உலக வல்லரசுகளின் மாற்றத்தை சாதகமாக்கி விடுதலையை விரைவுபடுத்துவோம் -2

களத்தில் போர் ஓய்ந்துவிட்ட நிலையில் பிராந்திய உலக வல்லரசுகளின் நிலைப்பாட்டில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதை கடந்த தொடரில் பார்த்தோம். அந்த மாற்றத்தினை எமக்கு சாதகமானதாக்கி விடுதலையை விரைவுபடுத்த மக்களை வழிநடத்தும் பொறுப்பில் உள்ளவர்கள் செய்யவேண்டியவை என்ன…..?

34r


ஒவ்வொரு புலம் பெயர் நாடுகளிலும் ஒருங்கிணைப்புப் பணியில் இருக்கும் அமைப்புக்களைச் சேர்ந்தவர்களே முதலில் மக்களிடம் செல்லுங்கள். எந்தெந்த வழிகளில் மக்களிடம் செல்ல முடியுமோ அந்த வழிகளில் மக்களை சந்தித்து வரலாற்றுக் கடமையாற்ற வருமாறு அறைகூவல் விடுங்கள்.

அதற்கு முதலில் நீங்கள் தகுதியானவர்களாக இருக்க வேண்டியது அவசியமாகும். அவர் துரோகி இவர் துரோகி என்ற குற்றச்சாட்டுகளை சுமத்தி ஒருவர் மீது ஒருவர் சேறுவாரிப் பூசுவதை விட்டுவிடுங்கள.

எமது இனம் முள்ளிவாய்க்காலில் கொன்றொழிக்கப்பட்டதற்கு முழுமுதற் காரணமானவர்கள் சிங்கள வெறியன் ராசபக்சவும் அவனது பரிவாரங்களும் அதோடு அதற்கு துணைநின்ற நாடுகளும் ஆகும். இவர்களை குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவதை விட்டு விட்டு எமது விடுதலைப் போராட்டத்தை காட்டிக் கொடுத்து முள்ளிவாய்க்காலில் அழித்தொழித்தவர்கள் கே.பி என்றும்…

சர்வதேச நாடுகளின் உதவிக்கரம் நீளும் என்று பொய்யான நம்பிக்கையினை ஏற்படுத்தி தேசியத்தலைவரை முள்ளிவாய்க்கால்வரை அமெரிக்கா கடற்படையை எதிர்பார்க்க வைத்து துரோகம் இழைத்துவிட்டார் உருதிதிரகுமார் என்றும்….

புலம் பெயர் தமிழர்களை காலம் தாழ்த்தி செயற்படுத்தி துரோகம் இழைத்துவிட்டார் கஸ்ரோ என்றும்…

இந்திய பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரசு தி.மு.க. தோல்வியுற்று மத்தியிலும் மாநிலத்திலும் எமக்கு சாதகமான அரசு அமையும் என தவறான நம்பிக்கையினை வழங்கி தேசியத்தலைவரை மே-16 வரை காத்திருக்க வைத்து கழுத்தறுத்து விட்டனர் வை.கோ, பழ.நெருமாறன் போன்றவர்கள் என்றும்…. எம்மவர்கள் மீதே குற்றப்பத்திரிகை வாசிப்பதை முதலில் நிறுத்த வேண்டும்.

நீங்கள் சொல்லும் இவர்கள் வழங்கும் தகவல்களையும் வாக்குறுதிகளையும் நம்பிக்கைகளையும் கிளிப் பிள்ளை போன்று அப்படியே ஏற்று செயற்படுவதற்கு தேசியத் தலைவர் ஒன்றும் விவரம் தெரியாதவர் அல்ல.


முள்ளிவாய்க்காலில் வைத்து ஆயுதங்களை மௌனிக்க செய்த முடிவு வருங்காலம் மெச்சும் இராச தந்திர முடிவாக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்திற்கு இடமில்லை.(அதனை தொடர்ந்து வரும் ஈழ அதிர்வுகளில் விரிவாக பார்ப்போம்)

எம்மவர்கள் மீது வெறும் ஊகத்தின் அடிப்படையில் வீண்பழிசுமத்தி குற்றம் சாட்டுவதை முதல் வேலையாக எல்லோரும் கைவிட வேண்டும். அப்படி சாத்தியப் பட்டால்தான் எமது விடுதலையை விரைவுபடுத்தக் கூடிய அடுத்தகட்ட போராட்ட களத்திற்கு நாம் வலுவானவர்களாக உருவாக முடியும்.

