சீமானை ஈழத்தமிழ்ச்சேற்றிக்குள் இழுக்காதீர்கள் !

நாடுகடந்த அரசை அவமதித்தாரா சீமான் ? உலகத் தமிழர்களுக்கு சீமான் விளக்கம் கொடுப்பாரா?-சீமானைச் சீண்டும் தமிழ்த்தாய் இணையம்


நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உள்துறை அமைச்சர் நாகலிங்கம் பாலசந்திரன் அவர்கள் சீமானை சந்தித்த போது ஆதரவு வழங்குவதாக கூறிய ஆதாரமாம் 19 செக்கன் காணொளியைப் பாருங்கள் அதில் ஆதரவாக இருந்தே தீரனும் என்று மட்டுமே சொல்லியிருக்கின்றார் சீமான்



http://www.tamilthai.com/?p=20180

சீமான் முதலில் யாருக்கு ஆதரவு என்பதை விடுத்து முதலில் நாடு கடந்த அரசு, மக்களவைகள் ஒரு முடிவுக்கு வரட்டும்

ஏற்கனவே சீமானை ஒழித்துக் கட்டுவதற்கு காங்கிசும் சிங்களமும் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கின்றது
தமிழக உணர்வாளர்களைச் சீண்டுவதையும் அறிவுரை கூறுவதையும் முதலில் புலன் பெயர்ந்த தான் தோன்றி ஊடகங்கள் நிறுத்த வேண்டும். அதற்கு இவர்களுக்கு ஒரு அருகதையும் கிடையாது.

முதலில் புலம் பெயர்ந்த தமிழ் அமைப்புக்களும் தமிழர்களும் ஒரு கொள்கையின் கீழ் வாருங்கள் அதன் பின்னர் மற்றவர்களுக்கு அறிவுரை சொல்லலாம்

அவர்களை உங்கள் சேற்றிக்குள் இழுக்காதீர்கள் !

முதலில் தமிழக உணர்வாளர்களான வைகோ, சீமான்,பழநெடுமாறன் போன்றவர்கள் அன்று போல் இன்று வரை தமது ஈழ ஆதரவு செயற்பாடுகளில் எந்த மாற்றமும் இல்லாமல் தொடர்ச்சியாக ஒரு கொள்கையில் ஈடுபட்டுவருகின்றார்கள்.

இவர்கள் வெறும் தொப்பில் கொடி உறவு தான் ஆனால் ஈழத்தில் பிறந்து இரத்தத்தில் வாழ்ந்த ஈழத்தமிழர்கள் புலம் பெயர்ந்தவர்கள் என்ன செய்திருக்கின்றார்கள் ?

19 ஈகியர்களில் 18ப் பேர் தமிழக தொப்பில் கொடிகளே ஒருவர் மட்டுமே ஈழத்தமிழர் என்பதையும் பாருங்கள்

புலம் பெயர்ந்தவர்கள் உயிரை என்ன மயிரைக் கூட கொடுப்பதற்கு தயாரில்லை

இந்த உணர்வாளர்களின் செயற்பாடுகளோடு ஒப்பிடும் போது புலன் பெயர்ந்த ஈழ அமைப்புகளும் , ஈழத் தமிழர்களும் எவ்வளவு சுயநலவாதிகள், சந்தர்ப்பவாதிகள், பச்சோந்திகள், துரோகிகள் என்பதை நான் சொல்லத்தேவையில்லை.

இன்று வரை நேரடியாகவும் , மறைமுகமாகவும் நாடு கடந்த அரசும் , மக்களவைகளும் மோதிக் கொண்டு தான் இருக்கின்றது . ஒருவரை ஒருவர் பழிதீர்த்துக் கொண்டுமிருக்கின்றன

அறம் முதலில் வீட்டில் இருந்து தொடங்க வேண்டும்! என்று மேடை வெறியர் நக்கீரன் ஒரு கூட்டிக் கொடுப்பை எழுதி அதை கேபி மருமகன் ஜெயபாலன் இணையத்திலும், மின்னஞ்சல் மூலமும் உலா விட்டிருக்கின்றார் அதில் தொடரும் மின்னஞ்சல் உரையாடல்களில் நக்கீரன் ஒரு தெருப்பொறுக்கி போல் வாந்தி எடுத்திருக்கின்றார். முன்பு மக்களவையோடு சேர்ந்தியங்கியவர் இப்போது அதற்கு எதிராக துரோகிகளோடு கூட்டுச் சேர்ந்தியங்குகின்றார்.

