உதயன் சரவணபவான் மோசடிகள் அம்பலம்: உழியர்கள் அறிக்கை

தமிழ் மக்கள் சுத்த முட்டாள்கள் - நினைக்கின்றார்கள் உதயன் வித்தியாதரனும் மச்சான் சரவணபவனும் !

தமிழ் மக்களின் நிரந்தர விடுதலைக்கான ஆயுதம் தாங்கிய போராட்டம் அழிவடைந்ததன் பிற்பாடு தமிழ் விரோத சக்திகள் தமிழ் இனத்தை சிதைத்து தமது நலன்களை நிறைவேற்றிக் கொள்ளும் சதி முயற்சிகளை உள்நாட்டிலும் புலம்பெயர் நாடுகளிலும் வேகமாக முன்னெடுத்து வருகின்றன.

துரோகத்தனங்கள் கட்டம் கட்டங்களாக அரங்கேறி வருகின்றன. புலிகள் இருந்தபோது தமிழ் தேசியத்தில் பற்றுள்ளவர்கள் போல பாசாங்கு செய்த பல பச்சோந்திகள், துரோகிகளினதும் எதிரிகளினதும் நிகழ்ச்சி நிரலுக்கு செயல் வடிவம் கொடுத்து வருகின்றார்கள்.

புலிகள் இருந்த குகையில் இப்போது நரிகள் ஊளையிடுகின்றன.

இதில் உதயன் பத்திரிகையின் ஆசிரியரான வித்தியாதரனின் பங்கு தலையாயது. உதயன் பத்திரிகையின் உரிமையாளர் சரவணபவன் உதயன் பத்திரிகையின் ஆசிரியரான வித்தியாதரனின் மன்சான், முறையானவராவார் (வித்தியாதரனின் சகோதரியான யசோ வையே சரவணபவன் திருமணம் முடித்தவர்).

வித்தியாதரனின் பகீரதப் பிரயத்தனத்தின் பயனாக சரவணபவன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினுள் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருக்கின்றார். தன்னை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளராக நிறுத்துமாறு சரவணபவனும் தனது மச்சானை நிறுத்த வேண்டும் என வித்தியாதரனும் மாவை சேனாதிராஜவை வற்புறுத்திக் கேட்டிருந்தார்கள்.

வித்தியாதரனும் சரவணபவனும் மாவை சேனாதிராஜாவுக்கு அச்சுறுத்தலுடன் கூடிய நிபந்தனை ஒன்றை விதித்தனர். அதாவது கூட்டமைப்பு சரவணபவனை வேட்பாளராக நிறுத்தாவிட்டால் உதயன் பத்திரிகை கூட்டமைப்புக்கு எதிராக தொழிற்பட்டு கூட்டமைப்பை நிச்சயம் தோற்கடிக்கும் என கடுமையான தொனியில் கூறியிருந்தார்கள்.

கூட்டமைப்பின் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருக்கின்ற சரவணபவன் நேர்மையானவரோ, அல்லது தமிழ் இனத்தின் மீது பற்றுக் கொண்டவரோ அல்ல. பணத்தின் மீது அதீத பற்றுக் கொண்டவர். கூட்டமைப்பின் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருக்கின்ற சரவணபவன் பற்றி சில கருத்துக்களை அதிருப்தியுற்ற உதயன் ஊழியர்களாகிய நாம் மக்களாகிய உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றோம்.

சரவணபவனினதும் வித்தியாதரனினதும் கடந்த காலங்கள் மோசடிகளும் சூழ்ச்சிகளும் நிரம்பியது.


மோசடி (1)
- 1985 களின் நடுப்பகுதியில் குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க விரும்பிய சரவணபவன் சப்றா என்று அழைக்கப்பட்ட வங்கி ஒன்றை வித்தியதரனுடன் இணைந்து யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்தார். நிதிக்கம்பனிக்கு மக்களின் பணத்தை கவர்ந்திழுக்க மக்களை மயக்கும் விளம்பரங்களை புத்தி சாதுரியமாகச் செய்தனர். மக்களை ஏமாற்றி பணம்பறிக்க கவர்ச்சிகரமான வட்டிகளை அறிவித்து மக்களைக் கவர்ந்திழுத்தனர்.



ஏராளமான மக்கள் பெருந் தொகைப்பணத்தை அதாவது ஒவ்வொரு நபரும் பல லட்சம் ரூபாவை ஒரு தமிழனின் வங்கி என நம்பி வைப்பிலிட்டனர். பல ஓய்வு பெற்ற அரசதுறை மற்றும் தனியார்த்துறை ஊழியர்கள் தமது ஓய்வூதியப்பணம் முழுவதையும் நம்பிக்கையுடன் வைப்பிலிட்டனர். பல பெண்கள் தாம் தமது எதிர்கால வாழ்க்கைக்கு ஆதாரமாக சிறுகச்சிறுக சேமித்து வைத்திருந்த பணத்தையும் வைப்பிலிட்டு அதிக வட்டிளை பெற்று மேலும் பணம் சேமிக்கலாம் என்ற கற்பனையில் சப்றாவில் வைப்பிலிட்டனர்.

வேண்டியளவு பணம் மக்களால் வைப்பில் இடப்பட்ட பின்னர் திடிரென சப்றா வங்கி இருந்த இடமே தெரியாமல் மறைந்து போனது. வங்கி முறிவடைந்து விட்டதாக கதை பரவியது. பெருந்தொகைப்ப பணத்தை வைப்பிலிட்ட வாடிக்கையாளர்களுக்கு அச் செய்தி பேர் இடியாய் விழுந்தது. பல கோடி ரூபா பணம் முழுவதையும் சரவணபவன் சுருட்டிக் கொண்டார். ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி சம்பாதித்த பணம் முழுவதும் சூறையாடப்பட்டது.

