள்ளனர் கொன்சவேட்டிக்கட்சியினர்,

சென்றமுறை போலல்லாது தமிழர்கள் இத்தேர்தலிலும் கவனக்குறைவாக இருப்பது அவ்வளவு ஆரோக்கியமானதல்ல. இது குறித்து கனடாவிலுள்ள தமிழர் அமைப்புக்கள் ஒரு தீர்க்கமான முடிவுக்கு வருவதுடன், கொன்சவேட்டிக்கட்சியின் போக்குக்கு பாடம் கற்பிக்க முற்படவேண்டும், அதிகார வன்முறைகள்,துஸ்பிரயோகமுள்ள இந்தியாவின் தமிழ் நாட்டில் சீமானால் காங்கிரசுக்கு எதிரான பிரசாரத்தை செய்யும் போது கனடாவில் இது சாத்தியமான ஒன்றுதான்.
Canada Enters a Recession - Conservative Government Changes Tune

லிபரல்க் கட்சியோ, ஏனைய கட்சிகளையோ இங்கு இலட்சியக்கட்சிகள் என்று கூறவில்லை,ஆனால் தமிழர்களும் கனடாவின் தேர்தலில் தீர்மானிக்கும் சக்தியாக மாறவேண்டும். தமிழர்களைப் போன்றதொரு சூழ்நிலையிலேயே ஏனைய புலம்பெயர் இனத்தவரும் கனடாவில் குடிபுகுந்தனர்,

தமிழர்கள் சார்பு ஊடகங்கள், தமிழ் இளையோர்கள் கொன்சவேட்டிக்கட்சிக்கு எதிரான நிலையை தோற்றுவிக்க வேண்டும்.இதுவொன்றும் பாரிய கடினமான செயற்ப்பாடன்று, இம்முயற்சி வெற்றி பெறுமாயின் தமிழர்களும் கனடாவின் அரசியலைத் தீர்மானிக்கும் சக்தியாக மாறமுடியும். இதையொரு சவாலாக தமிழர் அமைப்புக்களும்,தமிழ் இளையோர்களும் கொள்வார்களா?

Elections Canada and the Conservative Party of Canada

தேர்தலுக்காக தமிழர்களை காயப்படுத்தி கொன்சவேட்டிக்கட்சியின் விளம்பரம்

Comments