வன்னி மீது விஸவாயு தாக்குதலை நடத்த படைத்தரப்பு திட்டம்

வன்னி மீது விஸவாயு தாக்குதலை மேற்கொள்வதற்கு இலங்கை படையினர் தயாராகி வருவதாக பாதுகாப்பு வட்டாரங்களில் இருந்து நம்பகரமான தகவல்கள் முரசுக்கு தெரிவித்தன.

இதனை அடிப்படையாகவைத்தே விடுதலைப்புலிகள் வன்னேரி தாக்குதல் நடவடிக்கையின் போது விஸவாயு தாக்குதலை நடத்தியதாக தெரிவித்து பிரசாரங்களை மேற்கொண்டுவருவதாகவும் அந்த தகவல் தெரிவித்தன.

இதன் முதற்கட்டமாக படையினருக்கு இந்த விஸவாயுதாக்குதலில் சேதமேற்படாமல் இருக்க கவச அணிகள் கொள்வனவுசெய்யப்பட்டுள்ளதாகவும் இவை உடனடியாக படையினருக்கு வினியோகிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாம் பதிலுக்கு விஸவாயு தாக்குதல் நடத்துவதாக காட்டுவதற்கே 16 படையினர் தமிழீழ விடுதலைப்புலிகளின் விஸவாயுதாக்குதலில் காயமடைந்ததாக நாடகம் அரங்கேற்றப்பட்டுவருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்போது சர்வதேச தலையீடுகள் ஏற்படாவண்ணம் செய்வதற்கு பிரசார கருவியாக இது பயன்படுத்த உள்ளதாக தெரிவித்த குறித்த வட்டாரம்,வன்னியில் இருந்து திடீரென சர்வதேச தொண்டு நிறுவனங்கள் வெளியேற்றப்பட்டதன் பின்னணி இதுவெனவும் தெரிவித்து.


‘சிறுத்தீவுத் தாக்குதல் எழுப்பும் கேள்விகள்’

இதனிடையே, குடிநீர் குழாய்களுடன் கூடிய நச்சுவாயு தடுப்பு முகமூடிகளை இந்த தாக்குதலில் விடுதலைப்புலிகள், படையினரிடம் இருந்து கைப்பற்றி உள்ளதும், பல கேள்விகளை எழுப்பியுள்ளது.




Comments