தமிழ் இணைய சைபர் தாக்குதல் நா.க.அரசின் கண்துடைப்பு மறுப்பறிக்கை நாடகம் ?

“தேசிய ஊடகங்கள் மீதான தாக்குதலில் நாடுகடந்த அரசின் உருத்திரகுமாரன் அணி?”- EelamEnews
March 8th, 2011 அன்று வெளியிட்டது

வழக்கு பதிவு செய்துள்ளதாக திரு. தயாபரன் எந்தவிடத்திலும் குறிப்பிடவில்லை:கோபி

ஈழம் ஈ நியூஸ் March 10th, 2011 அன்று வெளியிட்டது

இதன் பிண்ணனியில் 11 March, 2011 நா.க.அரசு ஒரு கண்துடைப்பு மறுப்பு அறிக்கையை வெளியிட்டிருப்பதாகவே படுகின்றது

நாடு கடந்த அரசின் ஊடகத்துறை அமைச்சின் அறிக்கை !

உலகப் பரப்பெங்கும் வாழும் தமிழர்களிடையே பலமிக்கதொரு தொடர்பாடலையும், ஒன்றிணைவையும் மேற்கொள்கின்ற தமிழ் இணைய ஊடகங்கள் மீது சைபர் தாக்குதல்கள் இடம்பெற்றுவருகின்றன. லங்காசிறி - தமிழ்வின் - பொங்குதமிழ் - அதிர்வு - உட்பட பல தமிழ் இணையங்கள் மீது சைபர் தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றமையை அவதானிக்க கூடியதாக உள்ளது.

சில வாரங்களுக்கு முன்னர், தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் மற்றும் அரசாங்கத்திற்கு எதிரான சக்திகளிடம் இருந்து சிறிலங்கா தனது இணையவெளியைப் பாதுகாப்பதற்கு, இணைய சிப்பாய்கள் தேவைப்படுவதாக, சிறிலங்கா படைத்தளபதி ஜகத் ஜயசூரிய அவர்கள், கொழும்பில் இடம்பபெற்ற இணையவெளி யுத்தம் தொடர்பான கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றும் போது கூறிய கூற்றும் சிறீலங்கா அரசை விமர்சிக்கும் இணையத்தளங்களை தாக்கி அழிப்பதற்கு சீனாவின் சைபர் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவதுடன் சீனாவின் இரண்டு சைபர் தொழில்நுட்ப நிபுணர்கள் நிரந்தரமாக பணியாற்றி வருவதாக வெளியாகிய செய்திகளும் தமிழ் இணையத்தளங்கள் மீதான சைபர் தாக்குதலின் பின்னால் சிறிலங்கா அரசு இருப்பதற்கான போதுமான ஆதார கூற்றுக்களாக உள்ளன.

சீனா மற்றும் றஸ்யா ஆகிய நாடுகளில் இருந்து நன்கு திட்டமிட்ட முறையில் இந்த நாசகார செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, தொழில்நுட்ப வல்லுனர்கள் முதல் கட்டமாக கண்டறிந்துள்ளனர். இத்தகைய சைபர் தாக்குதல்கள் குறித்து ஈழவிடுதலைக்கான கருத்தியலை தாங்கி நிற்கின்ற தமிழ் இணைய ஊடகங்களை விழிப்பாக இருக்க வேண்டுகிறோம்.

இத்தகைய தாக்குல்களில் இருந்து தற்காத்துக் கொள்வதற்கான பாதுகாப்பு பொறிமுறைகள் குறித்த தொழில்நுட்ப வல்லுனர்களுடன் உரையாடி வருகின்றோம்.

இலங்கைத்தீவில் தமிழர்களுக்கான கருத்தியல் வெளி முடக்கப்பட்டுள்ள நிலையில், இலங்கைத்தீவுக்கு வெளியே, பரந்து வாழும் தமிழ்சமூகத்தின் ஒருங்கிணைவையும், அவர்களின் கருத்தியல் தளத்தையும் முடக்குவதற்குமான நாசகார நடவடிக்கையாகவே இதனை நாம் கருதுகின்றோம்.

