முள்ளிவாய்க்காலுக்கு முதல் முதல் சென்ற அல்ஜசீரா நிருபர் காணொளிகள்

போர் முடிவுற்று 2 வருடங்களின் பின்னர் முள்ளிவாய்க்காலுக்குச் சென்றுள்ளார் அல்ஜசீரா நிருபர். வெளிநாட்டு நிருபர் ஒருவர் முள்ளிவாய்க்காலுக்குச் சென்று படம் எடுத்துள்ளது இதுவே முதல் தடவையாகும். மக்களைச் சந்தித்த நிருபர், தம்மால் சுதந்திரமக மக்களோடு பேசமுடியவில்லை என்பதனைத் தெரிவித்துள்ளார். சில மக்கள் புலிகள் தமது பிள்ளைகளை பலவந்தமாகப் பிடித்துச் சென்றனர் என்று கூறுகின்றனர். புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் அடங்கிய கன்டேனர்களையும் இராணுவம் காட்டியுள்ளது.

25 நிமிடம் நடைபெற்ற இந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பல விடையங்கள் அல்ஜசீராவால் அலசி ஆரயப்பட்டுள்ளது. குறிப்பாக வைத்தியசாலை தாக்குதலுக்கு உள்ளான விடையம், குறித்த உண்மைச் செய்திகள் வெளியாகியுள்ளது.


இலங்கை கிளஸ்டர் குண்டுகளைப் பாவித்தது: அல்ஜசீரா !

21 April, 2011 by admin

நேற்று இரவு 20.04.2011 அல்ஜசீரா தொலைக்காட்சியில் மக்களும் சக்தியும் எனும் தலைப்புடைய நிகழ்ச்சியில் இலங்கையின் போர்க்குற்றங்கள், மக்கள் படுகொலைகள், மீள்குடியேற்றங்கள் மறுவாழ்வுகள் என பல முனைகளில் தமிழ் மக்களின் அவலங்களை படமாக்கியிருந்தனர். அதில் இலங்கை போர்க்குற்றம் பற்றியே அதிகம் பேசப்பட்டிருந்தது. ஆனால் சிங்கள இராணுவ அதிகாரிகள் மற்றும் சிங்கள அரசியல்வாதிகள் அனைவரும் தாம் தமிழ் மக்கள் எவரையும் கொல்லவில்லை என்றே அதில் தெரிவித்திருந்தார்கள். மேலும் கருத்து தெரிவித்த கோத்தபாய, புலிகளே போர் குற்றம் புரிந்ததாகத் தெரிவித்து, பதட்டமாகப் பேசி கடுமையான கருத்துகளை முன்வைத்திருந்தார்.

போர்குற்றம் போன்ற காணொளிகளை நீங்களே தயாரிக்க முடியுமே என, அல்ஜசீரா நிருபரை நக்கலடித்தார் கோத்தபாய. வன்னி சென்ற அல்ஜசீரா நிருபர் சுயமாக யாரையும் பேட்டி காணலாம் என்ற வாக்குறுது கொடுக்கப்பட்டிருந்ததாகச் சொல்லப்பட்டபோதும், அங்கே சென்றபின்னர், இராணுவம் அனுப்பிய நபர்களையே பேட்டி எடுக்க அனுமதிக்கப்பட்டதாக அல்ஜசீரா தெரிவித்தது. இருப்பினும் இரகசியமாக அல்ஜசீரா, தமிழர் ஒருவரை தொடர்புகொண்டு கருத்துக்களை கேட்டு அறிந்தது அப்பொழுதே அவர் சிங்கள இராணும் கிளஸ்டர் குண்டுகளை பாவித்ததாக சாட்சியம் வழங்கினார்.

மேலும் மருத்துவமனைகள் மீது தாம் தாக்குதலே நடாத்தவில்லையென அழுத்தந்திருத்தமாக கோத்தபாய கூறும்போது, கன்னத்தில் அறைந்தாற்போல் மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்திய காட்சிளை அல்ஜசீரா வெளியிட்டது பாராட்டத்தக்க விடையமாகும். இக் காணொளியை விரைவில் நாம் வெளியிட உள்ளோம்.

Comments