இன்று எமது மக்களிடம் இருக்கும் சந்தேகமே யார் சொல்வதை நம்புவது யாரை நம்புவது என்பதுதான். எதிரிக்கு வாய்ப்பான இந்த எமக்குள் கூர்பார்க்கும் கழுத்தறுக்கும் வேலைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு நாம் எல்லோரும் ஒன்றுபட்டு மக்களிடம் சென்றால்தான் மக்களை களத்தில் இறக்கி வழிநடத்த முடியும்.

இந்தப் போராட்டம் சர்வதேசத்தை உலுக்க வேண்டும். எல்லோருடனும் கலந்துரையாடி ஒரு நாளைக் குறித்துக் கொள்ளுங்கள். தமிழர் உலகின் எந்த மூலையில் வாழ்ந்தாலும் எந்தக் கோடியில் வளர்ந்தாலும் அந்த குறித்த தினத்தில் அந்தந்த நாடுகளின் தலைநகரங்களை முற்றுகை இடுவோம்.

ஒருநாட்டில் பகலாகவும் இன்னொரு நாட்டில் இரவாகவும் இருந்தால் கூட குறித்த நேரத்தில் ஒன்றுபட்ட எழுச்சியாக உலக நாடுகளின் தலைநகரங்களில் ஒன்றுபட்டு போராடுவோம். எமக்கு நீதி கிடைக்கும் வரை தொடர்ந்து முற்றுகைக்குள் உலகநாடுகளின் தலைநகரங்களை வைத்திருப்போம். மக்கள் எழுச்சிக்கு முன் எந்த வல்லரசாக இருந்தாலும் தலைவணங்கியே ஆக வேண்டும். இதுவே கடந்த கால வரலாறு எமக்கு கற்றுத்தரும் பாடமாகும்.

அதைவிடுத்து சிங்களத்துடன் இணைந்துநிற்கும் நாடுகளிற்கு எமது போராட்டத்தின் நியாயங்கள் தெரியவில்லை அதனால் அவர்களுடன் நல்லுறவினை வளர்க்க வேண்டும் என்று சிலர் போதிப்பது சரியாக இருக்காது.

சிங்களத்திற்கு எதிராக நிற்கும் நாடுகள் எமது தரப்பு நியாயம் உணர்ந்து கொண்டதாகவும் சிங்களத்தை ஆதரிக்கும் நாடுகளிற்கு தெரியவில்லை என்பது போலல்லவா இவர்களின் கருத்து உள்ளது. எல்லா நாட்டிற்கும் எமது தரப்பு நியாயங்கள் நன்றாகவே தெரியும். பூகோள அரசியலைக் கடந்து நியாய தர்மங்கள் எடுபடாது என்பதே உண்மை நிலையாகும்.

கடந்த ஆண்டு எமது மக்களை கொன்று குவித்த கோர யுத்தம் நடைபெற்ற போதும் சரி போரின் பின்னர் உரிய தீர்வினை தமிழர்களுக்கு வழங்குவேன் என வாக்குறுதியளித்தும் இன்றுவரை ஏமாற்றிவரும் ராசபக்சவின் திமிர்த்தனம் அப்பட்டமாக வெளிப்பட்டுவரும் இப்போதும் சரி சிங்களத்திற்கு ஆதரவாக அணிவகுத்து நின்ற நாடுகள் பூகோள அரசியலை முன்னிலைப் படுத்தியே சிங்களத்துடன் கைகோர்த்து வருகின்றன.

தெற்காசியப் பிராந்தியத்தில் பிராந்திய உலக வல்லரசுகள் காலுன்றுவதற்கு தற்போது உள்ள ஒரேகளம் சிறிலங்காதான். அதில் அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் எவ்விதத்திலும் காலூன்றுவதை பிராந்திய வல்லரசுகள் விரும்பாததன் வெளிப்பாடே சிங்களத்துடனான நட்பு நிலையாகும்.

