
கடந்த 13 ஆம் திகதி பொது நலவாய நாடுகளின் கூட்டமைப்பின் செயலர் கமலேஸ் சர்மா சர்வதேச குற்றவியல் நீதின்றின் தலைமை வழக்கறிஞர் சன் சுவாங் கோன் என்பவருடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டார்.
இந்த ஒப்பந்தத்தில் பொது நலவாய நாடுகளில் குற்றங்கள் மற்றும் உரிமை மீறல்கள் தொடர்பில் ஈடுபடுபவர்கள் மீது செல்வாக்கு செலுத்த சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு அனுமதியினை வழங்கியுள்ளது. இது இலங்கைக்கு பீதியினை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை பொது நலவாய நாட்டின் உறுப்பினர்கள் மட்டுமன்றி அவர்கள் பிரித்தானியாவிற்கு வருகைதந்தால் பொது நலவாய நாட்டின் பிரஜைகள் என்ற வகையில் நடவடிக்கையும் எடுக்க முடியும்.
அத்துடன் பொது நலவாய நாடுகளின் பிரஜைகள் குற்றம் செய்தால் அனைத்துலக நீதிமன்றில் இனி வழக்கு தொடரவும் முடியும். ஆகவே இலங்கை பொது நலவாய நாடுகளின் அங்கத்துவத்தில் இருந்து மஹிந்தரை காப்பாற்ற விலகுமா? அப்படி விலகினால் 2018 பொது நலவாய நாடுகளின் விளையாட்டு என்னவாகும்? இப்படி பல கேள்விகளை தென்னிலங்கை அரசியல் வாதிகள் எழுப்பி மஹிந்தரை பீதிக்குள்ளாக்கி வருகின்றனர்.
Comments