தன்னையே எரித்த தமிழனும்!சோனியாவின் பொம்மைக்கு போராடும் துரோகிகளும்!


ஈழத் தமிழ் இனத்தையே ஒட்டுமொத்தமாகக் கொன்று ஒழித்துக் கட்டி விட்டுத்தான் மறுவேலை என்று மார்தட்டுகிறார் இலங்கை அதிபர் ராஜபக்ச. அநதக் கொலை வெறியரோடு விருந்து உண்டு விட்டுத் திரும்புகிறார் இந்திய மத்திய அமைச்சர்.

மத்திய அரசின் துரோகம் கண்டு கொதித்தெழுந்த ஒட்டுமொத்தத் தமிழகமே ஈழத் தமிழனின் இன்னல்கள் தீர்க்க வேண்டுமென போராடப் புறப்பட்டு விட்ட இச்சூழலில் தன்மானமுள்ள இந்தத் தமிழர்கள் போராட்டங்கள் நாட்டையே அதிரச் செய்யத் தொடங்கி விட்டது,

செங்கல்பட்டு அரசு சட்டக்கல்லூரி மாணவர்களின் காலவரையற்ற உண்ணாவிரதம்,

சேலம் அரசு சட்டக் கல்லூரி மாணவர்களின் காலவரையற்ற உண்ணாவிரதம்,

கோபிச்செட்டி பாளையம் நகர் முழுவதும் பொதுமக்களின் கடையடைப்புப் போராட்டம், மற்றும் உண்ணாவிரதப் போராட்டம்,

கோவை அனைத்துக் கல்லூரி மாணவர்களின் உண்ணாவிரதப் போராட்டம்,

பெண்கள் அமைப்பின் சட்டசபை முற்றுகை போராட்டம்,

என்று ஈழத் தமிழனைக் காக்க தமிழம் ஒன்று பட்டுப் புறப்பட்டு விட்ட சூழலில், இவை எல்லாவற்றையும் விடத் தன் இன்னுயிரையே ஈந்து தமிழனைக்காக்ககூக்குரலிட்டு உள்ளான் ஒரு உண்மை உணர்வாளன் .

இப்படிப்பட்ட சூழலில் கூட இனத் துரோகிகளான காங்கிரசார் மதுரையில் சோனியா காந்தியின் உருவ பொம்மையைக் கொளுத்தியது தவறு என்று கூறி போராட்டம் நடத்தி உள்ளனர்,

ஈழத்தில் சிங்கள இனவெறியர்களால் தமிழர்கள் தினம் தினம் கொன்று குவிக்கப்படுவது பற்றி இவர்களுக்குக் கவலையில்லை,

இனவெறியருடன் ஒன்றாக அமர்ந்து இந்திய மத்திய அமைச்சர் விருந்துண்டு வந்தது பற்றி இவர்களுக்குக் கவலை இல்லை,

ஈழத் தமிழனுக்காக தன்னையே கொளுத்திக் கொண்டவனைப் பற்றி இந்தத் துரோகிகளுக்குக் கவலை இல்லை,

ஆனால் தங்கள் தலைவியின் உருவ பொம்மையைக் கொளுத்தியதுதான் இவர்கள் மனதைப் பாதித்து விட்டதாம்,அதற்காகப் போராடுகிறார்கள் இந்தத் தமிழினத் துரோகிகள்!

பிறந்த பிள்ளை இறந்து பிறந்தால் வாளால் கீறிப் புதைத்த தமிழன் இது போன்ற துரோகங்களை இனியும் பொறுத்துக் கொள்ளலாமா?

கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது இது போலச் செத்து மடியத்தானா!

ஈழத்தில் பிஞ்சுக் குழந்தைகளின் மீதும் நஞ்சு கக்கும் கொடிய குண்டுகளை வீசுகிறான் பகைவன்!

ஈவிரக்கம் இல்லாத இந்தப் பழி பாவத்திற்குத் துணை போகிறான் நம் முதுகிலே அமர்ந்திருக்கும் துரோகி!

தமிழனைக் கொல்லும் எதிரிக்குத் தூது சொல்லிக் கொண்டும் துணை போய்க் கொண்டும் வேண்டிய உதவிகளைச் செய்து கொண்டும் இருக்கும் தமிழ் இனத் துரோகிகள் அமர்ந்திருப்பது தமிழர்களின் முதுகிலே! கூட்டணி என்ற பெயரிலே!

தமிழன் என்ன அந்த அளவு உணர்வற்றுப் போய்விட்டானா?