அடுத்து நாடு கடந்த அரசின் துணைப்பிரதமரும் அறிக்கைப் புலியுமான ராம் சிவலிங்கம் ரொரன்ரோ போர்க்குற்ற நாளில் தன்னை மேடை ஏற்ற வேண்டும் என்று குழப்பம் விழைவித்து அவரைத் தடுத்த இளைஞனைத் தாக்கிய மேடைப் பிரியர் ஈழவேந்தனுக்கு வக்காளத்து வாங்குவது போல் ஒரு அறிக்கையை
நாடு கடந்த அரசின் சார்பில் விட்டு மக்களவையைத் தாக்கியிருந்தார். அது தமிழ்வின் ஊது குழலில் வெளியானது. அதை விட ஒரு படி மேல் சென்று வன்னி ஒன்லைன் வலைப்பூ பரப்புரைக்காக தேசியத் தலைவரால் அனுப்பப் பட்டவரைத் தாக்கிவிட்டார்கள் என்று ஒப்பாரி வைத்தது.

இங்கு ஈழவேந்தன் தமிழீழத்திற்கு எதிரானவர் என்று அல்ல ஆனால் மேடைப் பேச்சு புகழ்ச்சிக்கு அலைபவர் என்பது யாவரும் அறிந்ததே

ஆகவே இவர் உண்மையில் மாவீரர்களின் கனவை மனதில் நிறுத்திச் செயற்படுவாரானால் மேடை கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை செயற்பாடுகள் நன்றே நடந்தேறட்டும் என்று பின்னணியில் நின்று செயற்பட்டிருப்பார் ஆனால் அப்படி நடக்கவில்லை

இப்படியான ஈனப்பிழைப்பு தொடருமானால் அவமதிப்புக்களும் தொடரும்

ஆனால் அப்படி நடக்கவில்லை நீ எனக்கு மேடை தரவில்லையா அதை அதற்கு எதிரணியின் பக்கம் சென்று அவர்களின் இணையங்களில் வெளியிடுகின்றார் நக்கீரன் வழியில் இப்போது இருவரும் கூட்டுச் சேர்ந்திருக்கின்றார்கள்


  • செத்தவர்களுக்கு யார் கொள்ளி வைப்பது ? போர்க்குற்ற நாளா ? துக்க நாளா ? தீபாவளியா ? என்று இவர்களின் மோதல்கள் ஒரு பக்கம்
  • சொத்துக்களை யார் யார் பிரிப்பது சுறையாடுவது ? என்று ஒரு கூட்டம்
  • இன்னொன்று நாம் தான் அடுத்த விடுதலைப்புலிகளின் வாரிசுக்கள் அடுத்த தேசியத் தலைமை என்று ஒரு கூட்டம் ?
  • அடுத்த கூட்டம் பாடை எறும் நேரத்திலும் மேடைக்கு அலையும் கூட்டம் ?
  • இன்னொரு கூட்டம் தாம் தான் தமிழ்த்தேசிய உரிமைக்குரல் என்று மார்தட்டிக் கொண்டிருக்கும் வியாபார ஊடகங்கள் ?
மேற் குறிப்பிட்டவர்கள் வெறு யாரும் இல்லை மே 19 , 2009 வரை புலிகளுக்கு யாழ்ரா அடித்த கூட்டம் தான் .

இப்போது போட்டி போட்டு கூட்டிக் கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள் இப்படி தமிழக உணர்வாளர்கள் செய்யவில்லை என்பதை குறிப்பிட்டுச் சொல்லுகின்றேன்

புலம் பெயர்ந்த தமிழர்களில் 99 வீதமானவர்கள் வெறும் பார்வையாளர்கள் மட்டுமே !

அன்றிலிருந்து இன்று வரை புலன் பெயர்ந்த தமிழர்களுக்கு வேப்பிலை அடித்துத் தான் எந்த செயற்பாடுகளும் முன்னெடுக்க வேண்டியிருக்கின்றது

தாமாக உணர்ந்து இவர்கள் எதுவும் செய்ததில்லை , செய்யப் போவதுமில்லை

ஏன் பெரும் இறுதி யுத்ததில் ஆயிரக்கணக்கில் பங்கு பற்றி நடந்தேறிய பெரும் ஆர்ப்பாட்டங்களின் பின்னணியில் நின்று செயற்பட்டவர்களின் வெறும் 50 -100 பேர்கள் மட்டுமே !!!!!!!!!

