சாமியார் நித்தியானந்தமும், ரஞ்சிதாவும் தணிக்கை செய்யப்படாத காட்சி-காணொளிஇந்தியாவில் ஹைடெக் சாமியார்கள் பலரின் வாழ்விடங்கள் களியாட்டக் கூடங்களாக மறைந்து கிடப்பதில் , அரசியல் புள்ளிகளுக்குக் கனிசமான பங்கு உண்டு. நீங்கள் ஒரு சில ஆயிரம் ரூபாய்களை வெளிப்படையாகத் தெரியுமாறு வைத்துக்கொண்டு, ஒரு பொது இடத்தில் நின்றாலே ஆயிரம் சந்தேகப் பார்வைகள் உங்கள் மேல்விழும். அதற்கு மேல் காவல்துறை உங்களை விசாரணையில் குதறி எடுக்கும்.
இத்தகைய தமிழகத்தில் குடியிருக்கும் இந்தத் துறவிகளிடம் புளங்கும் பணத்தின் அளவு சில பல ஆயிரங்களா? எத்தனையோ கோடி ரூபாய்கள். அதுவே அவர்களை இத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா என்று பாட வைக்கிறது. இதுவெல்லாம் அரசியல் பலம் அற்ற ஒருவனால் செய்துவிட முடியுமா?. இந்தச் சாமியாரை வாழவைத்ததும் நாறடித்ததும் அரசியற் புள்ளிகளே என்பது இப்போது ஒரளவுக்கு உறுதிபடத் தெரியவருகிறது.
கோடாம்பாக்கம் ஒவ்வோரு நிமிடமும் திக் திக் என்று திகிலோடு நொடிகளை எண்ணிக்கொண்டிருக்கிறது. ஹைடெக் சாமியார், நித்யாநந்தரிடம் நெருக்கமாக இருந்த கோலிவுட் விஜபி கும்பல் மிகப்பெரியது. அவரிடம் தியாணம் கற்று தீட்சை பெற்ற வகையில், அவரை சந்திக்கும் பொதெல்லாம் பெருமையோடு எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் எப்போது வேண்டுமாணாலும், இண்டெர்நெட்டிலும், பத்திரிகைகளிலும் வெளிவரலாம் என்ற பயத்தில் பலர் கிலி பிடித்து கிடக்கிறார்கள்.
காரணம் கொத்துக்கொத்தாக முன்றாவது கண்ணையுடைய பத்திரிகையிடம் ஏராளாமன புகைப்பட, வீடியோ ஆதாரங்களை கொடுக்கப்பட்டிருக்கிறதாம். இந்த வீடியோ மூலம் நித்தியாநந்த ஸ்வாமிகளை ஒழித்துகட்ட முடிவு செய்த அவருக்கு நெருக்கமான முதன்மை சீடர்கள் சிலரே இதனைச் செய்திருக்கின்றார்கள். இந்த சீடர்களை விலைகொடுத்து வாங்கியது கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் ஒருவர் என நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
திருவண்ணமலையில் 1978- ஆம் வருடம் ஜனவரி முதல் தேதி, அருணாசலம்-லோகநாயகி என்ற முதலியார் சமுதாய பெற்றொருக்குப் பிறந்த நித்யாநந்தாவின் இயற்பெயர் ராஜசேகரன். இவர் பெரிய ராஜரிஷியாக வருவார் என்று பிறந்ததும் ஜோசியன் சொல்ல சிறுவயது முதலே அவரை ரமண மகரிஷி ஆசிரமத்துக்கு அடிக்கடி கூட்டிப்போய் ஆண்மீகத்தை ஊட்டியிருக்கிறார்கள். பிறகு ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது ரகுபதி, குப்பமாள் என்ற இரண்டு யோகா ஆசிரியர்களிடம் விடப்பட்டு யோகாவும் ,குண்டலினியும் கத்துக்கொண்டாராம்.
