கருணாநிதி குடும்பத்தை கைது செய்யக் கோரி அண்ணா உண்ணாவிரதம்..! நாடு முழுதும் கொந்தளிப்பு..? சோனியாவையும் கைது செய்வார்களா...?

அண்ணா கசாரே சில விருதுகளை பெற்று உள்ளார்.


1986 - ராஜீவ் காந்தி வழங்கிய இந்திர பிரியதர்சினி விர்காஸ்மித்திரா விருது.
1989 - கிரீஸ் பூசனா விருது.
1990 - பத்மசிறி
1992 - பத்மபூஷன்
2008 - உலக வங்கி வழங்கிய Jit Gill Memorial Award for Outstanding public service.

அண்ணா ஹசாரே...நான்காவது நாள் உண்ணாவிரதம் லோக்பால் பில் மற்றும் ஜன் லோக்பால் பில்
இந்திய ராணுவத்தில் டிரைவராக பணிபுரிந்துள்ளார். இந்திய பாக் யுத்தத்தில் ட்ரக் ஓட்டுனராக இருந்து யுத்தத்தில் தப்பித்தவர். 1998 ஏப்ரல் மாதத்தில் பி.ஜெ.பி - சிவசேனா அரசு கைது செய்துள்ளது அண்ணாவை. 1998 அக்டோபர் மாதத்தில் ரூபாய் 5000 பாண்ட் பிணையில் விடுவித்தார்கள். சமுக ஆர்வலர். தகவல் அறியும் சட்டத்தின் பெரிய ஓட்டையை கண்டுபிடித்து அடைக்க சொன்னவர். ஊழல் செய்பவர்களுக்கு குறைந்த பட்சம் 6 மாதங்களும் அதிகபட்சம் 7 வருடங்களும் சிறைத் தண்டனை வழங்க வேண்டும் என்றவர். அதாவது ஏழு வருடங்கள் டவுசர் போட்டுக் கொண்டு களி திங்க வேண்டும் என்று சொல்கிறார் மராட்டிய அண்ணா..72 வயது இளைஞர்.


ஊழலைக் கண்டு கொதித்து போய் உள்ளார். எங்கும் ஊழல் எதிலும் ஊழல் என்று காங்கிரஸ் பெருச்சாளிகள் சோனியா முதல் மன்மோகன் சிங் வரை மத்தியில், பி.ஜே.பி. கும்பல் வரை ஊழலை தேசிய மயமாக்கி விட்டோம் என்று கருதிக் கொண்டு இருக்கையில், இந்தப் பெருசு இப்படி கிளம்பி விட்டாரே என்று கபில் சிபில் முதல் சோனியா காந்தி வரை புலம்பி தள்ளுகிறார்கள்.

மத்தியில் மட்டுமா இந்த நிலை. தமிழகத்தில் கருணாநிதி குடும்பம் பயத்தில் உறைந்தே போய் உள்ளது. தங்களது சன் டி.வி. மற்றும் கலிஞர் டி.வி. மற்ற தங்களது சொந்த ஊடகங்களான பத்திரிக்கைகள், தினசரிகள் இவற்றில் நம்ம அண்ணா ஹாசாரே பற்றி செய்திகள் வராதவாறு பார்த்துக் கொண்டு, தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்று சொல்கிறார்கள். தமிழக மக்கள் கருணாநிதி அரசுக்கு பெரும் ஆதரவை வழங்கிக் கொண்டு இருக்கிறார்களாம். டி.வி.யை திறந்தால் இவர்களின் பொய் பிரச்சாரத்தைக் கண்டு தமிழகம் கொதித்துப் போய் உள்ளது.

இந்த லட்சணத்தில் ராமதாஸ் திருமா இவர்களின் ஆசைகளை, வெற்றி பெற வேண்டும் இந்த தேர்தலில், என்ற கொலை வெறியை கண்டு மக்கள் கொதித்துப் போய் உள்ளார்கள். ஊரை அடித்து உலையில் போடுவதற்கு எவ்வளவு வெளிப்படையாக கிளம்பி விட்டது இந்த கும்பல்கள்.