3eபுரட்சியில் பூத்த கியூபா அமெரிக்க வல்லரசுப் படைகளை சிதறடித்து வீரப்போர் புரிந்து விடுதலையான வியட்னம் போன்ற அன்நிய ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பில் இருந்து தம்மை விடுவித்துக் கொண்ட நாடுகளும் அரபுதேசத்து நாடுகளும் சீனா ரைசியா இந்தியா போன்ற பிராந்திய தேசங்களும் சிங்களத்துடன் அணி சேர்ந்து நிற்பதே அமெரிக்க உள்ளிட்ட மேற்குலக நாடுகளை தெற்காசியப்பிராந்தியத்தில் காலூன்ற விடக்கூடாது என்பதற்காகத்தான்.

அதனால்தான் மேற்குலக அனுசரணையுடன் மேற்கொள்ளப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தை சீர்குலைப்பதற்கு பிராந்திய வல்லரசுகளின் உளவுத்துறையினர் சிங்களத்துடன் கூட்டுச்சேர்ந்து சதி செய்தன்.

முக்கியமாக தமிழீழ விடுதலைப்புலிகளின் கிழக்கு பகுதிதலைவராகவும் தலைவர் நம்பிய போர்த்தளபதியாகவும் விளங்கிய கருணாவின் பிரிவிற்கும் இன்றைய துரோக நிலைக்கும் இந்திய உளவுத்துறையான ‘றோ’ வே காரணமாக இருப்பது யாவரும் அறிந்ததே.

பூகோள அரசியல் களம் இவ்வாறு இருக்கும் போது தேசியத்தலைமை கம்யூனிச hடான சீனத்துடன் நட்புறவை வளர்க்கவில்லை… அதனால் தான் சீனா எமக்கு எதிரான நிலைப்பாடு எடுத்ததாகவும் இனி அந்தத் தவறை செய்யாது நாமாவது சீனாவுடன் நட்புறவை வளர்த்து கொள்ள வேண்டும் என அறிவுரை சொல்பவர்கள் சற்று சிந்தித்து பார்க்க வேண்டும்.

அதற்காக முற்றுமுழுதாக யாருடனும் நட்புறவு கொள்ள வேண்டாம் என்று கூறவில்லை. அந்த நட்புறவின் மூலமாக மட்டுமே எமது நியாயத்தினை புரிந்து கொண்டு தமிழீழத்தை தங்கத்தாம்பாளத்தில் வைத்து இவர்கள் தூக்கித்தரப் போவதில்லை என்ற யதார்த நிலையினை புரிந்து கொள்ள வேண்டும்.

நீதி நியாயத்தினை புரிந்து கொண்டு அதனடிப்படையில் உலக நாடுகள் இயங்குமாக இருந்தால் எதற்கு இத்தனை ஆண்டுகால போராட்டம். இலட்சக்கணக்கிலான உயிரிழப்புக்களும் அவலங்களும். அன்றே வெள்ளைக் கொடியை ஒருகையிலும் அமைதிப் புறாவினை இன்நொரு கையிலும் ஏந்தியவாறு அந்த நாடுகளின் கதவுகளை தட்டியிருக்கலாமே.

அவ்வாறு அமைதிவழியில் எமது உரிமைகளை கேட்டவர்களுக்கு அடி உதையும் கிழிந்து தொங்கிய சதைத்துண்டங்களும் உயிரிழப்புக்களும்தானே பரிசாக கிடைத்தது. முற்று முழுதாக நீதி நியாயத்தின் அடிப்படையில் எந்த நாடுகளும் உதயமாகியதாக நாம் அறியவில்லை. புரட்சியில் பூத்த நாடுகள்தானே அனேகம் உள்ளன.

ஆகவே இந்த நட்புறவு பாலத்தை கட்டுவதை விட்டுவிட்டு சர்வதேசத்தை உலுக்கியெடுக்கும் வகையில் எமது அறப்போராட்டததை உடனே ஆரம்பிப்போம். அதற்கு நிச்சயமாக இந்த உலக நாடுகள் பதில் சொல்லியே ஆகவேண்டும்.

