தமிழரின் முதுகில் குத்தினார் "பான் கீ மூன்" காணொளி


“விசாரணைக் குழுவை அமைக்க அதிகாரமில்லை“
- கைவிரித்தார் பான் கீ மூன்

  • நிபுணர்குழுவின் அறிக்கையை வைத்துக் கொண்டு, சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக தன்னால் எந்த விசாரணைக்கும் உத்தரவிட முடியாது என்று கைவிரித்துள்ளார் ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன்.

    சிறிலங்கா அரசாங்கம் இணக்கம் தெரிவித்தாலோ அல்லது உறுப்பு நாடுகள் அழைப்பு விடுத்தாலோ மட்டுமே சுதந்திரமான அனைத்துலக போர்க்குற்ற விசாரணைகளை மேற்கொள்ள முடியும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

    சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான நிபுணர்குழுவின் அறிக்கை வெளிப்பட்ட பின்னர், நியுயோர்க்கில் செய்தியாளர்களிடம் பேசிய ஐ.நா பொதுசெயலரின் பேச்சாளர் மார்ட்டின் நெர்ஸ்க்கி இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

    “நிபுணர்குழு சிறிலங்காவில் இடம்பெற்றுள்ள போர்க்குற்றங்கள் குறித்து விசாரிக்க உடனடியான சுதந்திரமான அணைத்துலக விசாரணைக் குழுவொன்றை அமைக்க வேண்டும் என்று ஐ.நா பொதுச்செயலருக்குப் பரிந்துரை செய்துள்ளது.

    ஆனால் தன்னிச்சையாக விசாரணைக்குழுவை அமைக்க ஐ.நா பொதுச்செயலருக்கு அதிகாரங்கள் இல்லை.

    சிறிலங்கா அரசின் ஒப்புதலுடன் அல்லது ஐ.நாவின் உறுப்புநாடுகள் அழைப்பு விடுத்தால் மட்டுமே அத்தகைய விசாரணக்குழுவை அமைக்க முடியும்.

    இந்த அறிக்கை தொடர்பாகப் பதிலளிப்பதற்கு சிறிலங்கா அரசாங்கத்துக்கு காலஅவகாசம் வழங்கப்பட்ட போதும் பதில் எதையும் அளிக்கவில்லை.

    சிறிலங்கா அரசாங்கம் உடனடியாக- நியாயபூர்வமான விசாரணைகளை நடத்த வேண்டும் என்று நிபுணர்குழு அழைப்பு விடுத்தள்ளதற்கு பான் கீ மூன் ஆதரவு தெரிவித்துள்ளார்.

    மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்குப் பொறுப்புக்கூறும் கடமை சிறிலங்காவுக்கே முதலில் உள்ளது என்றும் அவர் கருதுகிறார்.

    அதேவேளை, நிபுணர்குழு அறிக்கை தொடர்பாக கோபப்படும் தொனியில் சிறிலங்காவில் இருந்து வெளியிடப்படும் அறிக்கைகள் குறித்து பான் கீ மூன் விசனமடைந்துள்ளார்.

    முழுமையான பொறுப்புக் கூறுதல் மற்றும் நீதியை நிலைநாட்டுதல் மூலம் சிறிலங்கா அரசும் மக்களும் தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் என்றும் அவர் கருதுகிறார்“ என அவரது பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

    அதேவேளை நிபுணர் குழுவின் அறிக்கையுடன் ஐ.நா பொதுச்செயலர் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

    பொதுமக்கள் மத்தியில் பரந்தளவில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளதையடுத்தே இந்த அறிக்கையை வெளியிடுவதாக அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

    நிபுணர்குழுவின் அறிக்கை கடந்த 12ம் திகதி கையளிக்கப்பட்ட பின்னர் அது சிறிலங்கா அரசக்கு வழங்கப்பட்டு அதன் பதிலுக்கு காலஅவகாசம் வழங்கியதாகவும், கடந்த சனிக்கிழமை சிறிலங்கா வெளிவிவகார அமைச்சரிடம் மீண்டும் இதுதொடர்பாக ஐ.நா கேட்டுக் கொண்ட போதும் இதுவரை சிறிலங்கா எந்தப் பதிலையும் வழங்கவில்லை என்றும் அவரது அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    ஐ.நாவின் பணிகளுக்கு சிறிலங்கா தொடர்ந்தும் மதிப்பளிக்கும் என்றும், கொழும்பிலுள்ள ஐ.நாவினதும் அதன் முகவர் அமைப்புகளினதும் பணியாளர்களுக்கு சிறிலங்கா அரசு பாதுகாப்பு வழங்கும் என்றும் நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.

