உருத்திரகுமாரன் ? முடிசூடிய துரோகம்..!

எப்போதுமே ஆக்கிரமிப்பாளர்களும், பேரினவாதிகளும் ஒரே வகையான முறைமையையே கைக்கொண்டு வந்துகொண்டிருக்கிறார்கள். ஒரு விடுதலைப் போராட்டம் மோசமான பின்னடைவை அல்லது மிகமோசமான அழிவை சந்தித்தபொழுதுகளில், அந்த விடுதலைப் போராட்டத்தின் இடத்தில் இன்னொரு பொம்மைத் தலைமையை உட்காரவைத்து, அதனு£டாக ஆக்கிரமிப்பாளர்கள் தமது ஆதிக்க ஆட்சியை அந்த மக்கள்மீது தொடர்வார்கள்.



அவர்களால் முடிசூட்டி சிம்மாசனத்தில் உட்காரவைக்கப்படும் பொம்மைத் தலைவரும் எடுத்தவுடன் தன்னை ஒரு சரணாகதித் தலைவராகவோ, அடிபணிவுப் பிரதமராகவோ காட்டிக்கொள்ளவே மாட்டார். நீண்டகாலமான விடுதலைப் போராட்டத்தினுள்ளும், தியாகமிக்க வரலாறுகளுக்குள்ளும் வாழ்ந்து போராடியமக்கள் எடுத்தவுடன் ஒரு அடிமைத் தலைமையையோ, ஆக்கிரமிப்பாளர்களின் பொம்மையான ஒரு ஆட்சியாளரையோ ஒரு போதும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்பதால், புதிய தலைமையும் தன்னையும் ஒரு விடுதலைத் தலைமையாகவே காட்டிக்கொள்ளும் நடிக்கும்.!

இது இன்று தமிழீழ தேசியத்துக்கும், அதனது விடுதலைப் போராட்டத்துக்கும் ஏற்பட்டுள்ளது. இது எமக்கு மட்டுமே ஏற்படும் ஒன்றல்ல. உலகம் முழுவதுமான, விடுதலைக்கான போராட்டத்தில் அனைத்து அமைப்புகளும், தேசிய இனங்களும், நாடுகளும் கண்டு கடந்த ஒரு பொது வரலாறு ஆகும்.

இன்று முடிசூட்டப்பட்ட பொம்மைத் தலைமைக்கான, சிம்மாசனமும், யாப்பும் மிக நீண்டகாலத்துக்கு முன்னரே வல்லாதிக்க சக்தியாலும், பேரினவாத ஆட்சியாலும் தயாரிக்கப்பட்டுவிட்டிருந்தது. தமிழீழ மக்களுக்கு ஒரு அடிபணிவுத்தலைமையை உருவாக்கும் திட்டத்தின் இறுதிக்கட்டம்தான் போனவாரத்தில் நடந்துமுடிந்துள்ளது.

ஆனால் இதற்கான குழிபறிப்புகளும், சதிகளும், இழிவுகளும் திரைமறைவில் நீண்ட காலமாக நடந்துவந்துள்ளது. கடந்த வருடம் முள்ளிவாய்க்கால் நாட்களை ஒரு கணம் நினைத்துப்பாருங்கள். நீங்களும், நாங்களும் புலத்தின் ஒவ்வொரு தெருவிலும்கூடி நின்று உலகத்தின் மனசாட்சியின் மூடியகதவுகளை தட்டி, எமது மக்களையும், ஒப்பற்ற எமது போராட்ட அமைப்பையும், காப்பாற்ற நின்ற பொழுதிலேயே புலத்தின் சில குரூரமிக்க மனிதர்கள் மலேசியாவிலும், தாய்லாந்திலும் கூடிக்கதைக்கத் தொடங்கி விட்டிருந்தார்கள்.

