தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் பாதுகாப்பாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக இராசரீக உறவுகளுக்கான பிரதிநிதி செல்வராஜா பத்மநாதன் பிரித்தானியாவின் சனல் 4 (Channel 4) தொலைக்காட்சிக்கு இன்று மாலை 7:00 மணியளவில் தொலைபேசி வாயிலாக அளித்த செவ்வியில் இதனைத் தெரிவித்தார்.
பாதுகாப்பு காரணங்களுக்காக அவர் எங்கிருக்கின்றார் என்ற விபரத்தை வெளியிட முடியாது எனவும் பத்மநாதன் கூறினார்.
வவுனியா தடுப்பு முகாம் உண்மை நிலையை நேரடியாகச் சென்று அனைத்துலகிற்கு வெளிச்சமிட்டுக்காட்டி சனல் 4 (Channel 4) தொலைக்காட்சின் செய்தியாளர் நிக் பற்றன் வோஸிற்கு (Nick Patton Walsh) வழங்கிய செவ்வியிலேயே பத்மநாதன் இதனைக் கூறினார்.
Comments