    எனினும், போர்க்குற்ற விசாரணைக் குழுவை அமைப்பதற்கு சிறிலங்காவின் ஒப்புதல் அல்லது அனைத்துலக அமைப்பின் உறுப்பு நாடு அழைப்பு விடுக்க வேண்டும் என்றும் பான் கீ மூன் கூறியுள்ள போதும், அது பாதுகாப்புச்சபையா அல்லது மனிதஉரிமைகள் பேரவையா என்று அவர் தெளிவாகக் குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

புலம்பெயர்ந்த நாடுகளிலுள்ள புலிகளின் சொத்துக்கள் - ஐ.நா.வின் அறிக்கை

  • புலம்பெயர்ந்த தமிழர்கள் தொடர்பான தனது பரிந்துரையை தனது அறிக்கையில் மிகத் தெளிவாக வழங்கியுள்ள ஐக்கிய நாடுகள் சபை சில பரிந்துரைகளையும் செய்துள்ளது.இது தொடர்பான விடயம் யுத்தக் குற்ற அறிக்கையின் பக்கம் 132ல் இடம்பெற்றுள்ள பரிந்துரை இல.417ல் இருந்து பரிந்துரை 420 வரையே இடம்பெற்றுள்ளது.

    புலம்பெயர்ந்த தமிழர் சமூகமே விடுதலைப் புலிகளிற்கு மனவலிமையும் நிதி ஆயுத வலிமையையும் பல தசாபத்தங்களாக வழங்கி வந்தது என்றும் இதனால் புலம்பெயர்ந்த சமூகத்திடையே இந்த இறுதிப் போரைப் பற்றிய ஒரு மனவலி இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளதோடு,

    இறுதிப் போரின் பேரவலத்தின் பின்னைய நாட்களில் புலம்பெயர்ந்த தேசங்களில் புலிகள் தனிப்பட்ட வியாபாரங்கள், ஆலய வருமானங்கள் போன்றவற்றின் மூலம் தொடர்ந்து நிதி சேகரிப்பில் ஈடுபட்டு வருவதாகவும் இவற்றைக் மேற்குலக நாடுகள் அவதானத்தில் எடுத்து,

    மேற்கு நாடுகளிலுள்ள புலிகளின் சொத்துக்கள், வருமாணங்கள் போன்றவற்றை போரினால் பாதிக்கப்பட்ட தாயகத தமிழர்களிற்கு பயன்படும் வகையில் போய்ச் சேர ஆவண செய்ய வேண்டும் என்று அந்த அறிக்கை பரிந்துரைத்துள்ளது.

    புலம்பெயர்ந்த தமிழர் சமூகத்தின் அங்கத்தினர்கள் தாங்கள் விடுதலைப் புலிகளிற்கும் தமிழ்த் தேசியத்திற்கும் வழங்கிய நிபந்தனையற்ற ஆதரவால் இலங்கையின் இரு இனங்களிடையேயும் விரிசலை பலப்படுத்த உதவியதாகவும் இது மறுபுறமாக சிங்களத் தேசியவாதத்தை வளர்க்க உதவியதாகவும் ஒரு கருத்தையும் தெரிவித்துள்ளது.

    அதே போன்று புலம்பெயர்ந்த சமூகத்தின் பெரும்பாண்மையான பகுதி சமாதானம் ஏற்படுவதற்குத் தடையாக இருக்கிறது என்றும், போரின் இறுதிப் பகுதியில் இடம்பெற்ற புலிகளின் வன்முறைகள் குறித்து இந்தச் சமூகம் அக்கறையின்மையாக இருந்தது என்றும் தெரிவித்துள்ளது
  • விஜய் நம்பியா சதீஸ் நம்பியார்களது ஆணவத்தை போட்டுடைத்தது "த ரைம்ஸ்" பத்திரிகை.
  1. நிபுணர்குழுவின் அறிக்கையை அப்படியே வெளியிட்டது ஐ.நா

  2. போர்குற்றம் புரிந்தோரை சிறிலங்கா தண்டிக்க வேண்டும் – அமெரிக்காவின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர்

  3. சிறிலங்காவில் மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக அனைத்துலக விசாரணை: உலக மூத்தோர் குழு முடிவு

  4. ஐ.நா வல்லுநர் குழுவின் சிறிலங்கா மீதான குற்றச்சாட்டுகள் - பகுதி 05

  5. ஐ.நா வல்லுநர்கள் குழுவின் சிறிலங்கா மீதான குற்றச்சாட்டுக்கள் - பகுதி 4

  6. ஐ.நா வல்லுநர்கள் குழுவின் சிறிலங்கா மீதான குற்றச்சாட்டுகள் - பகுதி 3

  7. ஐ.நா வல்லுநர்கள் குழுவின் சிறிலங்கா மீதான குற்றச்சாட்டுகள் - பகுதி 2

  8. ஐ.நா வல்லுநர்கள் குழுவின் சிறிலங்கா மீதான குற்றச்சாட்டுகள் - பகுதி 1

  9. மடிந்த எம் மக்களின் பேரால் கேட்கின்றோம்: இனத்தைக் காப்பாற்ற இனியாவது ஒன்றுபடுங்கள்.............!

Comments