ஆய்வுக்கு இணையத்தால் அனுப்பட்ட பின்னூட்டல் வணக்கம் ,
உங்கள் மின்னஞ்சலும் அதனைத் தொடர்ந்து உங்கள் உள்ளக் குமுறல்களையும் வெளிப்படுத்தி இருந்தீர்கள். தற்போது நீங்கள் எழுதி இருக்கும் ஆய்வில் எந்தப் பிழையும் இல்லை அனைத்தும் உண்மையே. அதாவது சில விடையங்களை நீங்கள் புரிந்துகொள்ளுங்கள்.
பல இணையங்கள் இருக்கின்றபோதும், சில இணையங்களே சுயமாக செய்திகளை எழுதிப் பிரசுரிக்கின்றது, (வலைப்பூக்களைப் பற்றி நான் பேசவில்லை) இதில் பலர் வேறு இணையங்களில் வரும் செய்திகளை அப்படியே வெட்டி மீள பிரசுரிக்கின்றனர். இதனால் அவர்கள் அந்த இணையத்திற்க்குச் சார்ப்பானவர்கள் அல்ல.
மற்றும் நான் கஸ்பரைப் பற்றி எழுதும்போது பல இணையங்கள் அவரைப்பற்றி பாராட்டி எழுதினார்கள், போதாக்குறைக்கு தமிழ்நெட் இணையம், அவரை பேட்டியும் கண்டது. இப்போது என்ன ஆனது ? முதலில் எமக்குள் ஒற்றுமை இல்லை என்பது தெளிவாக விழங்குகிறது அல்லவா ? என்னைப் பொறுத்தவரையில், மலேசியாவில் இயங்கிவரும் புலிகள் தலைமைச் செயலகமானாலும் சரி இல்லை புதிதாக முளைத்திருக்கும் எல்.ரி.ரி பிரஸ் இணையமாக இருந்தாலும் சரி , யாரையும் நான் நம்பத் தயார் இல்லை.
புலிகள் கடுமையாக போரிட்டவேளைகளில், அவர்கள் பலவீனத்தில் இருந்தபோதும் கூட சில தாக்குதல்களை நடத்தினால் அதனை ஒரு பெரிய தாக்குதலாகச் சித்தரித்து தமிழர்களை ஏமாற்றியதும் தமிழ் ஊடகம்தான், அது ஒரு வகையில் புலிகள் வெல்லவேண்டும் என்ற ஆதங்கமாகக் கூட இருக்கலாம், ஆனால் கலகம் போன்ற இணையங்கள் இதனை தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி மக்களை தவறாக வழிநடத்தியது.
மே மாதத்திற்குப் பின்னர் ஒரு மேய்ப்பன் அற்ற மந்தைகள் போல ஆகியுள்ளோம், எல்லாரும் தமது கைகளில் கருத்துச் சுதந்திரம் இருக்கிறது என்று, எதை எதையே பேச ஆரம்பித்துள்ளார்கள், இதில் நாமும் ஏதாவது பேசப் போய் மேலும் குழப்பத்தை உண்டுபண்ணக் கூடாது என நாம் மொளனம் காக்கவேண்டி உள்ளது.
கே.பி இலங்கைச் சிறையில் இருப்பது உண்மை, அவரை தாய்லாந்தின் தூதர்கள் பார்த்துச் சென்றதாக நான் அறிந்தேன், அவர் கைது தொடர்பில் இன்னமும் மர்மம் இருக்கிறது. இதில் கூட பல சதிகள் இருக்கலாம்.
நாடு கடந்த தமிழீழ அரசு ஒரு நல்ல முயற்சி ஆனால் அதில் அங்கத்தவர்களாக இருப்பவர்கள் மாற்றுக்கொள்கை உடையவர்கள், ஏன் சிலர் புலி எதிர்ப்பாளர்களும் கூட, இன் நிலையில் எவ்வாறு தமிழீழம் காண்பது ?
