புதினப்பலகை ,பொங்குதமிழ் குழுமத்தை அம்பலப்படுத்தும் அதிர்வு

[infotamil.jpg]

ஏற்கனவே இது பற்றி நாம் அம்பலப்படுத்தியிருந்தோம் ஆனால் அது இப்போது அதிர்வினாலும் ஊர்யிதப்படுத்தப்படுகின்றது

நன்றி அதிர்விற்கு


அதிர்வு இணையம் சக தமிழ் இணையங்கள் குறித்து மீண்டும் விமர்சிக்கிறது என்று எண்ணவேண்டாம். இது காலத்தின் கட்டாயம். பல நாட்கள் பொறுமைகாத்த பின்னர் இதனை நாம் வெளியிடவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இனியும் நாம் தாமதித்தால் இது போன்ற இணையங்கள் தமிழர் மனதில் நஞ்சைக் கலக்க முயல்வதை தடுக்க முடியாது. அத்துடன் அவர்கள் தம்மை திருத்தவும் ஒரு சந்தர்ப்பத்தை இக் கட்டுரை நிச்சயம் ஏற்படுத்திக் கொடுக்கும் என நாம் நம்புகிறோம்!

சர்ச்சைக்குள்ளான புதினம் இணையம் செயலிழந்த பின்னர் உருவானது புதினப்பலகை, மற்றும் பொங்குதமிழ் இணையங்கள். தமிழ்த்தேசியம் பேசி மக்களிடம் ஒரு நம்பகத்தன்மையை முதலில் உண்டாக்கி பின்னர் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதுபோல தமிழர்களின் மனதில் கொஞ்சம் கொஞ்சமாக நஞ்சைக் கலக்க முயல்கின்றன இந்த 2 இணையங்களும். சுருக்கமாகச் சொல்லப்போனால் கடந்த சில நாட்களாக வெளிவரும் செய்திகளும், கட்டுரைகளும் பல தமிழ் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி, குழப்பிவிடும் ஒரு நகர்வாகக் காணப்படுகிறது.

புகழ்வது போல புகழ்ந்து அதில் வஞ்சத்தையும் கலந்து ஒரு வஞ்சகப் புகழ்ச்சியில் ஈடுபடும் இந்த இணையங்களை தமிழர்கள் இனங்காணவேண்டும். புதினப்பலகை இணையத்தை நடத்துபவர் கி.பி அரவிந்தன் ஆவார். அவர் தொடக்க காலத்தில் ஈரோஸ் அமைப்பில் இருந்து பின்னர் விலகி பிரான்ஸ் சென்று வாழ்ந்துவருகிறார். பிரான்சில் இருந்து வெளியாகும் ஈழமுரசு பத்திரிகையிலும் சில காலம் பணியாற்றிய அரவிந்தன், அதில் இருந்தும் விலத்தப்பட்டார். (காரணங்களைக் கூறி ஒரு தனி மனிதரை நாம் கொச்சைப்படுத்த விரும்பவில்லை.)

கி.பி அரவிந்தன் அவர்கள் 2009ம் ஆண்டு மே மாதம் நோர்வே சென்று அங்கு வட்டுக்கோட்டை தீர்மானம் மீதான மீள் வாக்கெடுப்பு எவ்வளவு அவசியம் என மேடைகள் பலவற்றில் ஏறி சொற்பொழிவாற்றியுள்ளார். அதற்கான ஆதாரங்களும் புகைப்படங்களும் இருக்கின்றன. ஆனால் தற்போது வட்டுக்கோட்டை தீர்மானத்தின் மீது மீள் வாக்கெடுப்பு ஒரு அவசியமற்ற செயல் என அவர் தனது இணையத்தில் வலியுறுத்தி வருகின்றார். இவர் யார் கொடுத்த அழுத்தத்தின்பேரில் இவ்வாறு செயல்படுகிறார் அல்லது யாருடன் சேர்ந்து செயல்படுகின்றார் என நாம் கூறுவதற்கு முன்னர், இவர் தனது கொள்கையை அடிக்கடி மாற்றுபவர் என்பதையே நாம் முதலில் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது.

இவ்வாறு தனது கொள்கையில் இருந்து அடிக்கடி மாறும் ஒருவர் தனது இணையத்தினூடாக எவ்வாறு தமிழ் மக்களை வழிநடத்தப் போகிறார் என்பது பெரும் கேள்விக்குறியாக அல்லவா இங்கு இருக்கிறது. எமது தேசிய தலைமை எப்போதாவது தமது கொள்கைகளை அடிக்கடி மாற்றியது உண்டா? இன்று தமிழீழம், நாளை மாநில சுயாட்சி, மறு நாள் மாவட்ட சுயாட்சி போதும் என்று நாம் தடம் மாற முடியுமா? அதற்காகவா 33,000 மாவீரச் செல்வங்களையும் எண்ணற்ற தமிழ் உறவுகளையும் நாம் பறிகொடுத்தோம்?

தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களைக் கொன்ற பெருமை விஜயபாகு காலாட் படையணிக்கே சாரும் எனச் செய்தியொன்றை எந்தத் தமிழ் இணையமும் செய்தியாகப் போடவிரும்பாத விடயம் ஒன்றை புதினப்பலகை செய்தியாகப் பிரசுரித்துள்ளது. இதில் இருந்து இவர் கூறமுற்படும் செய்தி என்ன? என்பதை ஈழத் தமிழர்கள் நன்கு ஆராய்வது நல்லது. தேசிய தலைமை அழிக்கப்பட்டுள்ளது எனக் கூறுவதில் புதினப்பலகைக்கு ஏன் அவ்வளவு நாட்டம், இவை எல்லாம் பெரும் சந்தேகமாகவே உள்ளன.

கடந்த வருடம் கி.பி அரவிந்தன் அவர்கள் வட்டுக்கோட்டைத் தீர்மான மீள் வாக்கெடுப்பை ஆதரித்ததும் பின்னர் பல்டி அடித்ததும் அவர் கே.பி பத்மநாதனைச் சந்தித்த பின்னரே நடந்ததாக சில விடயம் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சில மாதங்களுக்கு முன்னர் இவர் இலங்கை சென்று அங்கு தடுத்துவைத்திருப்பதாகக் கூறப்படும் கே.பி என்றழைக்கப்படும் பத்மநாதனைச் சந்தித்துத் திரும்பியதாக ஊர்ஜிதமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் பின்னரே இவர் ஒரு தமிழ்த்தேசிய விரோதப் போக்கைக் கடைப்பிடிப்பதாக பலர் நம்புகின்றனர்.

மற்றும் பொங்குதமிழ் இணையத்தில் "வலிமை கொண்ட தோளினாய் போ போ போ" என்ற கட்டுரையும் ஒரு வஞ்சப் புகழ்ச்சியே! இதில் வெளியிடப்பட்ட ஆக்கங்களில் சந்திரவதனா என்பவர் எழுதிய ஆக்கங்களும் புலிகள் மீது சேறு பூசும் ஒரு நடவடிக்கையாகவே அமைகிறது. அப்துல் ஜபார் போன்ற கருணாநிதிக்கு ஜால்ரா அடிக்கும் எழுத்தாளர்களின் கட்டுரைகளும் இங்கு பிரசுரிக்கப்பட்டு தமிழ் மக்கள் தவறான பாதையில் வழிநடத்தப்படும் அச்சம் மேலோங்கியுள்ளது.

இவ்வாறு தமிழ்த்தேசியம் பேசி தமிழரை பிழையான பாதையில் வழிநடத்தும் இணையங்கள் தமது தார்மீகக் கடமைகள் குறித்து கவனம் செலுத்துவது நல்லது. உலகில் எங்குவேண்டும் என்றாலும் நடுநிலை காணப்படலாம் ஆனால் தமிழர் பிரச்சனையில் நடுநிலை என்று ஒன்று இல்லை என்பதே உண்மை. பல்லாயிரக்கணக்கான தமிழர் அழிவுற்ற நிலையில், நான் நடுநிலைவாதி என்று எவரும் கூற முடியாது. ஒன்று தமிழரின் பக்கம் அல்லது சிங்களவர் பக்கம் என்பதே யதார்த்தம். முள்ளிவாய்க்கால் படுகொலைகள் நடந்து இன்னும் ஒரு வருடம் கூடப் பூர்த்தியாகாத நிலையில் நாம் நடந்தவற்றை மறந்து இலங்கை அரசுடன் கைகோர்க்க நினைத்தால் எம்மைப் போன்ற கேவலமான ஒரு இனம் இந்த உலகில் இருக்க முடியாது என்று கூறலாம்.

அப்படி நீங்கள் மறந்திருந்தால் மீண்டும் நினைவுபடுத்த இன்னும் வெளிவராத சில புகைப்படங்களை இணைக்கிறோம் பாருங்கள்.

எமது இனம் பட்ட துன்பத்தைப் பாருங்கள்! கொடுமையைப் பாருங்கள்! நாதியற்றுத் தவித்ததைப் பாருங்கள்!

இனியாவது இதனை மனதில் நிறுத்தி உங்கள் வழிகளை மாற்றிக்கொள்ளுங்கள். திருந்த இது ஒரு சந்தர்ப்பமாக அமையட்டும்!












இது குறித்து குங்கள் கருத்துகள் வரவேற்க்கப்படுகின்றது. athirvu@gmail.com

மன்னிக்கவும் இவர்கள் திருந்த மாட்டார்கள் ஆனால் இதற்கு எதிர்வினையாக ஒரு கட்டுரை விரைவில் இன்போதமிழில் எதிர்பார்க்கலாம்

Comments