புலம்பெயர் தமிழர்களைக் குழப்பும் சில பச்சோந்திகள்

இங்கு தலைவர் உயிரோடு இருக்கின்றாரா இல்லையா என்பது எனது ஆய்வல்ல

ஆனாலும் தலைவரின் இறந்த உடலைப் பார்த்ததாக சொல்லப்பட்ட இரு தமிழர்கள் ஒருவர் துரோகி கருணா , துரோகியாகக்கப்பட்ட தயா மாஸ்ரர் இவர்கள் மூலம் எப்படியான உண்மைகள் வரும் என்று சொல்லித் தெரியவேண்டியதில்லை

ஆகவே இது பற்றி ஆய்வு செய்வது வெறும் ஊகங்களே

உண்மைகள் வெளிவரும் வரை பொறுத்திருப்போம் தேசியத் தலைவர் எமக்கு விட்டுச் சென்றிருக்கின்ற பணியை த் தொடருவொம்

ஆகவே நாம் எதற்காக போராடுகின்றோம் அதற்கான செயற்பாடுகளை தொடர்ந்து முன்னெடுப்பதுவே சாலச்சிறந்தது

ஆனாலும் கனடாவில் நம்மவர்கள் சிலரின் மனவோட்டத்தைப் பார்த்த பின்னர்
ஒரு சில ஆதங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தோன்றியது




கனடாவில் நம்மவர்கள்

1. இனி எல்லாம் முடிந்து விட்டது இனி இவர் இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன ?

2. இவர் கடைசி வரைக்கும் சிங்கள சனத்தை அழிக்கவில்லையாம் -இவரிடம் இருந்து பறித்து வேறு ஒருவரிடம் தலைமையை கொடுத்திருக்க வேண்டும்

3.தலை முடிந்து விட்டது இனி ஒன்றும் இல்லை என்று முடங்கி கிடப்பவர்கள்

4. கனடாவில் தமிழர்களது எழுச்சி நிகழ்வுகளில் மது போதையில் சிலர் மேளதாளத்துடன் கழியாட்டம் போடுவது

5.கனடாவில் தமிழ்கொடி பிடிப்பது மட்டுமே எழுச்சி என்று சொல்லிக் கொண்டு எழுச்சி நிகழ்வுகளில் குழப்பத்தை உண்டு பண்ணும் சில கூட்டம் [ ஒரு சில மணிகளுக்கு தாழ்த்துவதில் நாம் ஒன்றும் வீழப்போவதில்லை ]

6.ஒட்டுக்குழுவின் ஊடகங்களில் வரும் செய்திகளை பார்த்து விட்டு மற்றவர்களையும் குழப்பும் கூட்டம்

7. தலைவர் பிரபாகரன் உயிரோடு இருந்து மீண்டும் அடித்து பிடிக்க வேண்டும் என்று சொல்லும் கூட்டம்-
- மீண்டும் பிரபாகரனும் அவர்களது படையணிகளும் சண்டை போட இவர்கள் புலத்தில் தமது குடும்பத்துடன் கிரிக்கெட் மச் பார்ப்பது போல் வீரவசனம் பேசிக் கொண்டிருப்பதற்கு

8. பச்சோந்தி தமிழர்களுக்காக தனது வாழ் நாளையே அர்பணித்த தலைவனும் போராளிகளும் உயிரோடிக்க வேண்டும் அவர்களுக்காக வாழ்வதற்கு

இதையே நான் புலிகளே தமிழர்களுக்காக பட்டது போதும் இனி உங்களுக்காக வாழுங்கள்




புலிகளின் தலைமையை போராளிகளை அவர்கள் உயிரோடு அல்லது பலமாக இருந்த போது புகழ் பாடியவர்கள் அவர்கள் சதியால் அழிக்கப்பட்ட பின்னர் வசை பாடுவது எதிராக விமர்சிப்பது அநாகரிகம் , பச்சோந்தித் தனம் என்பதை விமர்சிக்காமல் இருக்க முடியுமா ???

பயங்கரவாதிகள் என்று சொல்லப்பட்டவர்கள் கடைசி வரை மனித நேயம் மிக்கவர்களாக மகான்களாகவே மடிந்திருக்கின்றார்கள்

ஆனால் காந்தியம் , புத்த தர்மம் என்றெல்லாம் சொல்லப்பட்டவர்கள் ஆரம்பம் முதல் கடைசி வரை பயங்கரவாதிகளாகவே இருக்கின்றார்கள்

ஆனால் சிலரின் பச்சோந்தி தனங்கள் வெளிப்பட்டிருக்கின்றன அவர்களை தமிழர்கள் சுயவிமர்சனம் வேண்டி இக்கட்டுரை

புலிகள் இல்லாக் காட்டில் நரிகளுக்கு கொண்டாட்டம் என்பார்கள்

அது போல் சில ஆய்வாளர்களும் அவர்களின் பச்சோந்தித் தனங்களும்

முன்னாள் புலி என தன்னை சொல்லிக்கொள்ளும் சாத்திரி முதல்
யெகத் கஸ்பார் ,
அனிதாப் பிரதாப் ,
சுவிஸ் அம்பலவாணர்
தமிழர்களுக்கு கடிதம் கடிதங்களாக எழுதிய வழுதி வரை



1.முன்னாள் புலி என தன்னை சொல்லிக்கொள்ளும் சாத்திரி

முன்னாள் போராளி சாத்திரியுடன் ஒரு பேட்டி

விடுதலைப் புலிகளின் இன்றைய உண்மையான பலம் என்ன? அவர்கள் இப்போது பின் வாங்குவது உண்மையா?