அவரது பண்ணிரெண்டு வய்யதில் திருவண்ணமலை கோவிலில் சக சிறுவர்களோடு விளையாடிக்கொண்டிருந்தபோது உண்ணாமுலை அம்மன் ஒளி ரூபமாக காட்சி தந்ததாக பெற்றோரிடம் சொல்ல அன்றுமுதலே கவணத்துகுரிய சிறுவனாக வளர ஆரம்பித்ிருக்கின்றார். திருவண்ணாமலையில்+2 முடித்து குடியாத்தம் தனியார் கல்லூரியில் டிப்ளமோ இன் மெக்கானிக்கல் எஞ்ஜினியரிங் படித்திருக்கிறார். படிப்பு முடிந்ததும், வேலைக்கு செல்லாத இவர் தேர்ந்து கொண்ட வழிதான் ஆன்மீகம் என்கிறார்கள்.
முதலில் ஈரோட்டில் ஆசிரமம் அமைத்த நித்தியாநந்தா அங்கே சில வருடங்களிலேயே நிலப்பிரச்சனை வந்ததால் பெங்களுருக்கு சென்று ஆசிரம்மம் அமைத்துக் கொண்டார். அங்கு ஆச்சிரமம் அமைத்த பிறகே இந்த அளவுக்கு இண்டெர்நேஷனல் சாமியாராக வளர்ந்திருக்கிறார். இதற்குக் காரணம், கர்நாடக அரசியல் தலைவர்கள். முதலமைச்சர் முதல் ஏனைய எதிர்க்கட்சி பிரபலங்கள் வரை எல்லோரும், சாமியாரின் தீவிர பக்தர்கள்.
இதற்கடுத்ததாக நித்தியானந்தாவின் பிரபலத்துக்குக் காரணமானவர்கள், கர்நாடகாவில் அதிகளிவல் நிறைந்திருக்கும் ஐ.டி. தொழில்நுட்பத்துறை சார்ந்தவர்கள் எனத் தெரிய வருகிறது. இந்த இளைய தலைமுறையினர் மத்தியில் இவர் இலகுவாகசெ செல்வாக்குப் பெற, அவர்கள் இவரை ஹைடெக் சாமியராக உலகத்துக்கே அறிமுகம் செய்து வைத்தார்கள்.
அளவுக்கதிமான சொத்துச்சேர ஆரம்பித்திருக்கிறது போட்டி. பெங்களூர் புறநகர் பகுதியில், பல ஏக்கர் நிலப்பரப்பில், நித்தியானந்தரின் தலைமை ஆசிரமம் இருக்கிறது. ஆச்சிரமம் என அழைக்கப்பட்டாலும், ஐந்து நட்சத்திர விடுதிக்கே உரியளவு வசதி வாய்ப்புக்கள் நிறைந்தது .இப்போது பெங்களூரில் இடங்களை தொடர்ந்து வாங்குவதில் அக்கறை காட்டி வந்திருக்கின்றார் சாமியார்.
இநத்ச் சொத்து வாங்கும் போட்டியில்தான் கர்நாடகாவின் முன்னாள் முதல்வரோடு, பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது. தொலைபேசிவழியாக நேரடியாகவே நித்தியானந்தாவை முன்னாள் முதல்வர் மிரட்டியதாகவும் தகவல். இறுதியாக பெங்களூரில் ஒரு முக்கிய இடத்தை வாங்குவதில் இருவருக்கும் கடும் போட்டி ஏற்பட்டிருக்கிறது. இந்தப் போட்டியில், நித்தியாநந்தர் ஜெயித்துவிட, கடுப்பான அந்த அரசியல் பிரபலம், நித்தியானந்தரின் பலகீனம் பாரத்து அடித்திருக்கிறது. நித்தியாநந்தருக்கு நெருக்கமான மூன்று சீடர்களை வளைத்து, அவர்களுக்குப் பெரும் விலைபேசியே இந்த வீடியோ கேண்டிலை நடத்தியிருக்கிறார்கள் .
