வைகோ மூன்றாம் அணி வாய்ப்பை பயன்படுத்த வேண்டும்

இப்போது ஒட்டுமொத்த தமிழக அரசியல் கட்சிகளுமே வைகோ பக்கம் பார்வையை திருப்பி உள்ளன. வைகோவின் முடிவை பொருத்து தான் தமிழகத்தில் ஆட்சிமாற்றம் நிர்ணயிக்கப்பட உள்ளது.

அதிமுக அணியில் இருந்து விலகி தனித்து போட்டியிட்டால் நிச்சயம் இழப்பு அதிமுகவுக்கு தான். எதாவது ஒரு பலமான கட்சி மூன்றாவது அணியாக போட்டியிடாதா என்ற பெரும் எதிர்பார்ப்பில் காத்திருக்கிறது திமுக.

அதிமுக அணியில் இருந்து மதிமுக பிரிவதால் 1. எதிரணி பலவீனம் அடையும், 2. ஆளும்கட்சிக்கு எதிரான வாக்குகள் சிதறும். 3. ஈழம் ஆதரவு வாக்குகள் அதிமுக அணிக்கு போகாது. 4. வைகோவின் எதிர்மறை பிரச்சாரம் அதிமுகவை பலவீனப்படுத்தும். 5. தேர்தலுக்கு பின்னர் திமுக பக்கம் மதிமுகவை இழுத்துக்கொள்ள ஒரு வாய்ப்பு. இப்படி 5 வித பலனை அனுபவிக்க திமுக காத்திருக்கிறது.

அதிமுக அணியில் தற்போது வாக்குவங்கி அடிப்படையில் வெற்றிக்கான போதிய பலம் உள்ளது. ஆனால் பிரச்சாரம் மூலம் கிடைக்கும் கடைசிகட்ட ஆதரவு மற்றும் வாக்கு சிதறல் வெற்றியை வெகுவாகவே பாதித்துவிடும்.

ஈழம் ஆதரவு அமைப்புகள் மற்றும் வாய்ப்பு கிடைக்காத பலகட்சி அதிர்ப்தி வேட்பாளர்களை ஒன்றினைத்தால் அது நிச்சயம் அதிமுகவுக்கு மிகப்பெரிய அடியாக அமையும்.

திமுக அணியை பொருத்தவரை அவர்கள் தெளிவான வாக்குவங்கியை குறிவைத்துள்ளார்கள். திமுகவுக்கு தற்போதைய ஒரே தேவை மூன்றாம் அணி. அது வைகோ மூலம் கிடைத்துவிட்டால் திமுகவின் வெற்றி உறுதியாக்கப்பட்டுவிடும்.

வட மாவட்டங்களில் நல்ல பலத்துடன் களம் இறங்குகிறது திமுக. தென் மாவட்டங்களிலும் காங்கிரசு உதவியுடன் கொஞ்சம் கரை காண்கிறது. ஆனால் மேற்கு மற்றும் கடலோர பகுதிகளில் திமுக பலவீனமாக உள்ளது.

கடலோர பகுதிகளில் அதிகமாக உள்ள சிறுபான்மையினர் வாக்கு செயலலிதாவுக்கு வராது. அதே நேரத்தில் வைகோ மூன்றாம் அணியாக போட்டியிடும் போது மீனவர் பிரச்சனை காரணமாக திமுகவுக்கம் போய்சேராது.

விருதுநகர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் மதிமுக பலமாக உள்ளது. அதே போல கடலோர மாவட்டங்களிலும் கொஞ்சம் செல்வாக்கு கூடியுள்ளது. இங்கு மட்டும் கவனம் செலுத்தி போட்டியிட்டால் மதிமுகவுக்கு 6 தொகுதிகள் வரை வெற்றிவாய்ப்பு உறுதியாக உள்ளது.

அதிமுக அணியில் 10 தொகுதிகளில் போட்டியிடுவதை விட மூன்றாம் அணியாக தனித்து போட்டியிடுவது மதிமுகவுக்கு கூடுதல் பலம்.

நடுநிலை வாக்காளர்கள், செயலலிதா&கருணாநிதி எதிர்ப்பு, ஈழம் ஆதரவு வாக்குகளுடன் மீண்டும் ஒருமுறை மதிமுக தனது 10 % வாக்குவங்கியை உறுதிசெய்யலாம்.

தற்போது செயலலிதாவை விட்டு பிரிவதால், கருணாநிதிக்கு பின்னரான திமுக விரிசல் மதிமுகவுக்கு நல்ல பலனை தரும்.

http://tamilmalarnews.blogspot.com

விஜயகா‌ந்‌த் ம‌ட்டுமே போது‌ம்.. ஜெயல‌லிதா‌வி‌ன் க‌ணி‌ப்பு

Comments