பிரித்தாணியாவில் உண்ணாவிரதம் இருந்து எமது மக்களை காப்பதற்கு அறப்போர் புரிந்த பரமேசுவரனின் தியாகத்தை சிங்களத்தின் ஏவலின் பெயரால் கொச்சைப்படுத்திய பிரித்தானிய பத்திரிகைகளுக்கு எதிராக காலம் தாழ்த்தியாவது பிரித்தானிய உயர் நீதிமன்றம் தீர்பளித்துள்ளது சிறந்த முன் உதாரணமாகும்.

இயற்கையும் எமது தர்மயுத்தத்திற்கு துணை புரிகின்றது. கடந்த ஆண்டு எமது மக்களை விரட்டி விரட்டி கொன்று குவித்த சிங்களத்திற்கு ஒத்துழைப்பு வழங்கிய நாடுகளை இயற்கை தண்டித்து வருகின்றது.

முள்ளிவாய்க்காலில் எமது மக்கள் சிந்திய கண்ணீரும் செந்நீரும் கன மழையாக பொழிந்து சிறிலங்கா சீனா இந்தியா பாக்கித்தான் போன்ற நாடுகளை வெள்ளக்காடாக்கி வருகையில் ஆயிரக்கணக்கிலான எமது மக்களின் உடல்கள் வெந்து தணலான வெப்பம் ரைசியாவையும் ஜப்பானையும் வரலாறு காணாத வெயிலாக சுட்டெரிக்கின்றது.

கடந்த மே மாதம் வெற்றி விழா கொண்டாட தயாரான சிங்களத்தின் கனவை தவிடுபொடியாக்கியது முதல் இன்று சீனா பாகித்தான் இந்தியா போன்ற நாடுகளையும் அடை மழை பொழிந்து வெள்ளக்காடாக்கி வருகின்றது.

கடந்த மே 15,16,17,18 ஆகிய தினங்களில் கொழும்பில் கொட்டித் தீர்த்த மழைக்கு ஆறு இலட்சத்திற்கு மேற்பட்ட சிங்களர்கள் இடம் பெயர்ந்திருந்தனர். இதன் காரணமாக தமிழின அழிப்பினை வெற்றி விழாவாக கொண்டாடி தனது இன விரோதத்தை வெளிப்படுத்த முற்பட்ட சிங்களத்தின் கனவு தவிடுபொடியானது.

வரலாறு காணாத வகையில் சீனாவில் ஏற்பட்ட மழை வெள்ளப்பெருக்கால் சுமார் ஒன்றரைக் கோடி சீனர்கள் இடம் பெயர்ந்துள்ளதுடன் பல்லாயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். இந்த தகவல்களை சீனா இரும்புத் திரை போட்டு மறைத்துவைத்தாலும் மெல்ல வெளியே கசிய ஆரம்பித்துவிட்டது.

என்பது ஆண்டுகளிற்கு பின்னர் பாக்கித்தானை மழை வெள்ளம் சின்னாபின்னமாக்கி வருகின்றது. கடந்த இரண்டு வாரங்களாக பெய்த கன மழையால் இரண்டாயிரம் வரையான பாக்கித்தானியர் மரணமடைந்துள்ளதுடன் ஐம்பது இலட்சத்திற்கு மேற்பட்டவர்கள் வீடிழந்து இடம் பெயர்ந்துள்ளனர். பல்லாயிரக்கணக்கிலான வீடுகள் கட்டடங்கள் மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளது.

இதனைவிட தொடர்ந்து பெய்து வரும் கனமழையினால் ஏற்படும் கட்டுபாடற்ற வெள்ளப் பெருக்கினால் முக்கிய நீர்த்தேக்கங்கள் உடைப்பெடுக்கும் அபாயம் உள்ளதாக அஞ்சப்படுகின்றது. அவ்வாறு அனைக்கட்டுக்கள் உடைப்பெடுக்குமானால் இன்னும் பலமடங்கு உயிர்ச்சேதமும் பாதிப்பும் ஏற்படும். காட்டாற்று வெள்ளமென ஓடிவரும் வெள்ள நீரால் பலஇலட்சம் பரப்பளவு விவசாய நிலங்கள் மூழ்கடிக்கப்பட்டுள்ளதுடன் அங்கு பயிரிடப்பட்டிருந்த பயிர்களும் அழிவடைந்துள்ளது.