ஆனால் அவர்களில் பெரும்பாலானோர் மேடையில் தோன்றவதில்லை சிலர் மேடையில் மட்டும் வந்து மைக்கை பிடித்து விட்டு தாம் தான் தமிழ்த்தேசியவாதிகள் என்று மார்தட்டி கொண்டு அலையுதுகள் .
  • போராடி சாவதற்கு புலிகளும் அவர்கள் குடும்பமும் தேவை
  • ஆர்ப்பாட்டம் ஒழுங்கு செய்வதற்கும் பரப்புரைகள் செய்வதற்கும் உலகத் தமிழர் அமைப்புகள் தேவை
  • இணைய பரப்புரைகளும் பின்னூட்டல்களும் அவர்களே செய்ய வேண்டும்
  • வேண்டுமானால் கூட்டத்தோடு பன்றிக் கூட்டமாக வந்து கொடி பிடித்து கோசம் போட்டு விட்டு அதை அங்கேயே எறிந்து விட்டு போய் விடுவார்கள்
  • அதைப் துப்பரவு செய்யவும் ஒரு தொண்டர் தேவை
வீட்டுக்கு வீடு இணையத் தொடர்புள்ள இன்று வரை உங்களில் எத்தனை பேர்கள் சனல் 4 தொலைக்காட்சிக்கு நன்றி தெரிவித்திருக்கின்றீர்கள் ?
நன்றி என்ற ஒரு வார்த்தையை எழுதக்கூடத் தெரியாமல் எத்தனை புலம் பெயர்ந்த தமிழர்கள் இருக்கின்றார்கள் ?

இன்று வரை புலம் பெயர்ந்த தமிழர்களின் நிலை இது தான்

எத்தனை பிரபாகரன்கள் வந்தாலும் இதை மாற்ற முடியாது

--------------------------------

தமிழீழம் என்ற வீட்டைக் கட்டுவதற்காக புலிகள் என்னும் கட்டிட ஒப்பந்தக்காரர்களுக்கு பணம் கொடுத்த புலம்பெயர் தமிழ்ச் சமூகம்..........?

[திருகோணமலை அறிவோர் அரங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற மாதாந்தக் கலந்துரையாடலில் பங்குகொண்டு, ‘புலம்பெயர் சமூகத்தை அரசியல் ரீதியாக விளங்கிக் கொள்ளல்’ என்னும் தலைப்பில் அரசியல் விமர்சகரும் எழுத்தாளருமான யதீந்திரா ஆற்றிய உரையின் எழுத்துவடிவம்.]

புலம்பெயர் தமிழரின் பங்களிப்பு, கட்டிட ஒப்பந்தகாரருக்குப் பணம் கொடுப்பதற்கு ஒப்பானது : யதீந்திரா

புலம்பெயர் தமிழர்களைப் பொறுத்தவரையில் அவர்களது கடந்த கால அரசியல் பங்களிப்பு குறித்து ஒரு வரியில் சொல்வதாயின் ஒருவர் தான் விரும்புகிற வீடொன்றைக் கட்டுவதற்காக கட்டிட ஒப்பந்தக்காரர்களுக்கு பணத்தைக் கொடுத்துவிட்டு அமைதியாக இருப்பதுடன் ஒப்பிடலாம்.

புலம்பெயர் தமிழர்களைப் பொருத்தவரையில் தமிழீழம் என்ற வீட்டைக் கட்டுவதற்காக புலிகள் என்னும் கட்டிட ஒப்பந்தக்காரர்களுக்கு இருபதாண்டுகளாக பணம் கொடுத்து வந்திருப்பதே அவர்களது அரசியல் பங்களிப்பு. இப்பொழுது கட்டிட ஒப்பந்தகாரர்கள் இல்லை இதனால் யாருக்கு பணம் கொடுப்பது என்று தெரியாமல் அவர்கள் குழப்பமடைந்துள்ளனர்.

ஏற்கனவே போராட்டத்தின் பேரால் திரட்டப்பட்ட நிதியை புலிகளின் பொறுப்பாளர்கள் சிலர் ஏப்பமிட்டுவிட்ட சூழலில் நேற்றுவரை ஒன்றாக இருந்தவர்களே இன்று எதிரெதிர் திசையில் நின்றவாறு அடுத்தவர்களுக்கு துரோகிப் பட்டங்கள் சூட்டிக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால் இங்கு போராடியவர்களோ சாப்பாட்டுக்குக் கூட வழியில்லாமல் திரிகின்றனர் முன்னாள் பெண் போராளிகள் பலர் தவறான வழிகளில் செல்வதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்தெல்லாம் நமது ஊடகங்களும் பேசுவதில்லை.

