புலிகளின் மீது புழுதிவார வருகின்றார்கள் - கே.பியின் வழிகாட்டலில் ரவியும், வழுதியும்!
சொல்லி மை காயும் முன்னே வழுதி புழுதி வார வந்து விட்டார்
நல்லதோர் வீணை செய்தே…
[ வியாழக்கிழமை, 10 மார்ச் 2011, 00:39 GMT ] [ புதினப் பணிமனை ]
'புதினப்பலகை'க்காக தி.வழுதி.
எம் எல்லோரது இலட்சியமும் ஒன்று தான்; எம் எல்லோரது தேவையும் ஒன்று தான். அது இலங்கையில் தமிழ் மக்களுக்கு உருப்படியான அரசியல் அதிகாரத்தைப் பெறுவது.
என்று புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புக்களை நோக்கி தமது புழுதியை வாரத்தொடங்கியிருக்கின்றார்
இது குறித்து போன வாரம் சங்கதியில் வந்தது கீழே
தமிழீழ விடுதலைப் போராட்டத்தை சிதைக்கவும், தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான மக்களின் ஆதரவினை சிதைக்கவும் காலத்திற்கு காலம் எதிரி பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றான். அந்த வகையில்தான் இதுவும் எனும்போதும், தமிழ் மக்கள் இது குறித்து விழிப்பாக இருக்கவேண்டும் என்பதற்காகவே இந்த விடயங்களை பகிர்ந்து கொள்ளவேண்டியுள்ளது.
‘எதிரியினை விட துரேகிகள்தான் ஆபத்தானவர்கள்’ என்ற தமிழீழ தேசியத் தலைவர் அவர்களின் சிந்தனையினை மனதில் நிறுத்தி, விடுதலைக்கான செயற்பாடுகளை மேற்கொள்ளவேண்டியுள்ளது. அந்த வகையில் தற்போது தமிழீழ விடுதலைப் புலிகள் மீது புழுதி வாரி இறைப்பதற்காகவும், புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் விடுதலைப் புலிகள் மீதான கரிசணையை சிதைப்பதற்காகவும் சிறீலங்காவுடன் இயங்கிக்கொண்டிருக்கும் கே.பி என்ற குமரன் பத்மநாதன் புதிய வடிவம் எடுத்து வருகின்றார்.
அண்மையில் ஊடகங்கள் சிலவற்றை இவர் தன்வசப்படுத்தியுள்ளதாக செய்திகள் வெளிவந்ததை நீங்கள் அறிந்திருப்பீர்கள். அந்த ஊடகங்கள் எவ்வாறு இயங்கப்போகின்றன. விடுதலைப் புலிகளை, யாரெல்லாம் கொச்சைப்படுத்தப் போகின்றார்கள் என்பதையெல்லாம் மக்கள் அறிந்துகொண்டிருக்க வேண்டும் என்பதற்காகவே இந்த கட்டுரையை இங்கே தருகின்றோம்.
கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் சில நாளிதளினை விலைக்கு வாங்கியுள்ள கே.பி அதில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான செய்தியினை வெளியிடும் நோக்கில் சு.ரவி என்பவரை பயன்படுத்தி விடுதலைப் புலிகளுக்கு எதிரான வரலாற்றுக் கருத்துக்களை மக்களிடம் முன்வைக்கவுள்ளார். இந்த சு.ரவி தான் ஒரு காலத்தில் விடுதலைப் புலிகள் என்ற மாத இதழிற்குப் பொறுப்பாக இருந்தவர். தற்போது சிறீலங்கா அரசுடன் சேர்ந்தியங்கிக்கொண்டு கே.பியின் ஆலோசகராகவும் இவரே செயற்பட்டுக்கொண்டிருக்கின்றார்.