அந்த மழை இந்தியாவின் பல மாநிலங்களையும் வெள்ளக்காடாக்கி வருகின்றது. இதனால் பேரழிவு ஏற்பட்டுள்ளது. கடந்த சில தினங்களிற்கு முன்னர் திடீர் என்று கொட்டித் தீர்த மழையால் இமயமலை பனிப்பாறைகள் கரைந்து கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு காசுமீர் வெள்ளகாடாகியுள்ளது.

முதல் நாளில் நூறிற்கு மேற்பட்டவர்கள் உயிரிழந்ததுடன் பல்லாயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். முக்கிய பாலங்கள் உடைந்துள்ளதுடன் தொலைத் தொடர்பு கோபுரங்கள் சேதமடைந்துள்ளமையால் தகவல் தொடர்பு அற்று தத்தளித்துவருகின்றது காசுமீரம். மழை தொடர்ந்து தனது கைவரிசையினை காட்டி வருவதனால் காசுமீரம் உள்ளிட்ட இந்தியாவின் ஏனைய பகுதிகளிலும் பேரழிவு காத்திருக்கின்றது.

தமிழர்கள் சிந்திய கண்ணீர் அடை மழையாக பொழிந்து மேற்சொன்ன நாடுகளை நிர்மூலமாக்கிவருகையில் வெந்து தணலான தமிழர்களது உடல்களின் வெப்பம் சுட்டெரிக்கும் வெயிலாக ரைசியா ஜப்பானை பதம் பார்த்து வருகின்றது.

ரைசியாவில் இரண்டு நாட்களில் 774 தீ விபத்து சம்பவங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் பலர் பலியாகியுள்ளனர். கடுமையான வெய்யில் வறட்சி தீ விபத்து சம்பவங்களால் இரண்டு இலட்சத்து நாற்பதாயிரத்திற்கு மேற்பட்ட ரசிய விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். காடுகள் தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கின்றது. பல இலட்சம் பரப்பளவு விவசாய நிலங்கள் தீக்கு இரையாகி இலட்சக்கணக்கிலான விவசாயிகளின் வாழ்வை நாசமாக்கியுள்ளது.

ஜப்பானில் கடந்த மே31 முதல் ஓகஸ்ட் 1 வரையான இரண்டு மாத காலப்பகுதியல் கடும் வெயிலுக்கு 98 ஜப்பானியர்கள் பலியாகியிருப்பதுடன் 21ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் கடும் வெயிலின் தாக்கத்தினால் சிகிச்சைக்காக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் உயிரிழப்பு அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகின்றது.

தமிழன் சிந்திய கண்ணீரும் செந்நீரும் கடும் மழையாகவும் வெயிலாகவும் அதர்மத்தின் வழி நின்று தமிழினப்படுகொலை செய்த சிங்களத்திற்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் ஒத்துழைப்பினை வழங்கிய நாடுகளில் வரலாறுகாணாத பேரழிவுகளை ஏற்படுத்திவருவது உலக நாடுகள் எம்மை கைவிட்டாலும் இயற்கை நம்மை கைவிடாது என்ற நம்பிக்கையினை தந்துள்ளதுடன் எமது விடுதலைப் போராட்டம் தர்மத்தி; வழியில் நடக்கும் தர்மயுத்தம் என்பதனை உறுதிப்படுத்தியுள்ளது.

சக்திவாய்ந்த இயற்கையினை நண்பனாக கொண்டிருந்த தேசியத் தலைவரின் வழிநின்று அவரது வழிகாட்டுதலில் தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்று அந்த இயற்கையை சாட்சியாக வைத்து எமது அறப் போராட்டத்தை தொடங்குவோம். தமிழீழம் காண்போம்.

“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”

ஈழ அதிர்வுகள் தொடரும்….

ஈழதேசம் ம.செந்தமிழ்

Comments