ஊடகர்களுக்கு இராணுவத்தினர் சுடர் ஏற்றியமை பெருமைக்குரிய விடயம் என்கிறார் சரவணபவன்! முரண்பட்ட கருத்துக்களுடன் உதயனும் நிர்வாகியும் (ஒலி வடிவம்)
உதயனின் வெள்ளிவிழாக் கொண்டாட்டமும் அதன் பின்னர் அது எதிர்கொண்ட ஊடக எதிர்ப்பலைகளும் அணைந்துவிடக்கூடாது என்று கருதுவதாலோ என்னவோ உதயனே அதனைப் புதுப்பித்துக் கொள்ள எத்தனிப்பதாக எண்ணத் தோன்றும் வகையில் சம்பவங்கள் நிகழ்ந்தேறியே வருகின்றன.
உதயனின் வெள்ளிவிழாக் கொண்டாட்ட நிகழ்விற்கு கௌரவ விருந்தினராக யாழ்.மாவட்ட இராணுவத் தளபதி அழைக்கப்பட்டிருந்த போதிலும் கேணல் பெரேரா எனப்படுகின்ற சிவில் நிர்வாகத்திற்குப் பொறுப்பான இராணுவ அதிகாரி சமூகம் கொடுத்து அவர் உயிரிழந்த ஊடர்களுக்கான முதற் சுடரை ஏற்றியமை தொடர்பில் பல இணையத்தளங்கள் சுட்டிக்காட்டி இருந்தன.
ஊடக தர்மம் கருதி நடந்த நிகழ்வு தொடர்பில் கௌரவமான மொழி நடையில் நாம் எமது கருத்துக்களை எழுதியிருந்தோம். இந்த விடயங்கள் நிகழ்ந்தேறியிருந்தமை பேரன்னை வேலுப்பிள்ளை பார்வதி அம்மாள் மறைந்தநாள் அன்று என்பதால் அதனைச் சுட்டிக்காட்ட வேண்டிய தேவை தேசியத்தினை உண்மையாக நேசிக்கின்ற ஊடகங்களுக்கு இருந்தமையால் அந்த விடயத்தினை இருபத்தைந்திற்கும் மேற்பட்ட இணையத்தளங்களும் புலம்பெயர் ஊடகங்களும் வெளிப்படுத்தியிருந்தன.
சொல்லப்பட்ட பாங்கு – கடந்த காலத்தில் உதயன் செய்தவற்றை எல்லாம் சுட்டிக்காட்டி இந்தத் தவறை ஏன் செய்தது? என்ற தொனிப்பொருளியேயே அமைந்திருந்தது. இதனை அடுத்து உதயன் நாளிதழில் இருந்து எமது இணையம் உட்பட்ட ஊடகங்களுக்கு அறிக்கை ஒன்று அனுப்பிவைக்கப்பட்டிருந்தது. அந்த அறிக்கையில் தவிர்க்க முடியாத நிலையிலேயே நிகழ்வினை ஒத்திவைக்க முடியவில்லை என்ற சாரப்பட எழுதப்பட்டிருந்தது. குறித்த அறிக்கை ஊடாக வெள்ளிவிழாவில் நடைபெற்ற சம்பவத்தினை நியாயப்படுத்த முற்படாமல் தவறைச் சுட்டிக்காட்டியமைக்கு நன்றியைக்கூடத் தெரிவித்திருந்தது.
ஆனால் அதேவேகத்தில் அதன் நிர்வாகப் பணிப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திரு ஈ.சரவணபவன் மாறுப்பட்ட கருத்தினை புலம்பெயர் தொலைக்காட்சி ஊடகமான ஜீரிவிக்கு வழங்கிய செவ்வியில் சம்பவத்தினை வெளிப்படுத்தியவர்களைக் குற்றவாளிகளாகக் காட்ட முற்படுவதை அவதானிக்க முடிகிறது.
நிகழ்விற்கு ஒரே ஒரு இராணுவத்தினரே வந்திருந்ததாகவும் அவர் நிகழ்வில் சுடர் ஏற்றுவதை மட்டும் ஏன் பெரிய விடயமாக வெளியிட்டார்கள் என்று சிறுபிள்ளைத் தனமாக அவர் கேள்வி எழுப்பியிருப்பது நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கேட்கும் கேள்விதானா? என்று எண்ணத் தோன்றுகின்றது.
இதனைவிடவும் நிகழ்விற்கு மூத்த ஊடகர்கள் அழைக்கப்பட்டு அவர்களும் இராணுவ அதிகாரியால் கௌரவிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விருது பெற்ற எவரும் கவலை வெளியிடவில்லை என்றும் தன்னுடன் இணைந்து புகைப்படம் பிடிக்கவே ஆசைப்பட்டார்கள் என்றும் தெரிவித்துள்ள அவர் தாம் செய்த குற்றத்தினை நியாயப்படுத்த மூத்த ஊடகர்களையும் துணைக்கு அழைத்திருப்பதனை எந்த வகைக்குள் அடக்குவது?
இராணுவ அதிகாரி அழைக்கப்பட்டமை தொடர்பில் பெருமைப்பட வேண்டும் என்றும், கொன்றவர்களைக் கொண்டே சுடர் ஏற்றியிருப்பது பெருமைக்குரியவிடயம் என்றும் தமது ஊடர்கள் தமக்குத் தெரிவித்ததாகவும் அவர் கூறிப் புகழாங்கிதம் அடைந்திருக்கின்றார்.
ஆக, வெள்ளிவிழாவில் நடந்த சம்பவங்களில் எந்தத் தவறும் இல்லை என்றும் அதனை எழுதியவர்களே தவறிழைத்திருக்கிறார்கள் என்றும் மீண்டும் மீண்டும் வலியுறுத்திய நாடாளுமன்ற உறுப்பினரும் உதயன் நிர்வாகப் பணிப்பாளருமான ஈ.சரவணபவன் வழங்கிய செவ்வியினையும், அதற்கு நேர்மாறாக ஊடகங்களுக்கு அனுப்பப்பட்ட அறிக்கையினையும் வாசகர்கள் ஒப்பீடு செய்து கொள்வதற்காக இரண்டு விடயங்களையும் இணைப்புச் செய்கின்றோம்.
உண்மை உண்மையானது! பொய் பொய்யானது! உண்மை பொய்யாகாது! பொய் உண்மையாகாது!
சரிதம் ஆசியர் பீடம்.

- யாழ் உதயன் பத்திரிக்கையின் தேசவிரோதம் அம்பலம்
- ஊடக ஜாம்பவான்’ வித்தியாதரனுக்கு ஓர் திறந்தமடல்
- பச்சோந்தி வித்தியாதரன் சொல்ல மறந்த கதை
- வடமாகாண முதலமைச்சர் தேர்தலில் ஊடகவியலாளர் வித்தியாதரன் ?
- யாழ் இணைய போக்கிரித்தனமும் வித்தியாதரனும்
- உதயன் சரவணபவான் மோசடிகள் அம்பலம்: உழியர்கள் அறிக்கை
- கூலிக்கு மாரடிக்கும் யாழ் உதயன் பத்திரிக்கை
Comments