அண்ணா ஹசாரே அதிகம் அறியப்படாதவர் இந்திய மக்களால். 05 ம் தேதி முதல் அனைவரும் கேட்கத் தோன்றி விட்டனர், யார் இந்த அண்ணா..? என்ன அது லோக்பால் பில் மற்றும் ஜன் லோக்பால் பில் என்று. அசாம் மாணவர்கள் கல்லூரிகளை இழுத்து மூடிவிட்டு ரயிலில் புறப்பட்டு விட்டார்கள். ஜன்திர் மந்திர் மைதானத்திற்கு. நேற்று வரை கபில் சிபில் இரன்டு சுற்று பேச்சு வார்த்தைகளை நடத்தி உள்ளார் காந்தியவாதியான சுவாமி அக்னிவேஷ் அவர்களிடம். முதல் நாள் முன்னாள் காவல் அதிகாரி, கிரண் பேடி, அண்ணா கசாரே, சுவாமி அக்னிவேஷ் ஊழலுக்கு எதிராகவும், இந்த ஊழலை தண்டிக்கும் லோக்பால் பில்லை கொண்டு வரவும் உண்ணாவிரதம் இருப்பதாக அறிவித்தார். நேராக காந்தி சமாதிக்கு சென்றார், பெரிய கும்புடு ஒன்றை போட்டார்.

சென்றார் ஜன்திர் மந்திர்-க்கு படுத்தார் படுத்த படுக்கையாக, சாகும் வரை உண்ணாவிரதம் என்று. முதல் நாள் இந்த லோக்பால் பில் அமைப்பதற்கு ஊழலுக்கு பேர் போன சரத் பவார் அவர்களை குழுவில் சேர்த்து இருந்தார்கள். உடனே ராஜினமா செய்தார் இந்தக் குழுவில் இருந்து, மக்கா நாள் அதாவது இரண்டாவது நாள் மன்மோகன் சிங் சொன்னார், மே 20 க்குப் பிறகு தான் இந்த லோக்பால் பில் குறித்து பேச முடியும், சிந்திக்க முடியும் என்றார். இரண்டாவது நாள் உண்ணாவிரதத்தில்.

பி.ஜே.பி.யின் மூத்த தலைவர் மற்றும் ஹரியானாவின் ஓம் பிரகாஷ் சவுதாலா, அஜித் சிங், மற்றும் முலாயம் க்ரூப் எல்லாம் வேக வேகமாக உண்ணாவிரத மேடைக்கு சென்றார்கள். பார்த்தார்கள்....! போராட்டாக்காரர்கள்... உடனே வெளியே போய் விடுங்கள் என்று சொன்னது மட்டும் அல்ல ஊழலுக்கு பேர் போன ஓம் பிரகாஷ சௌதாலாவை கேரோ செய்யும் அளவிற்கு நிலைமை சென்றவுடன் துண்டைக் காணோம் தலைப்பாகையைக் காணோம் என்று பறந்து விட்டார் ஓம் பிரகாஷ். மதியப் பிரதேச முன்னாள் முதல் மந்திரி உமா பாரதி சென்றார் பார்ப்பதற்கு..அவரிடம் சொன்னார்கள் அண்ணாவின் குழுவினர், உண்ணாவிரதம் பற்றியோ மற்ற வேண்டுகோளோ ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்று. அவரும் திரும்பினார் வெறும் கையோடு.