தமிழ் ஊடகங்களிள் ஒருங்கிணைவின் வழியே இத்தகைய நாசகார திட்டங்களை எதிர்கொண்டு ஈழத்தமிழ் கருத்தியல் தளத்தை நாடுகள் கடந்து நிறுவ பாடுபடுவோம்.

தகவல்துறை அமைச்சகம்

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
--------------------------

லங்காசிறி - தமிழ்வின் - பொங்குதமிழ் - அதிர்வு - உட்பட பல தமிழ் இணையங்கள் மீது சைபர் தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றமையை அவதானிக்க கூடியதாக உள்ளது.

லங்காசிறி - தமிழ்வின் - பொங்குதமிழ் இணையங்கள் மீது எப்போது தாக்குதல்கள் சைபர் தாக்குதல் இடம்பெற்றது அப்படி நடந்ததாக இதுவரை அறியப்படவில்லை அப்படி குறிப்பிடப்பட்டிருக்கின்றது

ஆனால் ஈழம் ஈ நியூஸ் இணையத்தை வேண்டுமென்றே குறிப்பிடவில்லை என்று அப்பட்டமாகத் தெரிகின்றது

லங்காசிறி தமிழ்வின் கடந்த இரண்டு நாளாக வேலை செய்யவில்லை

தமிழ்த்தேசிய ஊடகங்கள் வரிசையில் தாக்கப்பட்டுக் கொண்டிருக்க தமது தாக்கப்படவில்லை என்றால் சந்தேகம் ஏற்படும்

என்று திட்டமிட்ட நாடகமாகவும் இருக்கலாம் நிறுத்தி வைத்து விட்டு சைபர் தாக்குதல் என்று புருடாவிடுகின்றார்கள்

மற்றய இணையங்கள் தாக்கப்பட்டு பல நாட்கள் மெளனமாக இருந்த நா.க.அரசு

தமக்கு ஆதரவு அளிக்கும் ஊடகங்களிற்கு உடனே கண்டன அறிக்கை வெளியிடுவது சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.

இது நா.க. அரசின் பகை உணர்ச்சியை, பாகுபாட்டை நேரடியாகக் காட்டிக் கொண்டுக்கின்றது

தமிழ்வின் குடும்ப இணையங்களோடு முட்டி மோதிக்கொண்டிருந்த அதிர்வு தமது பெயரும் இடம்பெற்று விட்டதால் இதை அப்படியே பிரசுரித்திருக்கின்றது அதன் பின்னணி பற்றி அலட்டிக் கொள்ளவில்லை

இது தான் தேசிய ஊடகங்கள் என்னும் வேசம் என்பதா ?


ஈழம் ஈ நியூசின் முழுமையான செய்திக்கு

ஈழம்ஈநியூஸ் கருத்து சுதந்திரத்திற்கும் மாற்றுக்கருத்துக்களுக்கும் என்றும் மதிப்பளிக்கிறது. இந்த மறுப்பு மட்டுமல்ல சம்மந்தப்பட்ட நாடுகடந்த அரசு எழுதி அனுப்பினாலும் அதையும் பிரசுரம் செய்வோம். தொடர்ந்து உரையாடுவதனூடாகவே உண்மையை அறிய முடியும் என்பதில் நாம் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளோம்.

பாதிக்கப்பட்டவர்களாக கொலை அச்சுறுத்தலுக்குள்ளானவர்களாக அந்த பதிவிலுள்ள எமது நிலைப்பாட்டிலிருந்து நாம் என்றும் பின்வாங்கப்போவதில்லை. இது பிடிவாதம் இல்லை. இது எமது தார்மீக நியாhயம். அச்சுறுத்தலில்லாத ஒரு ஊடகவெளியை உருவாக்க தனித்து போராடும் ஒரு ஊடகத்தின் அறச்சீற்றம். அரசியல்வாதிகள் தமது வாய்க்கு வந்ததை பொதுவெளியில் பேசி ஒரு ஊடகத்தின் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்குவதை நாம் அனுமதிக்க முடியாது.