பணத்தை வைப்பில் இட்டவர்களில் எவருக்கும் ஒரு சதம் கூட திருப்பிக் கொடுக்கப்படவில்லை. தமது வாழ்வாதாரமாக வைத்திருந்த பல லட்சம் ரூபா பணத்தை வைப்பிலிட்டிருந்த பல பெண்களின் வாழ்க்கையில் மண் விழுந்தது. அப்பெண்களில் பலர் திருமணம் முடிக்க முடியாத சூழல் ஏற்பட்டு இன்னமும் வாழ்க்கையில் விரக்தியுற்று யாழ்ப்பாணச் சமூகத்தில் வாழ்ந்து வருகின்றார்கள்.

பலர் பல லட்சம் ரூபா பணத்தை இழந்த விரக்தியில் தற்கொலை கூட செய்திருந்தார்கள். அவ்வாறு விரக்தியில் தற்கொலை செய்து கொண்டோரில் கோண்டாவில் கிழக்கைச் சேர்ந்த துரைரட்ணம் என்பவரின் பரிதாப நிலை பலரது கவனத்தை ஈர்ந்த விடயம். சிலர் பணத்தை இழந்த துயரத்தால் மன நோயாளிகளாகி சீரழிந்த சம்பவங்களும் உண்டு.

எண்பதுகளில் நடந்த இச்சம்பவத்தை நினைவில் வைத்திருப்பவர்கள் இதனோடு ஒட்டிய துயரங்களை நன்கு அறிவார்கள்.

இதே காலத்தில் நிகழ்ந்த இன்னொரு வங்கி மோசடிச் சம்பவம், ஈழமுரசு பத்திரிகையின் உரிமையாளர், மயில் தர்மலிங்கம்மும் இதே போன்றதொரு நிதிக்கம்பனியை ஆரம்பித்தார். மக்கள் பெருந்தொகைப் பணத்தை வைப்பிலிட்டதும் வங்கியை முறித்துக்கொண்டார்.

பல கோடி ரூபா பணத்தை மோசடி செய்த குற்றத்துக்காக அப்போது ஈழமுரசு பத்திரிகை உரிமையாளருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. இதை முன்கூட்டியே அறிந்திருந்த சரவணபவன் இருந்த இடம் தெரியாமல் தலைமறைவானார். வங்கியிலிருந்து கிடைத்த பணத்தைக் கொண்டு கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் வீடுகள், காணிகள், தென்னந் தோட்டங்கள் என அவசர அவசரமாக வாங்கி பணம் முழுவதையும் சொத்துக்களாக மாற்றினர்.

மோசடி மூலம் சரவணபவன் வாங்கிய காணிகள் தோட்டக் காணிகள் பலவற்றை புலிகள் பறிமுதல் செய்ததும் அவற்றை திரும்ப பெற்றுக் கொள்ள சரவணபவன் எடுத்த முயற்சிகள் அங்கு பணிபுரிந்த எமக்கு நன்றாக தெரியும். இம் மோசடிகள் தொடர்பாக பலர் கண்டன கடிதங்களை உதயன் பத்திரிகைக்கு 90 களின் முற்பகுதியில் இருந்து அவ்வப்பேது தொடர்சியாக எழுதிவருகின்ற போதும் அவற்றில் ஒன்று கூட உதயன் பத்திரிகையில் வெளியிடப்படுவதில்லை. அவற்றில் பல கடிதங்கள் எம்மில் சிலர் உதயனின் விளம்பர பகுதியில் பணிபுரிந்த போது எங்கள் கைகளுக்கு வந்து சரவணபவனின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டன.

பல நூற்றுக் கணக்கான கடிதங்களில் ஒன்று கூட பத்திரிகைகளில் பிரசுரித்தது கிடையாது. இவ்வாறு நிதி நிறுவனங்களை நடாத்தி பொதுமக்கள் பணத்தை மோசடி செய்வது இலங்கைச் சட்டத்தின்படி ஒரு கிரிமினல் குற்றமாகும். ஆனால் பெருந்தொகைப்பணத்தை சுருட்டிய சரவணபவனுக்கு அப்போதய இலங்கை அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. காரணம் 1990 களில் ஜனாதிபதியாக இருந்தவர் ஆர். பிறேமதாஸா அவர் ஒரு ஐக்கிய தேசியக் கட்சியைச் சார்ந்தவர். சரவணபவன் ஐக்கிய தேசியக்கட்சியின் மத்திய குழு உறுப்பினர் என்பதால் அவருக்கு எந்தவித தண்டனையும் வழங்கப்படவில்லை.

இதே போன்று பிரமுகா வங்கி என்ற தென்னிலங்கைத் தனியார் வங்கியொன்றும் 2005 களில் தென்னிலங்கை மக்களின் பெருந்தொகைப் பணத்தை மோசடி செய்து முறிந்து போனது. அதன் பணிப்பாளராக இருந்தவர் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவின் சகோதரியின் கணவராவார். ஆதலினால் சந்திரிக்கா பிரமுகா வங்கியின் பணிப்பாளாராக இருந்த தனது மச்சான் மீது எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

குறித்த நபர் பல கோடி ரூபாவுடன் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்று வாழ்ந்து வருகின்றார். பிரமுக வங்கியில் பணத்தை வைப்பிலிட்டு நிர்க்கதியான பல தமிழர்களும் இருக்கின்றார்கள். ஆனால் எங்கள் சரவணபவன் மற்றவர்களைப் போல பயந்து தப்பி ஓடவில்லை. துணிவோடு மக்களோடு மக்களாக இன்னமும் இந்த மண்ணில் வாழ்கின்றார். சரவணபவனை பற்றி நன்கு தெரிந்தவர்களுக்கு இது ஒரு புதுக் கதையல்ல. இதைச் சொல்ல விளைவது அரைத்த மாவை மீண்டும் அரைப்பது போலத்தான் இருக்கும்.