கசாரே சொல்கிறார் இப்படி, 12 வழக்குகள் என் மீது போட்டார்கள், எனக்காக காசு வாங்காமல் பல வழக்கறிஞர்கள் வாதாடி உள்ளனர். எனவே எனக்கு சற்றும் பயமில்லை என்று வேறு கூறி இருக்கிறார். முதல் நாள் உண்ணாவிரதம் அறிவித்தவுடன் காங்கிரஸ் பெருச்சாளிகளின் செய்தி தொடர்பாளர் அண்ணா அவர்கள் ஆர்.எஸ்.எஸ். ஏஜென்ட் என்று சொன்னார்கள். பிறகு இரண்டாவது நாள் உண்ணாவிரதம் சட்ட விரோதம் என்றார்கள். மக்கள் கூட்டம் கூட்டமாக வருவதைப் பார்த்தவுடன் அடங்கி விட்டார்கள். இவர்கள் ஒரே ஒருவருக்குத் தான் பயப்படுவார்கள். அது மக்கள் கூட்டம் தான். ஆர்.எஸ்.எஸ். ஏஜென்ட் என்று கூசாமல் அறிக்கை..காங்கிரஸ் கட்சியில் இருப்பவர்கள் எல்லாம் யார்..? ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் இல்லாத பார்ப்பனியக் கும்பலா..?

பி.ஜே. பி.யின் சுஷ்மா அவர்களையும் வெளியேற்றினார்கள். போராட்டாக்காரர்கள். காங்கிரஸ் கும்பலுக்கு எதிராக எந்த போராட்டம் நடந்தாலும் உடனே எதிர்க்கட்சிகள் அங்கே சென்று உங்கள் போராட்டத்திற்கு ஆதரவு தருகிறோம் என்று அரசியல் செய்வதை அண்ணா ஹசாரே போராட்டக்காரர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. எந்த அரசியல்வாதிகளும் இந்த இடத்திற்கு வரக்கூடாது என்று நெத்தியில் அடித்து சொல்லி விட்டார்கள். ஒட்டு மொத்த அரசியல் கும்பல்களும் கையைப் பிசைந்து கொண்டும் முழி பிதுங்கியும் இருக்கிறார்கள்.

கருணாநிதி கும்பலிடம் என்.டி.டி.வி. கும்பல் பேட்டி எடுத்தார்கள். ஸ்பெக்ட்ரம் ஊழலில் உங்களின் நிலை என்ன என்று, அதற்கு கருணாநிதி ராசா குற்றம் புரிந்தார் என்றால் கட்சியை விட்டு நீக்கி விடுவோம் என்றார். உங்கள் குடும்பம் சிக்கிக் கொண்டால் என்ன செய்வீர்கள் என்று கேட்கவில்லை இந்த டி.வி. கும்பல்.

நேற்று மூன்றாம் நாள் உண்ணாவிரதத்தில், ஊழல் என்ற சொல்லையோ , வார்த்தைகளையோ பேசுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று விரும்பும் கபில் சிபில், அரசு சார்பாக இரன்டு சுற்று பேச்சு வார்த்தைகளை நடத்தினார் சுவாமி அக்னிவேஷ் அவர்களிடம். அக்னிவேஷ் அவர்களும் அணைத்து முடிவுகளும் அண்ணா ஹசாரே தான் எடுப்பார் என்று கூறிவிட்டார். நேற்று இரவு மூன்றாவது சுற்று பேச்சு வார்த்தைகளை நடத்தினார்கள் காங்கிரஸ் பெருச்சாளிகள். இறுதியாக இன்று காலை வரை நடந்த உண்ணாவிரத போராட்ட களத்தில், சட்டப்பூர்வமற்ற உறுதி மொழியை வழங்கினார்கள் மன்மோகன் சிங் என்ற ஊழலின் பாதுகாவலர் மற்றும் பிரதமர்.

இந்த லோக்பால் பில்- க்கு தலைவராக அண்ணாவே இருக்கட்டும் என்றார். சோனியா காந்தி அம்மையார் உண்ணா விரதத்தை கைவிடுங்கள் என்று வேண்டுகோள் விடுத்தார். உண்ணாவிரதமே சோனியா கும்பலை எதிர்த்து தான் என்பதை வசதியாக மறந்து விட்டு. சோனியாவின் வேண்டுகோளை ஏற்றுக்கொள்ள அவர் என்ன தங்கபாலுவா, ஈ.வே.கே.எஸ் இளங்கோவனா என்ன..? அந்தப் பேச்சுக்கே இடமில்லை என்று சொன்னார் அண்ணா அவர்கள், சட்டப்பூர்வ உறுதி மொழியை மட்டுமே ஏற்றுக்கொள்ள முடியும் என்று வேறு சொல்லி விட்டார். இவையெல்லாம் உண்ணாவிரத மேடைகளில் நடப்பவை.