திட்டமிட்ட வகையில், மிகக் கவனமாக, நித்தியானந்தருக்கு நெருக்கமானவர்கள் எடுக்கபட்ட இந்த ஒளிப்பதிவை கர்நாடகாவில் வெளியிட, ஆளந்தரப்பு இடைஞ்சலாக அமைந்துவிடலாம் என்பதினாலேயே, இதனை தமிழ் ஊடகங்களுக்கு அனுப்பியதாகத் தகவல் கிடைக்கிறது. கர்நாடக அரசியற்புள்ளியின் நோக்கம், நித்தியாநந்தரை, கர்நாடகத்தை விட்டு அகற்றுவது, சொத்துகளை முடக்குவது என்கிறார்கள். சொல்ல்லம்.
இந்த ஆபாச வீடியோவை முதலில் தமிழக எதிர்க்ட்சித் தொலைக்கட்சி ஒன்றுக்கே அனுப்பி வைத்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் சங்கராச்சாரியார் சமாச்சாரத்தால் சரிந்து போயிருக்கும் தங்கள் இந்துத்துவ ஒட்டு வங்கியை இது மேலும் சரித்துவிடும் என்ற பயத்தில் பம்மிக்கொண்டு இருந்துவிட, அடுத்த பக்கத்துக்குத் தாவி இருக்கிறார்கள். தொலைக்காட்சிகளில் சன்னுக்கும், பத்திரிகைகளில் நக்கீரன், குமுதம் ரிப்போர்ட்டர், மற்றும் ஜூவி ஆகிய ஊடங்களுக்கும் அனுப்பியிருக்கிறார்கள்.
இது இவ்வாறாக இருக்க , ரஞ்சிதா எப்படி நித்தியாநந்தரிடம் ஐக்கியமானர் என்று ஆச்சர்யப்படுகிறது கோடாம்பாக்கம். காரணம் பாரதிராஜாவின் அறிமுகங்களில் சோடைபோகாத ஒருவர்தான் இந்த ரஞ்சிதா. நாடோடித்தென்றல் படத்தில் கார்த்திக்குடன் ஜோடி சேர்ந்தவர் பிறகு முன்னணி ஹீரோகளுடன் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உட்பட சுமார் 60 படங்களில் நடித்தவர்.
திறமையான ஹீரோயின்களில் ஒருவராக கோலிவுட்டில் அறியப்பட்ட ரஞ்சிதாவுக்கு நாளடைவில் வாய்ப்புகள் குறைந்த நிலையில் ராணுவ மேஜரைக் கல்யாணம் செய்து கொண்டு செட்டிலானர். திருமண வாழ்கையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை கடந்த இரண்டு ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் சின்னத் திரைக்கு மடை மாறினார் ரஞ்சிதா. அங்கேயும் ஒரு ரவுண்ட் வந்தார்.
பிறகு சினிமாவையும் விட மனமில்லாமல் நடிகர் விஜயின் அம்மாவாக பிரபுதேவா இயக்கிய வில்லு படத்தில் நடித்தார். இந்த நிலையில்தான் நடிப்பை விட்டு இயக்குநராக முடிவு செய்து இயக்குனர் பூரி ஜெகன்நாத்திடம் உதவி இயக்குனராகச் சேர்ந்து வேலை பார்த்து வந்தாராம். இதற்குப் பிறகு ப்ரீத்தி ஜிந்தாவை வைத்து ஹிந்தி படம் இயக்க முயற்சி மேற்க்கொண்டிருக்கிறார் ரஞ்சிதா. அந்த முயற்சி டிராப் ஆனதால் தமிழில் படம் இயக்க முயர்ச்சி மேற்க்கொண்ட போதுதான் நித்யாநந்தரிடம் நெருங்கியிருக்கிறார்.