தமிழனின் தயவால் - தமிழனின் வாக்குகளால் - தமிழகத்தில் பெற்ற நாற்பதுக்கு நாற்பது வெற்றியின் பயனால் - நாட்டில் தடம் தெரியாமல் போய்க் கிடந்த கதர் சட்டைக் காரர்களின் காரிருள் நீங்கியது - பல்லாண்டு காலம் வனவாசம் போயிருந்தோர் அரியாசனம் ஏறினார்கள்.

தமிழனின் தயவிலே அரியணை ஏறி இருந்தாலும் தமிழனுக்குத் துரோகங்கள் செய்ய வேண்டும் என்ற அவர்களின் உள்ளார்ந்த பல்லாண்டு காலத் துரோக எண்ணங்கள் மாற்றவில்லையே! தமிழனின் முதுகிலேயே அமர்ந்து கொண்டு தமிழனை அழிக்கும் ஈனச் செயலைச் செய்ய அவர்கள் சிறிதும் தயங்கவில்லையே!

இந்தத் துரோகிகள் ஒரு புறம் என்றால் இன்னொரு புறம்,

தான் யார்? தான் வந்த வழி என்ன? தனது பரம்பரை என்ன? தனது பரம்பரைப் பகைவர்கள் யார்? யார்? தனக்கு நண்பர்கள் யார்? விரோதிகள் யார்? என்பதை எல்லாம் தெள்ளத் தெளிவாக எடுத்துச் சொல்லி விட்டு, அதன் பின்னரும் தன் பின்னே அணிவகுக்கக் காத்து நிற்கும் தமிழர்களைப் பார்த்து,

இலங்கையில் போரிலே தமிழர்கள் கொல்லப்படுவது இயற்கைதான், போரிலே சிங்களன் வென்ற பின்னர் அங்கே தமிழன் வாழ்வு மலரும் என்று சொல்லி மர்மப் புன்னகை வீசுகிறார் தமிழ்த் தலைவி இல்லை இல்லை தமிழகக் கட்சித் தலைவி ஒருவர்!

தமிழனின் தலை வாங்கும் சிங்களனின் இனவெறிப் போரை நிறுத்தித் தமிழனின் உயிர் காக்கத் தன் இன்னுயிர் தரத் துணிந்து, தமிழ் உணர்வோடு உண்ணாமல் உயிர் விடும் வரை ஒரு தன்மானத் தமிழன் போராட முனைந்தால், அதைக் கூட நல்ல நாடகம் இது! என்று சொல்லிக் கைதட்டிச் சிரிக்கின்றார் அந்தத் தலைவி!

அவருடன் சேர்ந்து ஏளனம் செய்கின்றன அந்தத் தலைவிக்கு ஒத்தூதும் சதிகாரக் கூட்டங்களும் அவர்தம் ஏடுகளும்!

இவர் ஒரு புறம் என்றால் இன்னொரு புறம்,

தமிழ் இனம் வாழத் தன் தலையையும் பணயம் வைத்து ஈழத் தமிழர்களின் தாயகமாம் வன்னிக் காட்டுக்குச் சென்று திரும்பினானே, அன்று ஈழத் தமிழர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக இருநத வீரத் தமிழன்!

அந்தக் கலிங்கப்பட்டிச் சிங்கம் இன்று கூட்டத்தின் முன் வித்தை காட்டிப் பிழைப்பு நடத்தும் கொத்தடிமைச் சிங்கமாய் மாறி - யார் வேண்டுமானாலும் வாடகைக்கு எடுத்து உபயோகப்படுத்திக் கொள்ளும் வாடகை ஒலி பெருக்கியாய் மாறி - இன்று சிங்கள இன வெறியர்களால் ஈழத் தமிழர்கள் வேட்டையாடப்படுவது ஒரு சாதாரண நிகழ்வு தான் என்று சொல்லிப் பூரிக்கும் ஒரு தலைவியின் கண்ணசைவிற்கு காத்துக் கிடக்கிறது!

அடுத்தவரோ இவர்கள் அனைவரையும் விட கொடுமையை,

இப்போதெல்லாம் திரைப்படத்தில் நடிக்க அரிதாரம் பூசி விட்டாலே அடுத்த கனவு ஆட்சிக் கட்டில் பற்றித்தானே இப்போது எல்லோருக்கும்!

தன் பிள்ளைக்குப் பெயர் வைத்தது முதல் தனது தமிழ் உணர்வையும் தமிழன் மேல் கொண்ட பற்றையும் பலருக்குப் பறைசாற்றிக் கொண்ட வருங்கால முதல்வரும் கூட சதிகார ஏடுகள் தன்னைப் புறக்கணித்து விடுமோ! என்று அஞ்சியோ என்னவோ ஈழத் தமிழனுக்குக் குரல் கொடுக்க மறந்து விட்டாரே!