வட்டுக்கோட்டை வாக்கெடுப்பு பக்கம் பார்த்தால் அவர்கள் மக்களவையைச் சார்ந்தவர்கள் தமிழீழம் தான் முடிவு என்று நிற்கிறார்கள் ஆனால் அவர்களிடன் ஒரு சரியான நிகழ்ச்சி நிரல் அல்லது நம்பகத் தன்மை இல்லை எனலாம். அதிலும் பல பிளவுகள் உண்டாகிறது.
இலங்கை தேர்தல் தொடர்பாக நாம் நோக்கினால் எல்லாம் சுயலாபம் கருதி எடுக்கப்பட்ட முடிவு எனலாம். சம்மந்தன் ஒருபக்கம் கஜேந்திரன், பத்மினி ஒருபக்கம், அதற்கும் மேலாக கிஷோர் சிறிகாந்தா ஒரு பக்கம் என அவிட்டுவிட்ட மாடாக ஓடினார்கள். எதை எடுத்தாலும் ஒரு விளக்கம் கொடுத்தார்கள். சிவாஜிலிங்கம் தனித்துப் போட்டியிட்டார்.
தற்போது மகிந்தவை எப்படி சம்மந்தன் முகம்கொடுக்கப் போகிறார் என்பது மிகுந்த கேள்விக்குறி. இதில் நாம்(அதிர்வு) என்ன ஒரு புதுக் கருத்தை முன்வைக்க முடியுமா ? என்னைப் பொறுத்தவரை நானும் 2005ம் ஆண்டில் புலிகள் எடுத்த முடிவையே நானும் எடுத்திருபேன். எவரையும் ஆதரிக்கப் போவது இல்லை. கொல்லிவால் பிசாசுடன், வேதாளம் மோதுகிறது, இதில் எந்தப் பிசாசை ஆதரிப்பது ?
தற்போது புதினப்பலகை தனது சுயரூபத்தைக் காட்ட ஆரம்பித்துள்ளது. அதாவது , நான் அறிந்த வகையில் பல தமிழ் இணையங்கள் இலங்கை அரசுக்கு விலைபோய் இருக்கலாம், மக்களை தொடர்ந்து குழப்பத்தில் ஆழ்த்தி போராட்டப் பாதையில் இருந்து விலகி அல்லது அதில் ஆர்வத்தை இளக்கச் செய்ய முற்படுகின்றன,
உண்மையில் சொல்லப்போனால் நாம் ஏதாவது புதுக் கருத்தை அல்லது உண்மையான சில விடையங்களை சொல்லப்போனால் எம் மீது சேறு பூசி ஒரு தேசத்துரோகியாக்குவதே தற்போது உள்ள ஸ்டைல். என்ன செய்வது எல்லாளன் ? சொல்லுங்கள் ? உங்கள் மனக் குமுறல் எனக்கு நன்கு விளங்குகிறது.
மெல்ல மெல்ல இதனை உடைத்து எமது ஒற்றுமையைக் குழப்பும் இணையங்களை இனம்கண்டு அவற்றை புறக்கணித்துச் செல்லவேண்டும்.
மக்களை தெளிவுபடுத்தவேண்டும், ஒரு இடத்தில் 2 தமிழன் கூடினால் கூட ஒற்றுமையாக இருக்க முடியாமல் பிளவுபடுகிறான்
தோழமையுடன்
தமிழ் ஊடகங்களின் உதவாத [ ஊடக ] தர்மமும் பிண்ணனியும்
Comments
இங்கு சொல்லப்பட்ட விடயங்கள் ஆய்வுக்கு அனுப்பப்படவில்லை. ஆனால் நண்பர் எல்லாளன் அனுப்பிய பின்னூட்டங்கள் ஆய்வில் பிரசுரிக்கப்பட்டுள்ளன. jeevendran.blogspot.com
நன்றி