மோசடி (2)– 1996 இடப்பெயர்வுக்குப் பின்பு குடாநாட்டில் மீண்டும் உதயன் பத்திரிகைதான் முதல் முதல் தொழிற்பட ஆரம்பித்தது. ஓர் இரு வருடங்களின் பின்னர் வீரகேசரி தினக்குரல் ஆகிய மக்களால் அதிகம் நேசிக்கப்பட்ட நடுநிலையான தமிழ்த் தேசியப் பத்திரிகைகள் யாழ்ப்பாணத்தில் இயங்குவதற்கு ஆயத்தமாகின. ஆலை இல்லா ஊருக்கு இலுப்பம் பூச் சக்கரை என்ற நிலையில் இருந்த உதயன் பத்திரிகைக்கு வீரகேசரி தினக்குரல் போன்ற பிரசித்தி பெற்ற தமிழ்த் தேசியப் பத்திரிகைகளின் வருகை புண்ணில் புளியை வார்த்தது. மேற்படி பத்திரிகைகள் யாழ்க்குடாநாட்டுக்கு வந்தால் தமது பத்திரிகை வியாபாரம் பாதிக்கப்பட்டுவிடும் என்பதனை நன்கறிந்த இவர்கள் கலங்கிப் போனார்கள்.

இருவரும்; சேர்ந்து சதித்திட்டம் தீட்டினர். சரவணபவனின் தூண்டுதலில் வித்தியாதரன் மின்னல் வேகமாகச் செயற்பட்டார். தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கத்தை தொடர்பு கொண்டு தமிழ் தேசியத்துக்கு பெரும் ஆபத்து வந்துவிட்டதாகவும் தனிநாட்டிற்கான தமிழீழ விடுதலைக்கான போராட்டம் இனி தலையெடுக்க முடியாது என்று கூறி பதறியடித்தார். அதாவது சிங்கள் பேரினவாதத்துக்கு முண்டு கொடுக்கின்ற, ஊது குழலாகச் செயற்படுகின்ற இரண்டு தென்னிலங்கைப் பத்திரிகைகள் குடாநாட்டுக்கு வரவிருக்கின்றன.

நீங்கள் இவற்றை அனுமதித்தால் தமிழ்த்தேசியம் சிதைக்கப்பட்டுவிடும் ஆதலால் எக்காரணம் கொண்டும் இவற்றை அனுமதிக்க வேண்டாம் என புலிகளின் தலைமைக்கு நீங்கள் ஆலோசனை செய்ய வேண்டும் என அன்ரன் பாலசிங்கத்தை தொந்தரவு படுத்தினார் வித்தியாதரன்.

இந்தத் தகவலை அன்ரன் பாலசிங்கம் அவர்களும் புலிகளுக்கு தெரியப்படுத்தினார். வித்தியாதரனினதும் சரவணபவனினதும் சமாச்சாரங்களில் நன்கு பழக்கப்பட்ட புலிகள் வித்தியாதரனின் கதையை நம்பி மேற்குறித்த இரு பத்திரிகைகளின் வரவைத் தடுக்கவில்லை. அப்பத்திரிகைகள் குடாநாட்டில் இயங்கி செயற்படுவதை புலிகள் வரவேற்பதாக அன்ரன் பாலசிங்கத்துக்கு உடன் பதில் கொடுக்கப்பட்டது. சரவணபவனுக்கும் வித்தியாதரனுக்கும் புலிகளின் பதில் பெரும் ஏமாற்றத்தை அளித்தது. புலிகள் சரியான முடிவை எடுக்கவில்லை எனவும் அறிவாளிகளான தமது ஆலோசனையை கேட்கின்றார்கள் இல்லை என மோசமாக விமர்சித்தனர்.

மோசடி (3) - இதே காலப்பகுதியில் இன்னுமொரு குடாநாட்டுப் பத்திரிகையான வலம்புரி பத்திரிகையை தடைசெய்ய வேண்டும் என வித்தியாதரன் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கத்தை வற்புறுத்திக் கொண்டிருந்தார். வலம்புரி பத்திரிகைக்கு அரச ஆதரவு பெற்ற ஆயுதக் குழு ஒன்றே நிதியுதவி கொடுத்து பதிப்பகத்துக்கு வேண்டிய இயந்திர சாதனங்களை இலவசமாக வழங்கி தமிழ் ஈழத்துக்கான போராட்டத்தை சிதைக்கும் பணியை வழங்கியிருக்கின்றது என்று பொய்யான வதந்தியைப் பரப்பி வலம்புரியை புலிகள் தடைசெய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார. சூழ்ச்சிகளில் கைதேர்ந்த வித்தியாதரனை நன்கறிந்திருந்த புலிகள் வலம்புரி பத்திரிகையை தடைசெய்யவில்லை. இந்த விடயத்திலும் புலிகள் பிழையான முடிவுகளை எடுக்கிறார்கள் யாருடைய சொல்லையும் புலிகள் செவிமடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டைத்தான் இருவரும் மீண்டும் முன்வைத்தனர்.