விடுதலைப்பலிகளின் இன்றை பலம் மட்டுமல்ல ஆரம்பகாலத்திலிருந்தே அவர்களது பலம் வெளியில் எவரிற்குமே தெரியாது. அதுதான் அவர்களது பலம். காரணம் அவர்களிடம் ஆட்பலம் ஆயுத பலத்தைவிட ஆன்மபலமே பல சமர்களின் திருப்பு முனையாக அமைந்தது.

எனவே ஆன்மபலத்தை அளவிடமுடியாது. அடுத்தது புலிகளின் பின்வாங்கல்கள் இதுதான் முதற் தடைவையல்ல. இதற்கு முன்னரும் பலதடைவைகள் பல இராணுவ அதிகாரிகளும். அரசியல் வாதிகளும் இதுதான் புலிகளின் கடைசிக்காலம் என்று அடித்துச்சொன்னபொழுதெல்லாம். அதிசயிக்கத்தக்க விதத்தில் பாய்ந்திருக்கிறார்கள்.

இது நானொன்றும் புழுகவில்லை. புலிகளின் உண்மையான வரலாறு.

இப்படிச் சொன்னவர் ஆனால் இப்போது

வியாபாரிகளால் வீழ்ந்த என் தலைவா வீரவணக்கம். என்ற தலைப்பில்

அவர் எங்கு மறைந்திருந்தாலும் சில நிமிட உரையையாவது பதிவு செய்து சட்டிலைற் தொ.பே மூலம் உலகத்தமிழர்களிற்கு தெரியப்படுத்தி தமது அடுத்தகட்ட நடவடிக்கை என்னவென்று நிச்சயம் அறியத் தந்திருப்பார்..

புலிகளின் வெளிநாட்டு பணியகங்களின் பொறுப்பாளர்களே இத்தனை அசிங்கங்களையும் நிறைவேற்றுகின்றனர்..காரணம் இறுதியாக அவசரகால நிதியென்று புலம்பெயர் தமிழர்களிடம் இவர்கள் சேகரித்த பல மில்லியன் யுரோக்கள் அந்தந்த நாட்டுப்பொறுப்பாளர்களிடமே முடங்கிப்போயுள்ளது.

வெளிநாட்டு தமிழர்கள் மனமுடைந்து போனால் அதனை ஒட்டவைக்க ஆயிரம் வழிகளுண்டு இரண்டு நாள் அழுது விட்டு மூன்றாவது நாள் வழைமைக்கு திரும்பி விடுவார்கள்.

இப்படியாக ஆதாரம் அற்ற அடிப்படை அறிவு அற்ற விதமாக எழுதியது மட்டுமல்லாமல் அதை வேறு அடித்துச் சொல்லுகின்றார்




2.வழுதி

விடுதலைப் புலிகளிடம் இருந்து வன்னி மக்களை காப்பது எப்படி? வழுதி

மேற்குலகிடமும், இந்தியாவிடமும் வேறு எதனை நாம் எதிர்பார்க்க முடியும்...?

கடந்த ஏழு வருடங்களாக - படிப்படியாகத் தமது சுயரூபத்தைக் காட்டி எம்மைச் சீரழித்தது அவர்கள் தானே.
எங்களில்

இன்னொரு சாராரோ -

இவ்வளவு காலமும் விடுதலைப் புலிகள் தொடர்பாக புகழ் சொல்லிவிட்டு, இப்போது குறைகள் தேடி புறம் பேசவும் தொடங்கி விட்டார்கள்.
அது மட்டுமல்லாது -

அந்த "இன்னொரு சாரார்",

விடுதலைப் புலிகளை எப்போதும் விமர்சித்தவர்களுடன் இப்போது சேர்ந்துகொண்டு - விடுதலைப் புலிகளின் கதை இனி முடிந்தேவிட்டது என இப்போது நம்பவும், வெளிப்படையாகப் பேசவும் தொடங்கி விட்டார்கள்.


இப்படிச் சொன்னவர் ஆனால் இப்போது

முன்னாலே சென்றோரின் பின்னால் சென்றவரின் வழியினிலே... ஈழப் போர் - 3!

கடைசிக் காலத்தில் என்னவிதமான சிந்தனைகள் அவரது மனதில் ஓடியிருக்கும் என்ற யோசனை எழுவதை என்னால் தடுக்க முடியவில்லை.

