கனடா உதயன் அலுவலகம் தாக்குதலும் பின்னணியும்

தமிழ் ஊடகங்களின் உதவாத [ ஊடக ] தர்மமும் பிண்ணனியும்- பகுதி 3
தமிழ் ஊடகங்களின் உதவாத [ ஊடக ] தர்மமும் பிண்ணனியும் பகுதி 1 , பகுதி 2


எட்டப்பர்களின் சதி நாடகம் மீண்டும் ரொரன்ரோவில்இப்பகுதியில் நாம் ஏற்கனவே இது பற்றி விவாதித்திருந்தோம் ஆனால் இது பற்றி எமது ஊடகங்களும் ஆங்கில ஊடகங்களும் திரிவு படுத்தி எழுதியதால் மீண்டும் விரிவாக அலசியிருக்கின்றோம்

கனடா உதயன் பத்திரிகை காரியாலயம் நேற்று உடைக்கப்பட்டதாகவும் அதன் முன்பு நின்று கொண்டு அதன் உரிமையாளர் எட்டப்பர் லோகேந்திரலிங்கம், எட்டப்பர் குலா செல்லத்துரையும் கீதவாணி தமிழ்வானொலியில் ஞாயிற்றுக்கிழமை பகல் 12.00 மணியளவில் அன்று உருக்கமான பேட்டியினைக் கொடுத்தார்கள்
ஆதாரத்திற்காக குலாசெல்லத்துரையின் கீதவாணி அதிபர் நடா ராஜ்குமாரல் எடுக்கப்பட்ட பேட்டி காணொளி கீழே


பேட்டியில் குலாசெல்லத்துரை இலங்கை ராணுவத்தை தமிழ் மக்கள் ஒரு அரச ஊழியாராகவே பார்க்கின்றார்களாம் அப்படி ஒரு சேவையை தமிழ்மக்களுக்குச் செய்கின்றார்களாம்
அதை நடா ராஜ்குமார் ஆமாம் போடுவதும் அப்படியானல் இங்கே சொல்லப்படும் செய்திகள் எல்லாம் பொய்யா என்று ஏங்குவதும் நடாவின் சுயரூபத்தைக் காட்டுகின்றது

ஏற்கனவே இதே போல் ரொரன்ரோவில் உள்ள புத்த விகாரையும் மூன்று தடவைகள் புலிகளால் உடைக்கப்பட்டது என்று காப்புறுதி நிறுவனங்களிடம் பணம் கறந்து வந்திருக்கின்றது

அதே பாணியில் அவர்களின் நண்பர்களான இந்த எட்டப்பர்களும் பின்பற்றுவது ஏனோ இந்த காவல்துறைக்கு தெரியவில்லை

புலிகள் இருந்த காலத்திலேயே இது வரை புலிகளோ அதன் ஆதரவாளர்களோ புலத்தில் யாரையும் தாக்கியதில்லை அப்படியிருக்க புலிகள் இல்லாத இப்போது இந்த நாடகம் ஏன் ??
ஏற்கனவே வட்டுக்கோட்டைத் தேர்தலில் இந்த உதயன் எட்டப்பன் லோகேந்திரலிங்கம் பொய்யான பேட்டியைக் கொடுத்திருந்தார் அது கீழே
கனடிய வட்டுக்கோட்டை வாக்கெடுப்பும் துரோகங்களும்
------------------------
கனடா உதயன் பத்திரிக்கை


லோகேந்திரலிங்கம் இவரும் இளைய பாரதியின் கூட்டம் தான் வட்டுக்கோட்டை பற்றி எதுவும் எழுதவில்லை

இதனால் சில வியாபார நிறுவனங்களில் இந்த துரோகியின் பத்திரிக்கையை தூக்கி எறிந்திருக்கின்றார்கள்

அதற்கு இந்த துரோகி http://www.thestar.com/ க்கு கொடுத்த பேட்டி கீழே

Logan Logendralingam, editor and publisher of Uthayan, a Tamil weekly, said his newspaper was removed from three shops in the GTA and replaced with pamphlets about the referendum because he did not include heavy coverage of the event.