மோசடி (4) - தினக்குரல் வீரகேசரி ஆகிய பத்திரிகைகள் பற்றி சரவணபவனும் வித்தியாதரனும் கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் முன்னுக்கு பின் முரணான பொய்யான வந்திகளை கடந்த காலங்களில் தொடர்ச்சியாக மேற் கொண்டு வந்தனர். தினக்குரல் வீரகேசரி ஆகிய பத்திரிகைகள் பற்றி யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ் மக்களுக்கு சொல்லுகின்ற போது அவை சிங்கள பேரினவாதப் பத்திரிகைகள் எனவும் அப்பத்திரிகைகளை வாங்குவதும் அப் பத்திரிகைகளில் விளம்பரங்களை கொடுப்பதும் தேசத் துரோகம் என்றும் கூறிவந்தனர்,

அதேநேரம் அந்த இரு பத்திகைகளை பற்றி தென்னிலங்கை சிங்கள வர்த்தகர்களுக்கு சொல்லுகின்ற போது அப்பத்திரிகைகள் புலிகளின் பத்திரிகைகள் எனவும் நீங்கள் அப்பத்திரிகைகளில் விளம்பரம் செய்வது புலிகளுக்கு நீங்கள் நேரடியாக நிதியுதவி அளிப்பதற்கு ஒப்பானது என்ற போர்வையிலும் பிரச்சாரங்களை திட்மிட்டு மேற்கொண்டு வந்தனர். வித்தியாதரனையும் சரவணபவனையும் சந்திக்கின்ற பலருக்கும் இருவரும் சர்வ சாதாரணமாக செய்யும் பிரச்சாரங்கள் இவை.

வித்தியாதரனுக்கும் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கத்துக்கும் இடையிலான உறவு பத்திரிகைத் தொழிலுடன் தொடர்புபட்டதே. 1990 களின் பிற்பாடு குடாநாடு புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த போது குடாநாட்டில் இருந்து வெளிவரும் பத்திரிகைகள் அரசியல் சார்ந்த செய்திகளை வெளியிடும் போது புலிகளின் முன் அனுமதி பெறவேண்டியிருந்தது. இதற்கு புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம்தான் பொறுப்பாக நியமிக்கப்பட்டிருந்தார். இதனால் வித்தியாதரனுக்கு அன்ரன் பாலசிங்கத்துக்துடன் நெருக்கமாக பழகும் வாய்ப்புக் கிடைத்தது.

தமிழீழ விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் ஆரம்பமான காலம் முதல் அரசு மற்றும் தமிழ்த்தேசிய விரோத சக்திகள் பல பல்வேறு தமிழ்க் கைக் கூலிகளுக்கு பணத்தை வாரி இறைத்து தமிழ்தேசிய சிந்தனையை சிதைப்பதற்கு பத்திரிகைச் சுதந்திரத்தை ஒரு சிறந்த ஊடகமாக பயன்படுத்த முற்பட்டே வந்துள்ளன.

புலிகளின் மேற்படி பத்திரிகை மீதான கட்டுப்பாடே தமிழ்த் தேசியத்துக்கான ஒருமைப்பாட்டை பாதுகாத்து வந்தது. இந்த உறவை வித்தியாதரன் தமது பத்திரிகை வியாபாரத்துக்கு புத்திசாதுரியத்துடன் பயன்படுத்தினார். புலிகள் தொடர்பான மற்றும் போராட்டம் தொடர்பான,

மோசடி (5) - வித்தியாதரன் 2003 காலப் பகுதியில் யாழ் , இந்துக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் செயலாளராக , இருந்தவர். சங்கச் செயலாளராக , இருந்த போது, யாழ் , இந்துக் கல்லூரியின் பழைய மாணவர்களின் தொடர்ச்சியான போராட்டதினாலும் கடும் எதிர்ப்பினாலும் அப் பதவியில் , இருந்து விலகினார் வித்தியாதரன்.

பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் பல லடசம் ரூபா நிதியினை வித்தியாதரன் மோசடி செய்ததாக குற்றச்சாட்டை முன்வைத்தே யாழ்ப்பாணம் , இந்துக்கல்லூரி மாணவர்கள் வித்தியாதரனுக்கு எதிரான கடுமையான போராட்டத்தை நடாத்தினர். அப் போராட்டம் நடைபெற்ற போது , இவ் விடயங்கள் தொடர்பான மாணவர்கள் முன்வைத்த குற்றச்சாட்டுக்கள் அனைத்தையும் உதயன் பத்திரிகை , இருட்டடிப்புச் செய்திருந்தது. மாணவர்களின் போராட்டத்தை தொடர்ந்து வித்தியாதரன் யாழ்ப்பாணம் , இந்துக்கல்லூரி பழைய மாணவர்சங்கத்தின் செயலாளர் பதவியில் , இருந்து விலகினார்.

மோசடி (6) - பல்கலைக்கழக மூதவை (ஊழரன்உடை) என்பது உயர் கல்வி நிறுவனமான பல்கலைக்கழகத்தை நிர்வகிக்கின்ற நிர்வாகசபையாகும். , இதில் அங்கத்தவர்களாக , இருப்பவர்கள் நன்றாகப் படித்த பட்டம் பெற்ற புத்தியீவிகளே. ஆனால் சரவணபவன் யாழ்பல்கலைக்கழகத்தின் மூதவை உறுப்பிராக வர ஆசைப்பட்டார். தன்னை மூதவை உறுப்பனராக தெரிவு செய்யுமாறு 2004 காலப்பகுதியில் பாராளுமன்ற உறுப்பிராக , இருந்த ஐக்கிய தேசியக்கட்சியை சார்ந்த தி. மகேஸ்வரனின் காலைப்பிடித்துக் கேட்டார்.