தமிழர் பேராட்டத்தில் நீதியும் தர்மமும் இருந்தும் ஏன் எல்லாம் இவ்வாறு அழிந்து போய் விட்டது என்று யோசித்திருப்பாரா?...

அல்லது -

'நீதியும் தர்மமும் இந்த உலகை இயக்குவதில்லை; வல்லரசுச் சக்திகளின் கேந்திர நலன்கள் சார்ந்து மாறி வரும் உலக ஒழுங்கிற்கு ஏற்ப நாமும் மாற்றங்களைச் செய்து இயங்க வேண்டும்' என்று பாலா அண்ணை திரும்பத் திரும்பச் சொல்லிய ஆலோசனைகளைக்

கிரகித்திருந்தால் இந்த நிலை வந்திருக்காது என்று நினைத்திருப்பாரா?...


இது முற்றிலும் அப்பட்டமான பொய் ஏன் எனில்

தவிர தேசத்தின் குரலின் வேண்டுகோளில் தான் இச் சமாதானம் வந்ததாகவும் தலைவருக்கு விருப்பம் இல்லாமல் செய்யப்பட்ட ஒரு ஒப்பந்தம் என்றும் பல தடைவைகள் சொல்லப்பட்டது

தலைவர் -தான் சமாதானத்தின் கைதியாக இருக்கின்றேன் என்று பல தடவை சொல்லியிருக்கின்றார்

இப்போது வழுதி முதல் கட்டுரையில் சொன்னது கடந்த ஏழு வருடங்களாக - படிப்படியாகத் தமது சுயரூபத்தைக் காட்டி எம்மைச் சீரழித்தது மேற்குலகமும் இந்தியாவும் தானே.

அல்லது -

வெளிநாட்டுப் பயணங்களை முடிந்துக்கொண்டு ஒவ்வொரு முறையும் தன்னிடம் திரும்பி வரும் தமிழ்ச்செல்வன், மாறி வரும் உலகின் போக்கு பற்றி சரியான தகவல்களைத் தராமல் தன்னைத் தவறாக வழி நடத்திவிட்டார் என்று நினைத்திருப்பாரா?...


இதுவும் முட்டாள் தனமான கூற்று

அல்லது -

உறுதியான ஒர் அரசியல் அடித்தளத்தைப் போடாமல், இராணுவ இயந்திரத்தை மட்டுமே கட்டி வளர்த்ததால் - தமிழினத்தின் அரசியல் விடுதலைக்கான போராட்டத்தை இராணுவ பலத்தை மட்டுமே அடிப்படையாக்கி வளர்த்ததால் - இன்று அந்த இராணுவக் கட்டமைப்பு உடைந்து நொருங்கும் போது - தமிழ்த் தேசிய இனத்தின் எதிர்காலமே நொருங்கி விழுகின்றது என்று உணர்ந்திருப்பாரா?...


இதற்கு புலத்தில் யாரும் இருக்கவில்லையே பச்சோந்திகளைத் தவிர தேசத்தின் குரலின் மறைவிற்கு பின்னர் இல்லாமல் போய் விட்டது

அல்லது -

கடந்த காலங்களில் செய்யப்பட்ட சில விடயங்களைச் செய்யாது தவிர்த்திருக்க வேண்டும் என்றோ, செய்யாது தவிர்த்த சில விடயங்களைச் செய்திருக்க வேண்டும் என்றோ நினைத்திருப்பாரா?..


ஒட்டுக்குழுக்கள் போல் தலைவரும் ஒட்டியிருக்க வேண்டும் என்கிறீர்களா ??

அல்லது -

தவறுகள் பற்றிய எந்தச் சிந்தனையுமே இன்றி - எல்லாவற்றையும் தான் சரியாகவே செய்து, எல்லா முடிவுகளையும் தான் சரியாகவே எடுத்திருந்ததாக நம்பியிருப்பாரா?..


சமாதானத்தின் கைதி ஆக்காமல்,
சுனாமி வடிவில் இயற்கை தமிழனுக்கு எதிராயாகாமலும் இருந்திருந்தால்

அவருடைய தீர்க்க தரிசனத்தில் அவரின் பாணியில் விட்டிருந்தால்

இப்போது தமிழீழம் கிடைத்திருக்கும் தமிழர்களின் ஆளுகைக்குள் நிலமும் மக்களும் வந்திருப்பார்கள்


இப்படி வேறு யாரோ கேட்பது போல் தன்னுடைய உட்கிடக்கையை வெளிப்படுத்தியிருக்கின்றார் அதுவும் முன்பு மற்றவர்களை விமர்சித்து விட்டு தானே இப்போது விமர்சிக்கின்றார்

இவர் ஆரம்பம் முதல் இப்படியாகவே பாதிக் கட்டுரை சார்பாகவும் பாதி எதிராகவும் விமர்சித்து ஒரே கட்டுரையில் எழுதும் ஒரே ஒரு பச்சோந்தி இவராகத் தான் இருக்க முடியும்

தொடரும் ,,,,,,,,,

Comments

Ratnam said…
ஐயோ தலை சுத்துகிறது