ஒரு சாதாரண ஊடகவியலாளராக இருந்த சு.ரவி, விடுதலைப் புலிகள் இதழிற்கு பொறுப்பாக இருந்த காலத்தில் பல ஆய்வுகளை எழுதி இன்னும் பல ஊடகவியலாளர்களை தன்வசம் ஈர்த்துக்கொண்டார். அதில் ஒருவர்தான் பொபி. அமெரிக்காவில் இருந்த பொபி, வழுதி என்ற பெயரில் பல கட்டுரைகளினை எழுதியவர். இறுதியில் ‘அவர் சென்ற வழியில்...' என தலைவருக்கு முடிவுரை எழுதி, மக்களின் எதிர்ப்பினால் காணாமல் போனாவர். சு.ரவிக்கும் வழுதிக்கும் இடையிலான நட்பு முள்ளிவாய்கால் வரை தொலைத்தொடர்பில் நீடித்தது. தற்போது வன்னியில் கைகோர்த்து ஒன்றாக உணவருந்தும் அளவிற்கு சென்றுள்ளது.
முள்ளிவாய்க்காலில் மக்கள் சிறீலங்கா அரச படைகளால் படுகொலை செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்ற இறுதி மாத காலகட்டப் பகுதிகளில் அமெரிக்காவில் உள்ள பொபியுடன் தொடர்பினை வைத்திருந்த சு.ரவி, அரசியல் துறைப்பொறுப்பாளர் பா.நடேசன் அவர்களுடன் தொடர்பில் இருந்தார். சு.ரவி என்பவர்தான் பொபி என்பவர் ஊடாக இறுதிக்கட்டத்தில் அமெரிக்காவின் கப்பல் வருகின்றது இந்தா வந்துகொண்டிருக்கின்றது என்று தமிழ் மக்களை நம்பவைத்துக்கொண்டிருந்தவர்கள்.
சு.ரவி, பொபி ஆகிய இருவரும் தற்போது தமிழர் தாயகப் பரப்பில் கே.பியுடன இணைந்து சிறீலங்கா அரசின் பல முனைப்புடனான வேலைத்திட்டங்களை முன்னெடுப்பது உறுதியாகத் தெரியவந்துள்ளது. முள்ளிவாய்க்கால் போரின் போது அதாவது சித்திரை மாத காலப்பகுதியில் தயா மாஸ்ரர் என்பவருடன் சிறீலங்காப் படையினரிடம் சு.ரவியும் சரணடைந்தார். கே.பியின் முன்மொழிவில் சிறீலங்கா அரசின் சில தமிழின அழிப்பின் வேலைக்காக பயன்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.
தற்போது கே.பியின் செயலாளராக கடமை ஆற்றிக்கொண்டிருக்கின்றார். இவர்தான் இந்த ஊடகங்களை தமிழ் மக்களிடம் கொண்டுபோய் சேர்க்கப்போகின்றார். இதற்காக தற்போது வன்னியில் உள்ள சில ஆய்வாளர்களிடம் ஆராய்ந்து வருவதாகவும் கே.பியின் ஊடகத்தில் பணியாற்றுவதற்க்காக சிலர் அழைக்கப்படுவதாகவும் தெரியவந்துள்ளது. இதற்காக சு.ரவிக்கு கிளிநொச்சி தருமபுரத்தில் வீடு ஒன்றும் எடுத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் அதற்கு அண்மையில் யாழ்ப்பாணத்தில் இருந்து உந்துருளி ஒன்றும் வாங்கிக் கொடுக்கப்பட்டுள்ளது.
தர்மபுரம் பகுதி தற்போது ரவியின் கோட்டை என அங்குள்ள மக்களால் அழைக்கப்படுகின்றது.
இந்நிலையில் வழுதி என்பவர் கே.பியுடன் கே.பி ஊடாக சிறீலங்கா அரசுடன் இணைந்து பல அபிவிருத்தி என்ற பெயரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வழங்குவதாக சொல்லிக்கொண்டு அங்குள்ள தமிழ் மக்களின் மனங்களை மாற்றும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளார்கள்.