ஏற்கனவே அவரது டிவோட்டியாக இருந்த ரஞ்சிதா படம் இயக்கவும், டி.வி தயாரிப்பு நிறுவனம் தொடங்கவும் அவரிடம் அருள்வாக்கு கேட்ட போதுதான் அவர்கள் உறவு நெருக்கம் அதிகரித்திருக்கிறது. ரஞ்சிதா இயக்கும் படத்துக்கு சாமியார் ஃபைனான்சும் பண்ணினார் என்றும் நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் கிடைக்கிறது. நித்தியாநந்தர் செய்த நிதி உதவியால் ஈர்க்கப்பட்டே அவருடன் லிவிங் டுகதர் அளவுக்கு ரஞ்சிதா நெருக்கமானார் என்று அதே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பெண்ணாக, நடிகையாக, ரஞ்சிதாவுக்கு அவலத்தை இந்தச் சமூகம் அளித்திருக்கிறது என்பது ஒன்றும் புதிதல்ல. இந்நிலையில் தான் துறவியென நம்பியவர் ஒரு போலி என அறிந்து கொண்ட போதும், அதை நம்பும் மக்களுக்குத் தெரியப்படுத்தாமல் சாமியாரிடமிருந்த கிடைத்த பணத்துக்காக மெளனமாக இருந்தது ரஞ்சிதாவின் தவறாயினும், அவரை அவ்வாறு உருவாக்கியவர்கள் யாரென்று கேள்வி எழும்போது, பதிலாக வரக் கூடியவர்கள் பட்டியலும் நீளமாகத்தான் இருக்கும் என்கிறார்கள் விசயமறிந்தவர்கள்.
காரணம் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக நித்தியாந்தரின் தொடரை வெளியிட்டு வந்த குமுதம் இந்தச் செய்தியால் இடிந்துபோயிருக்கிறது எனப் பலரும் நினைத்திருக்க, 'காவியின் கருப்பு வாழ்க்கை' கட்டுரைக்கு விளம்பரம் கொடுக்கிறது. எக்ஸ்குளோசிவ் வீடியோவுக்கு பதிவு செய்ய மடல் அனுப்பி, வாசகர்களுக்கு உண்மை சொல்லப் புறப்பட்டுள்ளது.
சன் டிவி இந்த வீடியோவை எடிட் செய்து வெளியிட்டாலும் கூட, ஒரு ஏரோடிக் டிவி மாதிரி நடந்து கொண்டுள்ளது எனப் பலராலும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. திருவள்ளுவர் நாளில், தமிழகமுதல்வரிடமிருந்து பெரியார் விருதுபெற்றவர் ஆசிரியராக இருக்கும், நக்கீரன் இதழ், இதழியல் தர்மத்தை காற்றில் பறக்கவிட்டு தமிழ்மக்கள் சிந்தனையில் பாலியல் வன்முறையை காட்சி வழியாகவும், வளர்த்தெடுக்க தனது இணையத்தளத்தில் வெளியிட்டு, முழு வீடியோவையும் பார்க்க உடனே சந்தா செலுத்துங்கள் என விளம்பரம் செய்துள்ளது.
இப்போதைக்குத் தலைமறைவாகியுள்ள, சாமியாரின் பரவலான அரசியல் செல்வாக்கு, அவரை அனைத்துப் பாவங்களிலிருந்தும் மீட்டுவிடலாம். அப்படி அவர் மீண்டு வரும்போது, இதே ஊடகங்கள் கொண்டாடவும் கூடும். ஆனால் ரஞ்சிதா..? ஆம்; நான் நித்தியானந்தாவை நேசித்தேன் நெருக்கமாயிருந்தேன், உனக்கென்ன வந்தது ? என ரஞ்சிதா கேட்டால், அதற்கு ஊடகங்களிடமும் பதிலில்லை, யாரிடமும் பதிலி்ல்லை.
tamilmedia
Comments