மகேஸ்வரனும் ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் உதவியை நாடினார். சரவணபவன் ஐக்கிய தேசியக்கட்சியின் மத்திய குழு உறுப்பினர் என்ற காரணத்தால் ரணில் விக்கிரமசிங்க மகேஸ்வரனின் வேண்டுகோளுக்கு சம்மதித்தார்.

ரணிலின் உதவியுடன் சரவணபவன் யாழ் பல்கலைக்கழக மூதவை உறுப்பினரானார். ஒரு உயர்கல்வி நிறுவனத்தை நிர்வகிக்கின்ற அளவுக்கு சரவணபவன் உயர் கல்வி படித்தவரோ அல்லது பட்டம் பெற்றவரோ அல்ல. சரவணபவனின் , இத் தெரிவை பல்கலைக் கழக சமூகம் முழுமையாக எதிர்த்தது. 2004 ம் ஆண்டு காலப்பகுதியில் பல்கலைக்கழக மாணவர்களும் சரவணபவனின் மூதவைக்கான தெரிவை கடுமையாக எதிர்த்தனர். மாணவர்கள் மூதவை கூடும் தினங்களில் பல்கலைக்கழக வாயில் கதவுகளைப் பூட்டி சரவணபவனை பல்கலைக்கழகத்திற்குள் நுழையவிடாமல் தடுத்தனர். மாணவர்கள் பல்கலைக்கழக வாயில்களில் திரண்டு சரவணபவனுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி போராட்டங்களை நடாத்தினர்.

இவ்வாறு ஒருநாள் மாணவர்கள் வழிமறிப்புச் செய்தபோது சரவணபவன் மேற்படி விடயத்தை ரணில் விக்கிரமசிங்கவுக்கு தெரியப்படுத்தினார். உடனடியாக ரணிலின் பணிப்பின் பேரில் சம்பவ , இடத்துக்கு ,ராணுவம் விரைந்துவந்து சரவணபவனை உள்ளே செல்ல அனுமதிக்க வேண்டும் என மாணவர்களை அச்சுறுத்தியது. ஆனால் மாணவர்கள் எவரது வேண்டு கோளுக்கும் செவி சாய்க்கவில்லை. மாணவர்களின் கடும் எதிர்ப்பு தொடர்ந்ததனால் சரவணபவன் பல்கலைக்கழகத்திற்குள் நுளையும் முயற்சியைக் கைவிட்டு திரும்பினார்.


மோசடி (7) - 2005 ம் ஆண்டு புலிகளின் வேண்டுகோளின் பிரகாரம் தமிழ் மக்கள் ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணித்திருந்தனர். 2004 ம் ஆண்டு தேர்தலுக்கு முன்னதாக ரணில் விக்கிரமசிங்க சரவணபவனுக்கு பெருந் தொகைப் பணத்தை கொடுத்து ஜனாதிபதித் தேர்தலில் தமக்கு சார்பாக தமிழ் மக்கள் வாக்களிக்கும் முடிவை புலிகள் எடுக்குமாறு புலிகளை வற்புறுத்த வேண்டும் எனக் கோரியிருந்தார்.

2005 தேர்தலுக்கு சில தினங்கள் முன்னதாக சரவணபவனும் வித்தியாதரனும் புலிகளுக்கு புத்தி சொல்ல கிளிநொச்சிக்குச் சென்றனர். புலிகளின் அரசியல் துறைப்பொறுப்பாளர் தமிழ்ச்செல்வனை சந்திக்க அரசியல்துறை நடுவப்பணியகத்திற்கு வெளியே காலையில் , இருந்து மாலைவரை காத்திருந்தனர். விடயம் அறிந்த புலிகளின் முக்கிய பிரமுகர்கள் யாருமே வித்தியாதரனையோ சரவணபவனையோ சந்திக்கவில்லை. , இருவரும் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

மோசடி (8) - கடந்த ஜனாதிபதித் தேர்தலில் 2010 சரத் பொன்சேகாவை ஜனாதிபதியாக கொண்டுவருவதற்கு வித்தியாதரனும் சரவணபவனும் தீவிரமாக பாடுபட்டனர்;. காரணம் சரத் பொன்சேகா தன்னை ஜனாதிபதியாக கொண்டு வருவதற்கு உரிய முயற்சிகளை செய்வதற்காக சரவணபவனுக்கு பல மில்லியன் ரூபா பணத்தை வழங்கியிருந்தார். சரவணபவனும் சரத் பொன்சேகாவை ஜனாதிபதியாக கொண்டுவருவதற்கு தமிழ் மக்களின் முழு வாக்குகளையும் பெற்றுத்தருவாதாக உறுதியளித்து பெருந்தொகைப் பணத்தை வாங்கினர்.

2004 ஜனாதிபதித் தேர்தலில் புலிகள் பெரும் தவறிழைத்து விட்டதாக , இவ்வருட முற்பகுதியில் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்பதாக வித்தியாதரன் தனது பத்திரிக்கையில் எழுதினார். ஆகவே 2005 ,ல் புலிகள் விட்ட அதே தவறை மீண்டும் தமிழ் மக்கள் , இம் முறையும் , இழைக்கக் கூடாது எனவும் சரியாக தமிழ் மக்கள் அனைவரும் பொன்சேகாவுக்கு வாக்களிக்க வேண்டும் என பிரச்சாரத்ததை முடுக்கிவிட்டனர். ஆனால் கடந்த ஜனாதிபதித் தேர்தலை 80 வீதமான தமிழ் மக்கள் புறக்கணித்திருந்தனர் என்பது ஊர் அறிந்த உண்மை. தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் மகிந்தவும் பொன்சேகாவும் ஒருவருக் ஒருவர் குறைவில்லாத எம்மை மிக மோசமாக கொன்றொழித்த கொலைகாரர்கள்.

