ஈழவேந்தன்-- நாடு கடந்த அரசிற்குத் தெரிவு செய்யுங்கள்

TGTE – District .1 – Toronto GTA and Vicinities

நா.க.த.அ - மாவட்டம் . 1

M.K. EALAVENTHAN---எம்.கே ஈழவேந்தன்



கொள்கையில் உறுதியும் புலமையும் உள்ளவர்களை நாடு கடந்த அரசிற்குத் தெரிவு செய்யுங்கள் – ஈழவேந்தன்

எனக் குறிப்பிட்ட ஈழவேந்தன் அனைத்துத் தமிழ் மக்களும் தமது வாக்குக்களைச் செலுத்தி திறமையும் தமிழுணர்வும் கொள்கைப் பிடிப்பும் கொண்டவர்களைத் தெரிவு செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

தற்போது இருக்கும் அரசியல் சூழ்நிலையில் தமிழர்களுக்கு இருக்கக் கூடிய மிகச் சிறந்த தெரிவாக இருப்பது நாடு கடந்த தமிழீழ அரசே என்று குறிப்பிட்ட ஈழவேந்தன் புதிதாய் முளைவிட்டிருக்கும் இந்த முயற்சியை பெரு விருட்சமாக்கி ஒட்டுமொத்த தமிழினத்தின் கனவை நனவாக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

ஜெனிவாவிற்குப் பயணம் செய்வதற்கு தமக்கு அனுமதி கிடைக்குமா என்பது குறித்து எழுப்பப்பட்டு வரும் சந்தேகங்கள் குறித்துக் கருத்துக் கேட்ட போது நல்ல சிந்தனையுடனும் நோக்குடனும் எமது மக்களிற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற உந்துதலோடும் தான் தேர்தலில் போட்டியிடுவதாகவும் இதன் போது ஏற்படும் எதிர்வினைகளை அது ஏற்படும் போது சமாளித்து வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை தமக்கிருப்பதாகவும் ஈழவேந்தன் தெரிவித்தார்.

நாடு கடந்த தமிழீழ அரசு குறித்து விமர்சனங்களையும் எதிர்ப்புக்களையும் தெரிவித்து வருபவர்கள் குறித்த கேள்விக்குப் பதிலளித்த ஈழவேந்தன் நாடு கடந்த தமிழீழ அரசு என்பது புதிதாக அறிமுகப்படுத்தப்படும் ஒரு திட்டம் என்றும் இதன்போது தவறுகள் நிகழ்வது இயல்பு என்றும் இந்தக் குறைகளைக் களைவதற்கான ஆக்கபூர்வமான விமர்சனங்களை முன்வைக்கும் அதே வேளை இதை முன்கொண்டு செல்ல அனைவரும் முன்வர வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

Comments