Logendralingam, who does favour Sri Lankan Tamils being granted an independent state, feels he was targeted because he also reports on news from the Sinhalese-dominated Sri Lankan government. His paper is distributed in about 220 locations; he plans to contact police if more papers are taken.

"This type of activity is not going to help us. It will create more divisions in the community. Our community has to be united, because Tamils in Sri Lanka have been destroyed," he said.

இது குறித்து இவரிடம் கேட்டவர்களுக்கு இது யாரோ சிங்களவர்கள் தன் பெயரில் பேட்டி கொடுத்திருக்கிறார்களாம் ?

இவற்றையும் நம்பச் சொல்லுகின்றீர்களா ?

----------------------


அது தவிர உதயன் பத்திரிக்கை லோகேந்திரலிங்கம் தனக்கு சொல்லாமல் தனது நண்பர்கள் மகிந்தாவை சந்திக்கச் சென்று விட்டார்கள் என்று தானே கீதவாணி பேட்டியில் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கின்றார்

இவரது காரியாலயம் உடைக்கப்பட்டதும் இவரது நண்பர்கள் கூட்டமான எட்டப்பன் குலாசெல்லத்துரையை ஏன் அழைத்து தனது காரியாலத்தின் முன் வைத்து பேட்டி கொடுக்கப்பட்டது ?

அதை ஏன் கீதவாணி பேட்டி கண்டது ?

தவிர கீதவாணி காரியாலம் உடைக்கப்பட்டது சம்பந்தமான பேட்டியாக இல்லாமல் இந்த எட்டப்பர்கள் மகிந்தாவைச் சந்தித்தது தொடர்பான பேட்டியாகவே அது தொடர்ந்தது

அதில் குலா செல்லத்துரை தாயகத்தில் எல்லாம் சாதாரணநிலைக்கு வந்துவிட்டது ஊடகங்கள் சொல்வதெல்லாம் பொய் என்றெல்லாம் மகிந்தாவின் சிந்தனையை அப்படி ஒப்பித்திருந்தார் அதையும் கீதவாணி நாடா ராஜ்குமார் வாய் வழிய ஒப்புவித்துக்கொண்டிருந்தார்

இவர்கள் இன்னும் ஒரு முறை எட்டப்பர்கள் அனைவரும் கீதவாணியில் கீதவாணியின் நேயர்களுக்கு நேரலை வழங்க காரியாலத்திற்கு வருவார்களாம் ? அதை நாடாவும் ஒத்துக்கொண்டிருக்கின்றது ??

கீதவாணி நண்பர்கள் வட்டம் எங்கிருக்கின்றது ?


அதன் நேயர்களாகிய நீங்கள் எந்த வட்டம் சிந்தியுங்கள் !!!!!!!!!!!!!!
இனி விரிவாகப் பார்ப்போம் ...............

யார் இந்த குலாசெல்லத்துரை கூட்டம் ?