வன்னியில் கே.பியின் திட்டத்தில் முதலில் அவரின் தெல்லிப்பழை மகா ஜனாக் கல்லூரியில் படித்த நண்பர்கள் பின்னர் அவரது உறவினர்கள்தான் வேலைக்காக இணைத்துக் கொள்ளப்பட்டனர். தற்போது நண்பர்கள், உறவினர்கள் ஊடாக வருபவர்களும் இணைத்துக்கொள்ளப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில்தான் கே.பி., பொபி, சு.ரவி ஆகியவர்கள் தற்போது உலகத்தில் பரந்துவாழும் தமிழ் மக்களை இலக்காக கொண்டு அடுத்த கட்ட வேலைத்திட்டங்களை வன்னியில் முன்னெடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த வேலைத் திட்டங்களுக்காக சிறீலங்கா இவர்களுக்கு சில சலுகைகளையும் வழங்கியுள்ளது. தமிழர் நிலங்களை ஆக்கிரமித்து நிலைகொண்டுள்ள சிறீலங்கா அரசு, வன்னியில் பல ஆயிரக்கணக்கான விடுதலைப் புலிகளின் கட்டுமானங்களையும் தன் வசப்படுத்தியுள்ளது தெரிந்ததே. அந்தவகையில் கிளிநொச்சியின் அன்பு இல்லம், பாரதி இல்லம், காந்தறூபன் இல்லம், செஞ்சோலை வளாகம், பூநகரியில் உள்ள மரமுந்திரிகை தோட்டம், முழங்காவில் சோழன் பண்ணை, வட்டக்கச்சி கல்மடு சேரன் பண்ணை, முத்தையன் கட்டு சோழன் பண்ணை போன்ற நிலப்பரப்புக்களை கே.பியிடம் சிறீலங்கா அரசு ஒப்படைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் கே.பியின் பன்னாடுகளில் உள்ள ஆதரவாளர்களை முதலீட்டுக்கு தூண்டுவதன் ஊடாக வருமானம் பெறுவது அரசின் திட்டங்களில் ஒன்று என்பதும் தெரியவருகின்றது. ஏற்கனவே இங்கு சிலர் முதலீடுகளை மேற்கொண்டு சிறீலங்கா அரசிற்கு வருமானத்தை ஈட்டிக்கொடுத்து வருகின்றனர்.
இதனை மேலும் அதிகரிப்பதே அரசின் திட்டம் எனவும் இதற்காக புலம்பெயர்ந்த பெரும் பணம் படைத்தவர்களை வளைத்துப்போடும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது. கே.பியினை வைத்து தமிழர்களின் போராட்டத்தை சிதைப்பது மட்டுமல்ல, தமிழ் மக்களின் வளங்களையும் சுறண்டுவதே அரசாங்கத்தின் திட்டம்.
- சங்கதிக்காக சுபன்

துரோகத்திற்கு துணைபோவதும் துரொகமே சரிந்த பெயரை நிமிர்த்த முற்படுகின்றதா " புதினம் "
பிரபாகரனை சாகடிக்க முயலும் பச்சோந்திகள்- தலைவரை சாகடிப்பதனூடாக எதையுமே சாதிக்க முடியாது
- யாழ் இணையத்தில் ஒரு ஆய்வுத் தொல்லையின் வாசகர்களின் கருத்துக்கள்
- சரணாகதியை முறியடித்தல் புதிய காலகட்டத்தினுள் புகுமுன்பாக…
- வழுதி , புதினம் -மறுபக்கம்
- தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் ஆனால் தர்மமே வெல்லும்
- கடவுள் அல்ல... பிரபாகரன் மனிதன்
- அண்ணை எப்ப சாவான் [தலைவர் எப்ப சாவார்] திண்ணை எப்ப காலியாகும் என்று காத்திருந்தவர்கள்
- புலம்பெயர் தமிழர்களைக் குழப்பும் சில பச்சோந்திகள்
- புலம்பெயர் தமிழர்களைக் குழப்பும் சில பச்சோந்திகள் -2
- என்ன சொல்ல வருகிறது புதி(ர்)னம்?
- முன்னாலே சென்றோரின் பின்னால் முதுகு தெரிந்தது

Comments