பிரதான பேரினவாதக் கட்சிகளைச் சார்ந்த , இரண்டு பேருக்கும் , இடையேயும் எந்த வேறுபாடும் கிடையாது. சரவணபவன் பணத்தை வாங்கிவிட்டு சரியாக அதற்காக வேலை செய்யவில்லை தம்மை ஏமாற்றி விட்டதாக சரத் பொன்சேகாவின் ஆதரவாளர்களும் மனோகனேசனும் வித்தியாதரன் மீதும் சரவணபவன் மீதும் வெளிப்படையாக குற்றம் சுமத்திவருகின்றனர்.

உதயன் பத்திரிகைகளில் வரும் தேர்தல் விளம்பரங்களிலும், கட்டுரைகளிலும் சரவணபவன் சிறந்த ஒரு சேவையாளன் எனவும் தமிழ் மக்களுக்கு விமோசனத்தை தேடித்தர போகிறார் எனவும் தமிழ் மக்கள் அவரை பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யவேண்டும் எனவும் எழுதப்பட்டு வருகிறது.

பாவம் வித்தியாதரன் தமிழ்மக்கள் முட்டாள்கள் என நினைக்கிறார். தமிழ் மக்களின் பணத்தை கொள்ளையடித்தது உதயன் பத்திரிகையை ஆரம்பித்தது மட்டுமல்ல உதயன் பத்திரிகையை தினமும் விற்பதன் மூலமும் விளம்பரம் மூலமூம் சரவணபவன் பல லட்சம் ரூபா பணத்தை வருவாயாக பெறகின்றார். ஒரு நாளைக்கு பத்திரிகை விற்பதன் மூலம் சுமார் 4 லட்சத்து ஜம்பதாயிரம் ரூபாவுக்கு அதிகமாகவும், விளம்பரத்தின் மூலம் பல லட்சம் ரூபாய்களை வாருமானமாக பெறுகின்றார்.

இதில் சேவையென வித்தியாதரன் கருதுவதுதான் என்னவென்று புரியவேயில்லை. இதேநேரம் உதயன் ஊழியர்களான எமக்கு தரப்படுவது பிச்சைச் சம்பளமே. எம்மை அடிமைபோல வைத்து துன்புறுத்தி வேலைவாங்கி தங்களது பணப்பைகளை நிரப்பிக் கொள்கின்றார்கள். பெருமளவு குடாநாட்டு வாசகர்கள்; உதயன் பத்திரிகையை ஒரு செத்தவீட்டு பத்திரிகை என கூறி அண்மைக்காலமாக அதை வாங்குவதை தவிர்த்துவருகின்றனர். , இதனால் ஏற்பட்ட வருமான வீழ்ச்சி, சரவணபவனை அதிகம் விரக்தியினுள் தள்ளிவிட்டுள்ளது. உதயன் பத்திரிகையில் பணிபுரிந்து அதிருப்தியுடன் வெளியேறிய ஊழியர்களாகிய நாம் மட்டும் அல்ல அதிருப்தியுடன் தப்போதும் பணிபுரியும் ஊழியர்கள் யாரும் சரவணபவனை ஒர மனிதனாக மதிப்பது கிடையாது.

மோசடி (9) - கடந்த யுத்தகாலப்பகுதியில் எமது சக ஊழியர்களும் பத்திரிகை விநியோகஸ்த்தர்களும் சுட்டுக்கொல்லப்பட்ட போதும் கடத்தப்பட்ட போதும் வித்தியாதரனும் சரவணபவனும் கொழும்பில் பாதுகாப்பான சொகுசு மாளிகைகளில் , இருந்து கொண்டு தொலைபேசி மூலமும் தொலைநகல் மூலமும் ஈமெயில் மூலமும் தான் எமக்கு கட்டளைகளையும் செய்திகளையும் கட்டுரைகளையும் அனுப்பிக்கொண்டிருந்தார்கள். , இங்கு எம்மைப் போன்ற பலர் தான் மரணத்துக்குள் வாழ்ந்து பணிபுரிந்தோம். எமது நண்பர்கள் பலரை நாம் கடந்த யுத்த காலத்தில் , இழந்திருந்தோம்.

2006 ம் ஆண்டு பிற்பகுதியில் ,ராணுவ புலனாய்வுத்துறையினரும் ஒட்டுக் குழுவொன்றும் உதயன் நிறுவனத்தினுள் நுளைந்து துப்பாக்கியால் சுட்டபோது எமது நண்பர்களில் , இருவர் உயிரிழந்தனர் பலர் காயமுற்றனர். படுகாயமுற்றவர்களின் விடயத்தில் சரவணபவனின் தலைமையிலான நிர்வாகம் நடந்துகொண்டவிதம் மிகமோசமானது. எமது நண்பர்கள் காயமுற்றபின் உதயன் நிர்வாகம் அவர்களை திருப்பிக் கூட பார்க்கவே , இல்லை. அவர்கள் யாரையும் சரவணபவனோ வித்தியாதரனோ வைத்தியசாலைக்கு கூட போய்ப் பார்க்கவில்லை என்பது கசப்பான உண்மை.