தை 28,2008 ஆம் ஆண்டு

  1. தமிழ்மக்களின் குருதி நனைந்த கைகளால் கொடுக்கப்படும் விருதுகளை தமிழர்கள் கையேந்தி வாங்குவதா?
  2. இவ்விழாவின் பின்னனியில் உள்ள தமிழர்கள் கனடாவில் அர்ஜூன ரணதுங்கவிற்கு எதிராக கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம்
  3. தமிழ்மக்களின் குருதி நனைந்த கைகளால் கொடுக்கப்படும் விருதுகளை தமிழர்கள் கையேந்தி வாங்குவதா?
  4. கனடிய சிறிலங்கா தூதரகத்தின் பத்திரிக்கையான The srilankan ANCHORMANதுரோகிகளுக்கு விருதுகள்
குலாசெல்லத்துரையும் அவரது நண்பர்கள் கூட்டமும் நேற்று பெய்த மழையில் முழைத்த காளன்கள் இல்லை என்பதும் இவர்கள் பல காலமாகவே துரோக வேலைகளில் ஈடுபட்டு வருகின்றார்கள் என்பது எல்லோரும் அறிந்த விடயம்
ராஜபக்சவை சந்தித்த செல்லத்துரை, இலங்கை அரசின் முகவர் ஆவார். அவர் அந் நாட்டு அரசின் கைக்கூலி. தமிழர்களின் ஒற்றுமையை சீர்குலைக்க முயலும் இலங்கை அரசின் வலையில் செல்லத்துரையைப் போன்றவர்கள் விழுவது கவலைக்குரியது என்றார் பூபாலபிள்ளை.
புலிகள் இல்லாததால் துணிச்சலாக இப்போது சென்று தமது எஜமானனைச் சந்தித்து வந்திருக்கின்றார்கள் அவ்வளவே
ஆனால் சமாதன காலத்தில் உதயன் லோகேந்திரலிங்கமும் துரோகி இளையபாரதியும் கனடிய அமைச்சர்களின் பின்னால் ஒழிந்து வன்னி சென்று புலிகளைச் சந்தித்து வந்தார்கள் தனியாகச் சென்றால் திரும்பவர முடியுமா ? என்ற சந்தேகம் அவர்களுக்கு இருந்திருக்கின்றது
அப்படிப்பட்டவர் தான் இந்த உதயன் லோகெந்திரலிங்கம் இவர் ஒரு பச்சோந்தி என்பது எல்லோரும் அறிந்தது என்றாலும் புலத்தில் முற்றுமுழுதாக புலிகளை எதிர்த்து பத்திரிக்கை நடாத்த முடியாது அதனால் புலி வேசம் பின்னர் போட்டாரா ? அதை இப்போது கலைத்து விட்டாரா ? யாம் அறியோம் ?

பெப் 19 ,2010 வெளியான உதயன் பத்திரிக்கை இது இதில் எங்கேயாவது இந்த செய்தி இருக்கின்றதா ? இருந்தால் காட்டுங்கள் அதன் கனடாஉதயன் இணையத்திற்கு சென்று பாருங்கள்

தவிர அவரே வாய் வழி வாக்குமூலமாக கீதவாணியில் தான் இச் செய்திபற்றி எதுவும் போடவில்லை என்று சொன்னார் கீதவாணி நடாவிடம் கேளுங்கள் சந்தேகம் இருந்தால்
தவிர இதைக் கண்டித்து ஒரு அறிக்கை கனடா உதயன் பத்திரிகை தாக்கப்பட்டது தமிழர் பண்பாட்டுக்கு ஒவ்வாத செயலாகும்

எமது இயக்கம் அந்த பத்திரிகையை இணையத்தளத்தில் பார்வையிட்டபோது அவ்வாறான செய்தி ஒன்று கடந்த வாரப் பத்திர்pகையில் காணப்படவில்லை. அதே வேளை இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு ஆதரவான செய்தி எதையுமே கனடா உதயன் பத்திரிகை பிரசுரிப்பதில்லை என்பதையும் நான் நன்கு அறிவேன்.

உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் செயலாளர் நாயகம் திரு கணேசலிங்கம் ஜேர்மனியிலிருந்து வெளியிட்ட அறிக்கையிலிருந்து சில வரிகள்
ஆகவே உதயன் பத்திரிக்கை தாக்குதல் பின்னணியில் தமிழின உணர்வாளர்கள் இருப்பதற்கு எந்த வித விரோதமும் இல்லை

ஆனால் இத்தாக்குதலையும் துரோகிகளின் மகிந்தாவுடனான சந்திப்புக்கும் ஏன் முடிச்சுப் போடப்பட்டது ?

தாக்குதல் நடாத்தப்பட்ட உடன் இந்த துரோகிகள் அழைக்கப்பட்டு கீதவாணியில் நேரடி அலையில் நடா ராஜ்குமாரால் பேட்டி எடுக்கப்பட்டது ஏன் ?