வல்லாதிக்கசக்தி மிகவும் திறைமையான முறையில் இவர்களை தெரிவு செய்திருந்தது. கடந்த கால போராட்டத்தில் விடுதலைப் புலிகளால் இடைநிறுத்தப்பட்டவர்களையும், ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்படுத்தப்படவர்களையும், பொறுப்புகளில் இருந்து இறக்கப்படவர்களையும், விடுதலைப் புலிகளின் எழுச்சிமீது காழ்ப்புக் கொண்டிருந்தவர்களையும், அடிமைப்புத்தியும் காட்டிக் கொடுப்பும் நிறைந்த சில படித்தவர்களையும் வல்லாதிக்க சக்தியும், சிங்களமும் இணைந்து தெரிவு செய்து மலேசியாவில் ஒன்றுகூட வைத்தது.

(2009, மே 18க்கு முன்னரேயே). முள்ளிவாய்க்காலில் சிங்கக்கொடி ஏற்றப்படுவதற்கு முன்னரேயே மலேசியாவில் கூடியவர்கள் ‘விடுதலைப் புலிகளுக்கு பின்னான அரசியல்’ பற்றி முடிவுகளை எடுத்துக்கொண்டிருந்தார்கள். எடுத்துவிட்டிருந்தார்கள். ஒதுங்கிய பதுங்குகுழிகளுக்குள்ளும், கூடாரங்களுக்குள்ளும் எமது மக்கள் கூட்டம் கூட்டமாக கொல்லப்பட்ட பொழுதுகளில் இவர்கள் நாடுகடந்த அரசு என்ற வல்லாதிக்சக்தியின் நிகழ்ச்சிநிரல் திட்டத்தை எழுதிக்கொண்டிருந்தார்கள்.

எல்லாம் முடிந்தது என சிங்கள ஆட்சியாளர்களும், மௌனித்தது என போராட்ட சக்தியும் அறிவித்த ஒருசில பொழுதுகளுக்குள்ளாகவே, இவர்களால் நாடுகடந்த அரசு என்ற திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்திய வல்லாதிக்கமும், சிங்களப் பேரினவாதமும் இணைந்து நடாத்திய இனப்படுகொலையும், உறவுகளின் இழப்பும் இன்றில்லாதுவிட்டாலும் என்றாவது ஒருநாளில்
சீற்றமாக உருவெடுக்கும் என்பதை புரிந்துகொண்ட வல்லாதிக்கசக்தி அதனை தடுப்பதற்காகவும், பிற்போடுவதற்காகவும் கொண்டுவந்த திட்டம் தான் நாடுகடந்த அரசுத் திட்டம்.

நாடுகடந்த அரசின் திட்டத்தின் ஆரம்பமே கோணலாகவும், துரோகத்தின் அறிவிப்பாகவும் இருந்ததை கண்டுகொள்ளலாம். இன்று சிங்கள அமைச்சர்களுடன் உலாவரும் கே.பி யினால் அறிவிக்கப்பட்டதுதான் இந்த நாடுகடந்த அரசு திட்டம். மிகவும் கூர்மையான கபட நோக்கத்துடன் தயாரிக்கப்பட்ட இந்த திட்டம் பல படிநிலைகளைக் கொண்டதாக அமைக்கப்பட்டு இருந்தது.

இந்த திட்டம் அறிவிக்கப்பட்ட உடனேயே, அதுவரைக்கும் விடுதலைப் புலிகளால் விலத்தி வைக்கப்பட்டிருந்த ‘முன்னாள்கள்’ எல்லோரும் இத்திட்டத்தின் முதன்மையாளர்களாக அறிவிக்கப்படுகிறார்கள்.

விடுதலைப் புலிகளின் போராட்ட முறைமையைப் பகிரங்கமாக விமர்சித்துக்கொண்டிருந்த சில ‘பேப்பர் புரட்சிப் பேராசிரியர்களும்’ இதில் முக்கியமான பாத்திரத்தில் உள்நுழைக்கப்படுகிறார்கள். தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தையே காட்டிக்கொடுத்து, அதனை சிதறவைத்தவர்களே மீண்டும் தமிழ்மக்களுக்கான விடுதலைத் திட்டத்தை அறிமுகம்செய்த சரித்திரத்தில் மிகவிசித்திரமான சம்பவமாக இது இருந்தது. இதன்பின்னர் ஒருவகையான உளவியல்போர் தமிழ் மக்கள்மீது இவர்கள் சார்ந்தவர்களால் நடாத்தப்படுகின்றது.