படுகாயம் அடைந்த , இருவரில் ஒருவருக்கு வயிறு கிழிந்து குடல்முழுவதும் வெளியே வந்தநிலையிலேயே வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டார். ஒரு நாள் கூட அவரை சரவணபவனோ வித்தியாதரனோ போய்ப் பார்க்கவும் , இல்லை செலவுக்கு ஒருசதம் பணம் கூட கொடுக்கவில்லை. மேற்படி வயிற்றில் காயமடைந்த நபர் பலமாதத்தின் பின்னர் ஓரளவு சுகமடைந்து வெளி நாடொன்றில் அரசியல் தஞ்சம் கோர எண்ணிணார். அதற்காக மேற்படி சம்பவத்தை உறுதிப்படுத்தி கடிதம் ஒன்றினை தந்துதவுமாறு உதயன் நிறுவனத்திடம் கோரியிருந்தார். அதற்கு சரவணபவன் கூறிய , இரக்கமற்ற பதில் எதிரி மேற்கொண்ட கண்மூடித்தனமான துப்பாக்கிப்பிரயோகத்திலும் கொடுமையானதாக , இருந்தது.

அந்தக் கொடூரமான பதில் , இன்னும் எமது மனக்கண்ணுக்குள் முள்ளாய்க் குத்துகிறது. சரவணபவன் அவருக்கு அக்கடிதத்தை கொடுக்க முடியாது என அடியோடு மறத்துவிட்டார். மாறாக மேற்படி உதயன் பத்திரிகைக்கு எதிரான சம்பவத்தை சரியாக பிரச்சாரப்படுத்தி தமது நிறுவனத்துக்கு புகழைத் தேடிக்கொள்ள பயன்படுத்தினர்.


மோசடி (10) - வித்தியாதரன் தனது பத்திரிகையில் தனது மச்சான் ஈழத்தமிழர் பிரச்சினையை உலகறியச் செய்த ஊடகப் போராளி எனவும் அவருக்கு வாக்களியுங்கள் எனவும் விளம்பரம் செய்து வருகின்றார். வேடிக்கை என்ன வெனில் சரவணபவனுக்கு தினமும் உதயன் பத்திரிகை விற்பதன் மூலமும் விளம்பரத்தின் மூலமும் எவ்வளவு வருமானம் வருகின்றது என்று கேட்டால் ஒரு சதம் பிசகாமல் சொல்லுவாரே தவிர உதயன் பத்திரிகையில் என்ன தலைப்பபுச் செய்தி ஆசிரியர் தலையங்கம் என்ன என்று கேட்டால் அவருக்கு அது பற்றி எதுவும் தெரியாது. சில சமயங்களில் ஆசிரியர் பீடத்துடன் தொடர்புகொண்டு, இன்றைய செய்தி என்ன என்றுகூட அவர் கேட்பதும் உண்டு.


தமிழர்களாகிய எமது வாழ்வியலில் போராளி என்ற சொல்லுக்கு நிறைய அர்த்தமும் புனிதமும் உண்டு. மேற்படி வித்தியாதரனின் விளம்பர வாசகம் போராளி என்ற புனிதமான வாசகத்தை திட்டமிட்டு கொச்சைப்படுத்தும் ஒரு செயற்பாடு. தனது தோல்வியை ஒரளவிற்கு கணித்துக் கொண்டுள்ள சரவணபவன் யாழ்ப்பாணத்தில் உள்ள பல விளையாட்டுக்கழகங்கள் சனசமூக நிலையங்களுக்கு பல லட்சம் ரூபாவை வழங்கி வாக்கு சேகரிக்கும் பணியை ஆரம்பித்துள்ளார்.

“சரவணபவனுக்கும் வித்தியாதரனுக்கும் மட்டும் தெரிந்த கசப்பான ஒரு உண்மை அதாவது உதயன் பணிமனையில் பணிபுரியும் பெரும்பான்மையான ஊழியர்கள் கூட சரவணபவனுக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்பது"

அதிருப்தியுற்று வெளியேறிய
உதயன் பத்திரிகையின் முன்னாள் ஊழியர்கள்.


மேலுள்ள தகவல்களை கொடுத்தவர் முன் நாள் உதயன் பத்திரிகை ஊழியர் என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதற்கான ஆதாரங்களும் எம்மிடம் உள்ளது.









comments by: Tamilan
ம்ம்ம... நல்லது ....ஊடகங்களுக்கிடையில் பனிப்போர் நடப்பது புரிகிறது.....
உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கவை.....தொடர்ந்தும் உங்கள் உண்மைகளை வெளியிடுங்கள்.....
---------------------------------------------
comments by: HR
100% true... thanks for brought this news good time...
---------------------------------------------
comments by: Nada
100% உண்மை ஜயா , நானும் பணம் போட்டு ஏமாந்தவர்களில் ஒருவன். இப்போது கனடாவில் வசித்து வருகிறேன்
---------------------------------------------
comments by: Soosi Thasan
வெல் டன் அதிர்வு, உண்மைதான் அப்போது நாங்க யாழ்பாணத்தில இருந்தோம், இந்த சப்பிர காசை முழுங்கியது நான் அறிவேன் !
---------------------------------------------
comments by: Shakithivel Tamilnadu
தமிழ் நாட்டில தான் இப்டினா யாழ்பானத்திலையுமா சார். இவங்கள நிக்கவைச்சு ஜோட்டால அடிக்கனும், போருக்கு மத்தியில சேமிச்ச காசை சூறையாட இவனுங்களுக்கு எப்படிதான் மன்சு வருதோ
---------------------------------------------
comments by: தமிழ் மகன்
ஊடகப்போராளி என்று விளம்பரம் வந்ததாக செய்தி வந்தது.
சரவணபவன் ஒரு ' ஊடக முதலாளி'.