உண்ணாவிரத மேடைக்கு வெளியே, அதாவது இந்தியா முழுதும் மக்கள் கொந்தளித்து விட்டார்கள். மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் என்று மக்கள் கூட்டம் கூட்டமாக சென்ற வண்ணம் உள்ளனர். எப்படிஎன்றால் எகிப்தைப் போல, லிபியாவைப் போல, எங்கே இது போன்ற நாடுகளில் ஏற்பட்டதைப் போல நடந்து விட்டால்..? என்று அவசர அவசரமாக பேச்சுக்களை நடத்தி வருகின்றது சோனியா கும்பல். தற்பொழுது இரன்டு விசயங்களில் மட்டும் பேச்சு வார்த்தை நின்று கொண்டிருக்கிறது. ஒன்று யார் இந்த லோக்பால் பில் க்கு தலைவர் என்று..? மற்றொன்று சட்டப்பூர்வம் குறித்து. அண்ணா காசரே சொல்லிவிட்டார். நான் இன்னும் ஒரு பத்து நாளைக்கு தாக்குப் பிடிப்பேன் எனவே பேச்சுவார்த்தைகளை தொடருங்கள் என்று.

இந்த போராட்டங்களுக்கு மத்தியில் என்.டி.டி.வி. யின் பிரதீப் பெரிய லாடு லபக்குதாசு போல, உண்ணாவிரத பந்தலில் வந்திறங்கும் மக்களிடம் பேட்டி கண்டார், என்னவோ இவர்கள் தான் ஊழலுக்கு எதிராக தொடங்கி இருக்கும் உண்ணாவிரதத்திற்கு திருப்பு முனையை ஏற்படுத்தியதைப் போல, முதலில் அந்த அம்மையார் பர்கத் இந்த பிரதீப், வீர் சங்கவி, பிரணாய் ராய், கரன் தாப்பர், என்.ராம், சோ போன்ற பார்ப்பனக் கும்பலை, மக்களை திசை திருப்பும், கார்ப்பரேட்களின் ஏவல் நாய்களாக இருக்கும் ஊடகவியலாளர்களின் இருப்பை கேள்வி கேட்கும் நிலை வராமலா போய் விடும்..இருக்கட்டும் இவையெல்லாம்.

தமிழ்நாட்டில் தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணியில் உள்ள ராமதாஸ், தொல்.திருமா அவர்கள் இனி எப்படி வாக்கு கேட்பார்கள்..அரசின் சாதனையை சொல்லி ஒட்டுக் கேட்கின்றோம் என்கிறார்கள் நேற்று வரை. தி.மு.க. அரசின், காங்கிரஸ் அரசின் சாதனை என்ன சாதாரணமான சாதனையா என்ன..? 1.80 லட்சம் கோடி ஊழல் என்றால் என்ன சும்மாவா...? இந்த சாதனை எந்த அரசாலும் செய்ய முடியாத சாதனையே..!

மேற்கு வங்க தேர்தலில் காங்கிரஸ் பெருச்சாளிகளிடம் கூட்டு சேர்ந்துள்ள மம்தா பாவம். தி.மு.க. இந்த தேர்தலில் செம அடிவாங்கி விடும். இந்த ஊழல் தடுப்பு சட்டத்திற்காகவேணும் சில நடவடிக்கைகளை எடுக்குமாறு நிர்பந்திக்கப்பட்டுள்ளது சோனியா கும்பல். எனவே, தமிழக தேர்தலுக்கு முன்போ, பின்போ மு.க. குடும்பத்தினர் களி திங்கப் போவார்கள் என்று நம்பலாம். ஆனால் நமக்கு காதுகளில் விழுபவை எல்லாம், அண்ணாவின் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டவர் சொன்னவையே..! " உலகக் கோப்பை கிரிக்கெட் கோப்பையை வெல்வதற்கு இந்தியர்கள் அனைவரும் விரும்பினார்களே, அதுபோல இந்த ஊழலற்ற இந்தியாவை உருவாக்க வர வேண்டும் என்று சொன்னவை தான். "