இவ்வாறு புலிகளின் வீரம் குறித்துப் பேசியவர்களின் பேரப் பிள்ளைகள் கூட இந்த நாட்டிற்குத் திரும்பி வரப் போவதில்லை. இதுதான் யதார்த்தம். நாம் அரசியல் குறித்துப் பேசும் போது உண்மையாகவும் நேர்மையாகவும் பேச வேண்டும்.

புலிகள் என்னும் கட்டிட ஒப்பந்தக்காரர்களுக்கு பணம் கொடுத்த புலம்பெயர் தமிழ்ச் சமூகம்

புலம்பெயர் சமூகத்தை அரசியல் ரீதியாக விளங்கிக் கொள்வதாயின் முதலில் அவர்களது புலப்பெயர்வின் பின்னணி குறித்து நோக்க வேண்டும்.

1983ல் இடம்பெற்ற இன வன்செயல்களைத் தொடர்ந்து இலங்கையில் ஒரு அசாதாரண நிலைமை நிலவுகிறது என்ற உண்மை வெளித் தெரியத் தொடங்கியது.

இதன் தொடர்சியாக இந்த நிலைமையை சாதகமாக்கிக் கொண்டு ஜரோப்பிய நாடுகளுக்குச் செல்ல முடியும் என்ற கருத்தும் நம்மவர்கள் மத்தியில் வலுவடைந்தது.

முதல் முதலில் இவ்வாறு ஜரோப்பிய நாடுகளுக்குச் சென்றவர்களைப் பார்ப்போமானால்; அவர்களில் அதிகமானவர்கள் புலிகளால் தடைசெய்யப்பட்ட அல்லது அச்சுறுத்தலுக்கு உள்ளான மாற்று இயக்கத்தைச் சேர்ந்தவர்கள்தான்.

இவர்களே ஆரம்பத்தில் புலம்பெயர் நாடுகளில் சஞ்சிகைகளையும் இலக்கிய நிகழ்வுகளையும் செய்பவர்களாக இருந்தனர்.

அந்தக் காலத்தில் வெளிவந்த தொண்ணூறு வீதமான புலம்பெயர் வெளியீடுகளைப் பார்ப்போமானால் அவை அனைத்தும் புலிகளை விமர்சிப்பவையாக இருப்பதைக் கானலாம்.

இதற்குக் காரணம் அவைகளை வெளியிட்டவர்களில் அனேகர் புலிகளால் தடைசெய்யப்பட்ட மாற்று இயக்கங்களான புளொட், ரெலொ, ஈ.பி.ஆர்.எல்.எப், ஈரோஸ் போன்ற அமைப்புக்களின் உறுப்பினர்களாக இருந்தனர்.

இதன் தொடர்சியாக இலங்கையின் உள்ளக மோதல்கள் தீவீரமடைந்து சென்ற பின்னணியில் வெளிநாடு செல்லுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துச் சென்றது.

ஏலவே தமிழ் மத்திய வர்க்கத்திற்குள் இருந்த வெளிநாட்டுக் கனவுக்கு இது நல்ல வாய்ப்பாகவும் அமைந்தது அத்துடன் பொருளாதார ரீதியாக முன்னேற வேண்டுமென்று எண்ணியவர்களுக்கும் இது ஒரு பணம் காய்க்கும் மரமாகத் தெரிந்தது.

இவ்வாறு சென்றவர்களில் தொண்ணூறு வீதமானவர்கள் யாழ் குடாநாட்டைச் சேர்ந்தவர்கள். புலம்பெயர் தேசங்களில் செல்வாக்கு மிக்கவர்களாக இருப்பவர்களும் இவர்களே!

ஒரு காலத்தில் யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு சிலர் தனது பிள்ளைகளை வெளிநாட்டுப் பல்கலைக்கழங்களுக்கு அனுப்பிய நிலை போய் பாடசாலைக் கல்வியைக் கூட முழுமைப்படுத்தாதவர்கள் ஏன் கையெழுத்துக் கூட வைக்கத் தெரியாதவர்கள் பலர் சாதாரணமாக ஜரோப்பிய தேசங்களுக்குச் செல்லும் வாய்ப்பை இலங்கையின் அசாதாரண நிலைமை வழங்கியது என்பதே உண்மை.

இதிலுள்ள நயத்தகு என்வென்றால் இவ்வாறு இலங்கையில் இருந்து வெளியேறியோரில் அதிகமானவர்கள், புலிகளின் அச்சுறுத்தல் காரணமாகவே தாம் இலங்கையிலிருத்து வெளியேறியதாகக் கூறியே ஜரோப்பிய நாடுகளில் அரசியல் தஞ்சம் கோரியிருக்கின்றனர். பின்னர் இவர்களே புலிகளுக்கு ஆதரவாகவும் பேசினர்.