அன்றைய சந்திப்பில் கலந்துகொண்ட பலர் அந்த அமைச்சரின் பேச்சை சுட்டிக்காட்டியதன் பின்பே நாம் எமது எமது கண்டனத்தை வெளியிட்டோம். திரு கோபி அவர்களின் கடிதத்திலும் அந்த அமைச்சர் பேசிய பேச்சு குறித்து பெரிய வேறுபாடுகள் இருப்பதுபோல் தெரியவில்லை. எமது ஆசிரியர் குழுவினர் கலந்துகொள்ளாத – அந்த சந்திப்பு தொடர்பான ஒலி- ஒளிப்பதிவுகளை பார்வையிடாமல் நாம் தொடாந்து விவாதிக்க முயடிhது. எனவே இந்த சந்திப்பு தொடர்பான முழுமையான ஆவணங்களை சர்வதேச செய்தியாளர் ஒன்றியம் தந்துதவும் என்று நம்புகிறோம். அதன் பின்பு இதற்கான எதிர்வினையும் பிரித்தானிய காவல்துறையில் இது தொடர்பான சட்ட நடவடிக்ககைகளும் மேற்கொள்ளப்படும்.

நன்றி

ஈழம்ஈநியூஸ் ஆசரியர்குழு
------------------------------


ஆசிரியர்.
ஈழம் ஈநியுஸ்.கொம்

மேற்படி தலைப்பிலான கட்டுரையில், சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றிய உறுப்பினர்களும் நாடுகடந்த அரசாங்கத்திற்கு தெரிவான அங்கத்தவர்களுக்கும் இடையிலான சந்திப்புப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இச்சந்திப்பில் கலந்து கொண்டவன் எனற வகையிலும், சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியத்தின் பணிப்பாளர்களில் ஒருவன் என்ற வகையில் இக்கட்டுரையில் காணப்படும் உண்மைக்கு புறம்பான சில வியடங்களை உங்களது கவனத்திற்கு கொண்டுவர விரும்புகின்றேன்.

நாம் எமது சந்திப்பின்போது, ஈழம் ஈநியுஸ் தாக்குதலுக்கு கண்டன அறிக்கையை ஏன் விடவில்லை என நா.க.த. அ. உறுப்பினர்களை வினவியிருந்தோம். நா.க. அரசாங்கத்தின் ஊடகத்துறை அமைச்சர் அங்கு பிரசன்னமாகியிருக்காத நிலையில், அதற்கு பதிலளித்த அரசியல் மற்றும் வெளிவிவகார அமைச்சர் திரு தயாபரன், மூத்த ஊடகவியலாளர் ஒருவர் தாக்கல் செய்த வழக்கின் நிமித்தம், ஈழம் ஈநியூஸ் வழங்கியை அதன் சேவை வழங்குனர் நிறுத்தியதாக தமக்கு ஒரு தகவல் வந்ததாகவும், அத்தகவலை சரிபார்த்துக் கொள்வதில் தாமதம் ஏற்பட்டமையினால் கண்டன கடிதத்தை உரிய காலத்தில் வழங்க முடியாதிருந்ததாகவும் தெரிவித்தார்.

உண்மை இவ்விதமிருக்க,

“மாறாக கடந்த 6 ம் திகதி சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியம் நாடுகடந்த அரசு தொடர்பாக நடத்திய ஒரு ஊடக கலந்துரையாடலில் ஈழம்ஈநியூஸ் மீதான தாக்குதலை ஏன் கண்டிக்கவில்லை என்று கேட்கப்பட்ட கேள்விக்கு ஒரு “அமைச்சர்” யாரோ ஒரு மூத்த ஊடகவியலாளரை பற்றி அவதூறு பரப்பியதால் அவரும் அவர் சார்ந்த ஊடகமும் வழக்கு பதிவு செய்தே ஈழம்ஈநியூஸ் நிறுத்தப்பட்டதாக ஒரு “கதையை” கூறியுள்ளார். ”