என்றாலும் பார்ப்பனியமும் ஊழலும், கர்ணனின் கவசகுண்டலம் போல, கவகுண்டலங்களை கழட்டி தருமாறு அண்ணா கசாரே உண்ணாவிரதம் இருக்கிறார். கழட்டித் தருகிறேன் என்று சொல்கிறது சோனியா கும்பல். பார்ப்போமே என்ன நடக்கிறது என்று.

சங்கிலிக்கருப்பு

---------------
அன்னா ஹஸாரே உண்ணாவிரதம்... நான்காவது நாளை எட்டியது!

டெல்லி: ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதாவை நிறைவேற்றக்கோரி, பிரபல சமூக சேவகரும், காந்தியவாதியுமான அன்னா ஹசாரே (வயது 73) கடந்த செவ்வாய்க்கிழமை டெல்லியில் தொடங்கிய உண்ணாவிரதத்துக்கு நாடு முழுவதிலுமிருந்து ஆதரவு குவிந்த வண்ணம் உள்ளது.


ஜந்தர்மந்தரில் நடக்கும் அன்னா ஹஸாரேவின் இந்த சாகும் வரை உண்ணாவிரதம் இன்ரு 4-வது நாளை எட்டியுள்ளதால், மக்கள் பெரும் கவலையுடன் அவரது நிலையைக் கவனிக்க ஆரம்பித்துள்ளனர்.

இந்திய இராணுவத்தில் 15 ஆண்டு காலம் எல்லையில் நின்றுப் போராடியவர் அண்ணா ஹஸாரே. காந்தியவாதி. சமுக இணைய தளங்களிலும் நாடு முழுவதும் இருந்து தங்கள் ஆதரவை பதிவு செய்து வருகின்றனர். லட்சக்கணக்கான இளைஞர்கள் அவரது இந்த முயற்சியில் தங்களையும் இணைத்துக்கொள்ள முன்வந்துள்ளனர்.

அதிலும் ஸ்பெக்ட்ரம் ஊழலின் காரணமாக ஒட்டுமொத்த இந்தியாவும் அதிர்ந்துபோய் இருக்கும் இந்த தருணத்தில், ஹசாரே சரியான சமயத்தில் முன்வைத்துள்ளார் என்று கட்சிகளுக்கு அப்பால் நின்று குரல்கள் வரத் தொடங்கியுள்ளன.

இந்தநாள் வரை மகாராஷ்ட்ரா ஊழல் அரசியல்வாதிகளின் கண்களில் விரலைவிட்டு ஆட்டி வந்த அண்ணா ஹஸாரே, தற்போது டெல்லியில் மையம் கொண்டிருப்பதை பார்த்து மத்திய அரசு மிரண்டு போய் உள்ளது.

இதனை தொடர்ந்து சோனியா காந்தி அண்ணா ஹசாரே உண்ணாவிரத போராட்டத்தை கைவிடுமாறு கூறியுள்ளார். விரைவில் அதற்க்கு தீர்வு காணப்படும் என்றும் தெரிவித்துள்ளார். பிரதமர் மன்மோகன் சிங் கும் அமைச்சரவைக் கூட்டம் கூட்டி, ஹஸாரேயின் உண்ணாவிரதம் குறித்து விவாதித்தார்.

ஹஸாரோவை தலைவராக்க முடியாது...

அவரது பிரதி நிதி களாக சுவாமி அக்னிவேஷ், அரவிந்த் கேஜ்ரிவால் ஆகியோர் மத்திய அமைச்சர் கபில் சிபிலை புதன்கிழமை நள்ளிரவு இரண்டு முறை சந்தித்துப் பேசினார்கள்.