1.தமிழ்மக்களின் விடுதலைக்கான ஒரே நம்பிக்கையாகவும், நேர்மையானவராகவும், அர்ப்பணிப்புஜ்லுரலுஙி...... மிகுந்தவராகவும் தமிழ் மக்களின் நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கும் தேசியத் தலைவரின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் கட்டுரைகளை விமர்சனம், சுயவிமர்சனம் என்ற பெயர்களில் தங்களின் இணையங்களிலும், ஊடகங்களிலும் வெளியிடுகிறார்கள். தேசியத்தலைவர் இராஜதந்திரத்தை கடைப்பிடிக்கவில்லை என்றும், உலக அரசியலை கணிக்கவில்லை என்பனபோன்ற விமர்சனங்கள் பேனாப் போர் செய்பவர்களால் முன்வைக்கப்பட்டது.

இதன் ஒரே நோக்கம் தேசியத் தலைவரை மக்களின் மனங்களில் இருந்து அகற்றிவிட்டு அந்த இடத்தில் வல்லாதிக்க உளவுப் பிரிவுகளின் பொம்மைத் தலைவரை கொண்டுவந்து அமர்த்தும் கபடநோக்கமே. இத்தகைய தேசியத்தலைவரை இழிவுபடுத்தும் கருத்துக்களுக்கு எதிரான எந்தவிதமான எதிர்க்கருத்துக்களையோ, கண்டனங்களையோ இன்றுவரை இந்த நாடுகடந்த
அரசின் முக்கியத்தர்கள் விடுக்கவில்லை என்பதுடன் இத்தகைய கருத்துக்களின் பிறப்பிடமாகவும் இவர்களே இருந்திருக்கிறார்கள்.

2. விடுதலைப் போராட்டக் களத்தில் வீழ்ந்த மாவீரர்களையும் அவர்களின் மாண்புகளையும் கேள்விக்குறியாக்கி, அவர்களின் தியாகத்தை கொச்சைப்படுத்தி அவர்களை விமர்சிப்பதன்மூலம் தியாகம் ஏதும் செய்யாமல் ஒரு அறைக்குள் உட்கார்ந்து தலைமைசெய்யும் மனிதர்களை தமிழ் மக்களுக்கு அறிமுகம்செய்ய முனைகிறார்கள். ஒரு தேசிய இனத்தினதோ, தேசத்தினதோ அசைவியக்கத்தின் மையமாக இருப்பது அந்த தேசிய இனத்தின், அந்த தேசத்தின் வீரமரபும், தியாகமும்தான்.

அவற்றை கேலிக்குரியதாக்குதன் மூலமும்,அவற்றை தேவையற்றது ஆக காட்டுவதன் மூலமும் அடிமைவாழ்வையே இறுதித் தெரிவாக ஏற்றுக்கொள்ள வைக்கும் ஆக்கிரமிப்பு சிந்தனைக்கு புலத்தில் ஊடகவடிவம் கொடுத்தவர்கள் இந்த நாடுகடந்த அரசின் பின்னாலும் முன்னாலும் நிற்பவர்களே.


3.தமிழ்மக்கள் ஒன்றிணைவதை தடுக்கவும், அவர்களுக்கிடையில் முரண்களை தோற்றுவித்து, தேசியஎழுச்சி ஏற்படுவதை தடுக்கும் முட்டுக்கட்டைகளை தமது பரப்புரைச்சாதனங்கள்மூலம் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதுபோல பரப்பினார்கள். தமிழ்மக்கள் பலகூறுகளாக பிரிந்துநிற்கிறார்கள் என்ற விம்பத்தை உலகுக்கும், தாயகத்தில் இடர்களுக்குள் வாழும் தமிழ்மக்களுக்கும் காட்டுவதில் முன்னின்றார்கள்.

- ஜனகன்
(முடியவில்லை...)

நன்றி:ஈழமுரசு

Comments