“பொறுப்பான பதவியில் இருக்கிறோம் என்ற எதுவித பிரக்ஞையுமில்லாமல் ஒரு பொய்யை அவிழ்த்து விட்டுள்ளார். ”

என நீங்கள் வெளியிட்டுள்ள கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

யாராவது வழக்கு பதிவு செய்துள்ளதாக திரு. தயாபரன் எந்தவிடத்திலும் குறிப்பிடவில்லை. ஆனால், அவ்வாறானதொரு தகவல் வந்ததாகவும் அத்தகவலை சரிபார்த்துக் கொள்ள முடியவில்லை என்றே குறிப்பிட்டிருந்தார்.ஆகவே அவர் பொய்யை அவிழ்த்து விட்டுள்ளார் எனக் குற்றம் சாட்டுவது உண்மைக்கு புறம்பானதும், ஊடக அறத்திற்கு முரணானதும் ஆகும்.

தமிழ் செய்தியாளர் ஒன்றியம் மேற்படி சந்திப்பில் நடந்தவற்றை முழுமையாகப் பதிவு செய்திருந்தபோதிலும், இச்சந்திப்பு தொடர்பாக ஊடகங்களுக்கு உத்தியோகபூர்வமான முறையில் எதுவித தகவலையும் வெளியிடவில்லை. தவிரவும். சந்திப்பு தொடர இருப்பதனால், இதுவிடயத்தில் அமைதி காக்குமாறு எமது உறுப்பினர்களை நாம் கேட்டிருந்தோம். ஆகவே நட்பு ரீதியான உரையாடல்களில் பரிமாறப்பட்ட தகவல்களைக் கொண்டு எழுதப்பட்ட இக்கட்டுரையில் உண்மைக்கு புறம்பான விடயங்களும், காழ்ப்புணர்வுந்தான் வெளிப்படுகிறது என்பதை குறிப்பிட்டே ஆகவேண்டும்.

நாடுகடந்த அரசாங்கத்தினர் கண்டன அறிக்கையை விடாமலிருந்தமைக்கும், அவர்கள் தாக்குதல் சூத்திரதாரிகளை காப்பாற்ற முனைகிறார்கள் என்பதற்கும் அடிப்படையில் வேறுபாடுகள் உள்ளன என்பதை அறிவீர்கள். இருப்பினும் வாசிப்பவர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தும் விதத்தில் வேண்டுமென்றே இவ்வாறு தலைப்பிடப்பட்டுள்ளது என எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது.

இக்கட்டுரையானது நாடுகடந்த அரசாங்கத்தை அவமதிப்பதாகவும் உண்மைக்கு புறம்பான விடயங்களைக் கொண்டதாகவும் அமைந்துள்ளது. இதுபோன்ற நடவடிக்கைகள், நாடுகடந்த அரசாங்கத்தின் உறுப்பினர்களிடையே ஏற்பட்டிருக்கும் முரண்பாடுகளை அதிகரிக்கவே செய்யும். அவர்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் எமது முயற்சிகளையும் வெகுவாகப் பாதிக்கும். இன்றய அரசியல் நிலையில் சமூகப் பொறுப்புடைய ஊடகவியலாளர்கள் இவ்வாறான குழப்பங்கள் ஏற்படுவதை தடுக்கவேண்டுமே தவிர வெறும் பரபரப்புக்காக செய்திகளை வெளியிட்டு மக்களை மேலும் குழப்பத்தில் ஆழ்த்தக் கூடாது.

தயவுசெய்து இது போன்ற ஏட்டிக்குப் போட்டியான நடவடிக்கைகள ஊக்குவிக்க வேண்டாம் என வேண்டிக்கொள்கிறேன்.

நன்றி
கோபி இரத்தினம்

------------------------------------------

Comments