அப்போது லோக்பால் மசோதாவை திருத்தியமைப்பதற்காக உருவாக்கப்படும் கூட்டுக் குழுவில் அரசு தரப்பு, சமூக அமைப்புகள் ஆகியன சார்பில் சரிசமமான எண்ணிக்கையில் பிரதிநிதிகளை நியமிக்கவேண்டும் என்ற கோரிக்கையை அரசு தரப்பினர் ஏற்றுக்கொண்டனர்.

ஆனால் அந்த குழுவுக்கு ஹஸாரேயை தலைவராக நியமிக்க முடியாது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுவிட்டது. எனவே பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. ஹஸாரே உண்ணாவிரதத்தைத் தொடர்கிறார்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரிடம் ஆலோசனை நடத்திவிட்டு வெள்ளிக்கிழமை மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அரசு தரப்பு தெரிவித்துள்ளது.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அரவிந்த் கேஜ்ரிவால், கூட்டுக் குழு அமைப்பது பற்றி அரசு அறிவிப்பு வெளியிடவேண்டும் என்றார். இந்த நிலையில் இந்த குழுவுக்கு பிரதமர் அல்லது மத்திய நிதி அமைச்சர் தலைவராக நியமிக்கப்படக்கூடும் என அரசு தரப்பு தெரிவித்ததாக விஷயமறிந்த வட்டாரங்கள் கூறின.

தொடர் உண்ணாவிரதம் குறித்து ஹஸாரே செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:

என்னால் நிச்சயம் ஒருவாரம் நலமுடன் இருக்க முடியும். எனது உடல்நிலை குறித்து மக்கள் கவலைப்பட வேண்டாம். சிறிதளவு மட்டுமே பலவீனமாக உணர்கிறேன். 1.5 கிலோ எடை குறைந்துவிட்டது. கடவுள் என்னுடன் இருக்கிறார். அவர் காப்பாற்றுவார்.

மிரட்டல்கள் இருந்தாலும் உண்மையை ஒருபோதும் கைவிடக்கூடாது. 12 நீதிமன்ற வழக்குகளை நான் சந்தித்திருக்கிறேன், எனக்காக பணம் வாங்காமல் வாதாடும் வழக்கறிஞர்கள் உள்ளனர். உண்மையை ஒருபோதும் நாம் கைவிடக்கூடாது.

காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ஒருவர் உண்ணாவிரதம் மேற்கொள்வது ஒரு தவறான பாதை எனக் கூறியுள்ளார்.

மகாத்மா காந்தி உண்ணாவிரதம் இருந்தபோது அவர் பிறந்திருப்பார் என நான் நினைக்கவில்லை. உண்ணாவிரதப் போராட்டம் கடைசி போக்கிடமாக பயன்படுத்தப்படுகிறது.

முன்னாள் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஒருவர்தான் இந்த கூட்டுக் குழுவுக்கு தலைவராக நியமிக்கப்படவேண்டும். கூட்டுக்குழுவுக்கு தலைவராக இருக்கும் எண்ணம் எனக்கு இல்லை. அப்படி கூட்டுக் குழு அமையும்பட்சத்தில் அதில் உறுப்பினராக இருக்க விரும்புகிறேன்.

லோக்பால் மசோதாவை திருத்தியமைப்பதற்காக அமைக்கப்படும் எந்த குழுவிலும் தான் இடம் பெறவேண்டுமானால், அந்த குழுவில் சோனியா காந்தியும் உறுப்பினராக இடம் பெறவேண்டும்," என்றார் ஹஸாரே.

இதற்கிடையே, லோக்பால் கமிட்டி தலைவராக கர்நாடக லோகாயுத சந்தோஷ் ஹெக்டே மற்றும் முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜே எஸ் வர்மா ஆகியோர் இருக்கலாம் என்ற ஹஸாரேவின் ஆலோசனையை மத்திய அரசு நிராகரித்துள்ளது.

Comments