இலங்கை இனப்பிரச்சினை பேச்சு மூலம் தீராவிட்டால் "தனி ஈழ மாநிலம்" அமைய அதிமுக வலியுறுத்தும்: அதிமுக தேர்தல் அறிக்கை
அஇஅதிமுக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள இலங்கை பிரச்சினை சம்பந்தமான கோரிக்கைகள்:
இலங்கையில் உடனடியாகப் போர் நிறுத்தம் மேற்கொள்ள அழைப்பு விடுப்பதோடு மட்டுமல்லாமல், அப்பாவித் தமிழர்களுக்கு எதிரான படுகொலையை நிறுத்தவும் உடனடியாக கோரிக்கை வைக்கப்படும்.
பெரும்பான்மை சிங்கள இனத்தவருக்கு சமமாக தமிழ் மக்கள் நடத்தப்பட வேண்டும்.
தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளில், அவர்களுக்கு நிர்வாக அதிகாரத்தை வழங்க வேண்டும்.
இந்த முயற்சி தோல்வி அடைந்தால், தமிழர்கள் கண்ணியத்துடன் வாழ ஏதுவாக, "தனி ஈழ மாநிலம்'' அமைக்க வலியுறுத்தப்படும்.
அதிகார மாற்றம் ஏற்பட்ட பிறகு தமிழ்ப் பகுதிகளைப் புதுப்பிக்கவும், மேம்படுத்தவும் இடம்பெயர்ந்த தமிழர்களுக்கு மறுவாழ்வு அளிக்கவும் ரூ.10,000 கோடி மானியம் வழங்கப்படும்.
கச்சதீவு சம்பந்தமாக இந்திய-இலங்கை உடன்பாட்டை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி ஜெயலலிதா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
தென்னிந்தியாவில் உள்ள மீனவ சமுதாயத்தின் பிரச்சினைகளைப் போக்க ஏதுவாக இலங்கையிடம் இருந்து கச்சதீவை மீட்கத் தேவையான அனைத்தும் செய்யப்படும் என்று தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அ.தி.மு.க கூட்டணிக்கு வாக்களிக்குமாறு விடுதலைப்புலிகள் மறைமுக வேண்டுகோள்காங்கிரசுக்கும் அதன் கூட்டணிக்கும் ஓட்டுப் போடாதீங்க...
போருக்கு துணைபோகும் காங்கிரஸ்காரனை யாரெல்லாம் தங்கள் முதுகில் சுமந்து வருகிறார்களோ (திமுக, பாமக வேறு யாரானாலும்) அவர்களும் ஏதோ ஒரு வகையில் இந்தப் படுகொலைகளில் கை நனைக்கிறார்கள்.
திருமா இது தகுமா?
உரக்கச் சொல்வோம். காங்கிரசுக்கோ, திமுகவுக்கோ , ஒட்டு போடக்கூடாது; போட மாட்டோம்.
ஈழ ஆதரவுக் குரல்களும் வரப்போகும் இந்தியத் தேர்தலும்
காங்கிரசுக்கு வாக்களிக்க மாட்டேன்'' இயக்கம்!
ஈழத்தமிழர்காதில்பூசுற்றும்ராமதாசும்கருணாநிதியும்,
Comments