இதன் பின்னணியில் சதியிருப்பது மட்டும் தெரிகின்றது

1. இவர்களே தாக்குதல் செய்து விட்டு தமிழர் விரோதமாக காட்டி தமது விஜயத்தை பிரச்சாரப்படுத்தியிருக்கின்றார்கள்

2. ஏற்கனவே வட்டுக்கோட்டைத் தேர்தலுடன் சம்பந்தப்பட்ட உதயன் லோகேந்திரலிங்கம் ஊடகவியலாளாராக இருப்பதாலும் அவரை உபயோகித்திருக்கின்றார்கள்

3.இதையே குலா செல்லத்துரையின் காரியாலயத்தை உடைத்திருந்தால் இது இவ்வளவு பிரபலயமாக எடுபட்டிருக்காது

இனி நமது ஊஊடகங்கள் ஊதியவை கீழே ,,,,,,,,,,,,

எல்லா ஊடகங்களையும் இணைக்கவில்லை சில முன்னணி ஊடகங்களை மட்டுமே இனைத்திருக்கின்றேன்

நமது ஊடகங்கள் இதை எப்படி வெளியிட்டிருக்கின்றார்கள் இவர்கள் எல்லோரும் கனடிய ஆங்கில ஊடகங்களில் வந்ததை மொழி பெயர்த்தும் தமது கற்பனைகளையும் சேர்த்து ஒட்டியிருக்கின்றார்கள்

இவை எல்லாவற்றையும் வாசித்தால் இந்த ஊடகங்களின் நம்பகத்தன்மை, ஊடகதர்மம் என்னும் பெயரில் செய்யும் உதவாத தர்மமும் என்ன என்பது உங்களுக்கே புரியும்

இவற்றை எல்லாம் பார்க்கும் போது கைப்புண்னையே கண்டு பிடிக்கத் தெரியாத நமது ஊடகங்கள் அதாவது கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவர்கள் எல்லாம் வைகுண்டம் ஏறி சிவனைக் காட்டுவார்களா ?

இவை எல்லாவற்றிற்கும் மேலாக யாழ் இணையம் ஒரு படி மேல் சென்று கோழைத்தாக்குதல் என்றெல்லாம் மட்டுநிறுத்தி நிழலி தலைப்பிலேயே இட்டிருக்கின்றார்

----------------------

கனடா "உதயன்" பத்திரிகை மீது கோழைகளின் தாக்குதல் - யாழ் இணையத்தில்

நான் 15 வயதில் பத்திரிகையாளராக ஆனேன்
ஒரு சக தமிழ் பத்திரிகையாளனாக இந்த கோழைகளின் செயலை மிகவும் வெறுக்கின்றேன்
மட்டுறுத்துநர்-நிழலி - இந்த மட்டுநிறுத்தி பற்றி யாழ் இணையமும் புதினப்பலகை குழுமத்தால் இயக்கப்படுகின்றதா ? இங்கே காணலாம்
கனடா 'உதயன்' அலுவலகம் மீது தாக்குதல் அதிர்வு
உதயன் பத்திரிகை என்பது ஒரு நடுநிலையான பத்திரிகை என்றும், தாம் தமிழ் சமூகம் மற்றும் சிங்கள அரச செய்திகளை இது பிரசுரிப்பதாகவும் கூறியுள்ள செல்லத்துரை தமிழ் மக்களுக்கோ அல்லது தமிழ் போராட்டத்துக்கோ இது எதிரானது அல்ல என்றும் கூறியுள்ளார்.

மகிந்தவை சந்தித்தவரின் கனடா 'உதயன்' பத்திரிகை மீது தாக்குதல்!ஈழநேசன்
கனடாவிலிருந்து வெளிவரும் உதயன் பத்திரிகை அலுவலகம் மீது இனந்தெரியாத குழுவொன்று தாக்குதல் நடத்தியுள்ளதாக த ரொரண்டோ ஸ்ரார் இணையத்தளம் செய்திவெளியிட்டுள்ளது.