ஈழத் தமிழன் வாழ்வின் ஓரத்திற்குத் துரத்தப்பட்டுக் கொன்று குவிக்கப்படுவது பற்றிக் கவலை கொள்ளாது, நடிப்பதுதான் தனது தொழில் என்றும் முதலில் தொழிலைப் பார்க்கப் போவதாகவும் கூறிச் செல்லும் இவரை எல்லாம் என்ன சொன்னாலும் திருத்த முடியாது!

இவர்கள்தான் இப்படி என்றால்,

கொள்கையில் பூத்த இயக்கமாம் திமுக! தமிழுக்காகத் தமிழருக்காக திமுக நடத்திய மொழிப்போராகட்டும்! சந்தித்த நெருக்கடி நிலையாகட்டும்! எதிர்த்து நின்று ஏற்றுக் கொண்ட மிசா கொடுமைகளாகட்டும்!

இந்தப் அறப் போர்கள் எல்லாவற்றிலும் தமிழர்கள், திமுகவின் தன்மானத் தொண்டர்கள் அலைகடலென அணிவகுக்க வில்லையா? தரணி நம் தமிழனின் போராட்டம் கண்டு அதிர்ந்து போகவில்லையா? நமது கொள்கை முழக்கங்கள் எட்டுத் திக்கும் பரவி பகைவர் கொட்டங்களை அடக்கவில்லையா? ஓங்கி ஒலித்த தமிழனின் குரல்கள் எதிரிகளை அஞ்சி நடுங்கச் செய்யவில்லையா?

அப்படிப்பட்ட திமுகவிற்கு இப்போது என்ன ஆனது! ஏன் இந்த மவுனம்!

துரோகிகள் நமது தயவில் வாழும் போதே இத்தனை துரோகங்களைச் செய்கின்றனரே! இவர்களின் மேல் கோபம் கொண்டு நாம் நமது ஆட்சி அதிகாரங்களைத் தூக்கி எறிந்து விட்டால் பின்னர் துரோகிகளின் கொட்டம் இன்னும் அதிகரித்து விடுமே!

நமது கைகளில் அவர்களின் குடுமி இருக்கும் போதே தமிழனுக்கு இத்தனை துரோகங்கள் செய்ய எத்தனிக்கும் இந்தத் துரோகிகள் நமது பிடியைத் தளர்த்தி விட்டால் அல்லது இழந்து விட்டால் எந்த மாதிரியான கொடுமைகளைச் செய்ய முனைவர்!

இந்த ஆட்சியும் அதிகாரமும் நமது கைகளில் இருந்ததால்தானே ஈழத்தில் செத்து மடியும் தமிழனுக்கு உயிர் காக்கும் மருந்தையும் - உணவையும் - நிதியையும் மட்டுமாவது அனுப்பித்தர முடிந்தது!

நாம் தூக்கி எறியும் ஆட்சியையும், அதிகாரங்களையும் துரோகிகளும் கொக்கரிக்கும் சதிகாரக் கூட்டமும் கூட்டுச் சேர்ந்து கொண்டு அடைந்து விட்டால் பின்னர் தமிழனின் நிலைமை இன்றிருப்பதை விட இன்னும் மோசமாகி விடாதா?

என்றெல்லாம் எண்ணித் தயங்கி நிற்கிறதோ திமுக!

ஊரை விட்டு - வீட்டை விட்டு - உறவை விட்டு - ஓடிப் போ! இல்லை என்றால் தலையில் குண்டு போட்டுக் கொன்று விடுவேன் என்று தமிழனை மிரட்டுகிறான் சிங்களன் இன்று!


இன்னும் பொறுத்து என்ன ஆகப் போகிறது!

விளைவுகளை எண்ணித் தயங்கியது போதும்! இதை விட மோசமான சூழல் எதுவும் தமிழனுக்கு வந்து விடப் போவதில்லை! புறப்படுங்கள்! குரல் கொடுங்கள்!

இந்த கொடிய சூழலில் கூட மனம் சிறிதும் மாறாத துரோகிகளை இனம் காணுவோம்! தூக்கி எறிவோம்!

, தமிழர்களே இன உணர்வு நமக்கெல்லாம் சிறிதளவாவது இருந்தால் இனி ஒரு நாளும் இந்தத் துரோகிகளைத் தலை தூக்க விட்டு விடக் கூடாது.................

போராளி முத்துக்குமரனின் மரண கோரிக்கை தமிழ் மக்களை...
ஈழம்: முத்துக்குமாரை கொன்ற தீ சுரணையற்ற மனங்களை சுடட்டும்!
ஈழத் தமிழரின் தியாக வரலாற்றில், முத்துக்குமாரின் த...
போராளி முத்துக்குமார் பற்றி சில,,,,,,





Comments