ஊடகத்தை, தனது அரசியல் லாபத்திற்காக பயன்படுத்துவது
மோசமான விடயம். இவர் தேர்தலில் குதித்ததால், தான்
ஆசிரியர் பதவியிலிருந்து விலகுவதாக இரண்டு மாத
நோட்டீஸ் வித்தியாதரன் கொடுத்துள்ளாராம்.

தேசத்தின் குரலோடு தனக்கு நெருங்கிய உறவு இருந்ததாக கூறி
மக்களை இனியும் ஏமாற்ற முடியாது.

தேசியத் தலைவர் மீது சேறு பூசிய , 'புதினம்' வழுதியின் நெருங்கிய
நண்பர் இந்த வித்தியாதரன். சம்பந்தர் தான் அடுத்த 'பிரபாகரன்'
என்று வெளிநாட்டுக்காரர்களுக்கு இவர் கூறி வருகிறாராம்.
தலைவனின் ம........ரைக்கூட இவர்களால் தொட முடியாது.

தமிழ் மகன்
---------------------------------------------
comments by: eela thamizh, melbourne, australia
வெளிநாட்டில் இருந்துகொண்டு வீரம் பேசி பலன் இல்லை. தமிழ் தேசியம் என்ற பெயரில் தமிழரை சிலர் தமது சுய லாபத்துக்க்காகத் திட்டம் போட்டு கூறு போட நினைக்கின்றனர். சம்பந்தனுக்கு வெளிநாட்டுத் தமிழரைத் திருப்திப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.

அவர் ஈழத்தில் இருந்து அல்லல்படும் எம் மக்களுக்ககாக செயற்படுகிறார். சொகுசாக வெளிநாட்டில் இருக்கும் உங்களுக்கு,அவரது அரசியல் நகர்வு தெவையில்லாமல் இருக்கலாம்.

ஆனால் அங்கு முகாமில் அலைக்கழியும் மக்களுக்கு.. உங்களுக்கு அது ஒரு செய்தி. ஆனால் அவர்களுக்கு அது வாழ்க்கை. அவர்களை நினையுங்கள். ஒன்றுபடுவோம். நமக்குள் பிளவுகள் வேண்டாம்.

தமிழீழம் வேண்டும், ஆனால் அங்கு தமிழ் மக்கள் இருக்க வேண்டுமே. அவன் சிங்களவரைக் குடியேற்றுகிறான். ஆயுதப் போராட்டம் வீழ்ந்த நிலையில், அரசியல் நகர்வுகள் நிதானமாக இருக்க வேண்டும்.தயவு செய்து நமக்குள் அடிபாடு வேண்டாம். தமிழ் தேசிய கூட்டமைப்பை தலைமையாக ஏற்று ஒன்றுபடுவோம்.
---------------------------------------------

comments by: Niruban
இதனை யாழ்ப்பாண சராசரி மக்களுக்கும் தெரியப்படுத்த ஒரு நடவடிக்கை எடுக்கவும் வலம்புரி, வீரகேசரி, தினக்குரல் பத்திரிகைகள் களம் தருமா? வேறு என்ன செய்யலாம் இந்த ஊடக பிசாசுகளை இவர்கள் இந்தியாவில சாமியார்கள் இலங்கையில் ?

ஒரு நடுநிலமையான பத்திரிக்கை யாழிலிருந்து வரணும் அதற்கு எல்லா தரப்பிலிருந்தும் பங்களிப்பை பெற வேண்டும் தலைமை பகுதி சுழற்சி முறைல வரணும் அதன் மூலம் ஓரிடத்திலே அதிகாரம் குவிவது தடுக்கப்படும் யாழ் மக்களை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் என விட முடிமா?

இப்படியான உண்மைகளை கொண்டு வரும் அதிர்வு இணைய தள குழுவினர் அதுக்குரிய நடவடிக்கையை ஆரம்பித்து வைத்தால் என்ன ? உங்க பதிலை எதிர்பார்க்கிறேன்.
---------------------------------------------
comments by: Sathasivam UK
வீரகேசரி, வலம்புரி, பிரான்ஸ் ஈழமுரசு, போன்ற பத்திரிகைகள் இதனை உள்வாங்குமா ? இச் செய்திகளை அவர்கள் துணிச்சலாக வெளியிடத் தயாரா ? இல்லை எல்லாரும் வித்தியாதரனுக்குப் பயந்து ஓடி ஒளியப்போகினமா ?
---------------------------------------------
comments by: Vinoth

சப்றா என்ர நிதி மோசடி நிறுவனம் மூலம் கள்ள சொத்து சம்பாதித்த சரவணபவன் அன்ட் வித்தி என்ர கள்ள கும்பல் இப்போது யாழ் மக்களிடம் வாக்கு பிச்சை கேட்கிறான்கள்.

உவங்களுக்கு நல்ல பாடம் புகட்ட வேண்டும். உந்த செத்த வீட்டு பேப்பர்காரன் தான் 2000 ம் ஆண்டு சயன்ஸ் கோலில் படித்த மாணவர்களை தூண்டி ஒரு பகிஸ்கரிப்பு செய்ய வைத்தவன். அதன் மூலம் பாதிக்கப்பட்டது என்கட பிள்ளைகள் தான். அது மட்டுமா?

உந்த பேப்பர் கொம்பனியில வேலை செய்யுற ஆட்களுக்கு குடுக்கிற சம்பளம் எவ்வளவு தெரியுமோ?

3000 - 4000 தான். பெடியள் இல்லாதது தெரியுது. நம்மட சனம் நல்ல பாடம் கொடுக்க வேனும். அதுக்கு அதிர்வு இப்படி பட்ட மோசடி உதயன்

-அதிர்வு-


Comments