இலங்கை – கனேடிய வர்த்தகப் பேரவையின் தலைவர் செல்லத்துரை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் நடத்திய சந்திப்பு குறித்த செய்திகள் அப்பத்திரிகையின் முதற் பக்கத்தில் வெளியானதைத் தொடர்ந்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடா உதயன் பத்திரிகை நிர்வாகி குலா செல்லத்துரை அவர்கள் கனடா - சிறீலங்கா வர்த்தக சம்மேளனத்தின் தலைவராக இருகின்றார்.

இதனால் ஆத்திரம் அடைந்த மக்கள், செல்லத்துரை அவர்கள் பத்திரிகை அலுவலகம் செல்லும் வேளை பார்த்து அங்கு எதிர்ப்பு தெரிவித்து காரியாலையத்தையும் தாக்கியுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
கனடா உதயன் பத்திரிகை அலுவலகம் மீது தாக்குதல் பதிவு,தமிழ்வின்
இது தொடர்பான செய்தியை கனடாவின் உதயன் இதழ் வெளியிட்டது. இதன் ஆசிரியரான லோகன் லோகேந்திரலிங்கம், செல்லத்துரையின் நெருங்கிய நண்பராவார்.

ராஜபக்சவுடனான சந்திப்பை ஆதரிப்பது போல செய்தி வெளியானதாகக் கூறி உதயன் நாளிதழ் அலுவலகத்தை இலங்கைத் தமிழர்கள் சனிக்கிழமை தாக்கினர்.

சிறீலங்காவுடன் தொடர்பு – கனடா உதயன் மக்களால் தாக்கப்பட்டது-மீனகம்
கனடா உதயன் பத்திரிகை நிர்வாகி குலா செல்லத்துரை அவர்கள் கனடா – சிறீலங்கா வர்த்தக சம்மேளனத்தின் தலைவராக இருகின்றார்.

இவர்அண்மையில் சிறீலங்கா சென்று மகிந்த ராசபக்‌சவுடன் கலந்துரையாடலில் பங்குபற்றியதுடன் மகிந்தவுடன் சேர்ந்து புகைப்படம் ஒன்றினையும் எடுத்து அதனை உதயன் பத்திரிகையில் முன் அட்டையில் பிரசுரித்தாராம்.


இதனால் ஆத்திரம் அடைந்த மக்கள், செல்லத்துரை அவர்கள் பத்திரிகை அலுவலகம் செல்லும் வேளை பார்த்து அங்கு எதிர்ப்பு தெரிவித்து காரியாலையத்தையும் தாக்கியுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

----------------

கனடிய ஆங்கில ஊடகங்களில் வந்தவை

Globe and Mail : Tamil newspaper vandalized after publisher warned of trouble



-------------------

http://www.theglobeandmail.com/news/national/tamil-newspaper-vandalized-after-publisher-warned-of-trouble/article1476667/


National Post: Toronto Tamil newspaper office vandalized
http://www.nationalpost.com/news/canada/story.html?id=2595501


Times of India : Tamil newspaper ransacked in Toronto
http://timesofindia.indiatimes.com/india/Tamil-newspaper-ransacked-in-Toronto/articleshow/5601713.cms


News on ThantsTamil website in Tamil
http://thatstamil.oneindia.in/news/2010/02/22/tamil-newspaper-ransacked-toronto.html


Toronto Star: Tamil newspaper’s Scarborough office attacked
http://www.thestar.com/news/gta/article/769117--tamil-newspaper-s-scarborough-office-attacked?bn=1


City News: Vandals Target Tamil Newspaper
http://www.citytv.com/toronto/citynews/news/local/article/70585--vandals-target-tamil-newspaper


680 News: Tamil newspaper east-end office vandalized
http://www.680news.com/news/local/article/28964--tamil-newspaper-east-end-office-vandalized

Comments