இவ்வாறு பல்வேறு காரணங்களுக்காகச் சென்றோரையே இன்று நாம் ‘தமிழ் டயஸ்போரா’ என்று குறிப்பிடுகின்றோம்.

இவர்களது அரசியல் குறித்துப் பேசுவதானால், கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக இவர்கள் மீது செல்வாக்குச் செலுத்திய புலிகள் குறித்தும் விமர்சனங்களை முன்வைக்க வேண்டிவரும்.

எனது பார்வையில், புலம்பெயர் தமிழர்களைப் பொறுத்தவரையில் அவர்களது கடந்த கால அரசியல் பங்களிப்பு குறித்து ஒரு வரியில் சொல்வதாயின் ஒருவர் தான் விரும்புகிற வீடொன்றைக் கட்டுவதற்காக கட்டிட ஒப்பந்தக்காரர்களுக்கு பணத்தைக் கொடுத்துவிட்டு அமைதியாக இருப்பதுடன் ஒப்பிடலாம்.

புலம்பெயர் தமிழர்களைப் பொருத்தவரையில் தமிழீழம் என்ற வீட்டைக் கட்டுவதற்காக புலிகள் என்னும் கட்டிட ஒப்பந்தக்காரர்களுக்கு இருபதாண்டுகளாக பணம் கொடுத்து வந்திருப்பதே அவர்களது அரசியல் பங்களிப்பு.

இப்பொழுது கட்டிட ஒப்பந்தகாரர்கள் இல்லை இதனால் யாருக்கு பணம் கொடுப்பது என்று தெரியாமல் அவர்கள் குழப்பமடைந்துள்ளனர்.

ஏற்கனவே போராட்டத்தின் பேரால் திரட்டப்பட்ட நிதியை புலிகளின் பொறுப்பாளர்கள் ஏப்பமிட்டுவிட்ட சூழலில் நேற்றுவரை ஒன்றாக இருந்தவர்களே இன்று எதிரெதிர் திசையில் நின்றவாறு அடுத்தவர்களுக்கு துரோகிப் பட்டங்கள் சூட்டிக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால் இங்கு போராடியவர்களோ சாப்பாட்டுக்குக் கூட வழியில்லாமல் திரிகின்றனர் முன்னாள் பெண் போராளிகள் பலர் தவறான வழிகளில் செல்வதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்தெல்லாம் நமது ஊடகங்களும் பேசுவதில்லை.

பொதுவாகப் புலிகளால் கையாளப்பட்ட புலம்பெயர் சமூகத்தின் அரசியல் என்பது நீங்கள் பிள்ளைகளைக் கொடுங்கள் நாங்கள் அவர்களுக்கு ஆயுதம் வாங்கக் காசு தருவோம் ஆனால் நாங்கள் தவறியும் வரமாட்டோம் என்பதாகத்தான் இருந்தது.

ICG எனப்படும் அனைத்துலக மோதல் ஆய்வுக் குழுவின் அறிக்கையின் படி இவ்வாறு புலம்பெயர்ந்த தமிழர்கள் ஆண்டொன்றிற்கு 200 மில்லியன் அமெரிக்க டொலர்களை புலிகளுக்கு வழங்கியதாகக் குறிப்பிடுகின்றது.

இவ்வாறு புலிகளின் வீரம் குறித்துப் பேசியவர்களின் பேரப் பிள்ளைகள் கூட இந்த நாட்டிற்குத் திரும்பி வரப் போவதில்லை. இதுதான் யதார்த்தம். நாம் அரசியல் குறித்துப் பேசும் போது உண்மையாகவும் நேர்மையாகவும் பேச வேண்டும்.

அவ்வாறாயின் இனி வருங்காலத்தில் புலம்பெயர் சமூகத்தின் பங்களிப்பு எவ்வாறு இருக்க வேண்டும் என்ற கேள்வி எழுவது இயல்பே – என்னளவில் இங்கு இடம்பெறும் அரசியல் முன்னெடுப்புக்களை குழப்பாத வகையில் அவர்களது செயற்பாடு இருக்க வேண்டும்.

இன்று பெரும்பாலான தமிழ் மக்களால் அங்கிகரிக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசுடன் பேசிக் கொண்டிருக்கிறது. அதனை விளங்கிக் கொண்டு அங்கிருப்பவர்களும் செயலாற்ற வேண்டும்.

புலிகளின் அழிவிற்கு பின்னர் [இன்று]: "கோசம்போடும் சுலோக அரசியல்"...................?

Comments